gragavan
04-11-2004, 05:59 AM
வணக்கம் நண்பர்களே. இது செப்டம்பர் மாதத்திற்கான நிழற்படத்தின் முதல் பகுதி. சற்று மாறுபாட்டு இருக்கட்டும் என்று இந்த முயற்சி. முயற்சி திருவினையாக்கும் என நம்புகிறேன்.
யக்கா...யக்கா - செப்டம்பர் மாத நிழற்படம் - முதல் பகுதி
மந்தையில் போரடித்துக்கொண்டிருக்கிறார் மாரியக்காவும் காளியக்காவும். உச்சி வந்துவிட்டது. சாப்பாட்டு வேளை. வேப்பமரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். நம் மன்றத்தில் நடந்த விஷயங்கள்தான் அவர்கள் வெஞ்சனம். என்ன பேசுகிறார்கள் என்று கவனிப்போமா!
"ஏ மாரி. இந்த மாசம் புதுசா சேந்தவுக யாரு? நெனவிருக்கா?"
"அது இல்லாமயக்கா! நல்ல இருக்கே. யக்கா....அப்பிடியே அந்தத் தூக்குவாளிய இங்குட்டு நகட்டுங்க. பாலை ஷாங்குறவது ஆகஸ்டு பதுனாறுல சேந்தாரு. அப்பிடியே செப்டம்பர் முப்பதுல நமக்கெல்லாம் வணக்கம் போட்டு வந்தாரு. அப்புறம் நம்ம மாப்பிள்லையூரணி மாப்பிள அறிமுகப்படுத்துன திருமுருகன். அவரு ஒம்பதாந்தேதி வந்தாரு. மைதிலி இருக்காகளே அவுக மன்றத்துல ஏதோ கோளாறுன்னு சொல்லீட்டு ஒரு பத்துப் பதினஞ்சு நாளைக்கு வரல."
"மன்றத்துல கோளாறா? மன்றத்துக்கு வர்ரதுல கோளாறா? நீ என்னங்க?"
"காளியக்கா, அந்தப் பொல்லாப்பு நமக்கெதுக்கு. அவுக சென்னைக்கு போயிருந்தாலும் போயிருப்பாக. வந்தப்புறம் வந்துட்டேன்னு சொன்னாகள்ள. அத்தோட விடுவம். அப்புறம் வந்தாருல்ல அந்த மலேசியாக்காரரு. மனிதனாம்ல பேரு. செப்டம்பர் இருவத்து ரெண்டுல வந்து வணக்கம் போட்டாரு."
"ஆகக்கூடி புதுசா மூணு பேருல்லா! ஆமா என்னவோ எல்லாருங் கூடி ஆண்டு வெழா கொண்டாடுதாங்களாமே! திட்டம் பெரிய திட்டமாப் போடுறாக. தெரியுமா மாரி ஒனக்கு?"
"ஏதோ கேள்விப்பட்டேன். கொஞ்சம் வெவரமாத்தேஞ் சொல்லுங்களேன்"
"எல்லா இந்த மாப்பிள்ளயூரணி மாப்புள வேலதான். என்னவோ தாயாப்புள்ளயா மாமனும் மச்சானப் பழகிப்பிட்டம். ஒரு வாட்டி ஆசைக்கு மூஞ்சியப் பாத்துகிறலாமேன்னு அவனுக்கு ஆச. அத மன்றத்துல சொல்லீட்டான். பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு லீவு விடுவாகள்ள...அந்த மே மாசமா வெச்சிக்கிறலாம்னு நெனக்காக. எல்லாருஞ் சரின்னு சொல்லீருக்காக. பாப்பம். என்ன நடக்குன்னு. நடந்தா நல்லாத்தான இருக்கும்."
"காளியக்கா! நல்லாச் சொன்னீக! இவுக எல்லாரும் ஒன்னு கூடி என்ன கோயில்ல பொங்க வெக்கப் போறாகளா! இல்ல காவடி தூக்குதாகளா! மொத்தமா உக்காந்து தண்ணியடிப்பாகக்கா! நம்ப முடியாது."
"அந்தப் பொருப்பத்தாந் தல தலைல கெட்டீட்டாகள்ள........" சிரிப்புத் தாளமாட்டாமல் குலுங்கிச் சிரித்தாள் காளியக்கா. பருக்கை புரையேறியது.
"யக்கா, இந்தாங்க சொம்பு. கொஞ்சோல தண்ணி குடிங்க. ஓட்டெடுப்பும் நடந்துச்சுல்ல. ஆனால் எல்லோரும் ஓட்டுப் போடமாட்டேங்காக. படிச்சவுகளே இப்பிடித்தான். மாமா கூப்புட்டு கூப்புட்டு கேட்டிச்சி. ஏதோ கொஞ்சப் பேரு போட்டிருக்காக."
"மாமாவா? அது யாருல மாமா?" காளியக்காவுக்குச் சந்தேகம்.
"மாப்பிள்ளயூரணி மாப்புளயத்தாங்கச் சுருக்கி மாமான்னேன். நீங்க வேற. எடக்கு மொடக்காச் சொல்ல. அந்த வீட்டக்கா அடிக்க வந்துருவாக."
"அதான. நீ பாட்டுக்கு கூருகெட்டமானிக்கிச் சொல்தயேன்னு பாத்தேன். அப்புறம் எளந்தமிழுச்செல்வன் போட்ட அவசரக் கோலம் பெரமாதமுல்ல. நாலு வீதிக்கு தேரும் ஆனையுமா கோலம் போட்டாக்குல பெரமாதப் படுத்தீட்டாமுல." காளியக்கா விட்ட இடத்தில் தொடர்ந்தார் மாரியக்கா. "ஆனாலு நண்பர் சொன்னத நெனச்சாத்தான் எனக்கு திக்கு திக்குங்கு! நெழல்படத்துல வெமருசனஞ் செய்யாம சும்மா கதையடிக்காகன்னு சொல்லிப்புட்டாரே! நம்ம கத என்ன ஆகப் போகுதோன்னு நெனைக்கைல ஈரக்கொல நடுங்குது. எல்லாருஞ் சமாதானஞ் சொல்லீருக்காக. பாப்பம். அவரு ஒரு குத்தமுஞ் சொல்லலைன்னா ஐயனாருக்குப் பொங்க வெக்கிறேன்." ஒரு ரூவாய் நாணயத்தை சேலைத் தலைப்பில் நினைவிற்காக முடிந்து கொள்கிறாள் மாரியக்கா.
"இந்தால மாரி, ஒனக்கு ஏங் கொல நடுங்குது? அவரு அப்பிடிச் சொல்லலாமா? வெமருசனந்தான் ஒடனே ஒடனே போட்டுர்றாகளே! அப்புறம் எத்தன வாட்டி வெமருசனஞ் செய்ய. இங்க நடந்ததத்தான் பேசனும். எல்லாஞ் சரித்தான். சரி வா. கூப்புடுறாக. கையக் கழுவீட்டு வா. இதுவரைக்கும் முல்லைய மட்டுந்தான பாத்துருக்கோம். டீக்காரன் வரும் போது மல்லியப் பாப்பம். வாத்தா போவம்." காளியக்காவும் மாரியக்காவும் போரடிக்கப் போகிறார்கள்.
சற்று நேரங் கழித்து டீக்காரன் வருகிறான். எல்லாரும் டீக்குடிக்கப் போகிறார்கள். பித்தம் என்பதால் மாரியும் காளியும் டீ குடிக்காமல் மல்லி மன்றத்தைப் பற்றி பேசுகிறார்கள்.
"காளியக்கா! பூவ மோந்து பாக்கக் கூடாதாமுல. ராகவஞ் சொல்றாரு. அது நம்முள திருப்பி மோந்து பாத்துச்சுன்னா என்னாகுறது! ஒரே நாத்தம். இவரெல்லாங் கவித எழுத வந்துட்டாரு. ராம்பலு இருக்காரே...அவரு என்னமா எழுதிருக்காரு. மூனு நாலு வரில அருமையா எழுதிருக்காரு. கேட்டா எதிரு பாராம தட்டுப்பட்டுச்சாம். அப்பவே இப்பிடீன்னா, பாத்து தட்டுப்படும் போது எப்பிடி இருக்கும்."
"இருக்குமாத்தா இருக்கும். எனக்கென்னமோ அவரு மூஞ்சிலடிச்சாப்புல சொல்லிப்புட்டாரோன்னு தோணுது. தப்புக் கண்டுபிடிச்சிக்கிட்டேயிருந்தா ஆகுமா? நல்ல வார்த்தையா ரெண்டு சொன்னா கொஞ்ச எதமா இருக்குமில்ல. தாமர கூட சோகத்தச் சொகமா சொல்லீருக்காகளே! எப்பய்யா மனுசனாவோம்னு கேக்கைல என்னவோ பண்ணுதுல்ல. அந்தக்கா லெங்கைலருந்து வெளிநாட்டுக்கு போச்சாம். பட்ட பாட்டெல்லாம் பாட்டாப் படிச்சிருக்கு."
"காளியக்கா! அவுக ஊருவிட்டு ஊரு போனவுக. அந்தச் சோகந் தீருமா. நம்ம இங்கயா பொறந்து வளந்து தின்னுக்கிட்டிருக்கோம். நாலு எடம் போனால்ல கஷ்டந் தெரியும். லெங்கைல நடக்குறதுதாந் தெரியுமே. சொந்த ஊருப்பாசம். அதான் அக்கர இக்கரன்னு தவிக்காக. என்னவோ! எல்லாரும் நல்லாருந்தாச் சரித்தான். இன்னோன்னு பாருங்க. பூன்னு பேரு வெச்சிக்கிட்டு பொயலப் போல பாட்டெழுதிருக்காக. எனக்கு கண்ணுல தண்ணியே வந்திருச்சி." பழைய நினைவில் கண்ணைத் துடைக்கிறாள். "அத்தோட ஒரு போட்டோ போட்டிருந்தாகளே! இருக்கங்குடித் தாயே! ரெண்டு நாளைக்குச் சோறு தண்ணி தொண்டைல எறங்கல. வீட்டுல அவுகளும் என்னன்னு கேட்டாக. நான் ஒன்னுமில்லைன்னு சொல்லிப்புட்டேன்."
"சரியாத்தா அழாத. என்ன செய்ய. அத விடு. மம்முதங் கவிதையப் படிச்சியா? இந்தப் பய என்ன போடு போடுறாம் பாரேன். ஒழுங்கா கெணத்துல கோமணங் கெட்டி குளிக்கத் தெரியாது. கவிதய எழுதித் தள்ளுறான். படிக்கைலயும் முடிக்கைலயும் லேசாச் சந்தோசமா இருந்திச்சி. ஆனா நண்பரு முற்பகலு பிற்பகலுன்னு சொல்லீட்டு தீவிரவாதத்தப் பத்தி எழுதுனாரே! யப்பா! நெஞ்சுல கல்ல வெச்சாப்புல. நறுக்குத் தெரிச்சாப்புல இவ்வளவு கொடுமையாவாச் சொல்லுவாக. கவிதைல எதையுஞ் சொல்லாம் போல இருக்கு."
"சொல்லுவாரு. சொல்லுவாரு. இந்த மாரி எதுக்கிருக்கேன். கேக்க மாட்டேன். தீவிரவாதத்தப் பத்தி பேசீட்டு அப்பிடியே மூட்டப்பூச்சி மேல பாஞ்சிருக்காரு. வீட்டுல நெறயா மூட்டப்பூச்சி போல." மாரியக்கா சிரித்த சிரிப்பில் மந்தையே குலுங்கியது. அதை ஆமோதிப்பது போல காளியக்காவும் கூடச் சிரித்தார்.
சிரிப்பை நிறுத்திய மாரி பேச்சைத் தொடர்ந்தாள். "யக்கா! மூட்டப்பூச்சி மேல பாஞ்சிட்டு அப்பிடியே புனுகுப் பூன மேலயும் மான்குட்டி மேலயும் கரிசனத்தக் காட்டிருக்காரு. ஒரு வேள இவரு மரக்கறி திங்குறவறோ! அத்தோட விட்டாரா மனம் போன வாக்குல கனவுக்கன்னின்னு ஒரு பாட்டு வேற. என்னவோ பெரிய பொலவரு கணக்கா எழுதிருக்காரு. பள்ளிக்கூடத்துல வாத்தியாரு பாடம் எடுத்த கணக்கா இருக்கு."
"இருக்கும்டி இருக்கும். பிரியனோட கவிதைகளப் படிச்சியா. நாலு கவிதை எழுதிருக்காரு. அப்பாவோட சட்டையப் பத்தி பெரமாதமா எழுதிருக்காரு. எங்கப்பாரு ஒரு சட்டதான் வெச்சிருந்தாரு. பொங்கலுக்குத்தேன்னு வெச்சிருந்து போடுவாரு. அந்தச் சட்டயத்தான் வெள்ளாவிக்குப் போடையில வண்ணாத்தி கருக்கித் தொளச்சுப்புட்டா. அதப் பத்துரமா எங்காத்தா இன்னும் வெச்சிருக்கு. அப்பிடியே கவித எழுத முடியாததக் கூட கவிதையாச் சொல்லீருக்காரே. இப்பிடி எழுதுறவரு வாழ்க்கையில என்ன கொழப்பமோ! ஏனிந்தப் பயணம்னு கேக்குறாரே! என்னவோ போத்தா! புரியலைன்னாலுங் காத்திருப்பேன்னு சொல்றாரே. அந்த மட்டுக்குச் சரிதான்."
ஏதோ சந்தேகம் வந்தவளாக மாரியக்கா கேட்டாள். "யக்கா இன்னமு நெம்ப இருக்கே. எப்பப் பேச?"
"இருக்கட்டுமே. நாம இம்புட்டுதாம் பேச முடியும். வேணுமின்னா படிச்ச பெரியவுக பேசிக்கிறட்டும். நகரு. கூப்புடுதாகள்ள!" மாரியக்காவும் காளியக்காவும் சொளகுகளைத் தூக்கிக் கொண்டு வேலையைத் தொடரச் சென்றனர்..
நிழல்படங்கள் செப்டம்பர் முதல் பாகம் முடிந்தது.