PDA

View Full Version : முதிர்ந்த உறுப்பினர்கள்..



rambal
17-04-2003, 01:00 PM
முதிர்ந்த உறுப்பினர்கள்..

நமது தளத்தில் சிறப்பாக செயல்படுபவர்களை ஒரு குழுவாக பிரித்துள்ளோம்.
அந்தக் குழுவிற்கு முதிர்ந்த உறுப்பினர்கள் குழு என்று பெயர்.
அதில், இடம்பெற்றவர்கள் பட்டியலைக் காண பின் வரும் இணையமுகவரி மூலம் செல்லவும்

- சுட்டி பின்னர் இணைக்கப்படும்
மற்றவர்கள் கூடிய விரைவில் இடம்பெறுவீர்கள் என்ற நம்பிக்கையில்...

தேர்வு செய்யப்பட்ட முதிர்ந்த உறுப்பினர்களுக்கு என் மனமார்ந்த வழ்த்துக்கள்!

தொடரட்டும் உங்கள் சேவை.

இந்த ஏற்பாடு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்ற எண்ணத்தோடு...

நன்றி..

வணக்கம்..

(பின்குறிப்பு: யாரேனும் விடுபட்டிருந்தால் எனக்கு தனிச்செய்தி அனுப்பவும். கண்காணிப்பளராகி நான் செய்திருக்கும் எனது முதல் பணி இது. ஆகவே, தவறுகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதைச்சுட்டிக்காட்ட உங்களுக்கு உரிமை இருக்கிறது.)

தஞ்சை தமிழன்
17-04-2003, 02:17 PM
ராம்பாலுக்கு,
உங்கள் பணி பாராட்டதக்கது, உங்களுக்கு நன்றிகள்.

முதிர்ந்த உறுப்பினர்கள் என்று நீங்கள் குறிப்பிடும் உறுப்பினர்கள் எந்த முறையில் தேர்ந்தெடுக்க படுகிரார்கள்?

அவர்கள் அனுப்பிய போஸ்ட்டுகளின் எண்ணிக்கையை வைத்தா? அல்லது
எழுதிய போஸ்ட்டுகளில் உள்ள எழுத்தின் சிறப்பாலா?

அப்போதுதானே புதிய உறுப்பினர்கள் ஒரு நோக்கத்துடன் செயல்பட வழிவகுக்கும்.

பதிலுக்காக,,,,,,,,,,,,

rambal
17-04-2003, 02:22 PM
ஒருவர் எழுதிய பதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் கருத்துக்கள். (இது தான் முதன்மை)
இதை வைத்தே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தஞ்சை தமிழன்
17-04-2003, 02:28 PM
பதிலுக்கு நன்றி.

rambal
17-04-2003, 02:31 PM
உங்கள் பெயர் விடுபட்டுப் போயிருந்தது.
இங்கு கேள்வி கேட்டு எனக்கு நினைவுபடுத்தியமைக்கு நன்றி..
உங்கள் பெயரை சேர்த்துவிட்டேன்..

தஞ்சை தமிழன்
17-04-2003, 02:45 PM
என் பெயரை சேர்க்க வேண்டூம் என்பதற்காக நான் இதனை கேட்கவில்லை, அனைவருக்கும் பயன் படும் என்பதால்தான்,,,,,,,,,,,,

என்பெயரை சேர்த்தமைக்கு எனது மனப்பூர்வமான நன்றி.

unwiseman
17-04-2003, 05:06 PM
என்னை சேர்த்ததற்கு நன்றி, ராம்பால்.

suma
17-04-2003, 05:23 PM
raambal thank you. my f12 key is not working.

நிலா
17-04-2003, 05:27 PM
நான் கேட்க நினைத்த கேள்வியை நண்பர் கிறுக்கன் கேட்டு விட்டார்!
இக் குழுவில் என்னை இணைத்தமைக்கு நன்றி!

நிலா

poo
17-04-2003, 06:21 PM
my f12 key is not working.

உங்களுக்கும் அதுக்கும் என்ன பந்தமோ?!!!

lavanya
17-04-2003, 11:53 PM
தகுதியுள்ள நண்பர்களுக்கு கிடைத்த தனிப்பெரும் பதவிகள்......
வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு
என்னையும் சேர்த்ததற்கு நன்றிகள் பல.....

Narathar
18-04-2003, 03:48 AM
எனக்கென்ன அவ்வளவு வயாசாயிடுச்சா உங்களைப்போல
என்னையும் முதிர்ந்த உருப்பினராக்கியிருக்கீங்க.....................????
(கண்டு கொண்டமைக்கு நன்றி!!!)

subavaanan
18-04-2003, 05:20 AM
என்னை முதிர்ந்த உறுப்பினாராக்கியதற்கு நன்றி.....ரா..ம்..பா..ல் அவர்க்ளே...

anushajasmin
18-04-2003, 10:09 AM
அட என்னையும் கூட உங்க பட்டியல்ல சேர்த்திருக்கீங்க... நன்றி தலைவர்,
மாடரேட்டர் அவர்களே......

gankrish
18-04-2003, 11:18 AM
நன்றி.. நன்றி.. நன்றி ராம்பால் அவர்களே.. என்னையும் மதித்து ஒரு முதிர்ந்த உறுப்பினர் ஆக்கியதற்க்கு. என்னுடைய சேவையை இடைவிடாது செய்வேன் (ஆனால் வேலை பளு அதிகம் இருப்பதால் - ஒரு 10 நாள் நான் வந்து வந்து போவேன்).

Mano.G.
18-04-2003, 11:23 AM
என்னையும் தங்கள் லிஸ்டில்
சேர்த்து கொண்டமைக்கு நன்றி
முதிர்ந்த உறுப்பினர்கள் அனைவரும்
வயதில் முதிர்ந்தவர்கள் அல்ல நமது தமிழ் மன்றத்தின்
முன்னோடிகள்.

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

மனோ.ஜி

pgk53
18-04-2003, 12:52 PM
முதிர்ந்த உறுப்பினர் பட்டியலில் என்னைச் சேர்த்தமைக்கு
மிக்க நன்றி........

kavidha
18-04-2003, 01:28 PM
Hi
I haven't seen this for long time. I just joined today. I am having problem with my Murasu. See you soon with tamil.
Kavidha

இளசு
18-04-2003, 01:33 PM
Hi
I haven't seen this for long time. I just joined today. I am having problem with my Murasu. See you soon with tamil.
Kavidha

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி கவிதா அவர்களே
எழுத்துரு சிக்கல் விரைவில் தீர்ந்து
உங்கள் கருத்துமழை மடல்களில் நனைய
காத்திருக்கிறோம்.....

குமரன்
18-04-2003, 11:04 PM
தேர்ந்தெடுக்கப்பட்ட முதிர்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஊக்கமளித்து சிறப்பிக்கும் தலைவருக்கும் உதவியாளர்களுக்கும் நன்றிகள் பல.

-குமரன்.

madhuraikumaran
18-04-2003, 11:25 PM
நன்றி நண்பர்களே.. என்னையும் ஆட்டத்திற்கு சேர்த்துக்கிட்டதுக்கு....

lavanya
19-04-2003, 12:09 AM
Hi
I haven't seen this for long time. I just joined today. I am having problem with my Murasu. See you soon with tamil.
Kavidha


வா வா வா வாங்க கவிதா.... உங்களைத்தான் இன்னமும் இந்தப் பக்கம்
காணலைன்னு தேடிட்டிக்கிட்டிருந்தேன்

Emperor
19-04-2003, 05:53 AM
என்னையும் இக்குழுவில் சேர்த்தமைக்கு என் மனபூர்பமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு சிறிய வருத்தம், இங்கு கொடுக்கப்படும் பதவிகள் பதிப்புகளின் எண்ணிக்கையை வைத்து கொடுக்கப்பட்டு, என்னை போன்றவர்களை ஒதுக்கிவிட்டதோ என்ற வருத்தம், கை வலிக்க தட்டச்சு செய்ததால் வந்த மன வலியால் இதை பதித்து விட்டேன் மன்னிக்கவும். இதற்க்கும் என் பணிக்கும் சம்மந்தம் இல்லை, அது தொடரும்.....

நன்றி, வணக்கம்.

aren
19-04-2003, 06:00 AM
Hi
I haven't seen this for long time. I just joined today. I am having problem with my Murasu. See you soon with tamil.
Kavidha

வாருங்கள் கவிதா அவர்களே. எங்கே உங்களை இந்தப் பக்கம் காணவில்லையே என்றி நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் வந்ததில் எங்களுக்கும் மிகவும் சந்தோஷம்.

aren
19-04-2003, 06:03 AM
என்னையும் இக்குழுவில் சேர்த்தமைக்கு என் மனபூர்பமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு சிறிய வருத்தம், இங்கு கொடுக்கப்படும் பதவிகள் பதிப்புகளின் எண்ணிக்கையை வைத்து கொடுக்கப்பட்டு, என்னை போன்றவர்களை ஒதுக்கிவிட்டதோ என்ற வருத்தம், கை வலிக்க தட்டச்சு செய்ததால் வந்த மன வலியால் இதை பதித்து விட்டேன் மன்னிக்கவும். இதற்க்கும் என் பணிக்கும் சம்மந்தம் இல்லை, அது தொடரும்.....

நன்றி, வணக்கம்.

பேரசரே, என்ன சொல்ல வருகிறீர்கள். உங்களை யார் ஒதுக்கிவிட்டார்கள். இந்த தளத்தின் முக்கியமான உறுப்பினர்களுள் நீங்களும் ஒருவர். உங்களின் ஆதரவு தொடர்ந்து இந்த தளத்திற்குத் தேவை. ஆகையால் தயவு செய்து உங்களின் சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து இந்த தளத்திற்கு அளித்து வாருங்கள். வெற்றி நமதே.

இளசு
19-04-2003, 06:47 AM
மதிப்புக்குரிய நண்பர் எம்பெரர் அவர்களே
உங்கள் பணி, அதன் தரம், அதற்காகும் காலம்,
இவற்றை எம்மோடு பகிரவைக்கும் நீர் கொண்ட தமிழ்நேசம்....
இதை மன்ற உள்ளங்கள் யாவரும் அறிவோம்....
மனவருத்தம் களைவீர்!
உம் விரல் வருத்தம் போக்க
என்றும் எம் நன்றி கலந்த பாராட்டைப் பெறுவீர்!

Dinesh
19-04-2003, 09:36 AM
ஒரு சிறிய வருத்தம், இங்கு கொடுக்கப்படும் பதவிகள் பதிப்புகளின் எண்ணிக்கையை வைத்து கொடுக்கப்பட்டு, என்னை போன்றவர்களை ஒதுக்கிவிட்டதோ என்ற வருத்தம், கை வலிக்க தட்டச்சு செய்ததால் வந்த மன வலியால் இதை பதித்து விட்டேன் மன்னிக்கவும். இதற்க்கும் என் பணிக்கும் சம்மந்தம் இல்லை, அது தொடரும்.....
நன்றி, வணக்கம்.

என்னங்க பேரரசரே இப்படி வருத்தப்படுகிறீர்கள்...
நமது தளத்தில் கருத்துக்களின் எண்ணிக்கையைவிட
அதன் தரத்திற்குத்தான் முதலிடம் என்பது உங்களுக்கு
தெரியாதா என்ன? பிறகு ஏன் இப்படி?

முதிர்ந்த உறுப்பினர்கள் குழாமில் என்னையும்
இணைத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி
கண்காணிப்பாளர்களே!

தினேஷ்.

prabha_friend
19-04-2003, 04:11 PM
என்னை “முதிர்ந்த-உறுப்பினர்கள்” குழுவில் சேர்த்தமைக்கு மிக்க நன்றி .
“வாழ்க! தமிழ்மன்றம் . வளர்க! அதன் சிறப்பு .”

rambal
19-04-2003, 06:06 PM
பேரரசர் அவர்களே...
உங்கள் பணி மகத்தானது..
ஒப்புக் கொள்கிறேன்..
ராமனுக்கு சீதையை மீட்டுக்கொடுக்க
எத்தனையோ பேர் போராடினார்கள்..
அது போல்தான் படைப்பாளிகள் எல்லோரும்....
அதற்காக அணில்களை மறக்க முடியுமா என்ன? (யாரும் தவறாக எடுக்க வேண்டாம். இது ஒரு உயரிய நோக்கில் எழுதப்பட்டது)
உங்களுக்குண்டான இடம் எப்பொழுதும் உண்டு..
அவர்களுக்கும் இங்கு அந்தஸ்து வழங்கப்படுகிறது..
பேரரசர் தவறாக எடுக்க மாட்டீர்கள் என்ற நல்ல எண்ணத்தில்..

Emperor
20-04-2003, 05:52 AM
தவறாக எண்ண வேண்டாம், பதவி கிடைக்கவில்லை என்ற வருத்தம் இல்லை
எனக்கு, அது எனக்கு வேண்டவும் வேண்டாம், என்னால் அதை உங்களை போல
சிறப்பாக கையால தெரியாது, ஏதோ ஒரு ஆதங்கத்தில்
எழுதி விட்டேன், தவறு இருப்பின் மன்னிக்கவும்,
என்னை அணில் ஆக கருதிய ராம் அவர்களுக்கு எனது நன்றி.
அதற்க்காக முதுகில் மூண்று கோடு போட்டுவிடாதீர்கள். :shock:

rambal
20-04-2003, 08:58 AM
ராமர் என்று விளித்தது
தலைவரை..
அவர்க்குத் தோளோடு தோள் நின்ற லட்சுமணன், சுக்ரீவன் இவர்கள்தான் படைப்பாளிகள்..
இந்த நிலைதான் உங்கள் நிலை..
மற்றவர்கள் அணில்கள்.
அவர்கள் அளவிற்கு உதவி செய்கிறார்கள்..
உங்களை அணில் என்று குறிப்பிடவில்லை.
தவறாக ஏதும் எழுதியிருப்பின் மன்னிக்க..

மனிதன்
21-04-2003, 05:00 AM
சிலகாலம் விடுமுறையில் சென்றிருந்ததால் ஏறத்தாழ ஒரு வாரத்தின் பின் இன்று தான் தமிழ் மன்றத்துக்கு வந்திருக்கிறேன்.... குறிப்பிடத்தக்க மாற்றங்கள்... நண்பர்கள் இளசுவும் ராம்பாலும் கண்காணிப்பாளர்களாயிருக்கிறார்கள்.... முதிர்ந்த உறுப்பினர்கள் என்ற தனிக்க் குழு ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது... அதில் என் பெயரும் சேர்க்கப் பட்டிருக்கிறது... நன்றிகள்.. கண்காணிப்பாளர் ராம்பால் அவர்களே.. தமிழ் வளர்க்கும் தங்கள் பணிக்கு எப்போதும் என் சக்திக்கு உட்பட்ட வகையில் எனது ஆதரவு உண்டு..

Narathar
21-04-2003, 07:42 AM
அதற்க்காக முதுகில் மூண்று கோடு போட்டுவிடாதீர்கள். :shock:

மூன்று கோடுபோட இவர் அவரல்ல!
மூன்றுகிளாஸ் பால் வெண்ணும்னா தருவார்.
ஏன்னா.... இவர் ராம்"பால்" ஆச்சே? :lol:

rambal
21-04-2003, 10:19 AM
மேலும் சிலர் இன்று முதிர்ந்த உறுப்பினர்கள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Emperor
21-04-2003, 10:53 AM
அதற்க்காக முதுகில் மூண்று கோடு போட்டுவிடாதீர்கள். :shock:

மூன்று கோடுபோட இவர் அவரல்ல!
மூன்றுகிளாஸ் பால் வெண்ணும்னா தருவார்.
ஏன்னா.... இவர் ராம்"பால்" ஆச்சே? :lol:

நாரதரே என்ன லொள்ளா??? :twisted:

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Narathar
21-04-2003, 10:54 AM
மேலும் சிலர் இன்று முதிர்ந்த உறுப்பினர்கள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

கண்கானிப்பாளரானதுக்கப்பரம் கண்டுக்கவே மாட்டேங்குறார்............ ம்ஹ¥ம்!!!! :cry:
(மேலே படிக்கவும் :lol: :wink: )

discreteplague
21-04-2003, 02:06 PM
நன்றிகள் பல கோடி...

விஷ்ணு

rambal
21-04-2003, 05:34 PM
நாரதரே! அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. விவகாரமான கேள்விகளில் சிக்கிக் கோள்ள வேண்டாம் என்ற எண்ணம்தான்.
மற்றபடி உங்கள் குறும்பை ரசித்துக் கொண்டுதானிருக்கிறேன். தொடரட்டும் உங்கள் சேவை.. நாராயணா! நாராயணா!

தஞ்சை தமிழன்
22-04-2003, 08:58 AM
நாராயணா, நாராயணா என்று நாரதர்தான் சொல்லுவார், ஆனால் இங்கு (ராமரே நாராயணின் மற்றைய அவதாரம்) ராம்பால் அவர்களே நாராயணா, நாராயணா என்று கூறுவது சுவாரஸ்யமாக உள்ளது. ஒரு வேளை நாரதருக்கு ராமரே பயந்து விட்டாரோ?

மேலே உள்ளது தாமாசுக்காக எழுதபட்டது. தவறாக நினைக்க வேண்டாம்.

Vanambadi
22-04-2003, 02:30 PM
நானும் முதிர்ந்த உறுப்பினரா? என்னால் நம்பமுடியவில்லை. நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்று தெரியவில்லை.

வேலைப்பழு காரணமாக அதிக சேவை செய்ய முடியவில்லை. இருந்தாலும் முடிந்தவரையில் இங்கு வந்து நம் நண்பர்கள் முகம் கண்டு பேசித்தான் போகிறேன். இனியும் தீவிரமாக முயற்சி செய்யுமாறு பணித்துள்ளீர்கள்!

கண்காணிப்பளராகி தாங்கள் செய்திருக்கும் முதல் பணி இது. ஆகவே, வாழ்த்த வேண்டும் உங்களை. நன்றாகவே செய்திருக்கிறீர்கள். நன்றி! நன்றி!

Narathar
23-04-2003, 04:26 AM
நானும் முதிர்ந்த உறுப்பினரா? என்னால் நம்பமுடியவில்லை. நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்று தெரியவில்லை.
!

இப்படி நடந்துகிட்டே இருந்ததால ஒருவேலை முதிர்ந்த உறுப்பினர் பதவி கொடுத்தாங்களோ??

பார்க்க: வானம்பாடியின் அவதார்!!! :lol: :lol:

Narathar
23-04-2003, 04:37 AM
விவகாரமான கேள்விகளில் சிக்கிக் கோள்ள வேண்டாம் என்ற எண்ணம்தான்.



அப்படியென்ன விவகாரம் பன்னிவிட்டேன் நான்????? :cry:

Narathar
23-04-2003, 04:39 AM
நாராயணா, நாராயணா என்று நாரதர்தான் சொல்லுவார்,

நான் சொல்வது நாராயனா! நாராயனா!! என்று ;)

rambal
23-04-2003, 05:34 AM
உங்கள் குறும்புக்கும் உண்டோ எல்லை...
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து விஷமம் கலந்த விமர்சணங்களை தூவியிருக்கும் நாரதரின் தமிழ் முன் சரணடைகிறேன்...
இதில் எதிலும் நான் சிக்காதபடி மதிதனை தெளிவுறச்செய்து எனை காப்பாற்றுவாய்..
ராமரையே நாராயணா என்று அழவைத்த பெருமை உம்மைச் சாரும்..

தயவு செய்து என்னை மட்டும் விட்டுவிடுங்கள்.. (எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்)

Narathar
23-04-2003, 06:04 AM
எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்

பேச்சு வார்த்தைகளுக்கு இப்போதைக்கு "தடா"
(இதுதான் இலங்கையில் இப்போது தலைப்புச்செய்தி!!!)

தஞ்சை தமிழன்
23-04-2003, 07:39 AM
எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்

பேச்சு வார்த்தைகளுக்கு இப்போதைக்கு "தடா"
(இதுதான் இலங்கையில் இப்போது தலைப்புச்செய்தி!!!)

இலங்கையில்தானே தடா, ஆனால் தமிழ் மன்றத்தில் இல்லையே?

பைத்தியகாரன்
24-04-2003, 03:50 PM
emperer க்கு தங்கள் முயற்சி மதிக்கப்படும் கண்டிப்பாக.இது தமிழ் மக்கள் அரசு{மன்றம்}.இஙுகு ஜனநாயகம்தான்

Narathar
25-04-2003, 04:57 AM
நாரதரே என்ன லொள்ளா??? :twisted:


குதிரைக்கு வைப்பது கொள்ளு!
அது என்ன லொள்ளு?
எந்த அகராதியில் இருக்கின்றது அந்த "தமிழ்"ச்சொல்???? 8)

Narathar
25-04-2003, 04:58 AM
இலங்கையில்தானே தடா, ஆனால் தமிழ் மன்றத்தில் இல்லையே?

நான் தமிழ் மன்றத்தில் தடா என சொன்னேனா????

rambal
25-04-2003, 06:25 AM
அது மதுரை அகராதிங்க. அதாவது எசகுபிசகா பேசி பிராணனை வாங்குவதற்கு பெயர்தான் லொள்ளு..

(தப்பாக எடுக்க வேண்டாம்.)

Narathar
25-04-2003, 06:54 AM
அது மதுரை அகராதிங்க. அதாவது எசகுபிசகா பேசி பிராணனை வாங்குவதற்கு பெயர்தான் லொள்ளு..

(தப்பாக எடுக்க வேண்டாம்.)

நான் தப்பாக எடுப்பதை விடுங்கள்
சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் இப்படிப்பேசுவதை
தமிழ்த்தாய் மன்னிப்பாளா?

lingam
25-04-2003, 03:11 PM
என்னையும் முதிர்ந்த உறுப்பினராக்கிய நிர்வாகிகளுக்கு நன்றி.
ஒரு சிறு சந்தேகம். இங்கு வேறு என்ன உறுப்பினர் பதவிகள் உண்டு?. அதற்கான தகுதி அடிப்படைகள் என்ன?.

rambal
25-04-2003, 06:19 PM
மேலும் சிலர் இன்று முதிர்ந்த உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை..

aren
27-04-2003, 06:36 AM
முதிர்ந்த உறுப்பினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்களின் சிறப்பான பங்களிப்பை இந்த தளத்திற்கு தொடர்ந்து அளித்து இந்த தளத்தை மேன்மேலும் வளர்க்க உதவ வேண்டும். நிச்சயம் சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வசீகரி
30-04-2003, 06:23 AM
இங்கு முதிர்ந்த உறுப்பினர்களான அனைவருக்கும் வசீகரியின் வாழ்த்துக்கள்

rambal
30-04-2003, 07:34 AM
இன்று புதிதாக சிலர் முதிர்ந்த உறுப்பினர்கள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி..

Emperor
30-04-2003, 12:42 PM
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அனைத்து நன்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் !

aren
30-04-2003, 02:03 PM
புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

Narathar
02-05-2003, 05:06 AM
புதிதாய் முதிர்ந்த அங்கத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!
(முதிர்ச்சிக்கு வாழ்த்துவது இங்கு மட்டும்தானோ???)

rambal
02-05-2003, 06:32 AM
புதிதாக இன்று சிலர் முதிர்ந்த உறுப்பினர்கள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை..

அறிஞர்
02-05-2003, 06:40 AM
திறமைக்கு.. மதிப்பு.. நல்லது

kalai
02-05-2003, 06:53 AM
நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை

sujataa37
03-05-2003, 08:24 AM
உதிர்ந்த உறுப்பினராக என்னை நானே பாவித்துக்கொண்டிருந்தபோது இன்று
முதிர்ந்த உறுப்பினராக உங்களோடு சேர்த்துக்கொண்டு, இப்போது (மகிழ்ச்சியில்)
அதிர்ந்த உறுப்பினராக மேலும் நன்கு பங்கேற்க முயல்கிறேன்.

நன்றி

poo
03-05-2003, 09:51 AM
முத்துக்களாய் இனி(யும்) நிறைய கருத்துக்கள் உதிக்கும் என நம்புகிறேன்... பாராட்டுக்கள் சுஜாதா மற்றும் முதிர்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும்!!

aren
03-05-2003, 12:19 PM
உதிர்ந்த உறுப்பினராக என்னை நானே பாவித்துக்கொண்டிருந்தபோது இன்று
முதிர்ந்த உறுப்பினராக உங்களோடு சேர்த்துக்கொண்டு, இப்போது (மகிழ்ச்சியில்)
அதிர்ந்த உறுப்பினராக மேலும் நன்கு பங்கேற்க முயல்கிறேன்.

நன்றி

நீங்கள் தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க என் வாழ்த்துக்கள்.

இளசு
03-05-2003, 12:32 PM
உதிர்ந்த உறுப்பினராக என்னை நானே பாவித்துக்கொண்டிருந்தபோது இன்று
முதிர்ந்த உறுப்பினராக உங்களோடு சேர்த்துக்கொண்டு, இப்போது (மகிழ்ச்சியில்)
அதிர்ந்த உறுப்பினராக மேலும் நன்கு பங்கேற்க முயல்கிறேன்.

நன்றி

குதிர்ந்த கருத்துக் கதிரை
பகிர்ந்த தோழிக்கு...........
மகிழ்ந்த நண்பனின்
நெகிழ்ந்த பாராட்டு......
உங்கள் கையெழுத்து அருமை...புதுமை...!

anushajasmin
03-05-2003, 01:33 PM
அருமையான கவிதையாய் தன் நன்றியை வெளிப்படுத்தியிருக்கும்
சகோதரியின் பதிப்பு கையெழுத்துவரை இனிக்கிறது

அறிஞர்
05-05-2003, 03:32 PM
பலர்... ரொம்ப சென்டிமெண்டாக.. நன்றி சொல்லியுள்ளனர்..., சிலர் பெயர் விடப்பட்டதென்று.. சலித்துள்ளனர்....

நான் என்ன நினைக்கிறேன் என்றால்.. நம் மன்றத்தில் (லோகத்தில்)

அதற்கு எடுத்துகாட்டு.. நம் இளசு, ராம்பல்

கிடைத்ததை அனுபவித்து. மகிழுங்கள்...

rambal
05-05-2003, 03:47 PM
சிலர் முதிர்ந்த உறுப்பினர்கள் குழுவில் சேர்க்கப்படுள்ளனர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.. உங்கள் பணியை தொடருங்கள்..

முத்து
05-05-2003, 05:52 PM
நான் என்ன நினைக்கிறேன் என்றால்.. நம் மன்றத்தில் (லோகத்தில்)

அதற்கு எடுத்துகாட்டு.. நம் இளசு, ராம்பல்

கிடைத்ததை அனுபவித்து. மகிழுங்கள்...
நான் நீங்கள் நினைப்பதை,சொன்னதை ஆமோதிக்கிறேன் !.

முத்து
05-05-2003, 08:43 PM
இப்பெரு மன்றமிதில்
இந்த இளையோனையும்
முதிர் உறுப்பினன் ஆக்கியமைக்கென்
நன்றி !

madhuraikumaran
07-05-2003, 04:36 AM
புதிய முதிர்ந்த உறுப்பினர்களுக்கு என் வாழ்த்துக்கள் !!!

Emperor
07-05-2003, 08:48 AM
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுக்கள்

lavanya
07-05-2003, 01:10 PM
புதிய முதிர்ந்த உறுப்பின நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....

aren
07-05-2003, 01:37 PM
அனைத்து புதிய முதிய உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அறிஞர்
08-05-2003, 04:18 AM
புதியவர்களின்.. பணி செவ்வனே.. சிறக்க வாழ்த்துக்கள்

Dr. Agaththiyan
08-05-2003, 11:09 PM
என்னை முதிர்ந்த உறுப்பினராக ஆக்கியதற்கு நன்றி.....
தலைவர் அவர்களுக்கும்...
கண்காணிப்பாளர் ராம்பால் அவர்களுக்கும்...

முத்து
09-05-2003, 06:15 PM
புதிய முதிர்ந்த உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் !

rambal
13-05-2003, 12:02 PM
இன்று சிலர் முதிர்ந்த உறுப்பினர்கள் குழுவில் சேர்க்கப்படுள்ளனர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்..

e_roy123
13-05-2003, 12:45 PM
நான் இந்த குருகிய காலத்தில் முதிர்ந்த உறுப்பினராக வருவேண் என்று எதிர் பார்க்க வில்லை....
அனைவருக்கும் எனது நன்றி....

என்றும் தமிழுடன்
வாழ்க வளமுடன்
அன்புடன்,
e_roy123

poo
13-05-2003, 01:21 PM
முதிர்ந்த உறுப்பினரானதிற்கு வாழ்த்துக்கள் நண்பரே!!

Nanban
17-05-2003, 07:50 PM
நானும், உங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சியே.....

கவிதைப் பக்கத்தை விட்டு வெளியே உலாப் போகவே நேரமில்லையாதலால் தான் இத்தனை தாமதமாக இந்தப் பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது.

Narathar
19-05-2003, 04:34 AM
புதிதாய் முதிர்ந்த அனைவருக்கும்
நல் வாழ்த்துக்கள்!

raji
26-05-2003, 10:47 AM
முதிர்ந்த உறுப்பினராக காத்திருக்கிறேன்.தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயம் பதவி உயர்வு கிடைக்கும் எண்ற நம்பிக்கையில்.

rambal
30-05-2003, 08:53 AM
இன்று சிலர் முதிர்ந்த உறுப்பினர்கள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..

Dinesh
30-05-2003, 08:57 AM
புதிதாக உறுப்பினர்கள் குழாமில் இணைந்த நண்பர்களுக்கு
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...

தினேஷ்.

chaanakyan
30-05-2003, 03:54 PM
தலைவா (அல்லது ) தலைவரே!

இளைஞனான என்னை முதிர்ந்தவர் பட்டியலில் இணைத்துவிட்டீரே?.
இது நியாயமா? ( சும்மாதான் சொல்றேன். அதுக்காக பதவியிறக்கம் செய்து விடவேண்டாம். )

எனக்கு இந்த மரியாதை கொஞ்சம் பெருமையாக தான் உள்ளது ( சட்டை காலரை ( அதற்கு தமிழ் வார்த்தை தெரியலைங்க ) தூக்கிவிட்டுக்கொள்ளும் அளவிற்கு.

முயற்சி செய்வேன் இந்த பெருமையை காப்பாற்றிக்கொள்ள..

கண்காணிப்பாளருக்கு நன்றி. ( இது கையூட்டு இல்லைங்க )

poo
30-05-2003, 06:14 PM
வாழ்த்துக்கள் சாணக்யரே......

இளசு
31-05-2003, 07:12 AM
பெயரின் சூட்சுமம்....
சாணக்கியனின் பதில்...சாதுர்யம்...!
ரசித்தேன் ...பாராட்டுகிறேன்...

aren
31-05-2003, 07:18 AM
புதிதாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் மேன்மேலும் பதவி உயர்வு பெற்று இந்த தமிழ்மன்றத்தை மேலும் சிறப்பாக்குங்கள்.

prabha_friend
31-05-2003, 08:49 AM
புதிதாக பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .

முத்து
01-06-2003, 02:53 AM
புதிதாய் முதிர்ந்த உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்...

prabhaa
01-06-2003, 03:13 AM
புதிதாய் முதிர்ந்த உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்...

ரொம்ப நாளாச்சு என்று நினைக்கிறேன் நண்பரே ;)

முத்து
01-06-2003, 03:32 AM
ரொம்ப நாளாச்சு என்று நினைக்கிறேன் நண்பரே ;)
பிரபா....உங்களுக்குக் குறும்புதான்... ஆனாலும்.. இந்த வாழ்த்துக்கள் புதிதாய் முதிர்ந்தவர்களுக்கு மட்டும்தான்...உங்களைப் பற்றி........எனக்கு முன்னமேயே தெரியும்தானே.... :wink:

வசீகரி
07-06-2003, 07:12 AM
என்னையும் முதிர்ந்த உருப்பினராக்கியமைக்கி
நன்றிகள் கோடி

aren
08-06-2003, 03:58 AM
என்னையும் முதிர்ந்த உருப்பினராக்கியமைக்கி
நன்றிகள் கோடி

நீங்கள் இல்லாமல் இந்த உறுப்பினர்கள் பட்டியல் முழுமை பெறாதே.

இராசகுமாரன்
08-06-2003, 04:47 AM
முதிர்ந்த உறுப்பினர் என்றவுடன், வயதானது போல் தோன்றுகிறதா?

matured member என்பதற்க்கு வேறு நல்ல தமிழ் சொல் உள்ளதா?

பண்பட்ட உறுப்பினர்?
பக்குவப்பட்ட உறுப்பினர்?
நரைத்த உறுப்பினர் ( :roll: )

aren
08-06-2003, 05:02 AM
பண்பட்ட உறுப்பினர் நன்றாக உள்ளதே. இதைக் கூட பயன்படுத்தலாமே.

இளசு
08-06-2003, 06:11 AM
எதுவும் முழுதிருப்தியா தெரியல...
இருப்பதில் "பண்பட்ட உறுப்பினர்" ஏத்ததா தெரியுது தலைவரே....
இதைவிட பொருத்தமா நம் நண்பர் யாரேனும் சொல்றாங்களான்னு
காத்திருப்போமா?

rambal
08-06-2003, 02:55 PM
முதிர்ந்த உறுப்பினர்கள் குழு..
இதற்கு மாற்றலாக
பண்பாளர்கள் குழு என்று அழைக்கலாம்.
உறுப்பினர்கள் என்றால் மன்றத்தில் சேர்ந்த அனைவருமே உறுப்பினர்கள்தான்.
இந்த உறுப்பினர்களை குழுவாக பிரிக்கும் பொழுது
உறுப்பினர்கள் குழு என்ற சொல் நீளமாயும் அத்தனை சிறப்பான வார்த்தையாகவும் இல்லை என்பது
என் அபிப்ராயம்.
ஆகையால், பண்பாளர்கள் குழு என்று நான் வழிமொழிகிறேன்..
நண்பர்கள்தான் இது பற்றி சொல்ல வேண்டும்...

முத்து
08-06-2003, 10:09 PM
பண்பாளர் குழு நன்றாக உள்ளது...பண்பட்டோர் கூட நன்றாக உள்ளது... சான்றோர் குழு?... இது எப்படி இருக்கு?... கொஞ்சம் ஓவரோ :wink: ??

இளசு
09-06-2003, 12:11 AM
ராம், முத்து சொல்லும் பண்பட்டோர், பண்பாளர் குழு பிரயோகங்கள்
நல்லாவே இருக்கு.

(சான்றோர் ...ரொம்பவே ஓவரோ...!!!!???/)

முத்து
09-06-2003, 02:08 AM
ராம், முத்து சொல்லும் பண்பட்டோர், பண்பாளர் குழு பிரயோகங்கள்
நல்லாவே இருக்கு.(சான்றோர் ...ரொம்பவே ஓவரோ...!!!!???/)

சான்றோர் தங்களைப் போன்ற சிலருக்குப் பொருத்தமாகவே இருக்கும்... என்றாலும் அப்பெயர் அங்கிருக்கும் என் போன்றோருக்கு ரொம்பவே ஓவரானது??!!... :wink: :D

Narathar
09-06-2003, 05:14 AM
பண்பட்ட உறுப்பினர்
பண்பாளர்கள் குழு இரண்டும் நன்றாக இருக்கிறது

"பண்பற்ற" குழு ஒன்றை அமைக்கும் எண்ணம் இல்லையா?

இளசு
09-06-2003, 11:24 PM
சான்றோர் தங்களைப் போன்ற

தம்பி முத்து
ரொம்ப ஓவர் என்றதே என்னை மனசில வச்சிதான்....

prabha_friend
10-06-2003, 08:03 AM
எனக்கு என்னமோ திருப்தி இல்லை . "பண்பாளர்கள் குழு" என்று சொன்னால் . அதில் இடம்பெறாதவர்களை "பண்பற்றவர்கள்" என்று சொல்வது போல் அல்லவா அமைகிறது . "மன்ற-மன்னர்கள்" எப்படி இருக்கு?

Narathar
10-06-2003, 09:12 AM
எனக்கு என்னமோ திருப்தி இல்லை . "பண்பாளர்கள் குழு" என்று சொன்னால் . அதில் இடம்பெறாதவர்களை "பண்பற்றவர்கள்" என்று சொல்வது போல் அல்லவா அமைகிறது . "மன்ற-மன்னர்கள்" எப்படி இருக்கு?

நான் சொன்னது இவருக்கு மட்டும்தான் புரிந்திருக்கிறது!!!!
நாராயனா!!!! :lol:

poo
10-06-2003, 02:58 PM
முதல்நிலை உறுப்பினர்கள், இரண்டாம் நிலை உறுப்பினர்கள் என வகைப்படுத்தினால் எந்த பிரச்சினையும் இல்லையே!!!??

prabhaa
11-06-2003, 04:44 AM
ஆயிரம் போஸ்ட் செய்த அபூர்வ அறிவு சீவிக்களே, ஒரு நல்ல பேரா பார்த்து சீக்கிரம் வையுங்கள்....

prabha_friend
11-06-2003, 09:28 AM
ஆயிரம் போஸ்ட் செய்த அபூர்வ அறிவு சீவிக்களே, ஒரு நல்ல பேரா பார்த்து சீக்கிரம் வையுங்கள்....

நான் சொல்ல நினைத்ததை பிரபா அன்னாத்த சொல்லிவிட்டார் .

இளசு
14-06-2003, 06:29 AM
ஆயிரம் போஸ்ட் செய்த அபூர்வ அறிவு சீவிக்களே, ஒரு நல்ல பேரா பார்த்து சீக்கிரம் வையுங்கள்....

நான் சொல்ல நினைத்ததை பிரபா அன்னாத்த சொல்லிவிட்டார் .

ரெட்டை பிரபாக்களே... :D :D
ஆ..க்கு ஆ வர்ற மாதிரி அடுக்கு மொழியா..அலங்காரமா சொன்ன விஷ¤வல்
ஸ்பெஷல் எ·பெக்ட் மன்னன்
கோவைப் பிரபாவே...
:D அதுக்கு ஒத்து ஊதி சவுண்டு எ·பெக்ட் தரும் கேள்விகளின் வேள்வி நாயகன் தஞ்சைப்பிரபாவே... :D
ஒண்ணும் தெரியாதாலதானே ஒளறல் அதிகமாகி.. ஆயிரம் தாண்டிட்டோம்..
மடல் அளவும் அறிவும் ஒன்றா என்ன :) ?
பரீட்சை மார்க்கே சரியான அளவுகோல் இல்லன்றது என் கருத்து.

(வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் ஒத்துக்க மாட்டாங்க..
அடி பின்னிடுவாங்க...)

rambal
17-06-2003, 05:11 AM
இன்று சிலர் முதிர்ந்த உறுப்பினர்கள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..

சேரன்கயல்
17-06-2003, 06:07 AM
முதிர்ந்த உறுப்பினர்கள் என்பது வழமையாய் பதிவுகளின் அடிப்படையில் தரப்படும் உறுப்பு அந்தஸ்தா?? முதிர்ந்ததால் என்ன மாற்றம் இருக்கும்...தெளிவு தருக...

இளசு
17-06-2003, 06:46 AM
பரீட்சை மார்க்கே சரியான அளவுகோல் இல்லன்றது என் கருத்து.

(வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் ஒத்துக்க மாட்டாங்க..
அடி பின்னிடுவாங்க...)

இங்கே நான் குறிப்பாய் சொன்ன தகவலை ஒட்டி தம்பி பாரதி பதித்த
பொது அலசல் இங்கே.....
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=13559#13559 (http://www.tamilmantram.com/board/viewtopic.php?p=13559#13559)

mania
17-06-2003, 09:46 AM
மிக்க நன்றி நண்பர் ராம்பால் அவர்களே, நான் என்னால் முடிந்த மட்டும்
சேவை புழிய (மன்னிக்கவும்) சேவை செய்ய காத்திருக்கிறேன்
வாழ்த்துக்கள்
மணியா

Narathar
18-06-2003, 04:25 AM
இன்று சிலர் முதிர்ந்த உறுப்பினர்கள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..


முதிர்ந்த உறுப்பினர்களாக பதவி உயர்வு பெற்ற அன்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள் 8)

chaanakyan
18-06-2003, 10:05 AM
இங்குள்ள அனைவரும் ( புதிதாக வரும் அன்பர்களும் ) பண்பாளர்களே!.

அதனால் பண்பாளர்கள் என்றொரு அடைமொழி தேவையில்லை.

பண்பட்டவர்கள் என்பது பொருத்தம். எந்த வகையில் பண்பட்டிருக்கிறார்கள் என்பது முக்கியமல்லவா.

எனவே சர்ச்சை வேண்டாம்.

தலைவர் முன்பு கூறியது போல முதிர்ந்த என்ற வார்த்தையே போதும். இது பதிவு செய்வதாகட்டும், கருத்துச் செரிவு நிறைந்த பதில்களாகட்டும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

இருந்தாலும் இதற்கு நல்ல பொருத்தமான பெயர் இருந்தால் மன்ற செயல்வீரர்கள் ( உண்மைதானே? ) சொல்லவும்.

இந்த காலதாமதான பதிப்பிற்கு மன்னிக்கவும். இன்றுதான் இந்த தலைப்பில் உள்ளவற்றை முழுதாக படித்தேன். வழக்கமாக நுனிப்புல் மேயும் நான் ( அதற்காக மாடு என்று எண்ணிடவேண்டாம் ) இன்றுதான் பொறுமையாக ( சில நேரங்களில் ) இந்த தலைப்பை படித்தேன்.

நன்றி

rambal
22-06-2003, 12:42 PM
இன்று சிலர் முதிர்ந்த உறுப்பினர்கள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்..

பாரதி
22-06-2003, 04:30 PM
புதிதாய் முதிர்ந்தவர்களுக்கு வாழ்த்துக்களும்..வரவேற்பும். சிறக்கட்டும் உங்கள் பணி.

இளைஞன்
28-06-2003, 09:58 AM
வணக்கம் இராம்பால் அவர்களே...

முதிர்ந்த(?) உறுப்பினர் குழு பற்றிய சந்தேகம்.
தமிழ்மன்றத்துக்குள் நான் நுழைந்து சில கருத்துக்கள் எழுதியதும்
எனது மின்னஞ்சல் முகவரியில் ஒரு மடல் கிடைக்கப் பெற்றேன்.
அதில் இருந்ததாவது, என்னை தாங்கள் முதிர்ந்த உறுப்பினர்
பட்டியலில் இணைத்திருப்பதாக. அதன் பின்னர் தமிழ்மன்றத்துள்
நான் நுழைந்ததும் என்னால் "அரசியல்,ஆன்மீகம்" என்னும் பகுதிக்குள்
கருத்து எழுதக் கூடியதாக இருந்தது. நானும் சில (2) கருத்துக்களை
எழுதினேன். ஆனால் சிறிது காலத்தின் பின்னர் (தற்பொழுது) என்னால்
அதனை வாசிக்கக் கூட அனுமதியில்லை. அதனால் முதிர்ந்த உறுப்பினர்
பட்டியலைச் சென்று பார்வையிட்டேன். அங்கு எனது பெயர் இல்லை.
காரணம் என்ன? அப்படியிலிலிருந்து விலக்கப் பட்டுள்ளேன் என்பது புரிகிறது.

இதுவரை நான் எழுதிய கருத்துக்களில் பண்பற்றதும், தேவையற்றதும்
இருந்ததில்லை. நான் தமிழ்மன்ற விதிமுறைகளை மீறவும் இல்லை.
இதுவரை அப்படியான முறைப்பாடுமில்லை. அப்படியிருந்தும் எந்தவித
அறிவிப்புமின்றி விலக்கப்பட்டதேன்? காரணமில்லாததும்,
அறிவிப்புமில்லாததுமான உங்கள் செயற்பாடு மிகவும் சிறுபிள்ளைத்தனமாக
உள்ளது. எனவே இதற்கான உங்கள் விளக்கம் தேவைப்படுகிறது.

அதுதவிர, முதிர்ந்த (?) உறிப்பினர்கள் தவிர்ந்தவர்க்கு, அரசியல் மற்றும்
ஆன்மீகம் பற்றிய கருத்துக்களை வாசிப்பதற்குக் கூடத் தகுதியில்லையா?
உங்கள் கோட்பாடு எனக்குப் புரியவில்லை.
உங்கள் சனநாயகம் எனக்குப் புரியவில்லை.

நன்றி.

kuruvikall
28-06-2003, 10:24 AM
மன்றத்து நட்புக்களே....
மன்றத்தில் பொறுப்பாளர் கண்காணிப்பாளர் முதிர்ந்த உறுப்பினர் உறுப்பினர் என்ற வகைப்படுத்தலுக்கான வழிமுறைகளையும் அவர்களுக்கே உரித்தானா அவர்களின் செயற்பாட்டு விதிமுறைகளையும் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தினால் உறுப்பினர்களிடையே இப்படியான சந்தேகங்களும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படுவது தவிர்த்துக் கொள்ளப்பட்டு, உறுப்பினர்கள் தங்கள் கடமை அறிந்து தமிழுக்காய் உள்ளத்தூய்மையுடன் செயற்பட உதவியாக இருக்குமல்லவா?!...இது குருவிகளின் தாழ்மையான கருத்து உங்கள் நிலைதான் என்ன..?!

G.Sneha
03-07-2003, 06:38 PM
நன்றி திரு.ராம்பால் அவர்களே.
என்னை "முதிர"-ச் செய்ததற்கு.

:(:(:(
எனது பிறந்த நாளை தளத்தில் பதிவு செய்தது என் தவறு தான். ஏற்கனவே வயதாகி விட்ட வருத்ததில் இருக்கும் போது தங்கள் செய்தி, "எரியும் நெருப்பில் எண்ணை போல" வந்தது. என்னடா இது, இவங்களும் நம்மள "பெருசு"-ன்னு கூப்பிடப்போறாங்களோன்னு வருத்தமா இருந்துச்சு. அப்புறமாத்தான் தெரிஞ்சுது இது வேற விதமான "முதிர்வு"-ன்னு.

நன்றி பல.

கருத்தில் இன்னும் நான்
கன்றுக்குட்டி தான்.

aren
04-07-2003, 04:58 AM
முதிர்ந்த உறுப்பினரான சினேகா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இளைஞன்
04-07-2003, 06:12 PM
வணக்கம் கண்காணிப்பாளர்களே(Moderators)...

நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் தரவில்லை.
காரணம் என்ன? பதில் தர விருப்பமில்லையா? அல்லது
நேரமில்லையா?

முத்து
04-07-2003, 06:25 PM
முதிர்ந்த உறுப்பினரான சினேகாவுக்கு வாழ்த்துக்கள்...

suma
04-07-2003, 06:48 PM
முதிர்ந்த உறுப்பினரான சினேகா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Narathar
05-07-2003, 06:25 AM
முதிர்ந்த ஸ்னேகாவுக்கு எனது வாழ்த்துக்கள்.............

karavai paranee
05-07-2003, 09:23 AM
வணக்கம்

சகோதரா; இளைஞன் கேட்ட கேள்விக்கு இன்னும் ஏன் பதில் வரவில்லை. அவா¢ன் கேள்வியில் அர்த்தம் இருக்கின்றுது.

எனக்கு செய்திபகுதியில் எழுதுவதற்கு உ¢மை மறுக்கப்பட்டுள்ளது. ஏன்

aren
05-07-2003, 10:10 AM
வணக்கம்

சகோதரா; இளைஞன் கேட்ட கேள்விக்கு இன்னும் ஏன் பதில் வரவில்லை. அவா¢ன் கேள்வியில் அர்த்தம் இருக்கின்றுது.

எனக்கு செய்திபகுதியில் எழுதுவதற்கு உ¢மை மறுக்கப்பட்டுள்ளது. ஏன்

நண்பரே,

இளைஞன் அவர்களுக்கு கேள்விக்கு இந்த மன்றத்தின் தலைமை காப்பாளார் ஏற்கேனெவே பதில் அளித்துவிட்டார். அவருடைய பதிலின் ஒரு பகுதியை நான் இங்கே கீழே குறிப்பிடுகிறேன்.

செய்திப்பகுதிகளில், செய்தியை பதிவு செய்வதற்கு அதில் உள்ள கண்காணிப்பாளர்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் அங்கே வரும் செய்திகளுக்கு விமர்சனம் மட்டுமே செய்ய முடியும். நீங்கள் உங்களுடைய செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுமானால் அதை இந்த தளத்தின் மற்ற இடங்களில் (எந்த இடத்தில் நீங்கள் சொல்லும் செய்தி சரியாக பிருந்துமோ அந்த இடத்தில்) பதிவு செய்யலாம், மற்ற உறுப்பினர்களும் அதைப் படித்துவிட்டு விமர்சனம் செய்வார்கள்.

கீழே இந்த மன்றத்தின் தலைவர் கண்காணிப்பாளர் இளைஞன் அவர்களுக்கு எழுதிய பதிவுன் ஒரு பகுதி:


இளைஞனே...


சில குறிப்பிட்ட தலைப்புகளான, ஆன்மீகம், அரசியல் போன்ற சர்ச்சைக்குரிய தலைப்புகளை விவாதிக்க, கருத்துச் சொல்ல சில முதிர்ந்த (matured) உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த தகுதி அவர்கள் போஸ்ட் செய்யும் தரத்தை வைத்து நிர்ணயிக்கப் படுக்கிறது. இது மாடரேட்டர்களின் விருப்பப் படி கொடுக்கப்படுகிறது. உறுப்பினர்களை கேட்க தேவை இல்லை. உறுப்பினருக்கு அத்தகுதி விருப்பம் இல்லை எனில் மாடரேட்டருக்கு தெரிவித்து, அத்தகுதியில் இருந்து விலகிக் கொள்ளலாம்.

இந்த தகுதியை வழங்கும் பொறுப்பு நமது மாடரேட்டர்களில் ஒருவரான ராம்பால் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது தெரிந்ததே.

இந்த தகுதி வழங்கும் போதும், திரும்பப் பெறும் போதும் தானாகவே இந்த மென்பொருளில் இருந்து ஒரு ஈமெயில் அனுப்பப்படுகிறது. மாடரேட்டர்கள் வேலைப் பளுவில் இதை தனித்தனியாக கவனித்து அனுப்புவது கடினம்.


ஏதும் சந்தேகம் இருந்தால் PM அல்லது ஈமெயில் செய்யுங்கள்.

நன்றி.

இளைஞன்
05-07-2003, 10:21 AM
வணக்கம் ஆரென்...

உங்கள் பொறுமையான பதிலுக்கு நான் என் செய்வேன்!
மகிழ்ச்சி.

இருந்தபோதும் நான் கேட்ட கேள்வி வேறு!
அதாவது எனக்கு ஏற்கனவே அனுமதி தந்துவிட்டு,
மீண்டும் அதைப் பறித்துக் கொண்டதற்கான காரணம்
என்ன என்பதே எந்தன் கேள்வி. அதற்கு இன்னமும்
பொறுப்பில் இருப்பவர்கள் பதில் தரவில்லை.

அந்தப் பதிலுக்காகத் தான் நான் இன்னமும் மற்றைய
இடங்களில் கூட கருத்து எழுதாமல் காத்திருக்கிறேன்.
இராம்பால் அவர்கள் தம்முடைய செயலுக்கு நியாயம்
கற்பிக்க வேண்டும். அதைவிடுத்து இன்னமும் விலகிச்
செல்வது விரும்பத் தகாதது.

இராசகுமாரன்
05-07-2003, 02:06 PM
இளைஞரே..

ஒவ்வொருவரின் வயதை இங்கே கண்டுபிடித்து "முதிர்ந்த உறுப்பினர் அனுமதி" வழங்குவது கடினம், அதனால் அவரவர்களின் பதிப்புகளின் தரத்தையும், அதன் தொனியையும், அவர்கள் மற்ற உறுப்பினர்களுடன் இங்கே கருத்து பரிமாறும் விதத்தையும் அவர்களின் முதல் 10-15 பதிப்புகளில் அலசி முதிர்ந்த உறுப்பினர் அனுமதி கொடுக்கப்படுகிறது. பிறகு அவர்கள் அந்த தரத்திலிருந்து தாழ்ந்தால், அந்த அனுமதி திரும்ப பெறப் படலாம். மீண்டும் நீங்கள் அந்த தரத்தை எட்டும் போது, உங்களுக்கு அது திரும்ப கிடைக்கும்.

உங்களுக்கு தனிச் செய்தி அனுப்பியுளேன், அதில் மேலும் விளக்கங்கள் உள்ளன.

இளைஞன்
05-07-2003, 04:40 PM
வணக்கம் தலைமை நிர்வாகி அவர்களே...

பதில் கண்டேன். மகிழ்ச்சி.
எனக்கு முதிர்ந்த உறுப்பினர் அனுமதி அவசியமில்லை.
ஆனால் அதில் இருந்து நீக்கப் பட்டதற்கான காரணத்தையே
கேட்டேன். அதற்கு நீங்கள் பொறுமையாகப் பதில்
அளித்தமைக்கு நன்றிகள்.

ஆனால் ஒரு கேள்வி...
நீங்கள் தரமான கருத்து என்று கருதுவதற்கான வரையறை
என்ன? எதிர்க்கருத்து எழுதாமை, தனது முரண்பாடுகளை
முன்வைக்காமல் மறைத்தல், வாழ்த்துக்கள் - நன்றிகள் -
பாராட்டுக்கள் தெரிவித்தல், "அண்ணா, நீங்கள் சொன்னது
மெத்தச் சரி" என்று தட்டச்சில் தட்டுவது, காரணமில்லாமல்
புகழ்வது ----இதெல்லாம் வைத்துதான் தரம் நிர்ணயிக்கப்
படுகிறதா?

[மேலும், பதில் எழுதவே விருப்பம். இரு

----------------------------
சுயத்தை இழந்த தமிழன்
சுதந்தரம் பெறுவதில்லை
----------------------------

இராசகுமாரன்
06-07-2003, 04:37 AM
நீங்கள் தரமான கருத்து என்று கருதுவதற்கான வரையறை என்ன? எதிர்க்கருத்து எழுதாமை, தனது முரண்பாடுகளை
முன்வைக்காமல் மறைத்தல், வாழ்த்துக்கள் - நன்றிகள் -
பாராட்டுக்கள் தெரிவித்தல், "அண்ணா, நீங்கள் சொன்னது
மெத்தச் சரி" என்று தட்டச்சில் தட்டுவது, காரணமில்லாமல்
புகழ்வது ----இதெல்லாம் வைத்துதான் தரம் நிர்ணயிக்கப்
படுகிறதா?
அன்புள்ள இளைஞரே..!

1) தரமான கருத்துக்களின் வரையறை கண்காணிப்பாளர்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது, அது அவர்களுக்கு மட்டுமே.. அதை மற்றவர்களுக்கு தெரிவிக்க யாருக்கும் அனுமதி கிடையாது.

2) "புகழ் பாடுவது தான் வரைமுறை" என்று நினைப்பதிலிருந்தே உங்கள் முதிர்ச்சியை நாங்கள் புரிந்து கொண்டோம்.

3) எதிர்கருத்து இருந்தால் தான் எந்த விவாதமும் ஆரோக்கிய விவாதமாக மாறும், ஆனால் அதை சொல்லும் விதத்தில் பக்குவமாக சொல்லாவிடில், வீண் மனக் கசப்புகளே மிஞ்சும். முரண்பாடுகளை எழுதலாம் ஆனால் விதண்டாவாதங்கள் கூடாது.

இதிலிருந்து புரிந்து கொண்டது: நமது இளைஞர்களுக்கு வேகம் இருந்தால் மட்டும் போதாது, விவேகமும் வேண்டும்.

anbu
15-07-2003, 02:30 PM
நண்பர் ராம்பால் அவர்களே

முதிர்ந்த உறுப்பினர்களின் நானும் ஒருவனா என்னால் நம்ப முடியவில்லையே!

இருங்க ஒரு முறை என்னையே நான் கில்லிப்பாத்துகிறேன்.
(முதிர்ந்த உறுப்பினர் லிஸ்டில் இன்னொரு முறை என் பெயரைப் பார்க்கிறேன்)

ஆ.. வலிக்கிறது அப்போ இது நிஜமாகத்தான் இருக்கும்.
(ஆமா என்னுடைய பெயரும் இடம் பெற்று இருக்கே! )

நன்றி ! நன்றி ! நன்றி !

poo
16-07-2003, 07:40 AM
வாழ்த்துக்கள் அன்பு..
நிறைய இடங்களில் முத்திரைப்பதிக்க வேண்டுகிறேன்..

இக்பால்
16-07-2003, 11:31 AM
முதிர்ந்தவர்கள் பகுதியில் இளைய தலைமுறையினர் நிறைய இடம் பெற்று

இருப்பது காண மகிழ்ச்சி. இந்த காலத்தில் முதிர்ந்த இளைய தலைமுறை

நாட்டிற்கு மிகத் தேவை படுகிறது. வாழ்த்துக்கள்.-அன்புடன் அண்ணா.

முத்து
20-07-2003, 11:51 PM
முதிர்ந்த உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்..

thamizhan
21-07-2003, 05:07 AM
அய்யோ..! முதிர்ந்த உறுப்பினர் பகுதியில் என் பெயருமல்லவா உள்ளது..! ஏதோ தப்பு நடந்திருக்கிறது. எந்த ஒரு வகையிலும் நம் மன்றத்திற்கு பயனளிக்காத என் பெயர் எப்படி இங்கு வந்தது..? என் மேல் கண்காணிப்பாளர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். உங்களுடைய நம்பிக்கை என்னை ஏதாவது நமது மன்றத்தில் செய்ய தூண்டி ஊக்கமளிக்கிறது. இனி என்னால் முடிந்ததை நம் தளத்தில் செய்ய முயற்சிக்கிறேன். மீண்டும் ஒரு முறை நன்றி..!!

இக்பால்
21-07-2003, 05:54 AM
தமிழன் பெயர் இல்லாவிட்டால்தான் ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று

நினைக்க இடம் இருக்கிறது. வாழ்த்துக்கள் தமிழன்.-அன்புடன் அண்ணா.

suma
21-07-2003, 11:47 AM
முதிர்ந்த உறுப்பினர் தமிழன்..வாழ்த்துக்கள்.

anbu
21-07-2003, 12:54 PM
வாழ்த்துக்கள் நண்பன் தமிழன் அவர்களே!

முதிர்ந்த உறுப்பினர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

இராசகுமாரன்
26-07-2003, 07:38 AM
முதிர்ந்த உறுப்பினர்களை தேர்வு செய்யும் பொறுப்பு இன்று முதல் ராம்பாலிடமிருந்து ஆரன் அவர்களுக்கு செல்கிறது.

ஆரனுக்கு உங்கள் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து அவர் வேலைகளை சிறப்பாக செய்திட உதவிடவும்.

நன்றி.

aren
26-07-2003, 07:47 AM
நன்றி தலைவர் அவர்களே.

இளசு
26-07-2003, 08:11 AM
என் வாழ்த்துகள் அன்பார்ந்த நண்பர் ஆரென் அவர்களுக்கு...
கூடுதல் பொறுப்பிலும் பொன்னாய் மின்னுவீர்கள்..

பாரதி
26-07-2003, 08:53 AM
ஆரென் - சிறப்பு வாழ்த்துக்கள்.

anbu
26-07-2003, 02:18 PM
நன்றி தலைவர் அவர்களே !

நண்பர் ஆரென் அவர்களுக்கு முதிர்ந்த உறுப்பினர்களைத் தேர்வு செய்யும்
பொறுப்பை வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்த்துக்கள் நண்பர் ஆரென் அவர்களே !

சேரன்கயல்
27-07-2003, 06:53 AM
அன்பர் ஆரென்...
பொறுமையாக பதில் தந்து அசத்தும் உங்களுக்கு பொறுப்பான பணியை வழங்கியுள்ள தலைமைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

karavai paranee
27-07-2003, 09:15 AM
வாழ்த்துக்கள் நண்பா
என்னை ஏற்கனவே முதிர்ந்தவர் என்று அனுப்பிவிட்டீர்கள்.(இனி திருமணம் செய்வது கடினம்தான்)

முத்து
27-07-2003, 10:21 AM
ஆரென் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

அறிஞர்
08-09-2003, 09:41 AM
புதிய முதிர்ந்த உறுப்பினர்களுக்கு.. வாழ்த்துக்கள்..

ஆரெனின் புதிய பொறுப்புக்கும் வாழ்த்துக்கள்..

வாழ்க உம் பணி.....

poo
09-09-2003, 03:01 PM
என்னை ஏற்கனவே முதிர்ந்தவர் என்று அனுப்பிவிட்டீர்கள்.(இனி திருமணம் செய்வது கடினம்தான்)

நண்பா.. தங்களுக்கு எண்பது வயது ஆனபின்னரும் உங்கள் கவிதைகளில் சிலதை எடுத்து விடுங்களேன்.. (அப்புறம் தெரியும்..)

இளசு
24-09-2003, 05:53 PM
அண்மையில் முதிர்ந்தவர்கள் யார் யாரோ?

Emperor
25-10-2003, 11:49 AM
புதிய முதிர்ந்த உறுப்பினர்களுக்கும்
புதிய பொறுபேற்றிருக்கும் ஆரென் அவர்களுக்கும்
பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்

poo
19-12-2003, 10:43 AM
முதிர்ந்த உறுப்பினரான மதுரைவீரா-வுக்கு வாழ்த்துக்கள்!!

இளசு
19-12-2003, 10:42 PM
வாழ்த்துகள் நண்பர் மதுரை வீரா அவர்களுக்கு..
இனி எல்லாக்களத்திலும் உங்கள் சொற்சிலம்பம்..

முத்து
20-12-2003, 01:49 PM
புதிதாய் முதிர்ந்த உறுப்பினரான அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..
தொடரட்டும் உங்கள் அருமையான பணி ...

இக்பால்
21-12-2003, 05:16 AM
மதுரை வீரா...என்னுடைய பாராட்டுக்களும். நீங்கள் வந்த நேரம் நான் பிஸி.
அவ்வளவாக பரிச்சயம் இல்லை. காத்திருப்போம்.-அன்புடன் அண்ணா.

அலை...
21-12-2003, 06:34 AM
நான் முதிர்ந்து விட்டேனா? (லிஸ்டில் என் பெயர் இருக்கிரது)...

அன்புடன்

அலை..

சேரன்கயல்
21-12-2003, 07:04 AM
முதிர்ந்த உறுப்பினர்களாகியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தொடர்ந்து கலக்குங்க மக்களே...

poo
21-12-2003, 07:47 AM
அலையின் காற்று இனி அனைத்து பக்கங்களிலும் அடிக்கும்!!

அலை...
21-12-2003, 07:52 AM
நன்றி பூ..

என்னை...ஒரு எல்லாஸ்டிக்கா நினைக்காம இருந்தா சரி...

அலை...

சேரன்கயல்
21-12-2003, 07:55 AM
எலாஸ்டிக்கா இருக்கிறது தப்பில்ல அலை...
ப்ளாஸ்டிக்காத்தான் இருக்க கூடாது...
ப்ளாஸ்டிக்க உருக்கி இழுத்த இழுப்புக்கு வரும் கொஞ்சம் கூலாயிட்டா...அம்பேல்தான்...எலாஸ்டிக் இழுத்த இழுப்புக்கு வந்து இயல்பு நிலைக்கு திரும்பிடும்ல...

அலை...
21-12-2003, 08:02 AM
அடா அடா..

என்ன ஒரு தத்துவம்...கை கொடுங்க சேரன்...

அலை...

நிஜமாவே ஒரு அழகான தத்துவம் தான்

poo
21-12-2003, 08:04 AM
நன்றி பூ..

என்னை...ஒரு எல்லாஸ்டிக்கா நினைக்காம இருந்தா சரி...

அலை...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!

சேரன்கயல்
21-12-2003, 08:06 AM
அலை...
நான் சொன்னது தத்துவமா உங்களுக்கு தெரிஞ்சா சரிதான்...
ஆனால் எலாஸ்டிக் பற்றி நான் சொன்னது உண்மைதானே...

அலை...
21-12-2003, 08:06 AM
நன்றி பூ..

என்னை...ஒரு எல்லாஸ்டிக்கா நினைக்காம இருந்தா சரி...

அலை...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!

அட இதென்னடா வம்பாப் போச்சு..

இன்னா மேட்டர் சொல்லு அன்னாத்த..

அலை..

எல்லாஸ்டிக் - அரிய சொல்லுக்கு பொருள் வேண்டுமானால்..தட்டுங்கள்

http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=42394#42394 (http://www.tamilmantram.com/board/viewtopic.php?p=42394#42394)

இளசு
22-01-2004, 06:36 AM
நண்பர் சரா அவர்களுக்கு வாழ்த்து..!

aren
22-01-2004, 06:38 AM
சரா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

poo
22-01-2004, 12:45 PM
சராவின் பங்களிப்பு மேலும் அதிகமாகும் என எதிர்ப்பார்த்து வாழ்த்துகிறேன்!

பாரதி
22-01-2004, 01:00 PM
சராவிற்கு வாழ்த்துக்கள். (அறிவிப்பை யார் சொல்வார்கள் அண்ணா..?)

aren
22-01-2004, 03:13 PM
சராவிற்கு வாழ்த்துக்கள். (அறிவிப்பை யார் சொல்வார்கள் அண்ணா..?)

நட்சத்திர பதவி பெற்றவர்களுக்குத்தான் இதுவரை அறிவிப்பு இருக்கிறது.

இளசு
23-01-2004, 12:02 AM
சராவிற்கு வாழ்த்துக்கள். (அறிவிப்பை யார் சொல்வார்கள் அண்ணா..?)


வாழ்த்தே அறிவிப்புதானே பாரதி..!

பாரதி
23-01-2004, 12:08 AM
உண்மைதான் அண்ணா.. விளக்கத்திற்கு நன்றி ஆரென், அண்ணா.

sara
23-01-2004, 02:32 AM
வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி. தாமதமாக பதிலளித்திருப்பதற்கு மன்னிக்கவும். இந்த பதிவு இப்பொழுதுதான் என் கண்ணிலேயே பட்டது.

aren
23-01-2004, 05:31 AM
வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி. தாமதமாக பதிலளித்திருப்பதற்கு மன்னிக்கவும். இந்த பதிவு இப்பொழுதுதான் என் கண்ணிலேயே பட்டது.

இது வெறும் முதல்படியே. நீங்கள் மேன்மேலும் முன்னேற என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளசு
23-01-2004, 05:05 PM
நண்பர்கள் கவிதா, சமுத்திரா, ஸ்ரீராம், பரணீ

நால்வருக்கும் வாழ்த்துகள்.

sujataa37
23-01-2004, 06:31 PM
இந்தத் தலைப்பையே நான் இன்றுதான் முதல் முறையாகப் பார்த்தேன். என் பெயர் இருப்பதைக் கண்டு முதலில் ஆச்சரியப்பட்டேன். பிறகு, கூட இருக்கும் பெருந்தலைகளின் பெயர்களைப் பார்த்தவுடன் "இவர்களோடு நம்மையும் சேர்த்திருக்கிறார்களே" என்று பெருமையடைந்தேன்.

நன்றி ! நன்றி !

இளசு
23-01-2004, 11:11 PM
இந்தத் தலைப்பையே நான் இன்றுதான் முதல் முறையாகப் பார்த்தேன். என் பெயர் இருப்பதைக் கண்டு முதலில் ஆச்சரியப்பட்டேன். பிறகு, கூட இருக்கும் பெருந்தலைகளின் பெயர்களைப் பார்த்தவுடன் "இவர்களோடு நம்மையும் சேர்த்திருக்கிறார்களே" என்று பெருமையடைந்தேன்.

நன்றி ! நன்றி !


மே 03, 2003..

http://www.tamilmantram.com/board/viewtopi...highlight=#7308 (http://www.tamilmantram.com/board/viewtopic.php?p=7308&highlight=#7308)




உதிர்ந்த உறுப்பினராக என்னை நானே பாவித்துக்கொண்டிருந்தபோது இன்று
முதிர்ந்த உறுப்பினராக உங்களோடு சேர்த்துக்கொண்டு, இப்போது (மகிழ்ச்சியில்)
அதிர்ந்த உறுப்பினராக மேலும் நன்கு பங்கேற்க முயல்கிறேன்.

நன்றி

பாரதி
24-01-2004, 12:19 AM
கவிதா, சமுத்திரா, ஸ்ரீராம், பரணீ - வாழ்த்துக்கள்.

அண்ணா... சுஜாதா... :wink: :lol:

aren
24-01-2004, 01:30 AM
முதிர்ந்த உறுப்பினர்கள் தகுதி பெற்ற கவிதா, சமுத்திரா, ஸ்ரீராம், பரணீ ஆகியாருக்கு என் வாழ்த்துக்கள்.

kavitha
24-01-2004, 06:58 AM
[b]இன்று தான் பார்க்கிறேன்; முதிர்ந்த உறுப்பினர்களின்

பட்டியலில் இடம் பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது( நல்ல பதிவுகள்

தரவேண்டும் என்கிற பொறுப்பு கலந்த பயத்துடன்..).

ஏற்றுக்கொண்ட தமிழ் மன்றத்திற்கும், இக்குழுவில் இணைப்பித்த 'ராம்பால்'

அவர்களுக்கும், வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் என் தாழ்மையான

நன்றிகள் உரித்தாகுக!

முதிர்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!

பாலமுருகன்
24-01-2004, 11:07 AM
நல்ல வேளை இப்பவாவது பார்த்தீர்களே.... இன்னும் கலக்குங்கள் கவிதா......

வாழ்த்துக்கள்

பாலா

sujataa37
24-01-2004, 05:41 PM
இளசு,

எனக்கு ரொம்ப வயதாகிவிட்டதென்று நினைக்கிறேன்.

என் கவனமின்மையை சொல்லாமல் சொல்லி என்னை உஷார்படுத்தியமைக்கு நன்றி.

அலை...
25-01-2004, 12:40 AM
முதிர்ந்தவர்களுக்கும்...மூத்த முதிர்ந்தவர்களுக்கும் வாழ்த்துகள்...

இளசு
25-01-2004, 12:46 AM
கவிதா அவர்களுக்கு
தற்போது இப்பொறுப்பை ஆரென் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
(ராம்பால் அவர்கள் பொறுப்பில் இருந்து விலகியதால்..)

சுஜாதா

வயசில் எனக்கு இளசுதான் நீங்கள்..
ரசனையில் எனக்குப் பெருசு நீங்கள்..

aren
25-01-2004, 02:46 AM
முதிர்ந்தவர்களுக்கும்...மூத்த முதிர்ந்தவர்களுக்கும் வாழ்த்துகள்...

அலை அவர்களே,

நீங்களும் முதிர்ந்தவர்கள் லிஸ்டில்தான் இருக்கிறீர்கள்.

அலை...
25-01-2004, 03:26 AM
முதிர்ந்தவர்களுக்கும்...மூத்த முதிர்ந்தவர்களுக்கும் வாழ்த்துகள்...

அலை அவர்களே,

நீங்களும் முதிர்ந்தவர்கள் லிஸ்டில்தான் இருக்கிறீர்கள்.

ஆங்...அதெல்லாம் முடியாது...எனக்கு வயசு குறைவுதான்..

பி.கு.
தெரியும் ஆரென்... நெடு நாளாச்சு நான் முதிர்ந்து... நன்றி.

சேரன்கயல்
25-01-2004, 09:51 AM
வாழ்த்துக்கள்...முதிர்ந்த நண்பர்களுக்கு...

poo
25-01-2004, 03:07 PM
பி.கு.
தெரியும் ஆரென்... நெடு நாளாச்சு நான் முதிர்ந்து... நன்றி.

ஆமாம்.. ஆமாம்.. அலை.. அந்த விஷயத்தை நிலா அருமையா கண்டுபிடிச்சாங்களே!! :lol:

இளசு
27-01-2004, 05:15 PM
நண்பர் பரஞ்சோதி
இளவல் இளைய தமிழன்
நண்பர் மூர்த்தி (moorthi)


முதிர்ந்த மூவருக்கும் வாழ்த்துகள்..

பரஞ்சோதி
27-01-2004, 08:13 PM
எனக்கு முதிர்ந்த உறுப்பினர் பதவி கொடுத்த இளசு அண்ணா, ஆரேன் அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். மேலும் நண்பர்கள் இளைய தமிழன், மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அரவணைப்பும், ஆதரவும், கருத்துக்களும் தந்து என்னை செழுமைப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!.

அகிலா
28-01-2004, 01:21 AM
முதிர்ந்த உறுப்பினர்களுக்கு என் வாழ்த்துக்கள்..அதுக்குன்னு வயசாயிடுச்சுன்னு நெனைச்சு மூளையில போய் அமர்ந்துடாதீங்க...உங்களின் அறிவு முதிர்ச்சி அது!!!நிறைய சொல்லுங்கள்..புதுப்புது உறுப்பினர்களாகிய நாங்கள் அறிந்துகொள்ள!!!

மூர்த்தி
28-01-2004, 01:53 AM
என்னையும் மூத்தானாக்கிப் பார்த்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல.வாழ்த்திய,வாழ்த்தப்போகும் சகோதரர்களுக்கும் நன்றிகள்.
இனிதான் பொறுப்புகள் அதிகம்..நிறைய படைக்கவேண்டும் என்ற பயம் உள்ளுக்குள்...முயற்சி திருவினையாக்கட்டும்.

aren
28-01-2004, 02:43 AM
முதிர்ந்த உறுப்பினர்கள் அதிகப் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். ஆகையால் இந்தப் பதவியில் இருப்பது கொஞ்சம் கடினமே. அத்தனை முதிர்ந்த உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

kavitha
28-01-2004, 03:06 AM
கவிதா அவர்களுக்கு
தற்போது இப்பொறுப்பை ஆரென் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

தகவலுக்கு நன்றி, இளசு அவர்களே!

அலை...
28-01-2004, 05:18 AM
பி.கு.
தெரியும் ஆரென்... நெடு நாளாச்சு நான் முதிர்ந்து... நன்றி.

ஆமாம்.. ஆமாம்.. அலை.. அந்த விஷயத்தை நிலா அருமையா கண்டுபிடிச்சாங்களே!! :lol:

யூ டூ..ப்ரூட்டஸ்...(சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

aren
28-01-2004, 06:19 AM
பி.கு.
தெரியும் ஆரென்... நெடு நாளாச்சு நான் முதிர்ந்து... நன்றி.

ஆமாம்.. ஆமாம்.. அலை.. அந்த விஷயத்தை நிலா அருமையா கண்டுபிடிச்சாங்களே!! :lol:

யூ டூ..ப்ரூட்டஸ்...(சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

என்னமோ பேசிக்கிறீங்க. என்ன பேசிக்கிறீங்கன்னு தெரியவில்லையே. எல்லாம் நன்றாக இருந்தால் சரிதான்.

பாரதி
29-01-2004, 12:29 AM
பரஞ்சோதி, இளையதமிழன், மூர்த்தி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

baranee
29-01-2004, 12:46 PM
பொறுப்புக்களை அதிகமாக்கிய ஆரேன் அவர்களுக்கு மகிழ்வுடன் நன்றியை தெரிவிக்கிறேன்...

மூர்த்தி
09-02-2004, 08:23 AM
என்னையும் மூத்தானாக்கிப் பார்த்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல.வாழ்த்திய,வாழ்த்தப்போகும் சகோதரர்களுக்கும் நன்றிகள்.
இனிதான் பொறுப்புகள் அதிகம்..நிறைய படைக்கவேண்டும் என்ற பயம் உள்ளுக்குள்...முயற்சி திருவினையாக்கட்டும்.

அன்பு இளசு அவர்களே,

என்னால் இப்போது மூத்தார் பகுதிக்குச் செல்லமுடியவில்லையே...அதுவும் தேர்தல் நேரம் பார்த்து!ஏதாவது புதுப்புது ஐடியாக்கள்,செய்திகள்,காணக்கிடைக்குமே! ஏதாவது பார்த்து ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.

Vanambadi
11-02-2004, 06:36 AM
பணி செய்வோர் அனைவரையும் மூத்த உறுப்பினர் குழுவில் சேர்த்து நன்றாக அரவணைத்துச் செல்லும் மூத்தோர்களுக்கு முத்தான வணக்கங்கள்!

jawahar
15-04-2004, 03:28 PM
நண்பர்களுக்கு வணக்கம்..அனைவரும் நலமா..? வெகு நாட்களுக்குப்பிறகு வந்த எனக்கு இன்ப அதிர்சிகொடுத்துட்டிங்களே{மறந்திருப்பீங்கன்னு நினைச்சேன்..}..முதிர்ந்த உறுப்பினர்களுக்கான பட்டியலில் என்னையும் இணைத்தமைக்கு நண்பர் ராம் அவர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி....அனைவருக்கும் வாழ்த்துக்கள்..