PDA

View Full Version : வாழ்க்கை பயம்



balakmu
11-06-2005, 02:34 AM
வாழ்க்கை பயங்கள்


வாழ்க்கையைக் கண்டு
பயந்தேன்!! அதன்
வசந்தத்தை அனுபவிக்காத
வரை!!

அன்பைக் கண்டு
பயந்தேன்!! அது என்
இதயத்தில் இருள்
போன்ற கருமையை
நீக்கி, நிகரில்லா
வெளிச்சத்தை வீசும் வரை!!

வெறுப்பைக் கண்டு
பயந்தேன்!! அது
அறியாமை என்று
அறியும் வரை!!

ஏளனங்களைக் கண்டு
பயந்தேன்!! எனக்குள்
சிரிக்கத் தெரியாதவரை!!

தனிமையைக் கண்டு
பயந்தேன்! நான் தனியாக
இருக்கக் கற்றுக்கொள்ளும் வரை!!

தோல்விகளை கண்டு
பயந்தேன்!! தோல்வியே
வெற்றிக்கு அறிகுறி என்று
உணரும் வரை!!

வெற்றிகளை கண்டு
பயந்தேன்!! வெற்றியே
வாழ்க்கையின் சந்தோஷம்
என்று அறியும் வரை!!

மற்றவர்களின் விமர்சனங்களுக்கு
பயந்தேன்!! அவர்களுக்கும்
என்னைப் பற்றிய கருத்துக்கள்
இருக்கும் என்று உணரும் வரை!!

ஒதுக்கப்படுவதைக் கண்டு
பயந்தேன்!! எனக்குள்
தன்நம்பிக்கை வரும் வரை!!

வலிகளை கண்டு
பயந்தேன்!! அது
வளர்ச்சிக்கு தேவை
என்று அறியும் வரை!!

உண்மையைக் கண்டு
பயந்தேன்!! பொய்மையின்
உண்மைகளைப் பார்க்கும் வரை!!

வயதானதை அறிந்து
பயந்தேன்!! வாழ்க்கையில்
பண்பட்டு விட்டேன் என்று
உணரும் வரை!!

நடந்ததை நினைத்து
பயந்தேன்!! அது இனி
நடக்காது என்று
நம்பும் வரை!!


நடக்கப் போவதை
நினைத்து பயந்தேன்!!
நடந்தது எல்லாம்
நன்றாகவே நடந்தது,
நடக்கப் போவதெல்லாம்
நன்றாகவே நடக்கும்
என்று உணரும் வரை!!!

மரணத்தைக் கண்டு
பயந்தேன்!! அது முடிவல்ல
ஆரம்பத்தின் தொடக்கமே
என்று உணரும் வரை!!!


- அன்புடன் பாலா -

balakmu
12-06-2005, 03:50 PM
என்ன யாருக்குமே இந்த கவிதை பிடிக்கவில்லையா?

மன்மதன்
13-06-2005, 04:59 AM
அறியாமை நீங்க அனுபவம் வேண்டும்.. அனுபவக்கவிதை அருமை..
அன்புடன்
மன்மதன்

pradeepkt
13-06-2005, 05:14 AM
எதையுமே அதன் தன்மை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும்வரை பயம்தான்!

தீயைக் கண்டு அஞ்சியபடியே மனித இனம் இருந்து விட்டதா என்ன?
நல்ல கருத்துகள், சிறந்த நடை.
உங்களுக்குள் இருக்கும் கவிஞனை உறங்கவே விடாதீர்கள்.
இன்னும் நிறைய நிறையக் கொடுங்கள்.

வாரக் கடைசி என்பதால் மக்கள் வரத்து கம்மி. அதனால் உங்கள் கவிகளை நாங்கள் ரசிக்கவில்லை என்று எண்ணி விடாதீர்கள்.
எப்போதுமே இளம் கவிகளை ஊக்குவிப்பதில் இம்மன்றம் முன்னணியில் இருக்கும். எனக்கெல்லாம் முன்னோடியான நீங்கள் இதை அறிவீர்கள்!
வாழ்த்துகள்.

அன்புடன்,
பிரதீப்

பிரசன்னா
12-09-2005, 02:39 PM
அனுபவக்கவிதை அருமை..