PDA

View Full Version : இந்தக் கவிதையை எழுதியவர் யார்?.gragavan
09-06-2005, 03:20 PM
இந்தக் கவிதையை நன்றாகப் படியுங்கள். இதன் தலைப்பு "நாளை". இதை எழுதியவர் யாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். பரிசு காத்திருக்கிறது.

விண்ணில் விரையும்பொழுது,
வெகு நாளைக்கப்புறம்,
வித்து கிளம்புகிறது.
இயந்திர மனிதன்
இற்றுப் போவான் - என்
இதயத்தின் வேக மாற்றங்களுக்கு முன்னால்!

எனக்கு என்ன தேவை?
என்று எனக்குத் தெரிய
எனக்கு என்ன தேவை?

தேடித் திரிந்தும்,
தெளிந்தபாடில்லை!

பணம் என்று பாடாய்ப் படுத்தினேன் முதலில்!
"ஒருகோடி" என்று வகுத்திருந்த வரையறைகள்
"இருகோடி" என்று விரிந்த போதும் என்னுள்
ஒரு கோடிட்ட இடம் நிரம்பவேயில்லை!

பாசமோ என்று பரிதவித்தேன் அடுத்து!
"பலருக்கும் வேண்டுமளவு பாசத்தைக் கொடுத்து
அல்லது கொடுப்பது போலேனும் நடித்து
உன் பாசவேட்டையைத் தொடர்ந்து நடத்து"
-உள்ளிருந்து குரல் கட்டளையிட்டது...

கொடுத்தாயிற்று...
நடித்தாயிற்று...
ஆயினும் உள்ளே ஒரு வெறுமை
முடிவில் முடிவிலியாய்த் துரத்தியதில்
மூளை பாளம் பாளமாய்
வெடித்தாயிற்று...!

தற்காலிகச் சுகத்திற்குத்
தொலைக்காட்சியை நாடினேன்!

"ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆனேன்"
- தமிழ்நாடு பொன்மகள் வாங்கிய பொன்னையா பேட்டி!
"பதினைந்து வினாடிகளில் பிச்சைக்காரன் ஆனேன்"
- பூத்துக் குலுங்கிய குடும்பம் பூகம்பத்தால் பூஞ்சை பிடிக்க
பூமியில் தனித்த பூமிலால் பேட்டிக்கு நடுவில்!

"பளிச்"சென்று ஒரு வெளிச்சம் -
இருட்டறையில் மெழுகுவர்த்தியாய்!

"நாளை நாளை" என்று எண்ணிக்கொண்டே
இன்றைய நாளை வீணாக்கி விட்டேனா?
எண்ணூறு இடையூறுகளை எண்ணிக் கொண்டே
இன்றைய நாளை இன்னலோடு வாழ்வதில் என்ன லாபம்?
இக்கணம் இன்பமாய் வாழ மெழுகுவர்த்தி வெளிச்சம் ஆணையிட்டது.

நாளையும் நாளைய நாளாய் மட்டும் கழிப்பேனா?
மெழுகுவர்த்தி வெளிச்சம் நாளையும் வரலாம்...
வெளிச்சம் சுருங்காது...
மெழுகும் சுருங்கதா?

நாளை பார்க்கலாம்!

.....

பிரியன்
09-06-2005, 03:55 PM
பிரதீப் அவர்களின் முதல் கவிதை - பரிசு என்ன??

அறிஞர்
09-06-2005, 03:58 PM
"நாளை நாளை" என்று எண்ணிக்கொண்டே
இன்றைய நாளை வீணாக்கி விட்டேனா?
எண்ணூறு இடையூறுகளை எண்ணிக் கொண்டே
இன்றைய நாளை இன்னலோடு வாழ்வதில் என்ன லாபம்?
இக்கணம் இன்பமாய் வாழ மெழுகுவர்த்தி வெளிச்சம் ஆணையிட்டது.

நாளையும் நாளைய நாளாய் மட்டும் கழிப்பேனா?
மெழுகுவர்த்தி வெளிச்சம் நாளையும் வரலாம்...
வெளிச்சம் சுருங்காது...
மெழுகும் சுருங்கதா?

நாளை பார்க்கலாம்!

அழகான வரிகள்... நாளை இன்னும் தொடருவாரா.. இராகவன்...

பிரியனுக்கு எப்படி பரிசு தரப்போகிறீர்கள்......

gragavan
10-06-2005, 05:12 AM
பிரியன் சரியான விடை. பிரதீப் எழுதியது என்று தெரியும். ஆனால் முதல் கவிதையா என்று தெரியாது. அதை அவரே வந்து சொல்லட்டுமே! அவருக்கு இந்தக் கவிதை ஒரு வியப்பான பரிசுதான்.

பிரியன் உங்களுக்கு கண்டிப்பாக பரிசு உண்டு. நீங்கள் எப்பொழுது இந்தியா வருகின்றீர்கள்?

pradeepkt
10-06-2005, 05:28 AM
அடடா... நானே எழுதிய பின் மறந்து விட்டேன். வெகு நாளைக்கப்புறம் மன்றத்தில் இட்டேன்.
நீங்கள் இதை இன்னும் ஞாபகம் வைத்திருந்தீர்களா? என் பாக்கியம்.
இதை எந்தச் சூழலில் எழுதினேன் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? நாம் ஒரு போட்டியில் கலந்து கொண்டோம் - தினம் ஒரு கவிதை என்று நினைவு. நீங்கள்தான் அந்தப் பரிசை வென்றீர்கள். உங்கள் அருமையான கவிதை (செய்யுள்?) தினம் ஒரு கவிதையை அலங்கரித்தது. அந்தக் கவிதையை இங்கே நம் நண்பர்களுக்குக் கொடுங்களேன்.

அன்புடன்,
பிரதீப்

gragavan
10-06-2005, 05:34 AM
உண்மைதான் பிரதீப். என்னுடைய கவிதை மூன்றாமிடத்தைப் பிடித்தது நினைவிருக்கிறது. ஆனால் உங்கள் கவிதை என்னிடம் இருக்கிறது. நான் எழுதியது எங்கே போயிற்று என்று தெரியவில்லை. தேடிப் பார்க்கிறேன்.

மறுபடியும் ஒரு முறை என்னுடைய கவிதையைச் செய்யுள் என்று கூறிவிட்டீர்கள். ம்ம்ம்ம். சரி.

அறிஞர்
10-06-2005, 05:38 AM
இருவரும் இணைந்து.. தினம் ஒரு கவிதை கொடுங்கள்... அன்பர்களே....

நன்றாக இருக்கும்......

gragavan
10-06-2005, 06:37 AM
இருவரும் இணைந்து.. தினம் ஒரு கவிதை கொடுங்கள்... அன்பர்களே....

நன்றாக இருக்கும்......அது வேலைக்காகாது அறிஞரே. இந்த விஸ்வநாதன்-கண்ணதாசன் வேலைக்கெல்லாம் ஒத்த அலைவரிசை வேண்டும். பிரதீப்பின் கற்பனைக் குதிரையும் என்னோட கற்பனை யாழியும் ஒரே வண்டியில் கட்ட முடியாது. மேலும் இருவரும் இருப்பது வெவ்வேறு ஊர்கள். ஆகையாலும் இது ஒத்து வராது.

ஆனால் எனக்கு ஒரு எண்ணம். நமது மன்றத்தில் ஏன் ஒரு தொடர்கதை அல்லது தொடர் கவிதை எழுதக் கூடாது. ஒருவர் ஒரு அத்தியாயம் எழுதுவார். அடுத்த அத்தியாயம் அடுத்தவர். முதலிலேயே வரிசையை முடிவு செய்து விட்டால் இன்னும் வசதியாக இருக்கும். இதற்கு மற்றவர்கள் என்ன சொல்கின்றீர்கள்.

அறிஞர்
10-06-2005, 07:03 AM
ஆனால் எனக்கு ஒரு எண்ணம். நமது மன்றத்தில் ஏன் ஒரு தொடர்கதை அல்லது தொடர் கவிதை எழுதக் கூடாது. ஒருவர் ஒரு அத்தியாயம் எழுதுவார். அடுத்த அத்தியாயம் அடுத்தவர். முதலிலேயே வரிசையை முடிவு செய்து விட்டால் இன்னும் வசதியாக இருக்கும். இதற்கு மற்றவர்கள் என்ன சொல்கின்றீர்கள்.
எனக்கு ஆட்சேபணை இல்லை.... நீங்கள் முதலில் ஆரம்பியுங்கள்.. கதை என்றால் நானும் ஈடுபடுவேன்.. கவிதை என்றால் நமக்கு சிறிது தூரம்.. ஆனால் மற்றவர்கள் தொடர்வார்கள் என எண்ணுகிறேன்...

gragavan
10-06-2005, 08:01 AM
சரி. நான் இன்னொரு திரி தொடங்கி, முதலில் இதில் ஈடுபாடு உள்ளவர்கள் யாரென்று கேட்போம். வருகின்றவர்களை வரிசைப் படுத்தி எத்தனை பேர் இருக்கின்றார்களோ அத்தனை அத்தியாயம் வருமாறு பார்த்துக் கொள்ளலாம். கதையாகவே இருக்கட்டும்.

மன்மதன்
10-06-2005, 08:20 AM
ஐடியா நல்லாயிருக்கு.. ஏற்கனவே தொடர்கதை மன்றத்தில் அம்போ என விடப்பட்டது.. யாரும் தொடரவில்லையென்றால் நீங்கதான் எழுதணும் ராகவன்.. சரியா.. (நானும் தொடருவேன்.. )
அன்புடன்
மன்மதன்

gragavan
10-06-2005, 09:20 AM
ஆமாம். அது ஒரு பிரச்சனைதான். நான்கு பேர் சேர்ந்தால் கூட ஆளுக்கு ரெண்டு அத்தியாயம் எழுதி குறுநாவலா முடிக்கலாம். நான், நீ, அறிஞர், பிரதீப் இருக்கிறோம். பாரதி வருவார் என நினைக்கிறேன். ராம்பாலையும் கூப்பிடலாம். ஒரு களை கட்டும்.

பிரியன்
10-06-2005, 12:12 PM
அய்யா உங்க விளையாட்ல என்னோட பரிசை மறந்திராதிங்க :mad: :mad: :mad:

Iniyan
10-06-2005, 12:51 PM
ராகவன் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் விளையாட்டில்

gragavan
10-06-2005, 01:52 PM
ராகவன் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் விளையாட்டில்உண்டு. உண்டு. இனியன் உண்டு. கண்டிப்பாக உண்டு. திங்கள் வந்ததும் ஒரு திரி தொடங்கி அதில் முடிவு செய்யலாம்.

gragavan
10-06-2005, 01:54 PM
அய்யா உங்க விளையாட்ல என்னோட பரிசை மறந்திராதிங்க :mad: :mad: :mad:மறக்கலை. மறக்கலை. எல்லாருக்கும் ஒரு அத்தியாயம்னா...உங்களுக்கு மட்டும் ரெண்டு அத்தியாயம். சரிதானே. பத்தாதுன்னா....கூட ஒன்னு கேட்டு வாங்கிக்கிங்க. ஹி ஹி

thempavani
10-06-2005, 02:17 PM
அருமையான பரிசு அண்ணா... தருமி மாதிரி ஆகிப்போச்சே பிரியன் உங்க நிலை..

பாரதி
10-06-2005, 10:40 PM
அன்பு இராகவன்,

உங்கள் திட்டம் நல்ல ஒன்றுதான். ஆனால் திட்டமிடாமல் தொடர் ஆரம்பிப்பது அவ்வளவு சரியாக இருக்குமா..? பங்கு பெறுபவர்களின் ஒருமித்த கருத்து சற்று அவசியம். உதாரணமாக எதைக்குறித்து கதைக்கரு என்பது அவசியம்; எத்தனை கதாபாத்திரங்கள் இடம் பெற வேண்டும் என்பது போன்ற சில விபரங்கள் முடிவு செய்யப்பட வேண்டும்.

நான் பங்கு பெறுவது ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் எழுத வேண்டும் என்கிற நினைப்பு வர வேண்டுமே..?!

குறிப்பு: இதைப்போன்ற கருத்துக்கள் கவிதைப் பகுதியில் இடம் பெறுவது அவசியமா..?

பிரியன்
13-06-2005, 05:16 AM
நீங்கள் எப்பொழுது இந்தியா வருகின்றீர்கள்?

ஜூலை 15ம் தேதி இந்தியா வருகிறேன். பெங்களூர் வரும் போது சந்திப்போம்

ஓவியா
28-04-2007, 11:50 PM
பிரதீப், கவிதை நல்லா இருக்கு ஆனால் எனக்குதான் புரிய கொஞ்சம் கடினமாக இருகின்றது.

மன்ற கவிஞர்களின் விமர்சனம் கண்டு தொடர்கிறேன்.

இதுதான் முதல் கவிதையா...இருகட்டும் இருகட்டும்.

மனதார பாராட்டுகிறேன்.

சக்தி
30-04-2007, 07:20 PM
மிக நல்ல கவிதை