PDA

View Full Version : புதிய உளறல்கள்



balakmu
11-06-2005, 02:28 AM
முடிந்த பொழுது
நல்லதையே செய்!!

முடியாத பொழுது
நல்லதையே நினை!!

********

இளமையில்
வரும் நோய்க்கு
இள மயில்தான்
துணை!!

********


எடு ஒரு கல்லை
எறிந்து விடு
ஏசு வரும் முன்னே!!

********

நன்றி கெட்ட மனிதர்களை
"நாயே" என்றுதான் திட்டுகின்றோம்
ஆனால் நாய்கள்
நன்றி மறந்த தன்
இனத்தைப் பார்த்து
"மனிதனாகி விடாதே"
என்று குலைக்கின்றது
*****************

balakmu
12-06-2005, 03:50 PM
என்ன யாருக்குமே இந்த கவிதை பிடிக்கவில்லையா?

pradeepkt
13-06-2005, 05:11 AM
எப்படிய்யா இது? யாருக்காச்சும் பிடிக்காமப் போகுமா என்ன?
வார்த்தை விளையாட்டுன்னு சும்மா விளையாட்டுக்காச் சொன்னாங்க.
ஒவ்வொன்றும் முத்துதானய்யா.
அருமை அருமை.
இன்னும் நிறைய எழுதுங்கள்

பரஞ்சோதி
13-06-2005, 08:24 AM
நண்பரே!

நேரமின்மையால் கவிதை பக்கம் தலைகாட்ட வில்லை.

அருமையான, அர்த்தமுள்ளவை உங்கள் கவிதைகள்.

மீண்டும் ஆத்திச்சூடி,
வாழ்க்கைக்கு அடிச்சுவடி.

நன்றி, தொடருங்கள்.

gragavan
13-06-2005, 08:29 AM
அருமையான கவிதைகள். புதிய ஆத்திச்சூடி படைத்தார் பாரதியார். புதிய உளறல்கள் என்ற பெயரில் அருமையாக எழுதியிருக்கின்றீர்கள். தொடருங்கள்.

அறிஞர்
16-06-2005, 10:46 AM
என்ன யாருக்குமே இந்த கவிதை பிடிக்கவில்லையா?சாரி பாலா... இதை கவனிக்கவில்லை..... ஆய்வுகளும்,, அரட்டைகளும் தொடரும்,,

அறிஞர்
16-06-2005, 10:51 AM
முடிந்த பொழுது
நல்லதையே செய்!!

முடியாத பொழுது
நல்லதையே நினை!!*அழகாக சொன்னீர்...
நல்லதை
நினைத்தால்... தானே...
நல்லது
செய்யமுடியும்......
-------

சுவேதா
18-06-2005, 01:43 PM
நன்றி கெட்ட மனிதர்களை
"நாயே" என்றுதான் திட்டுகின்றோம்
ஆனால் நாய்கள்
நன்றி மறந்த தன்
இனத்தைப் பார்த்து
"மனிதனாகி விடாதே"
என்று குலைக்கின்றது

மன்னிக்கவும் அண்ணா நேரம் இல்லாததால் பார்க்க முடியவில்லை மிகவும் அருமையான கவிதை மிகவும் அழகாக வார்த்தைகள் சேர்த்து உள்ளீர்கள் அதிலும் இது மிகவும் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் எழுத எனது வாழ்த்துக்கள்!