PDA

View Full Version : தீண்டிப் போ



பிரியன்
01-12-2004, 03:38 PM
தீ‎ண்டிப் போ !

எச்சில் வடிய
உறங்கி கொண்டிருப்பே‎ன்.
சேலையால் துடைத்துவிட்டு
ஒரு பழிப்பு காட்டுவாய் ..

கள்ளனாய் கண்விழித்து -
கை பற்றி ‏இழுத்தால்
கூந்தல் ஈரத்தால்
நனைத்து நழுவிடுவாய்.

கலங்கும் மனம் கண்டு
மார்பிலிட்டு கொள்வாய் ..
நேசமாய் தலை கோதி
உச்சியில் பனிமலை
பொழியும் நின் இதழ்கள் .
கண்கள் சொருகி சேயாய்
மடி உறங்கி போகிறே‎ன்..

பேசாமலே நா‎ன்
மரணம் விரும்பும்
கணங்கள் .

எ‎ன்னுள் என்னுள்
எல்லாமூம் ‎உ‎‎ன்
உயிரை முகர்ந்து
சிறுவிரலில் சொடுக்கெடுத்து,
பாதமதில் மருதாணி வைத்தே‎ன்

விடியலில் சிவப்பாய்
உ‎ன் பாதமும்,என் முகமும்


தனித்த எ‎ன்னை விட்டு
கூரை எரிக்கும் நெருப்பே-
எனை தீண்டி போ !!!!!

இளசு
01-12-2004, 10:37 PM
ஒரு ஜெயகாந்தன் சிறுகதையில் இவ்வேதனைத் துடிப்பை உணர்ந்திருக்கிறேன்..



மன்றத்தில் நண்பனின் சில கவிதைகளிலும்...





ஆழ்ந்த சொற்களால் ஆழ்ந்த உறவு , அதன் பிரிவு , சோகம் சொன்ன விதம்..



அருமை ப்ரியன்..

thamarai
02-12-2004, 07:04 PM
அளவுக்கதிகமான நேசத்தின் பிரிவால் வந்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...

gans5001
05-12-2004, 01:16 AM
விடியலில் சிவப்பாய்
உ‎ன் பாதமும்,என் முகமும்

அழகிய வரிகள்.. நேசத்தின் உச்சத்தை அழகாய் தொட்டிருக்கிறீர்கள்

மன்மதன்
02-01-2005, 08:34 AM
அருமையான வரிகள்.

பிரிவு தந்த சோகம்..

நெருப்பு நம்மை அணைக்கிறதோ இல்லையோ..

தனிமை வெறுப்பு எப்பவுமே அணைத்துக்கொண்டே..

அன்புடன்
மன்மதன்

ஓவியா
11-04-2007, 03:59 PM
பிரிவு இத்தனை கொடுமையா!!!!!!!!!!!!!!!!
ஆமாம்
ஆதைவிட கொடுமை கிடையாது

ஓவ்வொரு வாரிகளும் பவளமாய் ஜொலிக்கின்றன.

அரூமையான கவிதை. பாராட்டுக்கள்

மனோஜ்
11-04-2007, 04:11 PM
தீ தீண்டிவிட்டால் மாரும்
பிரிவு தீண்டினால் மாறாது அருமை கவிதை

பென்ஸ்
11-04-2007, 04:35 PM
பிரியன்...

உன் நினைவிற்க்காய் எதேனும் விட்டு போ
உன்னிடம் இருக்கும் என் இதயத்தை தவிர...

நினைவுகளுக்காய் இத்தனைவிட்டு சென்றிருக்கிறாள்..
வெற்றிடத்தில் இருந்து குமுறுவதை விட இது சுகமே...
உங்கள் நினைவுகளுக்காய் நீங்கள் விட்டு சென்ற
இந்த கவிதைகள் போல்...

வாழ்க்கையே நம்பிக்கைதானே....
இழந்தவை திரும்ப கிடைக்கும் என்று...
உங்கள் வருகையை போல

ஷீ-நிசி
11-04-2007, 04:37 PM
கவிதை அழகு ப்ரியன்..

பென்ஸின் ஏக்கம் தீராமல் போகாது...