PDA

View Full Version : வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்



balakmu
11-06-2005, 02:43 AM
ஆயிரமாயிரம் ஆசைக்
கனவுகளைச் சுமந்து
அயல்நாட்டில் வாழுகின்றோம்

ஆனால் வாழ்கையின்
அர்த்தம் புரியாமல்
வாடுகின்றோம் நாங்கள்!!

திரைகடல் திரவியம்
திராம் கணக்கில்
திரட்டினோம்
திறைமறைவு காரியங்கள்
செய்யாமல்.

அரபிக்கடல் கடந்தோம்
ஆயிரம் தினார்கள்
அட்லாண்டிக் சமுந்திரம்
கடந்தோம் பல்லாயிரம்
யூரோக்கள், டாலர்கள் !!

அன்பெனும் சாகரத்தில்
மூழ்கி, பாசம் எனும்
முத்தெடுக்க தேடுகின்றோம்
ஒரு திரைகடலை, ஆனால்
அதுவோ பாலைவனத்து
கானல் நீராய் மாறி
காலங்கள் பலவாகி
விட்டது!!

எங்களால் அழவும்
முடியாது. காரணம்
எங்கள் கண்ணீரும்
பெட்ரோலாகி காற்றிலே
கலந்து காலமாகிவிட்டது !!

நினைவுகளின் வேதனையில்
வாடு(ழ்)கின்றோம்!!
கனவுகளின் நினைவுகளுக்காக
உறங்குகின்றோம்!!


அந்நிய நாட்டில்
சொந்த நாட்டின்
மூச்சுக் காற்றை
சுகமாக சுவாசிக்க
ஏங்குகின்றோம்!!

Iniyan
11-06-2005, 08:37 AM
அந்நிய மண் வாழ் ஆதங்கத்தை அருமையாய் கவி ஆக்கி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

karikaalan
11-06-2005, 08:50 AM
உங்களைப்போல் உள்ளவர்களால் தேசம் நன்றாக வளர்ந்து வருகிறது --- அனுப்பியுள்ள டாலர்களும், திராம்களும்......

அந்த நினைப்பே உங்களுக்கு மேலும் உந்துதல் வழங்கட்டும். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

மன்மதன்
11-06-2005, 09:03 AM
சமீபத்தில் படித்த இதே மாதிரி கவிதை - துபாயிலிருந்து ரசிகவ் என்பவர் எழுதியிருந்தார்..
உங்க கவிதையும் நன்றாக இருக்கிறது பாலா..
அன்புடன்
மன்மதன்

சுவேதா
11-06-2005, 01:50 PM
மிகவும் நன்றாக இருக்கின்றது பாலா உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

அறிஞர்
16-06-2005, 10:42 AM
அந்நிய நாட்டில்
சொந்த நாட்டின்
மூச்சுக் காற்றை
சுகமாக சுவாசிக்க
ஏங்குகின்றோம்!!
பணம்....
வறட்டு கர்வம்
இவையெல்லாம்
தொலைத்து விட்ட
போதும் என்ற
மனமே....
சொந்த நாட்டின்
மூச்சுக்காற்றை...
சுகமாக
சுவாசிக்கிறது.....
----------
அருமை அன்பரே.. இன்னும் எழுதுங்கள்.... தங்களை அவ்வளவாக காண்பதில்லையே...

பிரசன்னா
12-09-2005, 02:36 PM
அருமை அன்பரே.. இன்னும் எழுதுங்கள்....

lavanya
12-09-2005, 11:35 PM
ஒருநாள் வருவார் ஒருநாள் போவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
கடல் பிழைப்பை பற்றி
பாடிய கவிஞன் ஏனோ
கடல் தாண்டிய பிழைப்பை பாட
மறந்து போனான்...
- ஒரு கவியரங்கத்தில் கேட்டது

அறிஞர்
12-09-2005, 11:37 PM
ஒருநாள் வருவார் ஒருநாள் போவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
கடல் பிழைப்பை பற்றி
பாடிய கவிஞன் ஏனோ
கடல் தாண்டிய பிழைப்பை பாட
மறந்து போனான்...
- ஒரு கவியரங்கத்தில் கேட்டது கேட்டது எல்லாம் கொடுங்கள் தோழியே..... படிக்க ஆவலாக இருக்கிறோம்

lavanya
12-09-2005, 11:43 PM
பலாயிரம் வேர்வைப் பூக்கள்
பூத்து குலுங்கிட
சோலைகளாயின தேசங்கள்
இங்கு பாலைகள் ஆயின
தேகங்கள்...
- கவியரங்கத்தில் கேட்டவை