PDA

View Full Version : சங்கிலிக் கதை



gragavan
13-06-2005, 05:19 AM
வணக்கம் நண்பர்களே.

எப்படியோ நமது மன்றத்தில் சங்கிலிக் கதை எழுத வேண்டுமென்ற ஆவல் பலருக்கும் பரவலாக வந்துள்ளது. அதை எப்படி செயலில் கொண்டு வருவது?

என்னோடு சேர்த்து அறிஞர், பாரதி, மன்மதன், பிரதீப், இனியன் ஆகியோர் எழுத விருப்பம் தெரிவித்துள்ளார்கள். ராம்பால் அவர்களும் நம்மோடு இணைவார் என விரும்புகிறேன்.

மற்ற நண்பர்களும் தங்களது விருப்பத்தை இங்கே சொல்லவும். சங்கிலித் தொடரில் கலந்து கொள்ளவும்.

பாரதி அண்ணா, கூறியுள்ளபடி கதைக்களத்தை முதலிலேயே முடிவு செய்து கொண்டு எழுதத் தொடங்கலாமா?

அல்லது

ஒருவர் முதலில் ஒரு அத்தியாயம் எழுத.....அதை வைத்துக் கொண்டு அடுத்த அத்தியாயம் எழுத வேண்டும். கொஞ்சம் சவால்தான்.

இந்த இரண்டு முறைகளில் எதைக் கொள்ளலாம்? அன்பர்கள் கருத்திடுக.

இந்த முயற்சி வெற்றியடைய விரும்புகிறேன். கதை சிறப்பாக அமையும் பொழுது அதை அச்சு ஊடகங்களிலும் அறிமுகப் படுத்தலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Iniyan
13-06-2005, 05:34 AM
எனது ஓட்டு


ஒருவர் முதலில் ஒரு அத்தியாயம் எழுத.....அதை வைத்துக் கொண்டு அடுத்த அத்தியாயம் எழுத வேண்டும். கொஞ்சம் சவால்தான்

pradeepkt
13-06-2005, 05:37 AM
சவாலைச் சமாளிப்போம்.
அதுதான் எனக்கும் சரியாகப் படுகிறது

gragavan
13-06-2005, 06:06 AM
எனக்கும் இதுதான் பிடித்திருக்கிறது, கொஞ்சம் கடினம்தான். ஆனால் நமது திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

சரி. இதில் பங்கு பெற விரும்புகின்றவர்கள் இங்கே சொல்லுங்களேன்.

பிரியன்
13-06-2005, 06:59 AM
எனக்கும் இதுதான் பிடித்திருக்கிறது, கொஞ்சம் கடினம்தான். ஆனால் நமது திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

சரி. இதில் பங்கு பெற விரும்புகின்றவர்கள் இங்கே சொல்லுங்களேன்.

நானும் வருகிறேன். நாலாவது அத்தியாத்திற்கு மேல

mythili
13-06-2005, 07:07 AM
ஒருவர் ஒரு அத்தியாயம் எழுத...அடுத்தவர் அதை தொடர்வது நன்றாக இருக்கும்.

ஆனால் அடுத்த அத்தியாயத்தி யார் தொடங்குவது என்று எப்படி முடிவு செய்வது?
இல்லை என்றால் ஒரே அத்தியாயத்தை யார் தொடர்வது என்ற குழப்பம் வரும். அல்லது ஒரே அத்தியாயத்தை இரண்டு பேர்கள் எழுதினால் அதை எதை தொடர்வது என்ற குழப்பம் வரும்...அதனால் எப்படி முடிவு செய்வது?

நானும் எழுதலாமா?

அன்புடன்,
மைத்து

gragavan
13-06-2005, 08:24 AM
கண்டிப்பாக சகோதரியும் பங்கெடுக்கலாம். முதலில் யாரெல்லாம் பங்கெடுக்கின்றார்கள் என்று முடிவு செய்யலாம். பிறகு வரிசைப்படி எல்லாருக்கும் சொல்லி விடலாம். ஒரு வியாழக் கிழமை தொடங்கலாம். ஒருவர் கதை போட்டதும் அடுத்த வியாழனன்று அடுத்தவர் கதை போட வேண்டும். முதலிலேயே வரிசை முடிவாவதால், பிரச்சனையிருக்காது. என்ன சொல்கின்றீர்கள். இன்று மாலையே வரிசையை முடிவு செய்து விடலாம்.

mythili
13-06-2005, 08:33 AM
கண்டிப்பாக சகோதரியும் பங்கெடுக்கலாம். முதலில் யாரெல்லாம் பங்கெடுக்கின்றார்கள் என்று முடிவு செய்யலாம். பிறகு வரிசைப்படி எல்லாருக்கும் சொல்லி விடலாம். ஒரு வியாழக் கிழமை தொடங்கலாம். ஒருவர் கதை போட்டதும் அடுத்த வியாழனன்று அடுத்தவர் கதை போட வேண்டும். முதலிலேயே வரிசை முடிவாவதால், பிரச்சனையிருக்காது. என்ன சொல்கின்றீர்கள். இன்று மாலையே வரிசையை முடிவு செய்து விடலாம்.

நல்ல முடிவு தான் . அப்படியே செய்யலாம் :)
அன்புடன்,
மைத்து

அறிஞர்
13-06-2005, 08:35 AM
இராகவா முடிவு செஞ்சுட்டு சொல்லுப்பா...... எனக்கு 4வது அத்தியாயத்துக்கு மேல் வரும் படி பார்த்துக்கொள்ளுங்கள்....

gragavan
13-06-2005, 08:44 AM
என்னது இது? எல்லாரும் நாலுக்கு மேலே கேட்டால்? பிரியனும் நாலுக்கு மேலே....நீங்களும் நாலுக்கு மேலே. அப்படியானால் நான், பிரதீப், மன்மதன், பாரதி ஆகியோர் முன்னுக்கு வர வேண்டும். ம்ம்ம்ம்.

அறிஞர்
13-06-2005, 08:51 AM
என்னது இது? எல்லாரும் நாலுக்கு மேலே கேட்டால்? பிரியனும் நாலுக்கு மேலே....நீங்களும் நாலுக்கு மேலே. அப்படியானால் நான், பிரதீப், மன்மதன், பாரதி ஆகியோர் முன்னுக்கு வர வேண்டும். ம்ம்ம்ம்.
1. இராகவன்
2. மன்மதன்
3. பிரதீப்
4. பாரதி
5. பிரியன்
6. அறிஞர்
7. மைதிலி

pradeepkt
13-06-2005, 08:53 AM
கீழே போகப் போக, முன்னே எழுதியவர்கள் கொண்டு சென்ற திசையையும் ஞாபகம் வைத்துக் கொண்டு கதையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

என்னைக் கேட்டால் வரிசையில் பின்னால் போகப் போகக் கதை எழுதுதல் கடினம். அதிலும் கடைசியாக வருபவர் நிறைய யோசிக்க வேண்டும்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.

gragavan
13-06-2005, 08:55 AM
கீழே போகப் போக, முன்னே எழுதியவர்கள் கொண்டு சென்ற திசையையும் ஞாபகம் வைத்துக் கொண்டு கதையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

என்னைக் கேட்டால் வரிசையில் பின்னால் போகப் போகக் கதை எழுதுதல் கடினம். அதிலும் கடைசியாக வருபவர் நிறைய யோசிக்க வேண்டும்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.உண்மைதான். மைதிலியை கொஞ்சம் முன்னால் தள்ளி விடுவது உத்தமம் என நினைக்கிறேன். என்ன மைத்து?

அறிஞர் இறுதி அத்தியாயத்தை எடுத்துக் கொள்ளலாம்.

gragavan
13-06-2005, 08:58 AM
1. இராகவன்
2. மன்மதன்
3. மைதிலி
4. பிரதீப்
5. பாரதி
6. இனியன்
7. பிரியன்
8. அறிஞர்

இந்த வரிசை எப்படி? மொத்தம் எட்டு அத்தியாயங்கள். எட்டு எழுத்தாளர்கள். சரிதானா! எல்லாருக்கும் நடை வரவேண்டுமென்பதால் சமூகக் கதையை எடுத்துக் கொள்ளலாம்.

pradeepkt
13-06-2005, 09:01 AM
பிரதீப்புக்கு ஓகே.
சரி என்னய்யா, இந்த விஷயத்தைச் சொன்னதுக்காகவா என்னைக் கொஞ்சம் கீழே தள்ளி விட்டீர்கள்? நானும் சிந்திக்கணுமோ? :)

mythili
13-06-2005, 09:02 AM
உண்மைதான். மைதிலியை கொஞ்சம் முன்னால் தள்ளி விடுவது உத்தமம் என நினைக்கிறேன். என்ன மைத்து?

அறிஞர் இறுதி அத்தியாயத்தை எடுத்துக் கொள்ளலாம்.

சரி தான் அண்ணா :) நானே இதை சொல்லலாம் என்று தான் இருந்தேன்.
அன்புடன்,
மைத்து

அறிஞர்
13-06-2005, 09:04 AM
இந்த வரிசை எப்படி? மொத்தம் எட்டு அத்தியாயங்கள். எட்டு எழுத்தாளர்கள். சரிதானா! எல்லாருக்கும் நடை வரவேண்டுமென்பதால் சமூகக் கதையை எடுத்துக் கொள்ளலாம்.
என்னது கடினமான கடைசி பகுதியை என் தலையிலா.... என்ன மக்கா... அதிகம் பழக்கப்பட்ட அண்ணன் பாரதிக்கு கொடுங்கள்....

அறிஞர்
13-06-2005, 09:05 AM
சரி தான் அண்ணா :) நானே இதை சொல்லலாம் என்று தான் இருந்தேன்.
அன்புடன்,
மைத்து
அம்மா மைத்து... நான் இப்பதான் கதை எழுத அடி எடுத்து வைக்கிறேன்... பெரியவர்கள் பலர் இருக்கின்றனர்....

gragavan
13-06-2005, 09:08 AM
பிரதீப்புக்கு ஓகே.
சரி என்னய்யா, இந்த விஷயத்தைச் சொன்னதுக்காகவா என்னைக் கொஞ்சம் கீழே தள்ளி விட்டீர்கள்? நானும் சிந்திக்கணுமோ? :)சரி நீங்கள் முதல் பாகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் நான்காம் பாகத்தை எடுத்துக் கொள்கிறேன். சரியா?

gragavan
13-06-2005, 09:10 AM
என்னது கடினமான கடைசி பகுதியை என் தலையிலா.... என்ன மக்கா... அதிகம் பழக்கப்பட்ட அண்ணன் பாரதிக்கு கொடுங்கள்....இல்லை அறிஞரே. எங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள்தான் முடித்து வைக்க வேண்டும். எங்கள் அன்பு வேண்டுகோள்.

pradeepkt
13-06-2005, 09:17 AM
சரி நீங்கள் முதல் பாகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் நான்காம் பாகத்தை எடுத்துக் கொள்கிறேன். சரியா?
ஆ... இந்த ஆட்டை வேண்டாம். கடைசி பாகம் எழுதுவது எவ்வளவு கடினமோ அதே அளவு கடினம் முதல் பாகம் எழுதுவதும். ஏனென்றால் அதில்தான் ஒரு திசையைக் காட்ட வேண்டும் - direction setting.
அது என்னைப் போல் தற்குறிகளுக்கு உதவாது. உங்களைப் போல் நாலும் தெரிந்தவர்தான் செய்ய இயலும். நான் சும்மா விளையாட்டுக்குத் தானய்யா சொன்னேன். நான்காவது இடம் அருமையான இடம் :)

பிரியன்
13-06-2005, 09:20 AM
எனக்கு ஒரு யோசனை எட்டு அத்தியாங்கள் நாம் எழுதுவோம். இறுதி அத்யாயத்தை ராம்பாலோ நண்பனோ எழுதட்டும்.. அது இன்னமும் சிறப்பாக இருக்கும்.

gragavan
13-06-2005, 09:22 AM
சரி. ஒரு முடிவுக்கு வருவோம்.

இதோ இருக்கிறது வரிசை. இந்த வரிசையை வரிசையிலுள்ள ஒவ்வொருவருக்கும் தனிமடலில் அனுப்புகிறேன்.

1. பிரதீப்
2. மன்மதன்
3. மைதிலி
4. இராகவன்
5. பாரதி
6. இனியன்
7. பிரியன்
8. அறிஞர்

கதைக்குப் பெயரை முதல் அத்தியாயம் எழுதுகின்றவரே முடிவு செய்யட்டும்.

பிரதீப் முதல் அத்தியாயம் நீங்கள்தான். எப்பொழுது எதிர்பார்க்கலாம். ஒவ்வொருவருக்கும் அதிக பட்சமாக ஒரு வாரம் கொடுக்கப் படும். சரிதானா?

gragavan
13-06-2005, 09:23 AM
எனக்கு ஒரு யோசனை எட்டு அத்தியாங்கள் நாம் எழுதுவோம். இறுதி அத்யாயத்தை ராம்பாலோ நண்பனோ எழுதட்டும்.. அது இன்னமும் சிறப்பாக இருக்கும்.அதுவும் அருமைதான். ஆனால் அவர்களிடம் யார் ஒப்புதல் வாங்குவது?

gragavan
13-06-2005, 09:23 AM
ஆ... இந்த ஆட்டை வேண்டாம். கடைசி பாகம் எழுதுவது எவ்வளவு கடினமோ அதே அளவு கடினம் முதல் பாகம் எழுதுவதும். ஏனென்றால் அதில்தான் ஒரு திசையைக் காட்ட வேண்டும் - direction setting.
அது என்னைப் போல் தற்குறிகளுக்கு உதவாது. உங்களைப் போல் நாலும் தெரிந்தவர்தான் செய்ய இயலும். நான் சும்மா விளையாட்டுக்குத் தானய்யா சொன்னேன். நான்காவது இடம் அருமையான இடம் :)அடக் கொடுமையே. மறுபடியும் ஒரு மாற்றமா? பரவாயில்லை. நமது இருவர் இடங்கள் மட்டும்தானே. சரி. நானே தொடங்கி விடுகிறேன்.

பிரியன்
13-06-2005, 09:24 AM
தனி மடல் அனுப்பி அவர்கள் விருப்பத்தை கேட்போம். பங்கேற்க சொல்லி அழைப்போம்.

gragavan
13-06-2005, 09:26 AM
தனி மடல் அனுப்பி அவர்கள் விருப்பத்தை கேட்போம். பங்கேற்க சொல்லி அழைப்போம்.சரி. நீங்கள் அவரிடம் விருப்பம் கேட்டுச் சொல்லுங்கள். அவர் சம்மதம் கிடைக்காத பட்சத்தில் அறிஞரே இருக்கின்ற பட்டியல் படி கதையை முடித்து வைக்கட்டும். சரிதானா?

அறிஞர்
13-06-2005, 10:13 AM
இராகவன்... இந்த தலைப்புக்கு நீங்க பொறுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். பாரதி அண்ணாவை மட்டும் கேளுங்கள் முடிவை அவர் எடுத்தூகொள்கிறாரா என.. என்ன சரியா

gragavan
13-06-2005, 10:35 AM
இராகவன்... இந்த தலைப்புக்கு நீங்க பொறுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். பாரதி அண்ணாவை மட்டும் கேளுங்கள் முடிவை அவர் எடுத்தூகொள்கிறாரா என.. என்ன சரியாசரி அண்ணா. பாரதியண்ணாவிற்கு மடலனுப்பியிருக்கிறேன். இந்த வியாழக் கிழமைக்கான பதிப்பை நானெழுதித் தொடங்கி வைக்கிறேன்.

அறிஞர்
13-06-2005, 10:52 AM
நல்லது பூசை போடுங்கள் இராகவா....

mythili
13-06-2005, 10:52 AM
சீக்கிரம் தொடங்குங்கள், படிக்க ஆவலாக இருக்கிறோம் :)

அன்புடன்,
மைத்து

gragavan
13-06-2005, 11:12 AM
சீக்கிரம் தொடங்குங்கள், படிக்க ஆவலாக இருக்கிறோம் :)

அன்புடன்,
மைத்துஅப்படியே தொடர்ந்து படைக்கவும்தானே!

பிரியன்
13-06-2005, 11:48 AM
நமக்கு ஏழாவது இடம் - ஆறுவாரம் நல்லா பொழுத போக்கலாம். நம்ம குதிரையோட லகான் இனியன் கையில இருக்கு . இனியன் பார்த்து செய்யுங்க :p :p

gragavan
13-06-2005, 12:21 PM
நமக்கு ஏழாவது இடம் - ஆறுவாரம் நல்லா பொழுத போக்கலாம். நம்ம குதிரையோட லகான் இனியன் கையில இருக்கு . இனியன் பார்த்து செய்யுங்க :p :pமொத்தம் ஆறு லகான் உங்க கைக்கு வரும். அத மறந்துறாதீங்க.

karikaalan
13-06-2005, 01:13 PM
சபாஷ், சரியான போட்டிதான்... குறைந்தது படிக்கவாவது செய்வேன் என்று திண்ணமாகச் சொல்கிறேன், நண்பர்களே!

===கரிகாலன்

Iniyan
13-06-2005, 01:23 PM
அண்ணாச்சி1

நம்மள வரிசைல எங்கன போட்டாலும் பிரச்சனை இல்ல. முடிவெடுத்துட்டு சொல்லுங்க போதும்.

gragavan
14-06-2005, 06:09 AM
அனைத்தும் முடிவாகி விட்டது. இறுதிப் பகுதியை எழுத பாரதியண்ணா ஒத்துக் கொண்டார். மொத்தம் எட்டு அத்தியாயங்கள். எட்டாவது அத்தியாயத்தில் கதை முடியும். அத்தியாய எழுத்தாளர் வரிசையை கீழே பாருங்கள்.

1. இராகவன்
2. மன்மதன்
3. மைதிலி
4. பிரதீப்
5. இனியன்
6. பிரியன்
7. அறிஞர்
8. பாரதி

நான் முதல் பாகத்தை முடித்து விட்டேன். நாகாசு வேலைகள்தான் மிச்சம். மன்மதன் இன்றைக்கு உனக்கு முதல் பாகத்தை அனுப்பி வைக்கிறேன். சீக்கிரமாக இரண்டாவது அத்தியாயத்தை முடித்து விட்டு எனக்கு அனுப்பி வைக்கவும். இரண்டையும் சேர்த்து மைதிலிக்கு பிறகு அனுப்புகிறேன். முடிந்தவரை விரைவாக எழுதி முடிக்கலாம்.

முதல் அத்தியாயம் வரும் வியாழனன்று மன்றத்தில் பதிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

பிரியன்
14-06-2005, 06:20 AM
சம்மந்தப்பட்ட எட்டு பேருக்கும் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அப்போதுதான் கதையின் தளம், கதாபாத்திரங்கள் பற்றி ஒரு தெளிவு வரும். ஒரு கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்திலிருந்து ஒரே பெயரே வரவேண்டும். உறவு முறைகளில் மாற்றம் வரக்கூடாது போன்றவற்றை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என இன்னும் பலவற்றை முதலிலே உறுதி செய்து கொள்ள வேண்டும் ... என்ன சொல்றீங்க...

கதையின் போக்கைப் பொறுத்தே விரைவாக எழுதுவதா என்று முடிவு செய்யப்படும் ( கால அள்வு 7 நாட்களுக்குள் )

gragavan
14-06-2005, 06:23 AM
அதுவும் சரியாகத்தான் தோன்றுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் முடிக்க முடிக்க எட்டு பேருக்கும் அனுப்பப் படும். இன்றைக்கு அனைவருக்கும் அனுப்பி வைக்கிறேன்.

pradeepkt
07-07-2005, 05:09 AM
என்னாச்சு கதைக்கு என்னாச்சு...???

அறிஞர்
07-07-2005, 05:35 AM
கதை மன்மதன்... ஒரு மாதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்...

பிரியன்
07-07-2005, 05:38 AM
கதை மன்மதன்... ஒரு மாதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்...
அறிஞரே ஒரு வார்த்தை விட்டுட்டீங்களே .. வெறும் மன்மதனல்ல - உங்க மன்மதன் :mad: :o

pradeepkt
29-07-2005, 06:56 AM
என்னய்யா நடக்குது இந்தக் கதைக்கு????
தொடர் அனைவரும் எழுதியபிறகுதான் போட வேண்டுமா???
எழுதியவரைப் படித்துப் பார்த்தபின் போட்டால் என்ன?
மக்களுக்கும் ஒரு தொடர் படித்தது போலிருக்கும். ஆவலும் தூண்டும்...

gragavan
29-07-2005, 07:15 AM
அப்படியில்லை. மூன்று அத்தியாயங்கள் எழுதி முடிக்கப்பட்டுள்ளன. நான்காவது அத்தியாயம் எழுதப் பட்டுக் கொண்டிருக்கிறது. அது முடிந்தால் அரைக்கிணறு தாண்டிய கதை. இன்னும் நான்கு அத்தியாயங்கள். அவைகளை எழுதுகின்றவர்கள் விடுப்பில் இருக்கின்றார்கள். ஆகையால் இன்னும் ஒரு வாரம் கழித்து வாரம் ஒரு அத்தியாயமாக வெளிவரும். அதற்கும் அடுத்த நால்வரும் எழுதி முடிப்பார்கள் என்ற நம்பிக்கைதான். எல்லாம் இறைவன் செயல்.

pradeepkt
29-07-2005, 07:20 AM
நானே அடுத்து என்ன நடக்குமின்னு அப்படியே டென்ஷனா இருக்கேன்...
நீங்க ஏன்யா இறைவனை எல்லாம் வம்புக்கு இழுக்கறீங்க...
அத்தோட யாரு எந்த அத்தியாயத்தை எழுதியதுங்கறதை ரகசியமா வச்சிக்குங்க...
வேணுமின்னா அதுக்கு ஒரு போட்டி வச்சிருவம்... அதில நாம எட்டு பேரும் கலந்துக்க முடியாது... சரியா?

rajjdy
03-12-2005, 12:03 AM
சங்கிலிக் கதைக்கு என்னாச்சு. லிங்க் கொடுங்கள் . படித்துப் பார்க்கலாம்...

poo
03-12-2005, 09:24 AM
இன்றுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன்.. இந்நேரம் எல்லாம் முடிந்திருக்குமே?!

எப்போது வெளியீடு?!!

pradeepkt
03-12-2005, 04:18 PM
என்னமோ போங்க,
நானும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போனேன்.

மன்மதன்
04-12-2005, 03:43 PM
நான் எப்போவோ தொடங்கி, நிறைய பேரு தொடர்ந்து இப்போ ராகவன் கையிலே இருக்கு.. அப்படியே இங்கே பதிச்சிடுங்க.. மற்றவர்கள் தொடரட்டும்..(வந்தானவுக்கு வந்தனம் ??)

mukilan
04-12-2005, 04:08 PM
நான் எப்போவோ தொடங்கி, நிறைய பேரு தொடர்ந்து இப்போ ராகவன் கையிலே இருக்கு.. அப்படியே இங்கே பதிச்சிடுங்க.. மற்றவர்கள் தொடரட்டும்..(வந்தானவுக்கு வந்தனம் ??)

வந்தனாவாஆஆஆஆஆஆஆஆ! சுவேதா விரைவில் விவ(கா)ரங்களுடன்! :cool: வருக.

pradeepkt
05-12-2005, 03:45 AM
ஐயா...
அது கதை!!!

mukilan
05-12-2005, 04:05 AM
ஐயா...
அது கதை!!!

இதென்ன புதுக்கதை! நான் நம்ப மாட்டேன். சுவேதா வந்து சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம்னே!

gragavan
05-12-2005, 04:22 AM
நண்பர்களே.....மொத்தம் நான்கு அத்தியாயங்கள் இருக்கின்றன. சில பல காரணங்களால் நடுவில் ஒரு தொய்வு. அடுத்து நான் அத்தியாயங்கள் எழுதப்பட வேண்டும். ஒன்று அறிஞருக்கு ஒன்று பாரதியண்ணாவிற்கு என்று இருக்கிறது. இன்னும் இருவர் சேர்ந்தால் கதை முடிந்துவிடும். யாராவது........

poo
05-12-2005, 04:57 AM
பெஞ்சமினை புடிச்சிப் போடுங்க ராகவன்!!

mukilan
05-12-2005, 05:27 AM
பெஞ்சமினை புடிச்சிப் போடுங்க ராகவன்!!

பெஞ்சமின் வடிவேலு ஸ்டைலில்.
ஆத்தி! ஏங்கிட்ட வம்புக்கு வர்றதே இவிங்க வேலையாப் போச்சு! டார்ச்சர் தாங்க முடியலை ஆமா! இதே வேலையாத்தான் அலையுறாய்ங்களா?இன்னும் எத்தனை பேருய்யா கிளம்பிருக்கீக.

gragavan
05-12-2005, 05:47 AM
பெஞ்சமினை புடிச்சிப் போடுங்க ராகவன்!!மூனாவது ஆள் கெடச்சாச்சு.....நீங்கதான் பூ. :)

poo
05-12-2005, 06:00 AM
................

(முகிலன் என் சார்பா ஏதாச்சும் சொல்லேன்பா...)

பென்ஸ்
05-12-2005, 06:01 AM
பெஞ்சமின் வடிவேலு ஸ்டைலில்.
ஆத்தி! ஏங்கிட்ட வம்புக்கு வர்றதே இவிங்க வேலையாப் போச்சு! டார்ச்சர் தாங்க முடியலை ஆமா! இதே வேலையாத்தான் அலையுறாய்ங்களா?இன்னும் எத்தனை பேருய்யா கிளம்பிருக்கீக.

அகா... வந்திட்டான்யா... வந்திட்டான்யா....

பென்ஸ்
05-12-2005, 06:04 AM
மூனாவது ஆள் கெடச்சாச்சு.....நீங்கதான் பூ. :)

கேட்டு அடி வாங்குறது இவங்களுக்கு வேலையா போச்சு... :rolleyes: :rolleyes: :rolleyes:
யாருக்கிட்ட வச்சுக்கிறிங்க... நாங்கயெல்லாம் ரவுடியில்ல.!!!!:eek: :D :D

poo
05-12-2005, 06:13 AM
பார்த்திபன் (முகிலன்) : இனிமே தமிழ்மன்றம் எங்க இருக்குன்னு கேப்ப...
வடிவேலு (பூ) : ச்சே.. சே.. ஹ்ஹூம்... தமிழ்மன்றம் இங்க எங்கயோ...இங்கிலீஷ்க்காரன் படம் ஓடுதே..ஆங்..அங்க இருக்கு!
பார்த்திபன் (முகிலன்) : ஆ..ங் அது!!

gragavan
05-12-2005, 07:39 AM
பார்த்திபன் (முகிலன்) : இனிமே தமிழ்மன்றம் எங்க இருக்குன்னு கேப்ப...
வடிவேலு (பூ) : ச்சே.. சே.. ஹ்ஹூம்... தமிழ்மன்றம் இங்க எங்கயோ...இங்கிலீஷ்க்காரன் படம் ஓடுதே..ஆங்..அங்க இருக்கு!
பார்த்திபன் (முகிலன்) : ஆ..ங் அது!!என்ன பூ இது? ஒரு அத்தியாயம் தானே எழுதச் சொன்னேன். அதுக்குப் போயி......ரெண்டு அத்தியாயமா வேணுமா?

poo
05-12-2005, 07:48 AM
ரெண்டு அத்தியாயமா?!
என்ன அநியாயமா கேக்கறீர் ராகவன்?!!

(நமக்கெல்லாம் திறமை பத்தாது சாமி, அதான் ஜகா வாங்கறேன்...எழுதறேன்னு சொல்லி எல்லா கதையையும் வாங்கி முன்னமே படிச்சிடலாம்னு ஒரு யோசனையும் இருக்கு!!. கண்ணைக் கட்டி காட்டில் விட்டாமாதிரி இருக்குமோன்னும் பயம்....)

gragavan
05-12-2005, 08:19 AM
ரெண்டு அத்தியாயமா?!
என்ன அநியாயமா கேக்கறீர் ராகவன்?!!

(நமக்கெல்லாம் திறமை பத்தாது சாமி, அதான் ஜகா வாங்கறேன்...எழுதறேன்னு சொல்லி எல்லா கதையையும் வாங்கி முன்னமே படிச்சிடலாம்னு ஒரு யோசனையும் இருக்கு!!. கண்ணைக் கட்டி காட்டில் விட்டாமாதிரி இருக்குமோன்னும் பயம்....)கவலைப் படாதீங்க. ஒரு அத்தியாயம் எழுதுங்க. ஏழே ஏழு அத்தியாயத்துல கதைய முடிச்சிறலாம்.

poo
05-12-2005, 09:31 AM
சரி.. அனுப்புங்க.. (இன்னும் 4, 5 நாள்தான் நான் இப்படி ஓய்வாக இருக்கமுடியும்., அதற்குள் படித்து ஒரு வழி பண்றேன்!!)

pradeepkt
05-12-2005, 09:36 AM
பூ பொங்கி எழுந்திட்டாரு.
அடுத்து எழுதுற ஆளுக்குத்தான் பிரச்சினை போல... :D

poo
05-12-2005, 09:37 AM
ஆமாம்.. நான் எதை எழுதனும்?!!

5, 6, அல்லது 7 ??!!

poo
05-12-2005, 09:38 AM
பூ பொங்கி எழுந்திட்டாரு.
அடுத்து எழுதுற ஆளுக்குத்தான் பிரச்சினை போல... :D


ஏன் அப்படி சொல்கிறீர்கள் ப்ரதீப்??!!

(எனக்கு முன்னாடி எழுதனது நீரா ஓய்??!)

poo
05-12-2005, 09:38 AM
நான் சொதப்பிடுவேன்னு பயமா?!! ஹாஹாஹா!!

pradeepkt
05-12-2005, 09:57 AM
அட இல்லைங்க,
நீங்க எழுதுறதை வச்சி அடுத்த ஆளு எழுதணுமில்ல?
அவங்களுக்கு நிறைய லீடு குடுத்துருவீங்க, அவங்க எதை எடுக்கிறது எதை விடுக்கிறதுன்னு கஷ்டப் படுவாங்கன்னேன். :D

gragavan
06-12-2005, 03:57 AM
ஆமாம்.. நான் எதை எழுதனும்?!!

5, 6, அல்லது 7 ??!!பூ நேத்து ஒங்களுக்குக் கதையை அனுப்பீருந்தேனே.......அடுத்த பாகத்தை நீங்கள் எழுதுங்கள்.

அறிஞர்
06-12-2005, 05:00 AM
பூ நேத்து ஒங்களுக்குக் கதையை அனுப்பீருந்தேனே.......அடுத்த பாகத்தை நீங்கள் எழுதுங்கள்.வில்லங்கமா எழுதாம இருந்தா சரி.... :rolleyes: :rolleyes: :rolleyes:

gragavan
06-12-2005, 05:39 AM
வில்லங்கமா எழுதாம இருந்தா சரி.... :rolleyes: :rolleyes: :rolleyes:அடுத்தது நீங்கதான்.

இளசு
06-12-2005, 06:34 AM
தேர் நிலையிலிருந்து புறப்பட்டாச்சு..மன்றம் வர..

முட்டி நின்றதை கட்டி இழுத்துவரும் ராகவன் மற்றும் அனைவருக்கும்
முன் வாழ்த்துகள்..ஊக்கங்கள்...

ம்ம்ம்ம்ம்ம்.. தம் கட்டி இழுங்க எல்லாரும்..


அரிய முயற்சி.. அயராமல் முடிக்கவும்..

அறிஞர்
06-12-2005, 03:43 PM
அடுத்தது நீங்கதான்.அட சாமி... கொஞ்சம் என்ன பேசுறீங்கன்னு பார்க்க வந்தேன்... இப்பொழுது வேண்டாம். அடுத்த சங்கிலிக்கதையில் பார்க்கலாம்.....

அறிஞர்
06-12-2005, 03:44 PM
தேர் நிலையிலிருந்து புறப்பட்டாச்சு..மன்றம் வர..

முட்டி நின்றதை கட்டி இழுத்துவரும் ராகவன் மற்றும் அனைவருக்கும்
முன் வாழ்த்துகள்..ஊக்கங்கள்...

ம்ம்ம்ம்ம்ம்.. தம் கட்டி இழுங்க எல்லாரும்..


அரிய முயற்சி.. அயராமல் முடிக்கவும்..இளசு அண்ணாவுக்கு ஒரு பகுதி கொடுத்துடுங்க.. இராகவன்

gragavan
07-12-2005, 05:28 AM
இளசு அண்ணாவுக்கு ஒரு பகுதி கொடுத்துடுங்க.. இராகவன்கரெக்ட். கரெக்ட்டா எடுத்துக் கொடுத்தீங்க அறிஞரே. கடைசிப் பகுதிய இளசு அண்ணாவே எழுதி முடிக்கட்டும்.

மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள
கட்டிப் போட்டதடி அறிஞரோட வேல

mukilan
07-12-2005, 05:35 AM
கரெக்ட். கரெக்ட்டா எடுத்துக் கொடுத்தீங்க அறிஞரே. கடைசிப் பகுதிய இளசு அண்ணாவே எழுதி முடிக்கட்டும்.

மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள
கட்டிப் போட்டதடி அறிஞரோட வேல

சரி! எல்லோரும் சீக்கிரம் எழுதி சங்கிலியை அனுப்புங்கய்யா! பவுனு வெலை ஏறி கிட்டே போகுதில்ல!:D :) :cool:

அறிஞர்
07-12-2005, 05:38 AM
சரி! எல்லோரும் சீக்கிரம் எழுதி சங்கிலியை அனுப்புங்கய்யா! பவுனு வெலை ஏறி கிட்டே போகுதில்ல!:D :) :cool:நீங்க எந்த பகுதி எழுதுகிறீர்கள் முகிலன்

mukilan
07-12-2005, 05:41 AM
நீங்க எந்த பகுதி எழுதுகிறீர்கள் முகிலன்

நானா!:) கொஞ்ச நாள் ஆகட்டும். இன்னும் நிறையக் கதை படிச்சாத் தானே நானும் கதை எழுத முடியும். அடுத்த சங்கிலித் தொடர்கதைகள்ல எழுதிருவோம். (நீங்களும் தான் எழுதப் போறீங்க அறிஞரே!)

gragavan
07-12-2005, 07:28 AM
இருங்கய்யா...கொஞ்சம் இருங்க. அடுத்தது எழுதிக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் பொறுங்க.

மதி
07-12-2005, 11:06 AM
இராகவன்,
சீக்கிரமா பதியுங்கள்...
ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றேன்...

மதி

பென்ஸ்
19-01-2006, 07:28 AM
சங்கிலிக்கதையை யார் செயினு போட்டு கட்டி வைத்திருப்பது..
அவிழ்த்து விடுங்கள்.....

mania
19-01-2006, 07:49 AM
என்னப்பா இது இந்த இழு இழுக்கறீங்க.....:confused: :confused: மரியாதையா சீக்கிரம் கொடுங்க......இல்லாட்டி "கதை எழுதிய கதை"ன்னு நான் ஒரு கதை எழுதிடுவேன்.....:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
சங்கிலி மணியா....:D

gragavan
19-01-2006, 07:51 AM
பெஞ்சமின், சங்கிலிக் கதை முயற்சி தோல்வி என்றே நினைக்கிறேன். ஐந்தாவது அத்தியாயத்திற்கு யாரிடம் அனுப்பினாலும் பயந்து ஓடுகிறார்கள். அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. கதை வளர்ந்த விதம் எப்படி. அடுத்த முறை சிறப்பாக முயல்வோம். உங்களுக்கு ஏமாற்றத்தைத் தந்ததற்கு என்னை மன்னிக்கவும்.

gragavan
19-01-2006, 07:59 AM
என்னப்பா இது இந்த இழு இழுக்கறீங்க.....:confused: :confused: மரியாதையா சீக்கிரம் கொடுங்க......இல்லாட்டி "கதை எழுதிய கதை"ன்னு நான் ஒரு கதை எழுதிடுவேன்.....:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
சங்கிலி மணியா....:Dஎழுதுங்க தலை. அந்தக் கதையாவது நல்லா வரட்டும்.

pradeepkt
19-01-2006, 11:47 AM
ஏய்யா வந்த வரைக்குமாவது போட வேண்டியதுதானே
அல்லது வேறு யார் கதையைத் தொடர்வதற்குத் தயார் என்று கேளுங்கள்.
இல்லையேல் நீங்களே கடைசி அத்தியாயத்தை எழுதி முடியுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது

gragavan
19-01-2006, 12:09 PM
ஏய்யா வந்த வரைக்குமாவது போட வேண்டியதுதானே
அல்லது வேறு யார் கதையைத் தொடர்வதற்குத் தயார் என்று கேளுங்கள்.
இல்லையேல் நீங்களே கடைசி அத்தியாயத்தை எழுதி முடியுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லதுகடைசி அத்தியாயமா....ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அத்தியாயத்துலயும் கதைய ட்விஸ்டி ட்விஸ்டி அடுத்து எங்க போறதுன்னே தெரியாம முட்டி மோதிக்கிட்டு இருக்கு. வேணும்னா இதுவரைக்கும் எழுதுன நாலு அத்தியாயத்தையும் போடலாம். யாரு யாரு எந்த அத்தியாயம் எழுதுனாங்கன்னு கண்டு பிடிக்கச் சொல்லி போட்டி வெக்கலாம்.

pradeepkt
19-01-2006, 12:12 PM
என்னத்தையாச்சும் செய்யிங்க,
நாங்க போட்டியிலயாச்சும் கலந்துக்கிருவம்.

மதி
19-01-2006, 12:19 PM
ஏய்யா வந்த வரைக்குமாவது போட வேண்டியதுதானே
அல்லது வேறு யார் கதையைத் தொடர்வதற்குத் தயார் என்று கேளுங்கள்.
இல்லையேல் நீங்களே கடைசி அத்தியாயத்தை எழுதி முடியுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது
ஏன் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்..:confused: :confused:
அண்ணா, பேசாம நீங்களே எழுதிடுங்களேன்..:D :D

தீபன்
19-01-2006, 12:54 PM
சங்கிலிக்கதை வந்ததோ இல்லையோ... அதற்fஆன உஙள் முயற்சியே நல்ல அருமையான நகைச்சுவை காவியமாக இருந்தது.... நானும் ஒரு முயற்சி பண்ணிப்பார்க்கலாமா...? முடியுமானால் முன்னய பகுதிகளை எனக்கு அனுப்புவீர்களா...? ஒரு வார கால அவகாசத்துள் என்னால் முடியுமா...இலலை முடியாதா என சொல்கிறேன்... முதற் பகுதிகளில் பாடு பட்டவர்களது முயற்சி வீணாகிவிடக்கூடாது என்பதற்fஆகத்தான் நானும் முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்...
ஆனால் என்ன, நான் எளுதினால்கூட அதிகளவிலான எளுத்து ப்ளைகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்...

gragavan
19-01-2006, 01:07 PM
சங்கிலிக்கதை வந்ததோ இல்லையோ... அதற்fஆன உஙள் முயற்சியே நல்ல அருமையான நகைச்சுவை காவியமாக இருந்தது.... நானும் ஒரு முயற்சி பண்ணிப்பார்க்கலாமா...? முடியுமானால் முன்னய பகுதிகளை எனக்கு அனுப்புவீர்களா...? ஒரு வார கால அவகாசத்துள் என்னால் முடியுமா...இலலை முடியாதா என சொல்கிறேன்... முதற் பகுதிகளில் பாடு பட்டவர்களது முயற்சி வீணாகிவிடக்கூடாது என்பதற்fஆகத்தான் நானும் முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்...
ஆனால் என்ன, நான் எளுதினால்கூட அதிகளவிலான எளுத்து ப்ளைகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்... எழுத்துப் பிழைகள் பற்றி இப்பொழுதே தெரிந்து விட்டது தீபன்.

கதையைக் கண்டிப்பாக உங்களுக்கு அனுப்புகிறேன் தீபன். படித்துப் பாருங்கள். உங்கள் முடிந்ததைச் செய்து பாருங்கள். இன்றிரவு அல்லது நாளை அனுப்புகிறேன்.

pradeepkt
20-01-2006, 03:43 AM
கருத்துதான் முக்கியம்
எழுத்துப் பிழைகளை ராகவன் சரி செய்து கொள்வார்.

gragavan
20-01-2006, 05:03 AM
கருத்துதான் முக்கியம்
எழுத்துப் பிழைகளை ராகவன் சரி செய்து கொள்வார்.அது சரிய்யா....ஒமக்கே அனுப்பி வைக்கிறேன். சரி செய்யுங்க.

தீபன்
30-01-2006, 03:18 PM
எங்க கதயை அனுப்ப கானோம்..? மறந்திட்டியளா? எனக்கு எப்படி அனுப்புவியள்? மின்னன்ச்சல் மூலமாகவா...?

gragavan
31-01-2006, 04:23 AM
தீபன், தாமதத்திற்கு மன்னிக்கவும். உங்களுக்கு இது வரை எழுதப்பட்ட அத்தியாயங்களை தனிமடலில் அனுப்பியிருக்கிறேன். பார்க்கவும். படித்து விட்டு முடியுமா முடியாதா என்று சொல்லவும்.

தீபன்
05-02-2006, 01:08 PM
னன்றி அண்ணா... முயற்சித்து பார்க்கிறேன்...

ராஜா
14-12-2008, 05:42 PM
கடைசிவரைக்கும் கதையை கண்ணிலேயே காட்டலியேய்யா..!

ஒருவேளை இது "மர்ம"க்கதையோ..?

தமிழ்தாசன்
14-12-2008, 08:25 PM
அருமையான கதையொன்றைப் படித்தேன். கடைசியில் முடிவு எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனாலும் இடையில் சோகமான நிகழ்வில்லை ஆனாலும் நாயகன் யார்? நாயகி யார் என்று புரியவில்லை? ஆனாலும் பேய்க்கதைகள் எனக்கு பிடிக்கும்.
அதுவும் இந்தச் சங்கிலிக் கதை ஏனோ பிடித்துப்போட்டுது?

கதையின் முடிவு நன்று?


கடைசிவரைக்கும் கதையை கண்ணிலேயே காட்டலியேய்யா..!

ஒருவேளை இது "மர்ம"க்கதையோ..?
__________________


சும்மா தமாஸ்

தீபன்
19-12-2008, 09:00 AM
கைவிடப்பட்ட முயற்சியை மீண்டும் தட்டியெழுப்பியிருக்கிறார்கள் நண்பர்கள். இன்றைய கதாசிரியர்களாலாவது இந்த கதையை முடித்துவைக்க முடிகிறதா பார்க்கலாம்....

அதற்காக, ஏற்கனவே எழுதப்பட்ட அத்தியாயங்களை இங்கு பதிவிடுகிறேன்... (இவை. என்னாலல்ல, மன்ற மூத்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை...).
தேவைக்கேற்றபோல் திருத்தங்களையோ மாற்றங்களையோ செய்து கதையை முடித்து வையுங்கள் பார்க்கலாம்.

இன்னமும் மூன்றே மூன்று அத்தியாயங்களில் கதை முடிய வேண்டும்.

வந்தனாவிற்கு வந்தனம்

அத்தியாயம் - 1

கண்களைத் திறக்க முடியவில்லை. இமைகளுக்குள் ஊசி குத்தியது. தலையில்
பயங்கரமாக வலித்தது. என்ன நடந்தது என்று சில நிமிடங்கள் புரியவில்லை.
வலியைப் பொறுத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கண்களத் திறந்து
பார்த்தேன்.
ஏதோ குப்பைத்தொட்டி. பக்கத்தில் பழைய கிழிந்ததுணிகள், பழைய சோறு,
கழிசடைகள். எல்லாம் ஒரு குப்பை தொட்டிக்குரிய அனைத்து
அம்சங்களுடன்தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாற்றம் மூக்கைத்
துளைக்கத் துளைக்க, இரவு முழுதும் இங்கேயா கிடந்தோம் என்று
நினைக்கையில் வலியையும் மீறிய ஒரு அழுகை வந்தது.

நேற்றிரவு என்ன நடந்தது? முழுதும் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை.
ஆனாலும் நான்கு பேர்கள் ரவுண்டு கட்டி அடித்தது நினைவுக்கு வந்தது.
எத்தனை தடவை என்னை குடிக்க வேண்டாம் என்று வந்தனா
சொல்லியிருக்கிறாள். மீறிக் குடித்தது எவ்வளவு ஆபத்தாக முடிந்ததே! என்ன
ஒரு பிழைப்பு இது! திருப்பி ஒரு அடிகூட அடிக்கவில்லையே! அவர்கள்
அடிக்கு கீழே விழந்தது நியாபகம் வந்து. ச்சே! எப்படி நான் இனி ஆபிஸுக்கு
போவேன்? எப்படி என் வந்தனா கண் முன் விழிப்பேன்?
எழுந்து நடக்க முயன்றேன். முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பாம்பு
போல ஊர்ந்து ஊர்ந்து குப்பைத்தொட்டிக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கும் ஒரு
சிறிய பேருந்து நிறுத்தத்தைச் சேர்ந்தேன். உடம்பு மனம் ரெண்டுமே
சோர்வடைந்து விட்டது.
காலை மணி 5:30 இருக்கும் போல. பேருந்து நிறுத்தத்தில் ஒன்றிரண்டு பேர்கள்
பேப்பரை விரித்து கொண்டு பிஸியாக இருந்தனர். என்னை கவனித்தும்
கவனிக்காத மாதிரி இருந்து விட்டனர். எப்பொழுதும் என்னைச் சுற்றிலும் ஒரு
கூட்டம் இருந்தது போய், இன்று கவனிப்பாரற்று எங்கேயோ கிடக்கிறேன்.
மனசுக்குள் லேசாக வலித்தது.
நடுத்தர வயதுடைய ஒருவர் இளம் வாலிபரிடம் சொன்னார். "பாக்க டீசண்டா
இருக்கான். தண்ணி அடிச்சுட்டு எப்படி படுத்திருக்கிறான் பாருங்க!"
நான் தண்ணி அடிக்கலைடா சொட்டை என்று சொல்லலாம் என்றால்
ஹூம்ம்ம்.... வாயைத் திறக்க முடியவில்லை. ரத்தம் வராத அளவுக்கு அடி.
போலிஸ்காரங்ககிட்ட ட்ரெய்னிங் எடுத்திருப்பாங்களோ!
இது என்ன ஏரியா என்றே தெரியவில்லை. நல்லவேளை நாய்கள் இல்லை.
இருந்திருந்தால் கடித்துக் குதறியிருக்கும்..
"சா...ர் இ....து எந்....த ஏ...ரியா.?" குழறினேன்.
"ஏம்ப்பா.. பார்க்க படு டீசண்டா இருக்க. இப்படியா தண்ணியடிச்சிட்டு நடு
ரோட்டிலே விழுந்து கிடப்ப? உன்னப் பெத்தவங்க பார்த்தா என்ன
நினைப்பாங்க."
"இல்லே சார். என்னை யாரோ அடிச்சி போட்டுடாங்க. என் அப்பாவுக்கு
தெரிஞ்சா நாலு கொலையாவது விழும். சரி அத விடுங்க. இது எந்த ஏரியா?"
"புரசைவாக்கம் தம்பி. எழுந்திருங்க. வீட்டுக்கு போங்க." நடுத்தர வயதுக்காரரின்
குரலில் கரிசனம் இருந்தது.
"எனக்கொரு உதவி பண்ணுங்க. உங்க கிட்ட மொபைல் இருக்கா? வீட்டுக்கு
ஒரு ஃபோன் போடனும்."
"என்னிடம் இருக்கு" என்று சொல்லி என்னிடம் மொபைலை கொடுத்தான் அந்த
இளைஞன். வேலைக்குப் போகிறவன் போல.
வலது பேண்ட் பாக்கெட்டிலிருந்த உடைந்திருந்த ஒற்றைச் சிகரெட்டை எடுத்து
பத்த வைத்தேன். அந்த மொபைலை வாங்கி ஒரு லோக்கல் கால் செய்தேன்.
புகைப் பிடித்துக் கொண்டே ஃபோன் செய்வது அந்த இளைஞனுக்குப்
பிடிக்கவில்லை என்று அவன் முகத்திலிருந்தே தெரிந்தது.
எதிர் முனையில் ரிங் போனது. கொஞ்ச நேரத்திலேயே...."ஹலோ! வந்தனா
ஹியர்"


அத்தியாயம் - 2

வந்தனாதான் எதிர்முனையில் பேசுவது என்று தெரிந்ததும் எனக்குப் பரபரப்புக்
கூடியது. "வந்தனா! அஷ்வின் பேசுறேன்....." வேகமாகப் பேசியதால் லேசாகக்
குழறியது.
"என்ன அஷ்வின் இந்த வேளைல �போன்? ஏன் பேச்சு ஒரு மாதிரியா
இருக்கு?" அவள் பேச்சிலிருந்த வியப்பு குத்தியது. கொஞ்சம் கொஞ்சமாக
நிலமையை விளக்கினேன்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பில்ரோத் மருத்துவமனையில் என்னைப் படுக்க
வைத்து ரப்பர் டியூப் பாம்புகளை என் மேல் படர விட்டிருந்தார்கள். கொஞ்சம்
சுகமாக இருந்தது. வந்தனாதான் விஷயம் தெரிந்ததும் ஓடி வந்து
மருத்துவமனையில் சேர்த்தது. நல்ல பெண். அதனால்தானே நான் உருகுகிறேன்.
யாருக்கோ �போன் செய்கிறாள். யாருக்காக இருக்கும்?
"ஹலோ! கலியவரதன் அங்கிளா? நான் வந்தனா பேசுறேன்." புரிந்தது எனக்கு.
அப்பாவுக்குத்தான் �போன். இன்னொரு பிரச்சனை உருவாகப் போகிறது.
கொஞ்ச நேரத்தில் அப்பா வரப் போகிறார். என்ன சொல்வது?
இப்படி அஷ்வினின் மனம் சஞ்சலத்திலும் குழப்பத்திலும் இருந்த பொழுது,
கலியவரதன் கொதித்துக் கொண்டிருந்தார். மகன் மருத்தவமனையில்
இருக்கிறான். அதுவும் யாரோ அடித்துப் போட்டிருக்கிறார்கள் என்றால் எந்தத்
தந்தைக்குத்தான் ஆத்திரம் வராது. அதிலும் கலியவரதன் காவல்துறை
உயரதிகாரி. அடுத்த அரைமணி நேரத்தில் மனைவியோடு மருத்துவமனையில்
இருந்தார்.
"என்னடா இது? அடி வாங்கிட்டுப் படுத்திருக்க? இதென்ன கெட்ட சகவாசம்?"
கரிசனமும் கடுகடுப்பும் கலந்து பேசினார். அஷ்வின் எதுவும் பேசவில்லை.
அஷ்வினின் அம்மா சிவகாமி மட்டும் மெல்ல விசும்பிக் கொண்டிருந்தார்.
கலியவரதன் சும்மாயிருக்கவில்லை. வந்தனாவிற்கு நன்றி சொல்லி விட்டு
அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டார். இப்பொழுது மகனைப் பார்த்துக் கொள்ள
சிவகாமி இருக்கிறாளே. டாக்டரிடம் எல்லாம் பேசிவிட்டு நடந்ததை ஆராயப்
புகுந்தார்.
காவல்துறை டி.ஐ.ஜி நினைத்தால் நடந்ததெல்லாம் உடனே தெரிந்து விடாதா?
சரியாக ஒரு மணி நேரத்தில் அவர் அனைத்துத் தகவல்களையும் திரட்டி
விட்டார். அடித்தது அஷ்வினும் வந்தனாவும் வேலை பார்க்கும் அலுவலகத்தில்
அவர்களோடு வேலைபார்க்கும் சுரேந்திரனும் அவனது நண்பர்களும்.
தண்ணியடிக்கக் கூப்பிட்டு விட்டு அடித்திருக்கிறார்கள். அவர்களை நேராக
தன்னுடைய அலுவலகத்திற்கு வரவழைத்தார்.
சுரேந்திரனும் அவனது நண்பர்களும் பயந்து கொண்டே வந்தார்கள்.
வந்தவர்களை அமைதியாக வரவேற்று உட்கார வைத்தார். வந்த நான்கு பேரும்
இளைஞர்கள். நல்ல படித்த இளைஞர்கள். எந்தக் குற்றப் பின்னணியும்
இல்லாதவர்கள். அதுதான் கலியவரதனை மிகவும் குழப்பியது. அஷ்வினிடம்
தவறிருக்குமோ என்றும் தோன்றியது.
அவரே பேச்சைத் தொடங்கினார். "நான் அஷ்வினோட அப்பா கலியவரதன்.
ஒங்கள எதுக்கு வரச் சொல்லிருக்கேன்னு புரிஞ்சிருக்குமுன்னு நெனைக்கிறேன்."
அங்கே நிறுத்தி இடைவெளி விட்டு அவர்களைப் பார்த்தார்.
அவர்கள் கொஞ்சம் வெளிறிப் போயிருந்தார்கள். சுரேந்திரன் எச்சிலை
முழுங்குவதிலிருந்து அவனது பயத்தைப் புரிந்து கொண்டார். இதமாக
விசாரித்தார்.
"சுரேந்திரன் பயப்பட வேண்டாம். ஒங்களப் பத்தி எல்லா விவரமும்
தெரிஞ்சுகிட்டுதான் கூப்பிட்டனுப்பிச்சேன். எந்தப் பிரச்சனைக்கும் போகாத நல்ல
குடும்பத்துப் பசங்க நீங்க. நல்ல வேலைல இருக்கீங்க. நீங்க ஏன் இப்படி
செஞ்சீங்கன்னு கேக்கத்தான் கூப்பிட்டேன். உங்களுக்கும் அஷ்வினுக்கும் என்ன
பிரச்சனை? நீங்க சொன்னாத்தான் இதுக்கு ஒரு தீர்வு காண முடியும்."
சுரேந்திரன் சொல்லத் தொடங்கினான்.

அத்தியாயம் - 3

"உங்களுக்கு நான் படிச்சவன், நல்ல குடும்பத்துக்காரன்னு தெரிஞ்சிருக்கும்.
ஆனா நான் முழுசா சொல்லி முடிச்சப்புறம் நீங்களே ஒரு நியாயம்
சொல்லுங்க. மதுரைக்குப் பக்கத்தில காரியாபட்டிதான் நான் பொறந்த கிராமம்.
எங்க அப்பா எங்க ஊரில இருந்த ஒரே சின்னப் பள்ளிக்கூடத்தில தமிழ்
ஆசிரியர். அவரு எனக்கு அப்பாவா மட்டும் இருக்கலை, ஒரு நண்பனா,
மந்திரியா, சேவகனா மட்டுமல்ல எல்லாமேவா இருந்தாரு. எப்போ பார்த்தாலும்
நீதி, நேர்மை, நியாயம்னு பேசி அம்மாகிட்டயும் திட்டு வாங்குவாரு. ஒரு
பிரச்சினைக்காக இவருக்குப் பக்கத்து ஊரு கவுன்சிலரோட பெரிய தகராறு
ஆகி அந்த ஊராட்சி மன்றத்தையே முடக்கி இருந்தாங்க. நான் ப்ளஸ் டூவில
நல்ல மார்க்கு எடுத்திருந்தும் அவரால என்னை மதுரை, திருச்சி, கோவைன்னு
அனுப்பி ஒரு பெரிய கல்லூரியில படிக்க வைக்க முடியலை. அவ்வளவு
வறுமை. அதனால பக்கத்தில இருந்த கோவில்பட்டிக் காலேஜில இஞ்சினியரிங்
சேர்ந்தேன்.
கல்லூரியில சேர்வதற்கு ஒரு வாரம் முன்னாலதான் என் வாழ்வில் முதல்
அதிர்ச்சி தாக்கியது."
சுரேந்திரனின் குரல் நடுங்கியது. கொஞ்சம் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்தான்.
"ஆமா ராத்திரி எங்க அப்பா இலவச டியூஷன் எடுத்திட்டு வரும் வழியில
யாராலயோ கொலை செய்யப் பட்டுக் கிடந்தாரு. முகம் முழுக்கக்
கோடாலியால கொத்திப் போட்டிருந்தாங்க. அவரு எங்கப்பாங்கறதுக்கு
அடையாளமே எங்க அம்மா ஒரு வாரம் முன்னால சீட்டு சேர்த்து வாங்கிப்
போட்டிருந்த மோதிரம்தான். அவர பக்கத்தூரு கவுன்சிலருதான் ஆள வச்சிக்
கொன்னுட்டதாச் சொன்னாங்க. என்ன சொல்லி என்ன? போன எங்கய்யா
திரும்பி வரவாப் போறாரு?"
சுரேந்திரன் பொங்கி வந்த கண்ணீரைத் துடைக்கக் கூட இல்லை. கலியவரதன்
அவனை குறுக்கிடாமல் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். பிரச்சினை
அஷ்வினை அடித்தது மட்டுமில்லை என்று அவர் உள்ளுணர்வு கூறியது.
"அப்புறம் மனசைத் தேத்திக்கிட்டுக் காலேஜுக்குப் போனா முதல் நாளே ராகிங்.
பெண் பிள்ளைகளின் முன்னாடி சுடர்மணி ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு
நின்னதும் மைதானத்தைச் சுத்தி ஓடினதும் என் சுயமரியாதையை நேரடியாத்
தாக்கியது. எதிர்க்கவும் வழியில்லாம ஓன்னு அழுதுக்கிட்டே
உட்கார்ந்திருந்தேன். அப்ப சினிமாவில வர மாதிரி ஒரு கை வந்து என் சட்டை
பேண்ட்டைக் கொடுத்தது. வேக வேகமா உடுத்திட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
அங்க ஒரு தேவதை நின்னுக்கிட்டு இருந்திச்சு. அந்த வயதில யாரு இப்படி
செஞ்சாலும் தேவதைதான் இல்லையா? என்னைச் சுத்தி உலகமே இருட்டானப்ப
வந்த ஒரே தேவதை இவள்தான். அந்த தேவதைதான் வந்தனா."
சுரேந்திரன் கண்களில் ஒரு ஒளிமின்னல் வந்து சென்றது
"நான் மெல்ல மெல்ல அவள் மேல ஈர்க்கப் பட்டேன். அவளும் என்மேல
பாசமா இருந்தா. எல்லாரும் தாயாரைக் காதலியிடம் பார்ப்பாங்க. நான் எங்க
அப்பாவைப் பார்த்தேன். அந்த நாலு வருஷமும் என் சந்தோஷமான நாட்கள்.
வந்தனா தங்கியிருந்த எங்க கல்லூரி மகளிர் விடுதியிலதான் எங்க பாசம்
காதலா மாறுச்சு. நாங்க ரெண்டு பேரும் ராத்திரி எட்டு மணி வரைக்கும் பேசுற
அழகை அந்த விடுதியே ரகசியமா வேடிக்கை பார்க்கும். ரெண்டு பேரும் ஒரே
கம்பெனியில் வேலை பார்க்கறதுக்காகவே சென்னைக்கு வந்து வேற வேற
எடத்தில தங்கி வேலை தேடினோம்.
எல்லாம் வேலைக்குச் சேரும் வரைதான். அப்பதான் அதே அலுவலகத்தில
அண்ணா யுனிவர்சிடியில படிச்ச நகர நாகரீகம் தெரிஞ்ச அஷ்வின் எங்களுக்கு
நண்பனானான். அவனோட அத்தனை அசைவுகளுக்கும், எங்க அலுவலகப்
பெண்கள் எல்லாருமே அடிமையானாங்க. வந்தனா மட்டும்தான் விதிவிலக்கு.
ஏன்னா அவளுக்கு உங்க பையன்கிட்ட இருந்த குடிப்பழக்கம், சிகரெட்
ரெண்டும் அலர்ஜி. அதுதான் எனக்கும் எனர்ஜியா இருந்திச்சு. அதிலயும்
விழுந்திச்சு வேட்டு."
சுரேந்திரன் குரலில் சூடு ஏறியது.
"அவளையும் அஷ்வின் மயக்கிட்டான். முதல்ல அவனுக்கு அறிவுரை
சொல்றதா ஆரம்பிச்ச நட்பு மெல்லக் காதலாகிப்போச்சு. அவளுக்கு நான்
கசந்துட்டேன். காரணம் உங்க பையன். இப்ப சொல்லுங்க சார். என்
நிலைமையில நீங்க என்ன செஞ்சிருப்பீங்க?"
சுரேந்திரன் ஆவேசமாய் முடித்தான்.
கலியவரதன் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். "சரி.
கொஞ்சம் இப்படி உக்காருங்க. ஐஞ்சு நிமிஷத்துல வந்துர்ரேன்." சொல்லி விட்டு
அடுத்திருந்த அறைக்குள் சென்றார்.
அங்கிருந்த தொலைபேசியில் வந்தனாவை அழைத்தார்.
"வந்தனா, உனக்கு அஷ்வின் மேல காதலா?"
கலியவரதன் நேரடியாகக் கேட்டவுடனே பயமும் வெட்கமும் போட்டி போட்டன
வந்தனாவின் கண்களில். தொலைபேசி என்பதால் கலியவரதனால் அதைப்
பார்க்க முடியவில்லை.
"வந்து... வந்து.... " என்று மழுப்பியவள் வற்புறுத்தியதில் ஒப்புக் கொண்டாள்.
"சரி வந்தனா! இன்னைக்கு சாயங்காலம் ஆஸ்பித்தரிக்கு வந்துரு. நம்ம
அஷ்வினோட கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம். சரியா?"
"ஸாரி அங்கிள், நான் உடனே கோவில்பட்டி போயாகணும். எங்க அத்தை
அங்க சீரியஸா இருக்காங்க. அம்மா இல்லாத என்னை எங்க அப்பா
கோவில்பட்டிக்குப் படிக்க அனுப்பினப்ப, அவங்கதான் நாலு வருஷமும்
என்னை அவங்க வீட்டிலேயே வச்சிப் பொத்திப் பொத்தி வளத்தாங்க. இப்பவே
புறப்படுறேன் அங்கிள்."
அவளை நல்லபடியாக போய்வரச் சொல்லிவிட்டு ஃபோனை வவத்த
கலியவரதனுக்கு மூளையில் விளக்கு எரிந்தது. "இவள் ஹாஸ்டலில் தங்கிப்
படித்ததாக அல்லவா சுரேந்திரன் சொன்னான்."
சுரேந்திரனும் நண்பர்களும் அமர்ந்திருந்த அறைக்கு வந்தார். கலியவரதன்
நிதானமாகக் குரலில் கடுமையை ஏற்றியபடி விசாரணையைத் தொடர்ந்தார்.
"தம்பி, உன்னை முதல்ல பாராட்டிடுறேன். இந்தக் கதைய ஒரு சினிமாத்
தயாரிப்பாளர்கிட்ட சொல்லியிருந்தேனா இன்னேரத்துக்கு ஒரு பெரிய டைரக்டர்
ஆகியிருப்ப. இப்ப உன்னை லை டிடக்டரில வச்சிருக்கேன். நீ சொன்னது
அத்தனையும் பொய். உனக்கு அப்பா அம்மாவே தெரியாது. உனக்கு அப்பா
அம்மாவா இங்க இருந்தவங்க சொல்லிட்டாங்க. நீ வளர்ந்தது காரியாபட்டி
தெரேசா அனாதை விடுதியில. வந்தனாவும் நீயும் ஒரே கல்லூரியில படிச்சாலும்
அந்தக் கல்லூரியில பெண்கள் விடுதியே இல்லை. அவளுக்கு வேலை
கிடைச்சது கேம்பஸ் இண்டர்வியூவில. நீ அதே கம்பெனியில 4 முறை
நிராகரிக்கப் பட்டு ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் ஐந்தாவது முயற்சியில
சேர்ந்திருக்க. வந்தனாவுக்கும் உனக்கும், நான் விசாரிச்ச அளவில காதல் என்ற
ஒன்று இல்லை. இப்ப இதையெல்லாம் ஒத்துக்கிட்டு அடுத்த உண்மையையும்
சொல்ற. லை டிடக்டர் கவனிச்சுக்கிட்டே இருக்கு. அஷ்வினை அடிக்கச்
சொன்னது, அதுவும் உள்காயம் மட்டும் வருமளவு அடிக்கச் சொன்னது யாரு?"
லை டிடக்டர் உண்மை என்று ஒத்துக் கொண்ட அந்த பதிலில் செல் செல்லாக
அதிர்ந்தார் கலியவரதன்.
"உங்க பையனை அடிக்கச் சொன்னதே அந்த வந்தனாதான்!"

அத்தியாயம் - 4

சுரேந்திரன் சொன்னதை கேட்ட கலியவரதன் தன் அதிர்ச்சியை
வெளிக்காட்டாமல் அருகில் இருந்த
தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு நாற்கால்யில் அமர்ந்து கொண்டார்.
சுரேந்திரனும் அவனது நண்பர்களும் கலவரத்துடன் அடுத்து என்ன நடக்குமோ
என்று யோசித்துக் கொண்டிருந்த
வேளையில் அவங்ககிட்ட எழுதி வாங்கிட்டு வெளியே விடுங்க என்று தனது
உதவியாளருக்கு உத்தரவிட்டு எழுந்து
சென்று விட்டார். சுரேந்திரனுக்கு இது ஆச்சர்யமாக இருந்தது...
மருத்துவமனையில் மகன் அஷ்வின் பக்கத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த
சிவகாமி, ஏம்பா அடிச்சவுங்கள்லாம்
உன்கூட வேலை பார்க்கிறவங்களாமே உங்களுக்குள்ள என்ன பிரச்சனை.
அம்மாகிட்டவாது சொல்லக்கூடாதா?
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா. எப்பவும் நல்லத்தான் பேசுவாங்க.
இதுவரைக்கும் இது மாதிரி நடந்தது இல்லம்மா
என்று சமாளித்தான். அவனால் ஊகிக்க முடிந்தது ஏன் அப்படி நடந்தது என்று,
அதை அம்மாவிடம் சொல்ல முடியாதே!!
மருத்துவமனைக்குகூடச் செல்லாமல் நேராக வீட்டிற்கு சென்ற கலியவரதன்
தனது தோட்டத்து ஊஞ்சலில் ஆடிக்கொண்டே
யோசிக்க ஆரம்பித்தார். வந்தனாவை பார்க்கும் போது அப்பிடிச் செய்ய்க்
கூடிய பெண்ணாகத் தெரியவில்லையே.
அவள் மேல் வரும் இந்த சந்தேகம் ஒரு வேளை பொய் என்று ஆகி விட்டால்
தன்னைச் சந்தேகப்பட்டு விட்டார்களே
என்று ஆயுளுக்கும் நினைத்துவிடுவாளே. ஆனால் அஷ்வினைச் சுற்றி
நடப்பவை எதுவும்எதேச்சையாக
நடக்கவில்லை. தகப்பனாகவும் காவல்துறை அதிகாரியாகவும் சிந்தனைகள் மாறி
மாறி அவர் மனதை அலைக்கழித்தது
என் மகன் என்று தெரிந்தும் அவனைத் தாக்குவதால் யாரோ சிலருக்கு
ஆதாயம் இருக்கிறதா? அல்லது இருக்க வேண்டும்
அப்படி இருந்தால் யார் ? . அதைக் கண்டுபிடிக்க வேண்டும். நேரிடையாக
இல்லை. மறைமுகமாக. என்ன செய்யலாம் என்று
யோசித்து கொண்டிருந்தவருக்கு சட்டென்று ஞாபகத்திற்கு வந்தான் சரவணன்.
காவல்துறை பயிற்சி அதிகாரியாக இருந்த போது
அவரை மிகவும் கவர்ந்தவந்தான் இந்த சரவனன். மேலும் மதுரைக்காரன்.
ஆகையால் பிரச்சனையை கையாள்வது எளிது.
உடனே அவன் கை பேசீக்கு தொடர்பு கொண்டார்.
சார் நீங்களா? என்ன இந்த நேரத்தில... அம்மா, தம்பி எல்லாம் நல்லா
இருங்காங்களா
எல்லாம் நல்லா இருக்காங்காங்க. தம்பிக்குதான் ஒரு பிரச்சனை.
ஆனா வெளிய தெரியாம அந்த பிரச்சனையை தீர்க்கணும் என்று நடந்ததை
சொன்னார்
கண்டிப்பா சார். யாருக்கும் தெரியாம நான் இதை கவனிக்கிறேன். நீங்க
கவலைப்படாம தூங்குங்க...
சுரேந்திரா என்னாடா இது துணியெல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்கு. எங்க
கிளம்பிட்ட?
கோவில்பட்டி !!.
எதுக்குடா?
வந்தனாவா பாக்க...
உனக்கு எதாவது பைத்தியம் புடிச்சிருக்கா? ஏற்கனவே உம்மேல அஷ்வின்
அப்பாவுக்கு பெரிய சந்தேகம் இருக்கு.
அவதான் அடிக்கச் சொன்னான்னு வேற சொல்லிட்ட. இப்ப போயி அவள
பாக்கணும்ன்னு சொல்ற...
என்னடா இதெல்லாம்...
இங்க பார் மணி. நான் அப்படி சொன்னதுக்கு காரணம் இருக்கு. அவ அத்தை
உடம்புக்கு முடியாதுண்ணு போயிருக்கா. என்னாச்சுண்ணு பார்க்க வேணாமா?
பயமா இருந்துச்சுனா போய் அஷ்வின் அப்பாகிட்ட அவன் என்கூட இல்ல.
கோவில்பட்டிக்கு போயிருக்கான்னு சொல்லு என்று சீறினான்..
உண்மையில் மணிக்கு இப்போது பயம் வர ஆரம்பித்து விட்டது. அறைத்
தோழன் என்றாலும் தனக்கும் தெரியாமல்
சுரேந்திரனுக்கும் வந்தனாவுக்கும் இடையே நட்பைத் தாண்டியும் ஏதோ
இருக்கிறது. இது எங்க கொண்டு போய்விடுமோ என்று தன்னையே நொந்து
கொண்டான்
சரி ஆபிஸ்ல என்ன லீவ் சொல்லியிருக்கியா என்றான்.
ஆமா சொல்லியிருக்கேன். வர இரண்டு மூணு நாள் ஆகும்.
கலியவரதனின் தொலைபேசி அடிக்க சரவணன் என்ற பெயர் வந்தவுடன்
மொட்டை மாடிக்கு சென்றவாறே பேசத் தொடங்கினார்.
சார் நான் இன்னைக்கு கோவில்பட்டி போறேன். என் கூட பள்ளிக்கூடத்தில
படிச்சவன் ஒருத்தன் அங்க விவசாயம் பாக்குறான்
அவன்கூட தங்கி இரண்டு மூன்று நாளில் என்ன விபரம்ன்னு கண்டு
பிடிச்சிடலாம். கவலைப் படாதீங்க...
சரி வந்தனா இப்ப கோவில்பட்டிலதான் இருக்கா. அவளுக்கு எந்தவிதமான
சந்தேகமும் வந்துவிடக்கூடாது. இதுல
கவனாமா இருந்துக்க. எதுவும் பிரச்சனைன்னா உடனே எனக்கு போன் பண்ணு
சரவணா.... வீட்ல அம்மாவுக்கும்
தெரியாது. அதனால போன் பண்ணும் போது கவனமா பேசு....
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சுரேந்திரன் இறங்கும் போதே
நன்கு விடிந்திருந்தது .
நல்ல கசப்பா. ஒரு காப்பி கொடுப்பா. சூடா வடை இருக்கு. ரெண்டு
தரவாண்ணே எனக் கடை சிறுவன் குரல் கொடுக்க
சரி கொடு என்றபடி வாங்கிச் சாப்பிட்டுவிட்டு கோவில்பட்டி பேருந்தில் ஏறி
உட்கார்ந்தான். வந்தனாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்று
மனதுக்குள் பலமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டான்.
கோவில்பட்டி இறங்குங்க... என்ற நடத்துநரின் சத்தம் கேட்டு விழித்தான்
சுரேந்திரன். கண்களைக் கசக்கி சோம்பல் முறித்து
பேருந்தை விட்டு கீழே இறங்கி வந்தனா வீட்டை நோக்கி நடக்கத்
தொடங்கினான்.
திடீரென நான்கைந்து பேர் சுரேந்திரனை சூழ்ந்து கொள்ள பதட்டமாய் யார்
நீங்க.
எதுக்காக என்ன வழி மறிக்கீறீங்க..
சொல்லுங்க...
தம்பி இந்த குரல உயத்தி பேசுற வேலைலாம் வேணாம். தலையை இளநீ
சீவுறமாதிரி சீவிடுவேன்.
மரியாதையா பேசுங்க.
ஏண்டா உங்க விளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கேக்குதோ... இனி மேல் நீ
உயிரோட இருந்தாத்தானே என்ற படியே
மூர்க்கத்தனமாக தாக்க நிலைகுலைந்து சரிந்தான் சுரேந்திரன்
என்னன்னே அங்க கூட்டமா இருக்கு. வாங்க பாப்போமென்ரு வெத்தலையைத்
துப்பிக் கொண்டே நாட்டுப் புறத்தானைப் போல
நுழைந்தான் சரவணன்......