PDA

View Full Version : இலவச போன் கால்



அறிஞர்
14-06-2005, 02:52 AM
இலவசமாக கணினி துணை கொண்டு பேச ஒரு புது தளம் உள்ளது.

http://www.voipbuster.com/en/index.html

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடாவுக்கு பேசலாம். இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பேசமுடியாது...

ஒரு யூரோ கட்டி பேசினால், கணக்கிலடங்கா நிமிடங்கள் பேசலாம்...

ஒரு யூரோ கட்டி பேசினேன்.. நன்றாக உள்ளது....

பேசி பாருங்கள்.

thempavani
14-06-2005, 03:43 AM
அறிஞரே..skype மென்பொருள் கொண்டு இந்தியாவிற்கு பேசலாமே... நான் பேசினேன் நன்றாக இருக்கிறது...

அறிஞர்
14-06-2005, 05:06 AM
முன்பு skype.. உபயோகித்தேன்.

சில நேரம் நன்றாக இல்லாததால் உபயோக்கிவில்லை...

இந்தியாவுக்கு இலவசமா.. தேம்பா.. இப்பொழுது....

thempavani
14-06-2005, 06:15 AM
ஆமா அண்ணா..

இந்தியாவிற்கு மட்டுமல்ல எல்லா நாடுகளுக்கு என்றார் எங்க உதவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்..நான் இந்தியாவிற்கு 3 நாள் பேசினேன்..

நன்றாக இருந்தது...

மன்மதன்
14-06-2005, 06:22 AM
எப்படி தேம்பா.. ஸ்கைப் ?? இது யாஹூ மாதிரியா.. இல்லை லேன்லைன் போன்களுக்கும் பேசலாமா??
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
14-06-2005, 06:55 AM
இந்தியாவுக்கு கிட்டத்தட்ட.. ரூ. 9 செலவழிக்க வேண்டியுள்ளது........ இலவசமா முயற்சித்தேன்.. போகவில்லை....

தேம்பா தெளிவா சொல்லவும்....

mania
14-06-2005, 07:00 AM
எப்படி தேம்பா.. ஸ்கைப் ?? இது யாஹூ மாதிரியா.. இல்லை லேன்லைன் போன்களுக்கும் பேசலாமா??
அன்புடன்
மன்மதன்

;) நம்ம ப்ரதீப் இதற்கு நல்லா பதில் சொல்வாரே......வா ப்ரதீப்....
அன்புடன்
மணியா...;)

pradeepkt
14-06-2005, 07:06 AM
தலை கூப்பிட்டப்புறம் வராமலிருப்பேனா?
ஸ்கைப் பத்தி ஏற்கனவே பழைய மன்றத்தில் நான் சொல்லி இருந்தேன். அதை இங்கே யூனிகோடில் இடுகிறேன். இது வாய்ப் வழியாகப் பேச்சரட்டை செய்ய வழிவகை செய்கிறது.
கணினியிலிருந்து கணினிக்கு இலவசம்.
மற்ற செல்பேசிகளுக்கோ, லேண்ட் லைன்களுக்கோ பேச வேண்டுமென்றால் கட்டணம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் வாழும் என் நண்பர்கள் இக்கட்டணம் ரொம்பக் குறைவு என்கிறார்கள்.

----------------

நண்பர்களே,
இந்த ஸ்கைப் பற்றி உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். பேச்சரட்டையை VOIP (வாய்ப்) வழியாக வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. இதன் தரம் மிக அருமை. யாஹவை விடவும் அற்புதம்.
இதனை http://www.skype.com (http://www.skype.com) என்ற தளத்திலிருந்து யாஹ போன்றே இறக்கி நிறுவிக் கொள்ள வேண்டும். யாஹ போன்றே ஒரு உறுப்பினராகிக் கொள்ள வேண்டும். பேசுவதற்கும் கேட்பதற்கும், மைக்கும் ஹெட்போன்/ஸ்பீக்கரும் வேண்டும். அவ்வளவுதான்.
முயன்று பாருங்களேன்.
என் ஐடி வேண்டும் நண்பர்கள் தனிமடல் அனுப்பினால் தருகிறேன். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். ஐடி வைத்திருப்பவர்களும் அறியத் தாருங்கள்.
இது பற்றி அறிந்த மற்ற நண்பர்கள் கருத்தையும் அறிய விழைகிறேன்.
அன்புடன்,
பிரதீப்
-------------------------

thempavani
14-06-2005, 08:39 AM
நானும் skypeதான் பயன்படுத்துகிறேன்...பயன்பாடு தெளிவாகவும் அற்புதமாகவும் உள்ளது...கணணி - கணணி இலவசம் அறிஞரே.. அலைபேசிகளுக்கு முயற்சிக்கவில்லை...

அறிஞர்
14-06-2005, 08:41 AM
நானும் skypeதான் பயன்படுத்துகிறேன்...பயன்பாடு தெளிவாகவும் அற்புதமாகவும் உள்ளது...கணணி - கணணி இலவசம் அறிஞரே.. அலைபேசிகளுக்கு முயற்சிக்கவில்லை...
நான் பேசுவது கணினி மூலம் தொலைபேசியை தொடர்பு கொள்வது பற்றி...

pgk53
14-06-2005, 09:46 AM
இலவசமாக கணினி துணை கொண்டு பேச ஒரு புது தளம் உள்ளது.

http://www.voipbuster.com/en/index.html

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடாவுக்கு பேசலாம். இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பேசமுடியாது...

ஒரு யூரோ கட்டி பேசினால், கணக்கிலடங்கா நிமிடங்கள் பேசலாம்...

ஒரு யூரோ கட்டி பேசினேன்.. நன்றாக உள்ளது....

பேசி பாருங்கள்.

நண்பரே----ஒரு யூரோ கட்டினால் கணக்கில் அடங்கா நேரம் பேசலாம் என்கிறீர்கள்
நான் ஒரு யூரோ கட்டினால் வளைகுடா நாட்டில் இருந்து இந்தியாவுக்குப் பேச முடியுமா???
தெளிவாகக் கூறுவீர்களா???

அறிஞர்
14-06-2005, 09:59 AM
நண்பரே----ஒரு யூரோ கட்டினால் கணக்கில் அடங்கா நேரம் பேசலாம் என்கிறீர்கள்
நான் ஒரு யூரோ கட்டினால் வளைகுடா நாட்டில் இருந்து இந்தியாவுக்குப் பேச முடியுமா???
தெளிவாகக் கூறுவீர்களா???
இல்லை அன்பரே.... 14 நாடுகள் மட்டுமே... அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா...

பரஞ்சோதி
14-06-2005, 10:08 AM
பிஜிகே அண்ணா, இணைய தொலைபேசி கம்பெனிகளுக்கு வளைகுடா நாடுகளும், ஆசியா நாடுகளும் பொன் விளையும் பூமி மாதிரி, எனவே அத்தனை இலவசமாக கொடுக்கவே மாட்டார்கள். அவர்கள் பிழைப்பதே நம்மை வைத்து தான்.

நானும் எத்தனையோ முறை முட்டி பார்த்து விட்டேன், ஊம் ஒன்றும் நடக்கவில்லை.

அறிஞர்
15-06-2005, 03:31 AM
நேற்று தம்பி.. முத்துவிடம் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினேன் (20 நிமிடம் ) . ஆனால் அக்கவுண்டில் பார்த்தால் - 4 யூரோ எனக்காட்டியது. (அதாவது கட்டியது 1 யூரோ, பேசினது 5 யூரோ ). உடனே அந்த அக்கவுண்ட்டை மூடி விட்டு, புது அக்கவுண்ட் திறந்து... அமெரிக்கா, கனடாவில் செல்போனுக்கு பேசினேன் (1 மணி நேரம் ). எந்த கட்டணமும் இல்லை..

Aren789
19-06-2005, 01:17 PM
நான் skype தினமும் உபயோகிக்கிறேன். கணணி - கணணி இலவசம். பேசுவதற்கும் தடை ஏற்படுவதில்லை. ஒலியும் நன்றாக உள்ளது.

voipbuster நானும் இறக்குமதி செய்து வைத்துள்ளேன். அதில் ஒரு யூரோ கட்டி அமெரிக்காவில் இருக்கும் மைத்துனனுடன் நிறைய நேரம் பேசினேன். ஒரு நிமிடத்தில் ஒரு செண்ட் ஆகிறது. அதுபோல் இங்கிலாந்தில் இருக்கும் வியாபார பார்ட்னருடரன் பேசினேன் ஒரு மணிநேரம் இலவசமாக. கேட்கும் குரலும் நன்றாக உள்ளது.

இந்தியாவிற்கு பேச வேண்டுமானால் நிறைய பணமாகும்.

மன்மதன்
19-06-2005, 01:34 PM
அதுபோல் இங்கிலாந்தில் இருக்கும் வியாபார பார்ட்னருடரன் பேசினேன் ஒரு மணிநேரம் இலவசமாக. கேட்கும் குரலும் நன்றாக உள்ளது.

இந்தியாவிற்கு பேச வேண்டுமானால் நிறைய பணமாகும்.

லண்டனில் இருக்கும் நபருக்கு மொபைலுக்கு கூப்பிட்டால் இலவசமா?? இல்லை பணம் கட்ட வேண்டுமா??

அன்புடன்
மன்மதன்

Aren789
19-06-2005, 01:39 PM
நான் முயற்சி செய்தது அவருடைய அலுவலக தொலைபேசிக்கு. மொபைலுக்கு போன் செய்தாலும் இலவசமாகத்தான் இருக்கவேண்டும். முயற்சி செய்யவில்லை. முயற்சிசெய்துவிட்டு சொல்கிறேன்.

baranee
19-06-2005, 02:00 PM
நான் உபயோகிப்பது ஸ்கைப்தான்.
இதிலிருந்து இந்தியாவிற்கு அழைக்க
1 நிமிடம் கைப்பேசி = 0.138 யூரோ சென்ட்
1 நிமிடம் மற்ற பேசிகள் = 0.151 யூரோ சென்ட்
ஒரு நிமிடத்திற்கு இந்திய ரூபாயில் சுமார் 8 ஆகிறது. பெரும்பாலும் நன்றாக பேசவும் கேட்கவும் முடிகிறது.

baranee
19-06-2005, 02:07 PM
ஸ்கைப் மூலம் பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா / கனடாவிற்கு அழைத்தால் கட்டணம் மிகவும் குறைவு. (சில நாட்டு கைப்பேசிகளுக்கு மட்டும் கொஞ்சம் அதிகம்)

1 நிமிடத்திற்கு இரண்டு ரூபாயிற்கும் குறைவாகவே ஆகிறது.

Aren789
19-06-2005, 02:33 PM
நான் இப்பொழுதுதான் என் மைத்துனனுடன் அமெரிக்காவில் voipbuster மூலம் அவருடைய வீட்டிற்கு போன் செய்து பேசினேன். ஒரு மணிநேரம் பேசினேன் இலவசமாக. ஒலியும் அருமையாக இருந்தது தொலைபேசியில் பேசுவதுபோல்.

அறிஞர்
20-06-2005, 02:43 AM
அன்பர்களே.. தினமும் விலையை மாற்றி வருகிறார்கள்...

இப்பொழுது, சீனா, தைவானுக்கு லேண்ட் லைன் போன் இலவசம்...

குறிப்பாக... தைவான், ஐரோப்பாவுக்கு லேண்ட் லைன் இலவசம். செல்போன் பணம்.

அமெரிக்கா, கனடாவிற்கு செல்போன், லேண்ட் லைன் இலவசமே........

கிட்டத்தட்ட.. 20 மணி நேரம் பேசியுள்ளேன் ( 1 யூரோ கட்டி ).....
----------
இந்த சேவை நீண்ட நாட்கள் இருக்குமா என்பது தெரியவில்லை..... நம்ம பாணி " காற்றுள்ள போதே தூற்றிக்கனும் )

thempavani
20-06-2005, 05:07 AM
நம்ம பாணி " காற்றுள்ள போதே தூற்றிக்கனும் )

வாழ்க அறிஞரே.........

Aren789
20-06-2005, 11:59 AM
http://www.voipbuster.com/en/rates.html

எந்தெந்த நாட்டிற்கு எவ்வளவு என்ற விவரம் இந்த இணைப்பில் உள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள். சீனா, தைவான் ஆகிய இரண்டு நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளதால், அங்கே வணிகம் செய்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

இளந்தமிழ்ச்செல்வன்
21-06-2005, 07:51 PM
நண்பர்களே இந்தியாவிலிருந்து பேச முடியுமா என்று கூறவும்.

அறிஞர்
22-06-2005, 04:12 AM
ஆமாம் இதெசெ..... பேசலாம்.... கணினி துணை கொண்டு....

(எங்க ஆளையே காணோம்... விரைவில் தங்கள் பெயரை யுனிகோடிற்கு மாற்றுகிறோம்)

gunasekaravarma
02-10-2005, 11:41 AM
அருமையாக சொன்னீர்கள்
skype வின் செயல்பாடு மிக அருமையாக உள்ளது.
skype விற்கு போட்டியாக yahoo மற்றும் google போன்ற தேடு தளங்களும் போட்டியில் குதித்துள்ளன என அறிகிறேன்

அறிஞர்
03-10-2005, 09:12 PM
அருமையாக சொன்னீர்கள்
skype வின் செயல்பாடு மிக அருமையாக உள்ளது.
skype விற்கு போட்டியாக yahoo மற்றும் google போன்ற தேடு தளங்களும் போட்டியில் குதித்துள்ளன என அறிகிறேன்
yahooவின் புதிய தூதுவர் அவ்வளவாக சரியில்லை.....

aren
05-10-2005, 06:12 AM
என்னுடைய மனைவி அமரிக்காவில் இருக்கும் சகோதரனுடனும் தாயுடனும் வாராவாரம் யாஹூ கொண்டே பேருகிறார்கள். பிரச்சனை எதுவுமில்லை என்று கூறினார்கள்.

நான் என்னுடைய அலுவலகத்தில் ஸ்கைப் உபயோகிக்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது.

thempavani
05-10-2005, 06:17 AM
எங்களுக்கு இரு வசதிகளும் உள்ளன..ஆனால் இந்தியாவில் இணைய மையங்களில் யாகூதான் வசதிப்படுவதாக தங்கை கூறினாள்...ஆனால் நான் இரண்டையும் பயன்படுத்துகிறேன்...ஸ்கைப் தான் வசதியாகத் தோன்றியது..

pradeepkt
05-10-2005, 06:51 AM
அக்கா எங்க கொஞ்ச நாளா ஆளைக் காணோம்
ஸ்கைப்பில வருவீங்களா?
அப்ப நம்ம கூடயும் கொஞ்சம் பேசுறது?

thempavani
05-10-2005, 09:18 AM
தம்பி தனிமடல் பாரு...

pradeepkt
05-10-2005, 09:22 AM
அக்கா, பார்த்து உங்களுக்குப் பதிலும் போட்டிருக்கேன்.
பாருங்க.

rajasi13
10-10-2005, 01:29 PM
ஏங்க அக்காவும் தம்பியும் பேசி லிங்க கட் பண்ணிட்டீங்களா. skype கிடைக்க மாட்டேன்கிறதே. தேம்பா அக்கா உங்களுக்கு தெரியும் என்றால் சொல்றது. எங்களுக்கும் உபயோகமா இருக்கும்ல.

thempavani
10-10-2005, 01:43 PM
ராசா இந்த தொடர்பில் சென்று பாருங்கள்..
http://www.skype.com/helloagain.html

rajasi13
11-10-2005, 06:05 AM
network error வருகிறது.

தமிழ்பித்தன்
18-10-2005, 04:28 AM
நான் கனடாவுக்கு கதைக்க ஆசைப்படுகிறேன் உங்கள் தந்து உதவுவீர்களா எனது மின்னஞ்சல் tamilbiththan@gmail.com

தமிழ்பித்தன்
18-10-2005, 04:30 AM
நான் கனடாவுக்கு கதைக்க ஆசைப்படுகிறேன் உங்கள் ID தந்து உதவுவீர்களா எனது மின்னஞ்சல்tamilbiththan@gmail.com

thempavani
18-10-2005, 04:31 AM
வாருங்கள் தமிழ்ப்பித்தன்..தங்களைப்பற்றி அறிமுகம் ஒன்று தரலாமே..

தமிழ்பித்தன்
18-10-2005, 04:36 AM
நான் யாழ்பாணத்திலிருந்து(srilanka) பதியிறன் என்னிடம்credit card இல்லை கனடாவுக்கு ததைக்கலாமா

thempavani
18-10-2005, 08:42 AM
தங்களுக்கு எந்த கடன் அட்டையும் தேவையில்லை தமிழ்பித்தன்..ஒரு கணணி மட்டும் போதும்..எங்காவது இணைய தொடர்பகத்திலிருந்தும் பேசலாம்..ஆனால் அக்க்கண்ணியில் yahoo தூதுவர் அல்லது skype மென்பொருள் இருந்தால் பேசலாம்...

aren
18-10-2005, 08:54 AM
நான் யாழ்பாணத்திலிருந்து(srilanka) பதியிறன் என்னிடம்credit card இல்லை கனடாவுக்கு ததைக்கலாமா

கணடாவிற்கு கதைக்க ஒரு எளிய வழியுண்டு.

http://www.voipbuster.com என்ற தளத்திற்கு சென்று அங்கேயுள்ள மென்பொருளை இறக்குமதி செய்துகொண்டு, ஒரு யூரோ டாலர் கட்டினால், கணடாவிற்கும், அமெரிக்காவிற்கும் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் கட்டணமின்றி இலவசமாக பேசலாம். அதில் அமெரிக்கா கணடா நாடுகளில் கை தொலைபேசிக்கு பேசுவதற்கும் கட்டணம் கிடையாது.

jsriram
18-10-2005, 11:52 AM
நன்றி.

அறிஞர்
18-10-2005, 04:49 PM
கணடாவிற்கு கதைக்க ஒரு எளிய வழியுண்டு.

http://www.voipbuster.com என்ற தளத்திற்கு சென்று அங்கேயுள்ள மென்பொருளை இறக்குமதி செய்துகொண்டு, ஒரு யூரோ டாலர் கட்டினால், கணடாவிற்கும், அமெரிக்காவிற்கும் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் கட்டணமின்றி இலவசமாக பேசலாம். அதில் அமெரிக்கா கணடா நாடுகளில் கை தொலைபேசிக்கு பேசுவதற்கும் கட்டணம் கிடையாது தாங்கள் உபயோகித்து பார்த்தீர்களா... என் அனுபவம்.. நன்றாக இருக்கிறது

aren
19-10-2005, 01:49 AM
தாங்கள் உபயோகித்து பார்த்தீர்களா... என் அனுபவம்.. நன்றாக இருக்கிறது

ஆமாம். நான் நிறைய தடவை உபயோகித்துவிட்டேன். மணிக்கணக்கில் பலமுறை பேசினோம். மிகவும் நன்றாக பேச முடிகிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

அறிஞர்
19-10-2005, 03:14 AM
ஆமாம். நான் நிறைய தடவை உபயோகித்துவிட்டேன். மணிக்கணக்கில் பலமுறை பேசினோம். மிகவும் நன்றாக பேச முடிகிறது.

நன்றி வணக்கம்
ஆரென்நான் தைவானில் இருக்கும்போது மணிக்கணக்கில் கதைத்தேன்..இங்கு வந்து இன்னும் முயற்சிக்கவில்லை... இனிதான் முயற்சிக்கனும்

aren
19-10-2005, 03:52 AM
நான் தைவானில் இருக்கும்போது மணிக்கணக்கில் கதைத்தேன்..இங்கு வந்து இன்னும் முயற்சிக்கவில்லை... இனிதான் முயற்சிக்கனும்

சொல்லுங்கள் எப்பொழுது பேசலாம் என்று. நான் உங்களுக்கு போன் செய்கிறேன். அல்லது ஸ்கைப்பில் பேசலாம்.

அறிஞர்
19-10-2005, 04:17 AM
சொல்லுங்கள் எப்பொழுது பேசலாம் என்று. நான் உங்களுக்கு போன் செய்கிறேன். அல்லது ஸ்கைப்பில் பேசலாம்.அலுவலகத்தில் மைக், கேமராவை மறந்து வைத்து வந்துவிடுகிறேன் அன்பரே... தங்களது நேரம் இரவு 9.30 மணிக்கு மேல் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.. எண்ணை தனிமடலில் அனுப்புகிறேன்

தமிழ்பித்தன்
19-10-2005, 05:24 AM
எனக்கு இன்னும் எண் கிடைக்கவில்லை

தமிழ்பித்தன்
19-10-2005, 05:26 AM
நான் கனடாவில் உள்ள தொலைபேசிக்கு கதைக்க விரும்புகிறேன் யாரும் என்னிடம் 1யூரோ கட்டுவதற்க்கும் credit card இல்லையே

அறிஞர்
19-10-2005, 01:55 PM
நான் கனடாவில் உள்ள தொலைபேசிக்கு கதைக்க விரும்புகிறேன் யாரும் என்னிடம் 1யூரோ கட்டுவதற்க்கும் credit card இல்லையே 1 நிமிடம் இலவசமே.... முயன்று பாருங்கள். கிரடிட் கார்டுக்கு நண்பர்களிடம் பணம் கொடுத்து கேட்டுப்பாருங்கள்

aren
20-10-2005, 08:48 AM
நான் கனடாவில் உள்ள தொலைபேசிக்கு கதைக்க விரும்புகிறேன் யாரும் என்னிடம் 1யூரோ கட்டுவதற்க்கும் credit card இல்லையே

நான் வேண்டுமானால் உங்களுக்கு உதவுகிறேன். ஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் எனக்கு தனிமடலில் உங்களுடைய ஈமெயில் முகவரியை அனுப்புங்கள். நான் எப்படி உதவுவது என்று பார்க்கிறேன்.

அறிஞர்
20-10-2005, 02:09 PM
நான் வேண்டுமானால் உங்களுக்கு உதவுகிறேன். ஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் எனக்கு தனிமடலில் உங்களுடைய ஈமெயில் முகவரியை அனுப்புங்கள். நான் எப்படி உதவுவது என்று பார்க்கிறேன். கிரடிட் கார்டு உபயோகிக்கும் போது பாதுகாப்பு எப்படி உள்ளது ஆரென். நான் நண்பர்களின் அக்கவுண்டுகளை மட்டுமே உபயோகித்துள்ளேன்

அறிஞர்
20-10-2005, 07:03 PM
ஆரென் முன்பு 1 யூரோ இருந்தது.. இப்பொழுது.. 5 யூரோ எனக்காட்டுகிறது. தாங்கள் எப்பொழுது, எவ்வளவு கட்டினீர்கள்

தமிழ்பித்தன்
22-10-2005, 07:59 AM
tamilbiththan@gmail.com
இதுதான் எனது மின்னஞ்சல் முகவரி

அனுராகவன்
23-02-2008, 07:41 AM
நன்றி அறிஞரே..
நானும் ட்ரை பன்னினேன்..
நல்ல இருக்கு..