PDA

View Full Version : மேடை தேடும் கவிஞன்........



Nanban
02-12-2003, 04:53 PM
மேடை தேடும் கவிஞன்........

வேஷம் கட்டி

ஆடுவதில்

நீ சமத்து.....



நேருக்கு நேராய்

மைதானத்தில்

மோதுவது

மட்டும் தான்

நான்.....



களத்தில்

கோல் அடித்த பொழுது

கை தட்டுவாய் நீ....



மேடையில்

நீ

வரும் பொழுது

கூச்சலிடத் தான்

தெரியும் எனக்கு.....



கண்ணீருடன்

நீ போய் விட்டாய்...



உனக்குத் தெரியாது -

இன்று

நான் கண்ணீருடன்

மேடைகளைத் தேடுவது......

இளசு
02-12-2003, 09:37 PM
பாராட்டுகள் நண்பனே.

உத்வேகம் தந்து உயரவைத்த
காதலியைத் தேடுகிறீர்களா?
மணமேடை வராத அவளை
மனமேடையில் தேடுங்கள்..

Nanban
03-12-2003, 04:08 AM
மணமேடையில் காதலியைத் தேடவா?

கண்டாலும், கண்டு கொள்ளாமல் இருப்பதே, நல்லது..........

rambal
08-04-2004, 05:08 PM
நன்றி நண்பன் அவர்களே..



இந்தக் கவிதை தரும் பொருளை நீங்கள் இந்தக் கவிதையைப் பதிந்த அன்றே புரிந்தேன்..



விளக்கிச் சொல்ல ஏனோ தயக்கம்..



நீங்களே மறந்து போயிருக்கும் இந்தக் கவிதையை தூசு தட்டி

எடுத்தமைக்காக மன்னிக்கவும்..

Nanban
10-04-2004, 04:01 PM
மன்னிப்பது எதற்கு?



தூசு தட்டி

தும்ம வைத்தீர்

சில நினைவுகளைத்

தட்டி எழுப்பி.....



தும்முவதால்

சொல்வார்கள்

யாரோ நினைப்பதாக....



நன்றி....

அறிஞர்
16-02-2007, 04:28 PM
மேடை தேடும் கவிஞன்........
கண்ணீருடன்

நீ போய் விட்டாய்...



உனக்குத் தெரியாது -

இன்று

நான் கண்ணீருடன்

மேடைகளைத் தேடுவது......
கண்ணீருடன் போய் விட்ட....
காதலியை..
கண்ணீருடன் தேடும் கவிஞனின் வரிகள் இன்னும் தொடரட்டும்.

மனோஜ்
16-02-2007, 05:46 PM
பழைய கவிஞர்களின் படைப்புக்கள் பார்க்க வைக்கிறீர்கள் நன்றி அறிஞரே

ஆதவா
16-02-2007, 06:07 PM
மேடை தேடும் கவிஞன்........

முதலில் நன்றி அறிஞர் அவர்களுக்கு..... இக்கவிதையை தேடிப் பிடித்து எடுத்துத் தந்தமைக்கு...

அடுத்து.... ஒரு சில வார்த்தைகளுக்குள் அர்த்தம் பொதிக்க முடியும் என்று சொல்லிய நண்பன் அவர்களுக்கு என் வாழ்த்து....

வேஷம் கட்டி
ஆடுவதில்
நீ சமத்து.....
நேருக்கு நேராய்
மைதானத்தில்
மோதுவது
மட்டும் தான்
நான்.....

களத்தில்
கோல் அடித்த பொழுது
கை தட்டுவாய் நீ....
மேடையில்
நீ
வரும் பொழுது
கூச்சலிடத் தான்
தெரியும் எனக்கு.....
கண்ணீருடன்
நீ போய் விட்டாய்...
உனக்குத் தெரியாது -
இன்று
நான் கண்ணீருடன்
மேடைகளைத் தேடுவது........


நண்பன்...... நட்பான பெயர்...
கவிதையும் எனக்கு சில யோஜனைகளைத் தருகிறது.... முதலில் பின்னூட்டங்களைக் கவனித்தமட்டில் அவர் காதலை எழுதுவதாக பின்னி இருந்தார்கள்... எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. கவிதைக்குள் அர்த்தம் பொதிந்து கிடக்கிறது.... இங்கே காதலியாக மற்றவர்கள் நினைப்பது எனக்கு கவிதையாகத் தோணுகிறது... இது சரியா என்று எனக்குத் தெரியாது...ஆனால் மனம் அதைமட்டுமே நினைக்கிறது.... மேடை ஏறி தோற்கும் கவிதையைப் பற்றி எழுதியிருப்பதாக நினைக்கிறேன்... (நண்பன் அவர்களே! அடியேன் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளும் சக்தியைப் படைத்தவனல்லன்.)

மதுரகன்
19-02-2007, 04:44 PM
பிரமிக்க வைக்கும் கவிதை கவிஞருக்கும் அதை கொடுத்த அறிஞருக்கும் எனது வாழ்த்துக்கள்..

leomohan
19-02-2007, 05:06 PM
நல்ல ஆரம்பம் நண்பரே.

மதுரகன்
19-02-2007, 05:13 PM
நல்ல ஆரம்பம் நண்பரே.

ஐயோ மோகன் இது 2003 இல் பிரசுரமான கவிதை அறிஞர் அண்ணா மீள இங்கு கொணர்ந்திருக்கிறார் எமக்காக..

ஷீ-நிசி
20-02-2007, 03:13 AM
சில கவிதைகளுக்கு எவ்வளவுதான் நுண்ணிய விமர்சனம் அளித்தாலும் அது படைத்தவனின் பார்வையில் காண்பதைப் போல் காண முடியாது..

தூசு தட்டிய கவிதையால்,
பல நினைவுகளை நானும் தூசுதட்டினேன்