PDA

View Full Version : தமிழீழ விடுதலைப் புலிகளிடம் நேரடியாக நித



இளையவன்
13-06-2005, 12:13 AM
ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு என்கிற நிர்வாக அலகைக் கூட உருவாக்க முடியாத சிறிலங்கா அரசின் இயலாமை குறித்து சர்வதேச நாடுகள் கடும் விசனம் தெரிவித்துள்ளன.


வொசிங்கடனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் இந்தப் பொதுக்கட்டமைப்புக்கான முட்டுக்கட்டைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய, நோர்வே, ஜப்பானிய பிரதிநிதிகள் பங்கேற்றனர். சிறிலங்காவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜெஃப்ரி லான்ஸ்டெட் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வொசிங்டன் சென்றதாக சில தகவல்கள் கூறுகின்றன.

பொதுக்கட்டமைப்பு என்கிற சிறிய நிர்வாக அலகைக் கூட உருவாக்க இயலாத சிறிலங்கா அரசின் நிலை குறித்து கடும் விசனத்தை உதவி வழங்கும் நாடுகள் பகிர்ந்து கொண்டன என்றும்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பகுதிக்கு ஆழிப்பேரலை மீளமைப்புக்கான நிதி உதவி அளிக்கப்படக் கூடும் என்று வொசிங்டனிலிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இதற்கான சாதகமான சூழலைத்தான் தென்னிலங்கை அரசியல் நிலைமை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது.

நன்றி: புதினம்

அறிஞர்
13-06-2005, 06:48 AM
தமிழர்களுக்கு நிதி வழங்கப்படுவது குறித்து சந்தோசம்.......
---------------
(இளையவன் தங்களது கையெழுத்தில் இரண்டாம் வரியை மாற்றினால் நன்றாக இருக்கும். இந்த தளம் யாருடைய எதிப்பு தளமோ, ஆதரவு தளமோ இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்)