PDA

View Full Version : மணல் வீட்டு பாடம்



மன்மதன்
25-09-2004, 04:55 PM
http://img.photobucket.com/albums/v372/manmathan/-LiveOneDayAtATime-.jpg

தூரத்து
காக்கை கூட்டம்..
நண்பர்கள்
உல்லாசம்..

சுண்டல் பையன்
சென்னை தமிழ்..
பூக்காரியின்
அணுகுமுறை..

தேவையில்லாத
காட்சிகளை ஒதுக்கி..
வெகு தொலைவில்
தெரிந்த சிறுமி..

அழகாய் கட்டிய
மண்வீடு..
கலைத்து சென்றன
அலைகள்..

மகிழ்ச்சியில்
திளைத்த சிறுமி..
கட்டத்துவங்கினாள்
மறுவீடு..

சிறிது சாயம்
போனால் என்ன...
நம் வீடு
நம் குழந்தைக்குதானே..

மறைத்து வைத்த
கிரிக்கெட் பந்துகளை
பசங்களிடம் இன்றே
கொடுத்திருக்க வேண்டும்..





அன்புடன்
மன்மதன்

thamarai
25-09-2004, 05:07 PM
வீட்டை மணல் வீட்டோடு உவமித்த விதம் அருமை...
அத்தோடு கிரிக்கெட் பந்தையும் இணைத்தது கவிதைக்கு மேலும் உயிர் கொடுத்திருந்தது.
வாழ்த்துக்கள்.....

இளசு
27-09-2004, 06:10 AM
வாழ்க்கைப் பொட்டலத்தின் உள்ளடக்கம் சொல்லும் கவிதை..

(ஹிஹி..மன்மதானாந்தாஜி ஆசிரமத்திலிருந்து வரேன்..)

கிளப்புங்க மன்மதன்...

கவிப்பார்வைகள் நீளட்டும்..

சேரன்கயல்
28-09-2004, 08:58 AM
பாராட்டுக்கள் மன்மதன்...அழகாய் சொலியிருக்கிறீர்கள்...
என் அம்மாவை கண்முன் நிறுத்திவிட்டீர்கள்...

மன்மதன்
28-09-2004, 09:01 AM
பாராட்டுக்கள் மன்மதன்...அழகாய் சொலியிருக்கிறீர்கள்...
என் அம்மாவை கண்முன் நிறுத்திவிட்டீர்கள்...

இந்த கவிதைக்கு வெற்றி கிடைத்து விட்டது.. நன்றி சேரன்.
அன்புடன்
மன்மதன்

சேரன்கயல்
28-09-2004, 09:13 AM
அன்று முதல் இன்று வரை தெருவில் கிரிக்கெட் விளையாடும்போது...என்னைப் போல் வீட்டுக்குள் பந்தை அடித்து எதையாவது உடைத்து வாங்கிக் கட்டிக்கொள்ளும் சிறுவர்களும், பந்து பட்டு ஏதாவது பொருள் உடையும்போது ஆத்திரத்தில் இரண்டு முறை திட்டுத் தீர்த்து மூன்றாவது முறை பந்தை தரமறுக்கும் என் அம்மா போன்ற பெரியவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்...

karikaalan
28-09-2004, 02:07 PM
கவிதையும், படத்தில் உள்ள வாண்டும் ஒன்றுக்கொன்று சமமே! வாழ்த்துக்கள் மன்மதன் சுவாமிகளே!

===கரிகாலன்

habib
02-10-2004, 10:11 AM
சிறு வயது நினைவுகளை திரும்பவும் ஞாபகப்படுத்துவது போல உள்ளது தங்களின் கவிதை வரிகள்.

பாரதி
19-10-2004, 05:22 AM
அட.... கலைந்து போகாத.... கரைந்து போகாத மன்றப்ப()டம்..!! ரொம்ப நல்லா இருக்கு மன்மதன்...

பிரியன்
29-11-2004, 02:50 PM
தாமத பதிவிற்கு ஒரு மன்னிப்பு செய்க...

அருமையான ,எளிமையான வார்த்தைகள் ..
அதுதான் புதுக்கவிதை...
தொடருங்கள் மன்மதரே

gans5001
08-12-2004, 11:09 PM
மறைத்து வைத்த
கிரிக்கெட் பந்துகளை
பசங்களிடம் இன்றே
கொடுத்திருக்க வேண்டும்..

கொஞ்சம் நினைவுகளை கிளறி விட்டிருக்கிறீர்கள் நண்பரே. வாழ்க்கையின் ஞானங்கள் போதி மரத்தடியில்தான் கிடைக்கவேண்டும் என்பதல்லவே.

என் வீட்டு சுவர் முழுக்க என் குழந்தையின் சின்ன கிறுக்கல்கள்.. இந்த ஞானம் எனக்கு வந்தபின்..
என் வீடு இப்போது மேலும் அழகாய் இருக்கிறது

அமரன்
02-10-2007, 02:11 PM
வாழ்க்கையை தாய்மையுடன் பார்க்க வைத்துவிட்டது கவிதை.

சிவா.ஜி
02-10-2007, 02:30 PM
வாழ்வின் சின்னச்சின்ன சந்தோஷங்கள் எங்கெங்கோ ஒளிந்திருக்கின்றன...தேடி சுகமடைய வாழ்நாள் போதாது.எளிமையான வரிகளில் சுவயான் அபாடம் சொன்ன சிறந்த கவிதை.(மன்மதன் நீங்கள் இப்படியெல்லாம் எழுதுவீர்களா....எங்கே அந்த கவிஞன்...எங்களுக்காக மீண்டும் வாருங்கள்...கவிதையோடு)

ஓவியன்
05-10-2007, 03:12 PM
அழகான கவிதை...
சின்ன சிறுவர்களிடமிருந்து நாம் எத்தனையோ விடயங்கள் கற்கவேண்டி இருக்கிறது. அலை அடித்து கலைந்துவிடும் மணல் வீட்டை மீண்டும் கட்டும் முயற்சி....
அலை மீண்டும் வந்து அடிக்குமென்று தெரிந்தும் கலங்காமல் மணல் வீடு கட்டும் உறுதியென நிறைய விடயங்கள் அவர்களிடமிருந்து கற்கவேண்டும்....

மன்மி.ஜி உங்கள் கவிதை இயம்பி நிற்கும் கருத்துக்கள் பல...
இன்னும் இவ்வாறான உங்கள் கவிதைகளுக்காக ஏங்குகிறது மனம்...
தருவீர்களா....???

ஆதவா
05-10-2007, 03:37 PM
தூரத்து
காக்கை கூட்டம்..
நண்பர்கள்
உல்லாசம்..

சுண்டல் பையன்
சென்னை தமிழ்..
பூக்காரியின்
அணுகுமுறை..

தேவையில்லாத
காட்சிகளை ஒதுக்கி..
வெகு தொலைவில்
தெரிந்த சிறுமி..

அழகாய் கட்டிய
மண்வீடு..
கலைத்து சென்றன
அலைகள்..

மகிழ்ச்சியில்
திளைத்த சிறுமி..
கட்டத்துவங்கினாள்
மறுவீடு..

சிறிது சாயம்
போனால் என்ன...
நம் வீடு
நம் குழந்தைக்குதானே..

மறைத்து வைத்த
கிரிக்கெட் பந்துகளை
பசங்களிடம் இன்றே
கொடுத்திருக்க வேண்டும்..

அன்புடன்
மன்மதன்


மனதைத் திருத்தும் சூழ்நிலைகள்... சிறு விசயமேனும்..

அழகாய் நிறுத்தி நிதானித்து சொல்லப்பட்ட கவிதை. நீங்கள் எழுதியதாக என்னால் ஒத்துக் கொள்ளமுடியவில்லை. (ஒண்ணுரண்டு எழுதினாத்தானே தெரியும்) நறுக்கி அடுக்கப்பட்ட வார்த்தைகள், இரத்தினசுருக்கமாய் சொல்லிய கரு..

ஆழமாக இருக்கிறது... அழுத்தமாகவும்.

மேலும் தொடருங்கள்..

பென்ஸ்
05-10-2007, 04:52 PM
மனதைத் திருத்தும் சூழ்நிலைகள்... சிறு விசயமேனும்..

அழகாய் நிறுத்தி நிதானித்து சொல்லப்பட்ட கவிதை. நீங்கள் எழுதியதாக என்னால் ஒத்துக் கொள்ளமுடியவில்லை. (ஒண்ணுரண்டு எழுதினாத்தானே தெரியும்) நறுக்கி அடுக்கப்பட்ட வார்த்தைகள், இரத்தினசுருக்கமாய் சொல்லிய கரு..

ஆழமாக இருக்கிறது... அழுத்தமாகவும்.

மேலும் தொடருங்கள்..

ஆதவா...
நீ மன்மதனின் காதல் டைரி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5263), ஆற்றங்கரை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5543) போன்ற கவிதைகளை வாசிக்கவில்லையா.... ???
மன்மதன் ரசிகன் நான்... :)

பூமகள்
05-10-2007, 05:30 PM
மணல் வீட்டு பாடத்தில் மன்ற வீட்டிற்கு பாடம் புகட்டிய மதன் அண்ணாவிற்கு வாழ்த்துகள்.
படமும் கவியும் அருமையிலும் அருமை. முத்துக் குளித்து மேல் கொண்டுவந்த அமர் அண்ணாவிற்கு நன்றிகள்.
நிறைய விடயங்களைக் கற்க உதவுகிறது இம்மாதிரியான முத்துக் குளித்த கவிகள் மூலம்.
தொடருங்கள் உங்களின் சேவையினை..!!

ஷீ-நிசி
06-10-2007, 01:54 AM
கடற்கரை அலைகள் வெறுமனே நம் கால்களை மட்டும் ஈரமாக்கி விட்டு செல்வதில்லை. சில் சமயங்களில் நம் மனங்களையும் தான்.

புத்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது. மெரீனாக்களும் கடலலைகளும் சத்தமில்லாமல் எத்தனை புத்தர்களை உருவாக்கியுள்ளதோ?!

இனி முட்டிகளை கைகளோடு இறுக்கி அணைத்து தூரத்தில் அலைகளை ரசிப்பவனை கண்டால், (நம்ம மன்மதன் என்று நினைத்து விடாதீர்கள் :) )கூட்டத்தில் இவனும் ஒருவன் என்று நினைத்துவிடாதீர்கள்.

அவனுக்குள் சில் வாழ்க்கை பாடங்களை இந்த அலைகளும், கடல்மண்ணும் ஏற்படுத்துகின்றன என்று எண்ணிக்கொள்ளுங்கள்.

மன்மதன் உங்க கவிதைகள் தொடர்ந்து வந்தால் எங்களுக்கு சந்தோஷமாயிருக்குமே.. எழுதுங்களேன்.....