PDA

View Full Version : விடுதலை......



Nanban
11-04-2003, 04:25 PM
நீ காற்றிலே கலந்து

வந்து கொண்டிருப்பதைக் கேட்டேன்.

என் தோட்டத்துக் குயில்கள்

உன் பெயரைத் திரும்பத் திரும்ப

சொல்லிக் கூவுகின்றன.



பரவசமான உன் பிம்பமொன்று

என் இதயத்தின் வாசலில்

படிந்து படிந்து தெளிகிறது.......



நம்மை அறிந்த எல்லோரும்

உன் வீட்டுக் கூரையின் மீது

அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

'எப்படி என்னை விடுவித்து

எனக்கோர் கூரை கட்டித் தருவது? என்று '

இளசு
11-04-2003, 05:11 PM
கும்பலாய் தின்றால் கீழவெண்மணி

சாதிப்பேய்

ஜதையில் ஒன்றைத் தின்றால்...



நண்பனின் கவிதை...

சில அழிவுப் படலங்கள் அழியாமல் தொடர்ந்தபடி

படிமங்களை மட்டும் மாற்றிக்கொண்டு......

rambal
07-04-2004, 03:29 PM
வாழ்க்கை கவித்துவமாக இருக்காது..

அது சில கணங்களில் உதிர்ந்த இலையாக..

சில சமயம் காற்றில் ஆடும் மரமாக..



ஒரு வருடத்திற்கு பிறகு இந்தக் கவிதையை ரசித்தேன் என்றால்

அது ஜீவாதாதான உங்கள் எழுத்துத்தான்..

பாராட்டுக்கள்..

Nanban
10-04-2004, 04:43 PM
வெட்டி மனிதர்கள், இடுகாட்டில், கல்லறை மீது அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் - கல்லறையோ இறந்து போன காதலியினுடையது. இந்த மனிதர்களிடத்தில் இருந்து விடுதலை வேண்டும் என்று வேண்டி, விரும்பி மரித்துப் போன காதலியின் கல்லறை. கல்லறை தான் அவளது வீடு தற்போதைக்கு....



காதலியின் நினைவிலே சதா காலமும் துக்கித்துத் திரியும் காதலனை அந்த நினைவுகளிலிருந்து மீட்க வேண்டும் என்று தான் பேசுகின்றனர். அதைக் கேட்கும் காதலனுக்கோ அவள் நினைவுகளில் இருந்து விலகினால், இறந்து போய்விடுவேனோ என்ற பயத்தில், அவர்கள் பேசுவதை, தனக்கு கல்லறை கட்டும் பேச்சாகத் தான் கேட்கிறான்....



கவிதையின் அடிப்படை - ரூமியின் கவிதை ஒன்றை படிக்க நேர்ந்து அதன் தாக்கத்தால் எழுதியது. ரூமியின் பார்வை - இறைவன் மீது துதி பாடுவது. என்னுடையது காதலை மட்டும் தான் பார்த்த்து....

பாரதி
10-04-2004, 11:46 PM
கொஞ்சமல்ல.. நிறையவே வித்தியாசமாக இருக்கிறது. உங்கள் விளக்கத்துக்குப் பின் தெளிவாய்.... நன்றி நண்பரே.

Nanban
11-04-2004, 07:06 PM
நன்றி பாரதி.....

பல கவிதைகளை மீண்டும் படிக்கும் பொழுது, மனதினுள் ஒரு புத்துணர்ச்சி.....

அந்தக் கவிதைகளை எழுதிய சந்தர்ப்பத்தில் மனம் இருந்த நிலை மீண்டும் தோன்றும் பொழுது ஒரு உற்சாகம்.....

Nanban
11-09-2005, 05:13 PM
காற்றிலே கலந்து
வந்து கொண்டிருக்கும்
உன்னை திரும்பத் திரும்ப
பெயர் சொல்லிக் கூவுகின்றன
தோட்டத்துக் குயில்கள்.

எதிலும் படியாத
விழிகள்
விழாத தூசுக்காக
வருந்தி வருந்தி
நீர் உகுக்குகிறது.

பரவசமான
உன் பிம்பமொன்று
என் இதயத்தின் வாசலில்
படிந்து படிந்து தெளிகிறது.......

நம்மை அறிந்த எல்லோரும்
பேசிக் கொள்கின்றனர் -
நீ என்னை பிடித்திருப்பதாக.

அடடா..!!!

இதைப் புரிந்து கொள்ளவா
இறக்காத எனக்காக
உன்னை சிதையில் ஏற்றிப் பார்த்தது
இந்த ஊர்?

Nanban
11-09-2005, 05:23 PM
ஒன்றிலிருந்து மற்றொன்றாக
கவிதைகள்
எழும்பிக்கொண்டேயிருக்கின்றன.
மீண்டும் மீண்டும்
வாசிக்கும் பொழுது.

வாசிப்பதற்காக எழுதுவதா?
எழுதுவதற்காக வாசிப்பதா?

பாரதி
11-09-2005, 05:41 PM
ஒன்றிலிருந்து மற்றொன்றாக
கவிதைகள்
எழும்பிக்கொண்டேயிருக்கின்றன.
மீண்டும் மீண்டும்
வாசிக்கும் பொழுது.

வாசிப்பதற்காக எழுதுவதா?
எழுதுவதற்காக வாசிப்பதா?

நியூட்டனின் மூன்றாவது விதிதான் காரணம் நண்பர் நண்பனே.

விழியில் வழியும்
நீரை நீ பார்த்து
விடக்கூடாது
என்ற அக்கறையில்...

காற்றிலே கலந்து
வந்து கொண்டிருக்கும்
உன்னை திரும்பத் திரும்ப
பெயர் சொல்லிக் கூவுகின்றன
தோட்டத்துக் குயில்கள்.