PDA

View Full Version : சுவேதாவின் கிறுக்கல்சுவேதா
11-06-2005, 01:58 AM
உமா

அதிகாலை 4 மணி இருக்கும். இலேசாகப் பனிமழை கொட்டிக் கொண்டிருந்தது. வேலை முடிந்து பேருந்துக்காக காத்திருந்தேன். வழமையாக எனக்கு 4.30க்குத் தான் வேலை முடியும்.அன்று. 4.00 மணிக்கே வேலை முடிந்து விட்டது. அது தான் அரை மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிஇருந்தது. அந்த சமயம் வந்தாள்அவள்.

அவள் சுமாரான உயரம், சிவந்த நிறம். அடர்த்தியான நீண்ட கூந்தலை அழகாக பிண்ணி விட்டிருந்தாள். நெற்றியில் சிறிய பொட்டு வைத்திருந்தாள். இலேசாக மை தீட்டப்பட்ட அழகான கண்கள், இலேசாக சாயம் தடவிய உதடுகள். அவளுடைய முகத்தில் இலட்சுமி கடாட்சம் நன்றாகவே தெரிந்தது. அவளுடைய முகத்திற்கு ஏற்ப அளவான உடம்பு. கனடா நாட்டில் இவ்வளவு அழகுடனும் தமிழ்ப் பண்பாட்டை மறக்காமல் பின்பற்றும் அந்தப் பெண்ணைக் கண்டதும் நான் வியந்து தான் போனேன்.

அவளை தினமும் வேலை முடிந்து செல்லும் போது காண்பேன். இன்றும் அவள் வந்திருந்தாள். இன்று எப்படியாவது கதைத்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் அவளிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன். ஹலோ! என்றேன். அவளும் பதிலுக்கு " ஹலோ" என்றாள். அவளுடைய அந்த குரலில் கூட அவ்வளவு இனிமை. அவள் பெயர் உமா. ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரிகிறாள். தாயை இழ்ந்த அவள் தனது சகோதரியுடன் வாழ்ந்து வருகிறாள். இவையெல்லாம் நான் உமாவுடன் ஏற்பட்ட சந்திப்பின் போதும், அதற்கு பின் உண்டான நட்பின் போதும் நான் அறிந்து கொண்டேன்.

நாட்கள் பல கடந்தன, உமா மீது கொண்ட நட்பு, அவள் மீது உள்ள பரிதாபத்தால் காதலாக மாற ஆரம்பித்தது. என் காதலை உமாவிடம் கூறினேன் அவள் முதலில் என் காதலை ஏற்கவில்லை. தனது குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டினாள். கனடாவுக்கு வ்ருவதற்காக வாங்கிய கடன் தீரவில்லை தனக்காக கஷ்டப்படும் அக்காவுக்கு துரோகம் செய்ய முடியாது என பலகாரணங்களை சொன்னாள். எனக்கும் அவள் சொல்வது சரியெனபட்டது. எனது காதலை மறக்க முயன்றேன், ஆனால் அவளுடைய நடவடிக்கையும் பேச்சும் அவள் என்னை காதலிக்கின்றாள் ஆனால் ஏதோ ஒன்று அதை தடுத்க்கின்றது என்பதை எனக்கு உணர்த்தியது. அவளிடம் நேரில் கேட்டேன். அவளும் ஒப்புக்கொண்டாள்

"உமா நீ உன் கடமைகளையும் பொறுப்புகளையும் தீர்த்துவிட்டுவா நான் உனக்காக காத்திருப்பேன்" என்று அவளிடம் கூறினேன். அவளும் சம்மதித்தாள்.

நாட்கள் உருண்டன ஒரு நாள் என் நன்பனை பார்க்க ஹோட்டலுக்கு சென்றிருந்தேன். அப்பொழுது எதேச்சயாக உமாவை கண்டேன். அதுவும் ஒரு இளைஞனுடன் கைகோர்த்த படி. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உமா என்னை காணவில்லை எனவே நான் விரைவாக வெளியே வந்து விட்டேன். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. உமாவா இப்படி என்னால் என் கண்களையே நம்ம முடியவில்லை.

சில நாட்களின் பிறகு உமாவின் நண்பி ஒருத்தியை சந்திக்க நேர்ந்தது அப்பொழுது நான் உமா மீது கொண்ட காதலை அவளிடம் கூறினேன். "ரவி உங்களுக்கு உமாவை விட வேறு யாரும் கிடைக்கவில்லையா??" என்றாள் அவளை பற்றிய சில உண்மைகளைச் சொன்னாள். உமாவுக்கு பல இளைஞர்களுடன் தொடர்பு இருக்கின்றது. அவளுடைய நடவடிக்கைகள் ஒரு தமிழ் பெண்ணுக்குரியது அல்ல. அவளைப் பற்றி நான் தெரிந்து கொண்டபின் அவளுடன் தான் அவ்வளவாக பழகுவதில்லை என்று கூறினாள் எனக்கு தூக்கிவாரி போட்டது. நம் த்மிழினத்துக்கு உமா போன்ற சில பெண்களால் ஏற்படும் களங்கத்தை எண்ணி வருத்தப்படத்தான் என்னால் முடிந்தது.( யாவும் கற்பனையே)

Iniyan
11-06-2005, 09:35 AM
சுவேதா. கதை எழுதுவதற்கான நல்ல தொடக்கம். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

மன்மதன்
11-06-2005, 09:59 AM
உமா

( யாவும் கற்பனையே )

உண்மை சம்பவம் போலிருந்தது. நல்ல தொடக்கம். கதையின் முடிவு அவ்வளவுதானா??

அன்புடன்
மன்மதன்

சுவேதா
11-06-2005, 01:16 PM
நன்றி இனியன் அண்ணா!
நன்றி மன்மதன் இதுதானே முதல் தரம் அதனால் அதோடு முடித்துவிட்டேன்.

அறிஞர்
13-06-2005, 05:41 AM
வாழ்த்துக்கள்.. சுவேதா...
கிறுக்கல்கள் ஆரம்பாமாகிவிட்டது....
கிறுக்கல்கள்.. பக்குவமடைந்து... வெற்றிக்காண வாழ்த்துக்கள்..

மன்மதன்
13-06-2005, 08:04 AM
சுவேதாவின் முதல் கதையை நண்பர்கள் படித்து கருத்து கூறவும்..
அன்புடன்
மன்மதன்

mythili
13-06-2005, 08:20 AM
நல்ல ஆரம்பம் சுவேதா. இன்ன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் :)

அன்புடன்,
மைத்து

பிரியன்
13-06-2005, 09:40 AM
முதல் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்,
எழுதுங்கள் .

gragavan
13-06-2005, 09:42 AM
நல்ல முயற்சி சகோதரி. இன்னும் நிறைய எழுத வேண்டும். எனது வாழ்த்துகள்.

அன்புடன்,
கோ.இராகவன்

Mathu
13-06-2005, 04:36 PM
ஆரம்பமே அசத்தல் சுவேதா.....!
நிதானமாக எழுதினால் இன்னும் நிறைவாக எழுதமுடியும் உங்களால்,

சுவேதா
13-06-2005, 11:50 PM
வாழ்த்துக்கள்.. சுவேதா...
கிறுக்கல்கள் ஆரம்பாமாகிவிட்டது....
கிறுக்கல்கள்.. பக்குவமடைந்து... வெற்றிக்காண வாழ்த்துக்கள்..

நன்றி அறிஞர் அண்ணா!

சுவேதா
13-06-2005, 11:51 PM
சுவேதாவின் முதல் கதையை நண்பர்கள் படித்து கருத்து கூறவும்..
அன்புடன்
மன்மதன்

நன்றி மன்மதன்!

சுவேதா
13-06-2005, 11:54 PM
நல்ல ஆரம்பம் சுவேதா. இன்ன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் :)

அன்புடன்,
மைத்து

நன்றி மைத்து அக்கா!

சுபன்
30-01-2006, 01:19 AM
மேலும் கிறுக்குங்கள்

aren
30-01-2006, 03:08 AM
நன்றாக கதையை ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். வெற்றி நிச்சயம்.

சுவேதா
12-02-2006, 04:35 AM
நன்றி சுபன் மற்றும் ஆரேன் அண்ணா!!!

சுபன்
19-02-2006, 02:45 AM
எங்க இந்த பக்கம் ஆளையே காணோம்

இளந்தமிழ்ச்செல்வன்
19-02-2006, 09:15 PM
வாழ்த்துக்கள் சுவேதா. மேலும் தொடருங்கள்

MURALINITHISH
18-08-2008, 10:41 AM
சில பெண்களுக்கு பண்பாட்டோடு நடப்பதுதான் மிக பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்து விடுகிறது ஆள் பிடிக்க