PDA

View Full Version : அம்மாஅறிஞர்
09-06-2005, 11:44 AM
அம்மா
இனிமையான கடற்காற்று வீசும் மாலை நேரம்.... அமெரிக்க நாட்டின் எழில் கொஞ்சும்...மியாமி கடற்கரையில் ஒரு ஓய்வு இருக்கையில்....குமாருக்கு பழைய நினைவுகள்...

சென்னையில் ஒரு சிறிய வாடகை வீட்டில்... காலை நேரம்.... வாசலில் அழைப்பு மணியின் சத்தம்....

திறந்தால்.. பக்கத்து தெருவில் இருக்கும் தூரத்து உறவினர்....

"வாருங்கள் அத்தான்.. என்ன சாப்பிடுறீங்க... காபி, டீ" என்றான் குமார்.

"அதை அப்புறம் சாப்பிடலாம்...முதல்ல ஒரு முக்கியமான விசயம்....." என்றார் உறவினர்

"சொல்லுங்க......"

"கொஞ்சம் தைரியமா இருக்கனும் குமார்.... நான் என் சொல்ல வரன்னா...."

"என்னதுக்கு சுத்தி வளைக்கிறீங்க.. நேராக விசயத்துக்கு வாங்க... யாரும் இறந்துட்டுங்களா.. சும்மா சொல்லுங்க" என்றான் குமார்..

"இல்லை நேத்து உங்க அம்மாவுக்கு முடியவில்லை என மதுரையில் மருத்துவமனை சென்றிருக்கிறார்கள்... அம்மாவுக்கு இரத்த புற்றுநோயாம்.... அதுவும் ரொம்ப சீரியஸாம்... வேலூர் அழைத்து சென்றால் நல்லது என்று
சொன்னார்களாம்.. இதை என் அக்கா ஊரிலிருந்து... போனில் தெரிவித்தார்....." என்றார் உறவினர்...

கேட்டு ஒரு சில விநாடிகள் அதிர்ந்த குமார் "அது எப்படி அத்தான்.. அம்மாவுக்கா... கேன்சரா.. உடனே உயிருக்கு ஏதும் ஆபத்தா... உங்களுக்கு அது பற்றி ஏதும் தெரியுமா"

"உடனே பாதிப்பில்லை... ஆனால் சில மாதங்களில் ஏதும் நிகழலாம்..... என்ன பண்ணப்போற" என்றார் கரிசனையுடன்...

"அம்மாவுக்கு இது பற்றி தெரியவேண்டாம்..... நான் பார்த்துக்கொள்ளுகிறேன்..... "

"சரி குமார்... நான் வரேன்..." என்று விடைபெற்றார் உறவினர்....

உடனே எஸ்.டி.டி பூத் சென்று ஊருக்கு போன் பண்ணினான் குமார்...

"நான் குமார் பேசுறேன்.....அம்மா... எப்படி இருக்கிங்க.." என்றான் குமார்.

அதற்கு அம்மா, "முடியலைன்னு நேத்து மருத்துவமனை சென்றேன்... ஆனா டாக்டர.. வேலூர் செல்ல சொன்னார்.. என்னன்னு.. தெரியலை.. பயமா இருக்குப்பா...."

"உங்களுக்கு ஒன்னும் இல்லை.... இன்றிரவு... கிளம்பி.. நாளை இங்க சென்னைக்கு வாங்க.... இரண்டு நாள் கழித்து.. வேலூர் செல்லலாம்...... ஒன்றும் கவலைப்படாதீர்கள்... " என்றான் ஆறுதலாக குமார்..

"நீ பக்கத்துல இருந்தீனா.... எனக்கு நல்லா இருக்கும்பா"
"நான் இருக்கேன்ல...ஒன்னும் கவலைபடாம இங்க வாங்க..."
"சரிப்பா...... அப்பா கிட்ட... இரண்டு வார்த்தை பேசுறீயா...."
"சரி கொடுங்க...."

"அப்பா எப்படி இருக்கீங்க..... டாக்டர் என்ன சொன்னார்" என்றான் குமார்
"அதான் அம்மா பற்றி தான் எனக்கு கவலையா இருக்கு..."
"ஒன்னும் கவலைபடாதிங்க.. அம்மாவிடம் அவர்களுக்கு உள்ள வியாதி பற்றி சொல்லவேண்டாம்.. இரவு கிளம்பி இங்கு வந்திடுங்கள்.. என்ன சரியா. அப்புறம் நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்"
"சரிப்பா....வச்சுடட்டா......"
"இல்லை அம்மாட்ட கொடுங்க...."
"அம்மா... ஒன்னுக்கும் கவலைபடாதீங்க... இங்க வாங்க..." என அம்மாவிடம் சொல்ல....
"சரிப்பா... வச்சுடுறேன்...." என போனை வைத்தார் அம்மா...

அடுத்த நாள் பெற்றோர் வர.... அன்புடன் கூட இருந்து கவனிக்கிறான் குமார்.....

இரண்டு நாள் கழித்து. வேலூரில் தெரிந்தவர்கள் மூலம் விசாரித்து... மருத்துவமனையில் ஹேமடாலஜி பிரிவுக்கு சென்றனர்.... காத்திருந்து.... மருத்துவரை பார்த்தார்கள்...

"மீண்டும் ஒருமுறை இரத்த பரிசோதனை செய்து வாருங்கள்.." என்று மருத்துவர் சொல்ல... இரத்த பரிசோதனை நிலையம் இரத்தம் கொடுத்தார்கள் அம்மா...

"என்ன அம்மா ரொம்ப இரத்தம் எடுத்துட்டாங்களா.. சோர்வாக இருக்கிறதா..... ஏதாவது குடிக்கவேண்டுமா" என்றான் குமார் பாசத்துடன்..
"ஆமாமப்பா.... கொஞ்சம் மோர் வாங்கிட்டு வரியா..."
"சரிம்மா.... " என வாங்கி வந்து தருகிறான்..... குமார்...
"என்னதான் சொல்லு... நீ பக்கத்துல இருக்கிற மாதிரி வராது.. நீ ஒருவன் இருப்பது.. ஆயிரம் ஆம்பிளை இருக்கிறதுக்கு சமம்" இது அம்மா....

"அதெல்லாம் இருக்கட்டும்.. இப்ப கொஞ்சம் ஓய்வெடுங்கள்.. நான் போய் தங்குவதற்கு நல்ல விடுதி பார்த்து வருகிறேன்...." என்று கூறி.. குமார் சென்றான்..

ஒரு விடுதியில் இரவு தங்கி.. அடுத்த நாள் மீண்டும் மருத்துவரை சந்தித்தார்கள்.......
பரிசோதித்த மருத்துவர்...... எல்லா இரத்த பரிசோதனை.. ஆய்வுக்குறிப்புகளையும் கண்டு... சில மருத்துகளை கொடுத்தார்....

பிறகு மருத்துவர்.."தம்பி.. உங்க கிட்ட தனியா பேசனுமே......" என்றார் ஆங்கிலத்தில்..... சொல்ல..

அரைகுறையாய் புரிந்த அம்மா "நீ வேணா.. மருத்துவரிடம் பேசிட்டு வாப்பா.. நான் வெளியில உட்கார்ந்து... இருக்கிறேன்" என நகர்ந்தார்.

இதை கேட்ட குமாரின் கண்களில்... சிறிதளவு நீர் எட்டி பார்த்தது...
அம்மா சென்றவுடன்..
"சொல்லுங்க டாக்டர்" என்றான் குமார்.
"அது வந்து தம்பி.. இரத்த புற்றுநோயில் பல வகைகள் உண்டு. அம்மாவுக்கு வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.. சதாரணமாக மனிதனுக்கு 4,000-10,000 இருக்கும்.. அம்மாவுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் உள்ளது... இது ஒரு வகை நோய்"
"அப்ப என்ன டாக்டர் பண்ணலாம்"
"அதற்கு சில மருந்துகள் இருக்கிறது.. தினமும் உட்கொள்ளவேண்டும்.. மாதம் கிட்டத்தட்ட 1000 முதல் 1500 ரூபாய் செலவாகும் ஆனால்....சிறிது பக்க விளைவுகள் இருக்கும்.... உடல் சூடு அதிகரிக்கும்..."

"அப்படியா.. அதை சாப்பிட்டா.. முழுவது குணமாகிவிடுமா... டாக்டர்"
"இல்லைப்பா... இதன் மூலம் ஆயுள் நாட்களை சில வருடங்கள் அதிர்கரிக்கலாம்..... அவ்வளவு தான்.. அதாவது உங்க அம்மா.. மூன்றிலிருந்து.. ஆறு வருடம் தான் இருப்பார்கள்.... அதுவும் 5ம் 6ம் வருடங்களில் ரொம்ப கஷ்டப்படுவார்கள்...மேலும் இரத்தத்தை ஒவ்வொரு மாதமும் தவறாமல் பரிசோதிக்க வேண்டும்.." என்றார் மருத்துவர்.

இந்த வார்த்தைகளை கேட்கும்போது.. மனதில் பாரம்.. 'ஏன் இதுமாதிரி எல்லாம் வருது.....'மனதில் கேள்விகளுடன் குமார்... "என்ன டாக்டர்... இதற்கு வேறு வழியில்லையா.... "
"இல்லைப்பா.. இப்போதைக்கு எந்த மருந்தும் முழுவதுமாக குணமாக்க கண்டுபிடிக்கப்படவில்லை..... சில வருடங்கள் கழித்து.. எலும்பு மஞ்சை மாற்றும் சிகிச்சை பண்ணலாம்.. அதற்கு சில லட்சங்கள் ஆகும்... ஆனால் அதன் மூலம் ஒரு வருடம் ஆயுளை நீட்டிக்கலாம் அவ்வளவுதான்...."
"என்னது சில லட்சம் செலவழித்தும்... ஒரு வருடம்தான் நீட்டிக்க முடியுமா... தங்களின் தகவலுக்கு நன்றி டாக்டர்..." என்று கூறி விடைபெற்றான்..

மனதில் பாரம்... வெளியேற துடிக்கும் கண்ணீர்..... 'இது ஏன்.. யாருக்கு துரோகம் நினைக்காதவர் என் அம்மா.. அவர்களுக்கா.. இப்படியா.... நான் வாங்குவதே... சில ஆயிரம் ரூபாய் சம்பளம்.. இதுல சென்னையில் வீட்டு வாடகை... பிறகு அம்மா செலவை எப்படி கவனிப்பது...... சில லட்சங்களுக்கு என்ன பண்ணுவது' என பல கேள்விகளுடன் எண்ணங்கள் எழுந்தன.......

"குமார்.. என்னப்பா சொன்னார் டாக்டர்" என்ற அம்மாவின் குரல்..
எண்ணங்கள் கலைந்து.. சில தடுமாற்றத்துடன்.."அது வந்து... என்ன கேட்டிங்க"
"இல்லை.. டாக்டர் என்ன சொன்னாருன்னு கேட்டேன்"
"அதுவா.. உங்களுக்கு ஒன்னுமில்லைம்மா..... உங்களுடைய இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமா இருக்காம்... அதான்.. வேறு ஒன்றுமில்லை..." என்று ஒருவகையாக சமாளித்து... கூறினான் குமார்...

"அப்படியா.. அதுக்குள்ள ஊரில உங்க பெரியம்மா.. எனக்கு கேன்சர் வந்திருக்குன்னு.. எல்லாரிடம் சொல்லுகிறார்... எனக்கோ பயம் வந்துவிட்டதுப்பா..." என்றார் சற்று தெம்பான குரலில் அம்மா...

ஊரில் உறவினர்களை எண்ணி குமாரின் மனம் குமுறியது... 'உதவி செய்யா விட்டாலும்.. உபவத்திரமாவது...கொடுக்காம இருக்கனும்.... வியாதியுற்றவர்களுக்கு ஆதரவாய் இருப்பதை விட்டு விட்டு... மனது புண்படும்படியாய் பேச எப்படி மனம் வருகிறது' என....ஆதங்கம். 'நல்ல வேளை..அம்மாவுக்கு வியாதி பற்றி விவரம் தெரியாது' என குமாரின் மனம் கொஞ்சம் ஆறுதல் பட்டது.....

அம்மாவிடம் "உங்களுக்கு ஒன்னுமில்லை.... கவலைபடாதீர்கள்.. நான் இருக்கேன்ல... "
"அதான் எனக்கு ஒன்னுமில்லையே... இப்படியே நானும், அப்பாவும் ஊருக்கு போறோம்.. நீ சென்னைக்கு போ... " என்றார் தன் வியாதி பற்றி அறியாத அம்மா...வெள்ளந்தியாக....
"இல்லைம்மா... என் வீட்டில் சென்னையில் ஓய்வெடுத்து பிறகு ஊருக்கு செல்லுங்கள்... " என்றான் குமார்.....

மகனுடன் ஒரு வாரம் தங்க முடிவெடுத்து.. தங்கினார்கள்..... நேரம் கிடைத்தபோது அப்பாவிடம் தனியாக அம்மாவின் உண்மை நிலையை கூறினேன்....

மறுநாள் காலை நண்பனிடமிருந்து.. போன் வந்திருப்பதாக பக்கத்து வீதியில் இருக்கும் அத்தான் கூற அவர்கள் வீடு சென்று.... பேசிவிட்டு திரும்பி வந்தான் குமார்...

"என்னப்பா... யாரிடமிருந்து போன்..." இது அம்மா...
"அதுவா... அமெரிக்காவுல இருக்கிற... எழில் இடமிருந்து அம்மா"
"என்ன சொன்னான்... ஏதாவது விசேசமா....."
"இல்லை எனக்கு ஒரு கம்பெனியில் அங்கு வேலை பார்த்திருக்கிறானாம்.... அதான் என் முடிவு என்ன என கேட்டான்..."

"நீ என்ன சொன்னப்பா..." என்றார் கரிசனையுடன்...
"இல்லையம்மா... நான் யோசித்து சொல்லுகிறேன்னு சொல்லிட்டேன்மா... உங்களுக்கு முடியாத நிலையில் இப்ப எப்படிம்மா.. போறது....." என அம்மாவின் உண்மை நிலையை சொல்ல முடியாமல்.... தடுமாறினேன்...

"என்ன எனக்கு இரத்த புற்றுநோய் என்று நினைக்கிறாயாடா...." என்றார் அம்மா

"என்னம்மா சொல்லுறீங்க....."

"ஆமாம்டா.. நீ நேத்து... சொன்னதை எல்லாத்தையும் அப்பா என்னிடம் சொல்லிட்டார்டா" என்றவுடன்.. குமாருக்கு.. 'இந்த மனுசன என்ன பண்ணுறது, இதை போய் அம்மா கிட்ட சொல்லிட்டாரே' என அப்பாவின் மேல் ஒரே கோபம்.. ..

"இல்லை அம்மா.. அப்பா கிடக்குறாரு.. உங்களுக்கு ஒன்னுமில்லைம்மா...."

"மறைக்காதடா.. எல்லாம் எனக்கு தெரியும்.. இருக்கப்போறது சில வருடங்கள்தான்.... அதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்த்து.... உன் பிள்ளைகளை பார்த்தா.. நிம்மதியா கண்ணை மூடிடுவேண்டா..." என்றார் அம்மா.. இயற்கையான அன்னையின் எதிர்பார்ப்புகளுடன்.....

"சும்மா பேசாம இருக்க மாட்டிங்களா.. இப்ப 24 வயதுதான் ஆகிறது.. அதுக்குள்ள கல்யாணம், குழந்தை என... இப்பவே என் பாடு திண்டாட்டமா இருக்கு.. அதுவும் சென்னையில் வாழ்க்கை என்பது சும்மாவா..... உங்கள் மருத்துவ செலவு வேறு உள்ளது... சும்மா பேசாம இருங்க.. என்னைய கொஞ்சம் சிந்திக்க விடுங்க...." என்றான் குமார் சற்று வெறுப்பான குரலில்.

ஆனால் அம்மா சாந்தமாக "அப்புறம் எழிலுக்கு என்னதான் பதில் சொன்ன..."

"அதான்மா... யோசிக்கிறேன்... உங்க நிலையையும் அவனிடம் சொன்னேன்... அங்க வந்தா மருத்துவ செலவுக்கு பிரயோஜனமா இருக்குமே என்றான்.. அதான் யோசிக்கிறேன்.. நீங்க என்ன சொல்லுறீங்கம்மா"

"என்னை பற்றி கவலைப்படாதே... என்னோட காலம் ஓடிருச்சு.... உன் எதிர்காலம் தான்பா முக்கியம்... என்னால உன் எதிர்காலம் தடைப்படக்கூடாது... என்ன சரியா.." என்றார் உறுதியான குரலில் அம்மா...

"இல்லை உங்க கூட பிறந்தவங்க எல்லாம் தப்பா நினைப்பாங்களே"

"அவுங்க கிடங்கிறாங்க.... நல்லா இல்லாட்டி ஏசுவதும், நல்லா இருந்தா பொறாமை படுவதும் அவர்கள் இயல்பு. அவுங்களை நான் பார்த்துக்கிறேன்....நீ கிளம்பு." என்றார் அம்மா ஆதங்கத்துடன்...

"இப்ப என்னம்மா சொல்லுறீங்க..." என்றான் குமார் ஆர்வமாக...

"என் பையனோட எதிர்காலம்தான் முக்கியம்..... நீ வெளிநாடு போய்.. முன்னேறி பெத்தவங்களுக்கு, பிறந்த நாட்டுக்கு பெருமை சேர்க்கனும்.... இதான்பா என் எண்ணம்.."

"சரிம்மா.... உங்கள் விருப்பபடியே... போறேன்மா" என்றான் குமார் பவ்யமாக....

எல்லாம் ஏற்படுகளும் முடிந்து விசா பெற்று... விமானத்தில் பயணம்....

விமானத்திலும் இன்று வாழ்க்கையிலும் காதில் தொனிக்கிற தன்னலமற்ற அம்மாவின் வார்த்தைகள் "என்னோட காலம் ஓடிருச்சு.... உன் எதிர்காலம் தான்பா முக்கியம்...".

இது போல அம்மா கிடைக்க என்ன தவம் செய்தோனோ.. என கண்கள் குளமாக இருந்த குமாரை.. "அப்பா இங்க பாருங்க..." என குமாரின் மகன் கடற்கரையிலிருந்து கூப்பிட... நினைவுகள் கலைகின்றன.
------------------
பெரியவர்கள் பலர் உலவும் இடம்.. இதில் என் சிறிய முயற்சி..
முயற்சி எப்படியிருக்கிறது என கூறுங்கள்.. குறைகளை சுட்டி காட்டுங்கள்...

pradeepkt
09-06-2005, 11:48 AM
படித்து முடித்தவுடன் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் அறிஞரே.
அப்புறம் அம்மாவுக்கு ஒன்றும் இல்லையே?
ரொம்ப பாதிச்சிருச்சு உங்க கதை.

அறிஞர்
09-06-2005, 11:52 AM
படித்து முடித்தவுடன் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் அறிஞரே.
அப்புறம் அம்மாவுக்கு ஒன்றும் இல்லையே?
ரொம்ப பாதிச்சிருச்சு உங்க கதை.
அதுக்குள்ள படிச்சுட்டீங்களா.... அடுத்த பாகத்தில் அவசியம் வரும் அம்மாவை பற்றி....

பிரியன்
09-06-2005, 12:06 PM
தொடருங்கள் நண்பரே, முதல் கதை என்றாலும் உணர்வுப்பூர்வமான கதை.
தாய்மையை சொல்லும் கதைகள் எப்போதுமே மனதின் ஆழ ஆழ இடங்களில் பதிந்துவிடும்.முதல் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

சுவேதா
09-06-2005, 02:05 PM
அண்ணா கதை மிகவும் நன்றாக இருக்கின்றன அதோடு மிகவும் கவலையா இருக்கு பாவம் அந்த அம்மா. அம்மா என்றாளே ஒரு தனி விதம்தான் இந்த உலகிலே அம்மாவை விட சிறந்தது எதுகுமே இல்லை என்ன வாழ்த்துக்கள் அண்ணா முதல் கதையானாலும் மிகவும் அருமையான கதை.

thempavani
10-06-2005, 12:48 AM
அறிஞரே..

என்ன இது...எங்களை அழவைக்க ஒரு முயற்சியா..எளிய நடை..ஆனால் அழுத்தமான உணர்வுகள்...

பாராட்டுக்கள் அறிஞரே... உணர்வுகளால் வரையப்படும் எந்த பதிவும் மனதில் இடம் பிடிக்கும்..

அடுத்த பாகத்தை உடனே போடுங்கள்...

அறிஞர்
10-06-2005, 03:03 AM
தொடருங்கள் நண்பரே, முதல் கதை என்றாலும் உணர்வுப்பூர்வமான கதை.
தாய்மையை சொல்லும் கதைகள் எப்போதுமே மனதின் ஆழ ஆழ இடங்களில் பதிந்துவிடும்.முதல் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
நன்றி பிரியன்.. தங்களின் அன்பான கருத்துக்களுக்கு......

அறிஞர்
10-06-2005, 03:05 AM
அண்ணா கதை மிகவும் நன்றாக இருக்கின்றன அதோடு மிகவும் கவலையா இருக்கு பாவம் அந்த அம்மா. அம்மா என்றாளே ஒரு தனி விதம்தான் இந்த உலகிலே அம்மாவை விட சிறந்தது எதுகுமே இல்லை என்ன வாழ்த்துக்கள் அண்ணா முதல் கதையானாலும் மிகவும் அருமையான கதை.
அம்மாவை விட சிறந்தது எதுவும் இல்லை.. என்பது உண்மைதான் சகோதரியே...... தங்கள் கருத்துக்களுக்கு நன்றி....

அறிஞர்
10-06-2005, 03:09 AM
அறிஞரே..
என்ன இது...எங்களை அழவைக்க ஒரு முயற்சியா..எளிய நடை..ஆனால் அழுத்தமான உணர்வுகள்...

பாராட்டுக்கள் அறிஞரே... உணர்வுகளால் வரையப்படும் எந்த பதிவும் மனதில் இடம் பிடிக்கும்..

அடுத்த பாகத்தை உடனே போடுங்கள்...
நன்றி.. தேம்பா...
ஒரு சின்னா முயற்சிதான்...

தங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது கண்டு மகிழ்ச்சி..

கதைக்கே அழுகை என்றால்.. இது மாதிரி உண்மை வாழ்வில் நிகழும்போது... எப்படி இருக்கும் எண்ணிப்பாருங்கள்.....

mania
10-06-2005, 04:07 AM
;) மனதை நெகிழ வைக்கும் கதை.....இந்த கதையை படிக்கும்போது ஏன் இவ்வளவு நாட்கள் அறிஞர் கதை எழுத முற்படவில்லை என்றுதான் கேட்க தோணுகிறது. மிகவும் இயல்பான நடை.பாராட்டுக்கள் அறிஞரே.....நானும் கதை எழுதிவிட்டேன் என்று நிறுத்திவிடாதீர்கள். தொடருங்கள்...;)
பாராட்டுக்களுடன்
மணியா....;)

அறிஞர்
10-06-2005, 04:27 AM
;) மனதை நெகிழ வைக்கும் கதை.....இந்த கதையை படிக்கும்போது ஏன் இவ்வளவு நாட்கள் அறிஞர் கதை எழுத முற்படவில்லை என்றுதான் கேட்க தோணுகிறது. மிகவும் இயல்பான நடை.பாராட்டுக்கள் அறிஞரே.....நானும் கதை எழுதிவிட்டேன் என்று நிறுத்திவிடாதீர்கள். தொடருங்கள்...;)
பாராட்டுக்களுடன்
மணியா....;)
நன்றி மணியா.. தங்களுக்கு கதை படிக்கும் பழக்கம் உண்டா.....

வாழ்த்துக்களுக்கு, ஊக்குவிப்புக்கும் நன்றி.... திடீரென சிந்தித்து கிறுக்கிவிட்டேன்.... இனியும் தொடர விருப்பம்..... காலம் பதில் சொல்லும்..

mania
10-06-2005, 04:58 AM
நன்றி மணியா.. தங்களுக்கு கதை படிக்கும் பழக்கம் உண்டா.....

வாழ்த்துக்களுக்கு, ஊக்குவிப்புக்கும் நன்றி.... திடீரென சிந்தித்து கிறுக்கிவிட்டேன்.... இனியும் தொடர விருப்பம்..... காலம் பதில் சொல்லும்..

கதை படிக்கும் பழக்கத்தை விட கதை விடும் பழக்கம்தான் அதிகம்.:D நீங்கள் அடிக்கடி இந்த மாதிரி திடீரென்று சிந்தித்து கிறுக்குங்கள்.....அடுத்த கதையின்.... இல்லை....கிறுக்கலின் தலைப்பு.. காலம் பதில் சொல்லுமாவா......???:rolleyes:
அன்புடன்
மணியா....;)

அறிஞர்
10-06-2005, 05:04 AM
கதை படிக்கும் பழக்கத்தை விட கதை விடும் பழக்கம்தான் அதிகம்.:D நீங்கள் அடிக்கடி இந்த மாதிரி திடீரென்று சிந்தித்து கிறுக்குங்கள்.....அடுத்த கதையின்.... இல்லை....கிறுக்கலின் தலைப்பு.. காலம் பதில் சொல்லுமாவா......???:rolleyes:
அன்புடன்
மணியா....;)
அடுத்த கதை இதன் தொடர்ச்சியாக எழுதலாம் என எண்ணம்...

gragavan
10-06-2005, 05:40 AM
அறிஞரே! பிரமாதம். உங்கள் ஆராய்ச்சியில் இப்படிக் கதைகள் கிடைக்கிறதே! ஆனால் படித்து முடித்ததும் மனம் கனமாகிப் போவதென்னமோ உண்மைதான். அதை மாற்ற ஏதாவது ஆராய்ச்சி செய்யக் கூடாதா?

அறிஞர்
10-06-2005, 05:44 AM
அறிஞரே! பிரமாதம். உங்கள் ஆராய்ச்சியில் இப்படிக் கதைகள் கிடைக்கிறதே! ஆனால் படித்து முடித்ததும் மனம் கனமாகிப் போவதென்னமோ உண்மைதான். அதை மாற்ற ஏதாவது ஆராய்ச்சி செய்யக் கூடாதா?
நன்றி இராகவன்...

அதற்கு மாற்று மருந்தாக அடுத்த கதை வரும் அன்பரே......

மன்மதன்
10-06-2005, 07:28 AM
தலை சொன்னதைதான் நானும் சொல்கிறேன்.. ஏன் இத்தனை நாள் எழுதவில்லை.. ஒரு எழுத்தாளனின் திறமை, கதையை படிக்கும் போது கவனத்தை சிதறவிடக்கூடாது. ஒரே மூச்சில் படிக்க வைக்கவேண்டும். அதே சமயம் படிப்பாளரின் மனதை டச் செய்ய வேண்டும். இது எல்லாம் உங்க கதையில் இருக்கு. பாஸ் பண்ணிடிங்க அறிஞர். பாராட்டுக்கள். இனி கதை நிறைய எழுதுங்க (Underline போடாம :D )
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
10-06-2005, 08:14 AM
தலை சொன்னதைதான் நானும் சொல்கிறேன்.. ஏன் இத்தனை நாள் எழுதவில்லை.. ஒரு எழுத்தாளனின் திறமை, கதையை படிக்கும் போது கவனத்தை சிதறவிடக்கூடாது. ஒரே மூச்சில் படிக்க வைக்கவேண்டும். அதே சமயம் படிப்பாளரின் மனதை டச் செய்ய வேண்டும். இது எல்லாம் உங்க கதையில் இருக்கு. பாஸ் பண்ணிடிங்க அறிஞர். பாராட்டுக்கள். இனி கதை நிறைய எழுதுங்க (Underline போடாம :D )
அன்புடன்
மன்மதன்
நன்றி மன்மதா.... பாராட்டுக்களுக்கு... சும்மா கிறுக்கலாம் எனத்தொடங்கி முடிந்துவிட்டது....

இப்ப தான் அடியெடுத்து வைக்கிறேன். இனி கதைகள் தொடரும் (Underline போடாம :D ).

mythili
10-06-2005, 08:54 AM
அருமையான கதை அறிஞரே.

நேற்று இதைப் படித்தவுடன், மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.
தனி மடலில் தொடர்பு கொண்டு "அம்மா" எப்படி இருக்கிறார்கள் என்ற விவரங்கள் கேட்ட பிறகு கொஞ்சம் தேவலை.

சன்பென்ஸ் வைக்காமல் சீக்கிரம் தொடருங்கள்.

அன்புடன்,
மைத்து

அறிஞர்
10-06-2005, 10:28 AM
அருமையான கதை அறிஞரே.
நேற்று இதைப் படித்தவுடன், மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.
தனி மடலில் தொடர்பு கொண்டு "அம்மா" எப்படி இருக்கிறார்கள் என்ற விவரங்கள் கேட்ட பிறகு கொஞ்சம் தேவலை.

சன்பென்ஸ் வைக்காமல் சீக்கிரம் தொடருங்கள்.
அன்புடன்,
மைத்து
நன்றி மைத்து..... என்னுடைய முதல் வாசகியே...
அம்மா நன்றாக இருக்கிறார்கள்.. அடுத்த கதையில் வருவார்கள்.... யோசித்து எழுதுகிறேன் ஒரு வாரத்துக்குள் பதிக்க எண்ணுகிறேன்

Iniyan
10-06-2005, 10:47 AM
அப்பப்பா. முகத்தில் அடிப்பது போல ரொம்ப நேர்மையாக எளிமையாக சொல்லப்பட்ட கதை. உணர்ச்சிகள் கொப்பளிக்க இன்னும் எழுதுங்கள்.

அறிஞர்
13-06-2005, 04:42 AM
அப்பப்பா. முகத்தில் அடிப்பது போல ரொம்ப நேர்மையாக எளிமையாக சொல்லப்பட்ட கதை. உணர்ச்சிகள் கொப்பளிக்க இன்னும் எழுதுங்கள்.
நன்றி இனியன்.....
ஊக்குவிப்புக்கும் நன்றிகள் பல....

பரஞ்சோதி
14-06-2005, 09:09 AM
அருமையான கதை, தெளிவான வசனங்கள், அளவான வர்ணனைகள். கலக்கிட்டீங்க அறிஞரே!.

கண்கலங்கவும் வைத்து விட்டீங்க, தாயின் தியாகத்தின் முன்பு எதுவும் இணை கிடையாது. தியாகத்தின் மொத்த உருவமே அம்மா.

இக்கதை என் தாயின் தியாகங்களை நினைவுக்கூற வைத்து விட்டது, இது தான் எழுத்தாளனுக்கு வெற்றி என்பதாகும்.

அடுத்த பாகத்தை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

மகனின் கடமை என்ன??

karikaalan
14-06-2005, 11:15 AM
அறிஞர்ஜி

இன்றுதான் படித்தேன். எளிய நடை. அனைவருக்கும் புரியும்படியாக இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். மேலும் மேலும் எழுதுங்கள்.

===கரிகாலன்

அறிஞர்
15-06-2005, 07:05 AM
அருமையான கதை, தெளிவான வசனங்கள், அளவான வர்ணனைகள். கலக்கிட்டீங்க அறிஞரே!.

கண்கலங்கவும் வைத்து விட்டீங்க, தாயின் தியாகத்தின் முன்பு எதுவும் இணை கிடையாது. தியாகத்தின் மொத்த உருவமே அம்மா.

இக்கதை என் தாயின் தியாகங்களை நினைவுக்கூற வைத்து விட்டது, இது தான் எழுத்தாளனுக்கு வெற்றி என்பதாகும்.

அடுத்த பாகத்தை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

மகனின் கடமை என்ன??நன்றி நண்பா......தாயின் தியாகங்களுக்கு ஈடு இணை என்ன உண்டு.....

அறிஞர்
15-06-2005, 07:08 AM
அறிஞர்ஜி

இன்றுதான் படித்தேன். எளிய நடை. அனைவருக்கும் புரியும்படியாக இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். மேலும் மேலும் எழுதுங்கள்.

===கரிகாலன்
நன்றி ஜி..... நாம் என்ன சொல்ல வருகிறோமோ.... அதை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும்.. என்பதே என் ஆவல்.. அந்த திருப்தி தங்கள் பதிலில் உள்ளது.. மிக்க நன்றி...

kavitha
20-06-2005, 05:21 AM
வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எதார்த்தமாக முன் வைத்த கதை. நன்றாக வந்திருக்கிறது... உள்ளுக்குள் உந்துதல் இல்லாமல் எழுத முடியாது; தாமதமாக வந்திருந்தாலும் பிரமாதமாக வந்திருக்கிறது. தொய்வின்றி தொடர்ந்து எழுதுங்கள்.
( கதையைப்பற்றி முழு கோப்பையும் படித்துவிட்டு சொல்கிறேன் )
விரைவில் முன்னிலை எழுத்தாளாராக வ ( ள ) ர மனமார்ந்த வாழ்த்துகள் :) :) :)

thempavani
20-06-2005, 05:24 AM
கவி தங்களுக்கு தனி மடல் அணுப்ப முடியவில்லையே ஏன்... அதற்குரிய அனுமதி தாங்கள் அளிக்கவில்லை என திட்டுகிறது இணையம்.. கொஞ்சம் பாருங்களேன்..

Nanban
21-06-2005, 05:54 PM
குழப்பமற்ற தெளிவான கதை. எளிதில் மனதில் இடம்பிடிக்கும் அம்மா 'செண்டிமெண்ட்' வேறு. கதை விறுவிறுப்பாக படிப்பதற்கு இருந்ததில் வியப்பில்லை. தன்னம்பிக்கை பெற்று விட்டீர்கள் - சிந்தனைகளை எழுத்தில் வடிப்பதற்கு, தொடர்ந்து செயல்படுங்கள். தொடர்ந்து இரண்டாம் பாகமும் எழுதுவதாக சொன்னதால் ஆவலுடன் காத்திருக்கிறேன் - முழுமையாக படித்து விட்டு, கதையை, எழுத்து நடையை விவாதிக்கலாம்.

தாமதத்திற்கு மன்னிக்கவும்......

என்னுடைய வலைப்பூவை வடிவமைப்பதில் சற்று அதிக நேரம் எடுத்துக் கொண்டதினால் இந்தத் தாமதம் -

அடுத்த பாகத்தை விரைந்து எழுதுங்கள்....

அன்புடன்

பரஞ்சோதி
22-06-2005, 04:30 AM
நண்பன் அவர்களே!

உங்கள் வலைப்பூவின் முகவரி என்ன?

பிரியன்
22-06-2005, 04:52 AM
பரஞ்சோதி நண்பணின் வலைப்பூ முகவரி - www.nanbanshaji.blogspot.com

அறிஞர்
22-06-2005, 07:44 AM
வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எதார்த்தமாக முன் வைத்த கதை. நன்றாக வந்திருக்கிறது... உள்ளுக்குள் உந்துதல் இல்லாமல் எழுத முடியாது; தாமதமாக வந்திருந்தாலும் பிரமாதமாக வந்திருக்கிறது. தொய்வின்றி தொடர்ந்து எழுதுங்கள்.
( கதையைப்பற்றி முழு கோப்பையும் படித்துவிட்டு சொல்கிறேன் )
விரைவில் முன்னிலை எழுத்தாளாராக வ ( ள ) ர மனமார்ந்த வாழ்த்துகள் :) :) :)நன்றி கவி........எதார்த்தமான காரியங்கள்... அனைவருக்கும் புரியும்..... உந்துதல் பல நாட்களாக இருந்து..... எழுதப்பட்டது..... தங்கள் வாழ்த்துக்கு மீண்டும் நன்றி...

அறிஞர்
22-06-2005, 07:51 AM
குழப்பமற்ற தெளிவான கதை. எளிதில் மனதில் இடம்பிடிக்கும் அம்மா 'செண்டிமெண்ட்' வேறு. கதை விறுவிறுப்பாக படிப்பதற்கு இருந்ததில் வியப்பில்லை. தன்னம்பிக்கை பெற்று விட்டீர்கள் - சிந்தனைகளை எழுத்தில் வடிப்பதற்கு, தொடர்ந்து செயல்படுங்கள். தொடர்ந்து இரண்டாம் பாகமும் எழுதுவதாக சொன்னதால் ஆவலுடன் காத்திருக்கிறேன் - முழுமையாக படித்து விட்டு, கதையை, எழுத்து நடையை விவாதிக்கலாம்.

தாமதத்திற்கு மன்னிக்கவும்......

என்னுடைய வலைப்பூவை வடிவமைப்பதில் சற்று அதிக நேரம் எடுத்துக் கொண்டதினால் இந்தத் தாமதம் -

அடுத்த பாகத்தை விரைந்து எழுதுங்கள்....

அன்புடன்நன்றி நண்பன் அவர்களே.... சிந்தனைகளை எழுத்தில் வடிப்பது... முதல் கட்டமே.... தொடர்ந்து..... செயல் படுகிறேன்....

தங்கள் வலைப்பூ அருமையாக உள்ளது.... படைப்புக்கள் அனைத்தையும் பதியுங்கள்.... சிறந்த தளமாக இருக்கும்....

அடுத்த வாரத்திற்குள் அடுத்த பாகத்தை கொடுக்க இயலுகிறேன்..

kavitha
04-07-2005, 09:41 AM
அடுத்த வாரத்திற்குள் அடுத்த பாகத்தை கொடுக்க இயலுகிறேன்..
__________________
உங்கள் அறிஞர்
அடுத்த வாரம் ஆகிடுச்சு அறிஞரே. எழுதிட்டீங்களா?

அறிஞர்
04-07-2005, 09:50 AM
அடுத்த வாரத்திற்குள் அடுத்த பாகத்தை கொடுக்க இயலுகிறேன்..
__________________
உங்கள் அறிஞர்
அடுத்த வாரம் ஆகிடுச்சு அறிஞரே. எழுதிட்டீங்களா? ஆரம்பித்தேன்... சற்று வேளை பளுவால் நிறுத்தியுள்ளேன்.. விரைவில் தருகிறேன்.. அதற்குள் தங்கள் கதை ஒரு வட்டம் அடிக்கட்டும்.. கொடுங்கள்...

சுசி
04-07-2005, 12:25 PM
நண்பரே, குமாரின் அம்மா இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டி இறைவனைப் பிரார்த்த்க்கிறேன். குமார் மனம் தளராமல் இருக்க பிரார்த்திக்கின்றேன்.

பாரதி
04-07-2005, 03:06 PM
மிக நல்ல முயற்சி அறிஞரே.. பாராட்டுக்கள்.
நண்பர்கள் சொன்னது போல உங்கள் பதிவு முடிந்த பின்னர் கருத்து கூறலாம் என்றிருந்ததே என் தாமதமான பதிவிற்கு காரணம். உங்களுக்கு தேவையான அளவு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். எழுதியதில் உங்களுக்கு திருப்தி எனில் பதியுங்கள். மீண்டும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Nanban
25-07-2005, 05:43 PM
எங்கே தொடர்ச்சி? மீதியையும் கொடுத்து விடுங்களேன். ரொம்பவும் தாமதித்தால், பின்னர் முதல் பகுதியின் தாக்கம் அழிந்து போய்விடுமே!!??

இளசு
16-10-2005, 12:21 PM
அன்பு அறிஞர்,
முதல் கதை --- கரு, நடை - யாதார்த்தம், எளிமை, உண்மை..
மனதை நெகிழச்செய்யும் சம்பவக்கோர்வை.

துன்பங்கள் நீர் போல..
மன மண்ணை இளக்கி, வடிவம் மாற்றும் வல்லமை துன்பத்துக்கே உண்டு..

நினைத்தவற்றை எழுத்தில் வடித்த ஆற்றலுக்கு பாராட்டுகள்.

மருத்துவம், பாசம் இவற்றால் தாய் நீண்டு வாழ பிரார்த்தனைகள்..
அடுத்த பாகம் பதிந்துவிட்டீர்களா?

அறிஞர்
17-10-2005, 03:50 AM
இல்லை அன்பரே...
வேலை மாற்றம்... இந்திய பயணம், புது மகன் வரவு,....நாடு மாற்றம் என பல மாறுதல்கள்....
புது இடம் கொஞ்சம் பழகிவிட்டவுடன்... அடுத்த கதையுடன் கண்டிப்பாய் வருவேன்......

தமிழ்ப்பிரியன்
25-10-2006, 09:20 PM
கதை அருமையாக உணர்வுப்பூர்வமாக உள்ளது...தொடர்ந்து எழுதுங்கள் அறிஞரே...அம்மாவின் நிலையை சுபமாக ஆக்குங்கல் படிக்க படிக்க இதயம் வழிக்கிறது..

ஓவியா
26-10-2006, 07:49 PM
அறிஞர் சார்
இன்றுதான் தங்களின் கதையை படித்தேன்.....மனம் கணகின்றது

இரண்டாம் பாகம் எழுதவில்லையா...
அப்படி எழுதினால் நான் படிக்க மாட்டேன்

மன்னிக்கவும்

உண்மையுடன்
ஓவியா

அறிஞர்
27-10-2006, 05:09 AM
அறிஞர் சார்
இன்றுதான் தங்களின் கதையை படித்தேன்.....மனம் கணகின்றது

இரண்டாம் பாகம் எழுதவில்லையா...
அப்படி எழுதினால் நான் படிக்க மாட்டேன்

மன்னிக்கவும்

உண்மையுடன்
ஓவியா அப்படி மனதை கணக்க வைத்துவிட்டதா... இரண்டாம் பாகம் எழுத தொடங்கினேன். முடிக்கவில்லை... கொடுக்க போவதில்லை என எண்ணுகிறேன்... சந்தோசமா...

Mano.G.
27-10-2006, 05:32 AM
தம்பி நானும் இத்தனை நாட்கள் களித்து இன்றுதான்
இதை படித்தேன். இதனுள்ள உணர்வுகளையும் கண்டேன்.

இந்த கதையில் அம்மா என் வாழ்வில எனது உடன்பிறந்த தம்பி
தனது 13ம் வயதில் ((1983) இதே போல இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமாகி சிவப்பணுக்களை அழிக்க அதற்கு மருந்து இல்லாத நிலையின்மருத்துவரோ 50 / 50 உயிர் பிழைக்கும் வாய்ப்புள்ளது என கூற.
இடை இடையே இரத்த மாற்றுக்கு அலைந்து . சிகிச்சையின் போது அவன் படும் கஷ்டங்களை கண்டு நாங்கள் பட்ட மன வேதனை.

புரிகிறது உங்களின் மன வேதனை அதை நானும் பங்கு கொள்கிரேன்.

meera
27-10-2006, 06:17 AM
அறிஞர் அய்யா, எப்படியோ அழ வைத்துவிட்டீர்கள்.

முதல் கதையா நம்பவேமுடியல. ரொம்ப நல்லா இருந்தது என் வாழ்த்துகளை சமர்பிக்கிறேன்.

கண்களில் குளம்
ஆகையால்
வரவில்லை வார்த்தைகள்

வேறென்ன சொல்ல??

guna
27-10-2006, 06:25 AM
குணாவும் இன்றைக்குத்தான் கதயை படித்தேன்..

அடுத்த பாகம் வருமா?
இல்லை ஓவியா கிட்ட சொன்ன மாதிரி வராதா?

அப்படியே அடுத்த பாகத்தை கொடுக்க எண்ணம் இருந்தால்..
சுபமோ சோகமோ, உங்கள் கற்பனையில் தோன்றியதை அப்படியே அறிஞர் எழுதனும் என்பது குணாவின் அன்பு வேண்டுகோள்...
_______________________________________________________________
குணா

ஓவியா
27-10-2006, 05:30 PM
அப்படி மனதை கணக்க வைத்துவிட்டதா... இரண்டாம் பாகம் எழுத தொடங்கினேன். முடிக்கவில்லை... கொடுக்க போவதில்லை என எண்ணுகிறேன்... சந்தோசமா...

சந்தோசம்.
கொடுக்க வேண்டாம்
(ரோம்ப ரோம்ப நன்றி சார்)

வேற கதையா...
அதுவும் படிக்க நல்லா ஜாலியா....
இருக்குறாபுலே கதை எழுதவும்....:D

அப்படியே இரண்டாம் பாகம் எழுதி இருந்த,
தனிமடலில் குனாவுக்கு அனுப்பவும்....:)
அந்தம்மா படித்து சுபமோ சோகமோ அனுபவிக்கட்டும்...:)

ஆதவா
10-02-2007, 03:37 AM
அறிஞரே இது உங்களுடையதா? ஆராய்ச்சி செய்யும் மனதில் ஆழ்ந்த கதையா?... நம்பவே முடியவில்லை.... கதையில் ஏது குறைகள்?? அம்மாவுக்கே உரிய பாசமும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நிரம்பவே இருக்கு.... ஏனெனில் அவள் ஒரு நடமாடும் தெய்வமல்லவா? அம்மாவின் கதி என்னாச்சோ? கொஞ்சம் கலக்கமாகிவிட்டதே மனசு.... அமெரிக்கா என்று முன்னெழுதியபோது அமெரிக்க அம்மா கதையோ என்று நினைத்தேன்...

உண்மையிலேயே உலகத்தில் கொடிய நோய் புற்றுநோய்... நோய் வருவதற்கு ஏதாவது ஒரு வகையில் நாம் காரணமாக இருப்போம் ஆனா காரணமின்றி வரும் நோய் இதுவே!! அதெப்படி நல்லவங்களுக்கே வருதுன்னுதான் தெரியல.......... உங்கள் க்தையில் ஓரிரு இடங்களில் பேச்சுவழக்கில் தமிழை கொஞ்சம் எழுத்துத் தமிழாக உபயோகம் செய்திருக்கிறீர்கள்.... மற்றபடி மிக எளிமையாக அமைந்திருக்கிறது... மேலும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...

leomohan
10-02-2007, 03:44 AM
அறிஞரே நானும் இந்த திரியை தவறவிட்டேனே. உயிர்பித்த நண்பர்களுக்கு நன்றி.

மேலும் எழுதுங்கள். விரைவில் படித்துவிட்டு கருத்திடுகிறேன்.

ஓவியன்
28-02-2008, 12:39 AM
இயல்பான சம்பவங்களை உணர்வுகளில் கோர்த்து எல்லோருக்கும் பொதுவான புற்றுநோயை வில்லனாக்கி வரிகளாக்கிய அறிஞரின் எழுத்துப் பிரவாகத்தால் என்னுள்ளே உணர்ச்சிப் பிரவாகம்....

பாராட்டுக்கள் அறிஞரே, உங்களது நிலை நான் அறிந்ததுதான், இருந்தும் அடக்கவியலாத ஆவலால் கேட்கின்றேன் இன்னும் இன்னும் நீங்கள் எழுத வேண்டும்...

எழுதுவீர்களா....???

சிவா.ஜி
28-02-2008, 05:14 AM
அறிஞரின் இன்னொரு அவதாரம் காட்டும் இந்த கதையை மேலெழுப்பியதற்கு நன்றி ஓவியன்.தாயின் நோயையும்,மகனின் தவிப்பையும்,அந்த தவிப்புகண்டு தாளமுடியா தாயின் பாசத்தையும்,சொந்தங்களின் கேவலங்களையும்,வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் இளைஞனுக்கு ஏற்படும் தடுமாற்றங்களையும்...மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அறிஞர்.இன்னும் எழுதுங்களேன்.
தங்களுக்கு இருக்கும் வேலைப் பளுவில் கொஞ்சம் சிரமம்தான் ஆனாலும் முயலுங்கள்.நல்ல எழுத்தைப் படிக்க ஆர்வமாய் இருக்கிறோம்.

அக்னி
28-02-2008, 06:37 AM
அறிஞரே மனதை நெகிழ வைத்துவிட்டீர்கள்...
முதற்கதையோடே முடித்துவிட்டீர்கள் போலிருக்கே. சந்தர்ப்பம் கிடைத்தால் தொடருங்கள். (ஏற்கனவே 10000ம் பதிவுக்கு போடுவதாகச் சொன்னதையும் காணோம்.)
கதையைப்பற்றிப் பார்த்தால்,
மிக யதார்த்தமாகக் கருவைச் சுற்றிய எழுத்தோட்டம். ஒரு நிகழ்வொன்றை நேரில் பார்த்தது போலிருந்தது. ஒன்றிக்க வைத்தது.
மனதில் கவலை, தாய்மை, கடமை என்ற சகல உணர்வுகளையும் இழைத்துவிட்டீர்கள்.
எழுத்தைத் தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையுடனும், தொடர காலம் அனுமதிக்கும் என்ற எதிர்பார்ப்புடனும்...

க.கமலக்கண்ணன்
28-02-2008, 03:11 PM
அழுத்தமான

அன்பான ஒரு

அதியமில்லாத

அற்புதமான உணர்வு

அதுதான்

அம்மா

அருமை

அறிஞரே... தல எப்போதும் தலதான்...

MURALINITHISH
22-09-2008, 08:35 AM
இப்படிதான் ஒவ்வோரு தாயும் தன் மகனை பற்றிய கவலை படுகிறார்கள் கடைசி வரிகளிலில் தாயின் பெறுமை புரிகிறது