PDA

View Full Version : ஜூன் 8, புதன் கிழமை மலேசிய செய்திகள்



Mano.G.
09-06-2005, 10:27 AM
நாடு முழுவதும் 10 தேசிய இளைஞர் பயிற்சி மையங்கள்

கிராமப்புறங்கள் மற்றும் Felda பகுதிகளில் வசிக்கும் மக்களை தொழில் முனைவர்களாக உருவாக்கும் நோக்கில் அவர்களுக்காகவே 10 தேசிய இளைஞர் பயிற்சி மையங்களின் கிளைகள் நாடு முழுவதிலும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கிளைகள் ஒவ்வொன்றும் சுமார் 50 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் Datuk Azalina Othman Said தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கு வித்திடும் இந்த மையங்கள் வாணிகம் தொடர்பான நுணுக்கங்கள், தொடர்புத் துறை மற்றும் இதர விஷயங்களையும் அவர்கள் கற்றுக் கொள்ள துணை புரியும் என்று அவர் மேலும் கூறினார்.

கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - பிரதமர்

Bukit Chagar காவல் துறையினரின் குடியிருப்புப் பகுதிகளின் மேம்பாட்டுத் திட்டங்கள் தக்க காலவரையறைக்குள் முற்றுப் பெறுவதைப் பொதுப்பணி இலாகாவும் அதன் குத்தகையாளர்களும் உறுதிபடுத்த வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

காவல் துறையினரின் வசதியைக் கருத்தில் கொண்டு நிர்மாணணிக்கப்படும் இக்குடியிருப்புகள் காலவறையறைக்குள் முடிவு பெற வேண்டும் என நிர்மாணிப்புப் பகுதிக்குத் திடீர் வருகை மேற்கொண்ட பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.

வேலை நேரத்தை அதிகரிப்பதன் வழி இவ்விரு தரப்பினரும் அப்பணியை விரைவில் முடிக்க முடியும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.







போலிக் கையெழுத்தைப் பயன்படுத்தி வந்த வெளிநாட்டு விளையாட்டாளர்கள்

இறக்குமதி காற்பந்து விளையாட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக அவர்களது பயண விபரங்கள் மற்றும் விசாக்களை குடிநுழைவு இலாகாவில் கவனமாக ஆராய வேண்டுமென குடிநுழைவு இலாகாவின் இயக்குனரும் தேசிய காற்பந்து கழகத்தின் ஆலோசகருமான Datuk Ishak Mohamed காற்பந்து சங்கங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நைஜீரியா மற்றும் கானா நாட்டு பிரஜைகளான 3 காற்பந்து விளையாட்டாளர்கள் தங்களது சொந்த காரணத்திற்காக நெகிரி சிம்பிலான் காற்பந்து கழகத்தின் அதிகாரியின் கையெழுத்தைபோல் போலி கையெழுத்தை பயன்படுத்தி மலேசியாவிற்கான பயண நாட்களை நீட்டித்திருப்பது தெரியவந்துள்ளது.

அது போன்ற சம்பவங்களை தடுப்பதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமென அவர் தெரிவித்தார்.





மிருகக்காட்சி சாலை மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு

நாட்டிலுள்ள தேசிய மிருகக்காட்சி சாலையை 2015 ஆண்டுக்குள் அனைத்துலக தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் இலக்கு உள்ளதாக அதன் இயக்குனர் Dr Mohd Ngah தெரிவித்தார்.

மிருகக்காட்சி சாலையில் கூடுதல் வசதிகளுடன் பல நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

9வது மலேசியத் திட்டத்தின் கீழ் மிருகக்காட்சி சாலையின் மேம்பாட்டு பணிகளுக்காக 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கிட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் நிர்வாகம் சீரமைப்புப் பணிகளை அங்கு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


கட்டுமானப்பணி குறித்து விசாரிக்க விசாரணைக்குழு

Johor Baharu-வில் Bukit Chagar பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போலீஸ் குடியிருப்புக் கட்டுமானப்பணி தாமதமாக நடைபெறுவது குறித்து விசாரிக்க விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படவிருப்பதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ சாமிவேலு தெரிவித்தார்.

24.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இத்திட்டம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்கப்படாதது குறித்து பொதுப்பணியமைச்சு விசாரிக்க வேண்டுமென முன்னதாக பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi கருத்துரைத்திருந்தார்.

இது தொடர்பாக பதிலளித்த பொதுப்பணியமைச்சர் இது தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் பிரதமரிடம் ஒப்படைக்கப்படுமென தெரிவித்தார்.

இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து: சீனா எதிர்ப்பு

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐநாவில் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

ஐநா சபையை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதே வேளையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாவதற்கு பிரிட்டனும், பிரான்சும், ரஷ்யாவும் ஆதரவு அளித்துள்ளன.

இந்தியா Veto அதிகாரம் இல்லாத நிரந்தர உறுப்பு நாடாவதற்கு ஒப்புதல் அளிக்க தயார் என அமெரிக்கா கருத்து தெரிவித்தது. இந்த கருத்தை இந்தியா ஏற்க மறுத்து விட்டது. இவ்விஷயத்தில் இது நாள் வரை மெளனம் காத்து வந்த சீனா தற்போது பகிரங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு சபையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நிரந்தர இடம் தரக் கூடாது என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விமானப்போக்குவரத்தைத் தொடங்குவோம்: விடுதலைப்புலிகள்

கிளிநொச்சியில் இருந்து தாங்களே விமானப் போக்குவரத்தை தொடங்கப் போவதாக விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமைதி முயற்சியின் ஒரு கட்டமாக தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளான கிளிநொச்சியிலிருந்து கிழக்குப் பகுதியிலுள்ள திரிகோணமலைக்கும், இதர பகுதிகளுக்கும் விமானப் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வற்புறுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்தக் கோரிக்கையை இன்னும் இலங்கை அரசு ஏற்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கிளிநொச்சியில் இருந்து தாங்களே விமானப் போக்குவரத்தை தொடங்கப் போவதாக என்று குறிப்பிட்டுள்ளார்.





தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மும்முரமாக அமல்படுத்தும் அமெரிக்கா

PAN-AMERICA தடையில்லா வர்த்தகத் திட்டத்தை வாஷிங்டன் தொடர்ந்து செயல்படுத்தி வருமென புளோரிடாவில் நடைபெற்ற 35-வது அமெரிக்க வட்டாரங்களின் கழகக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் George W. Bush தெரிவித்தார்.

தற்போது அமெரிக்க-மத்திய அமெரிக்க நாடுகளுடனான தடையில்லா வர்த்தக திட்டம் அமல்படுத்துவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அமெரிக்கா மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கிடையே நட்புறவும் பொருளாதாரமும் வலுவடையும் எனவும் தற்போது அத்திட்டம் விவசாயம் தொடர்பான மான்யம் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





நூறாவது ஆண்டில் நோர்வே

நோர்வே நாடு நேற்று தனது 100-வது பிறந்த நாளைக் கொண்டாடியது. சுவீடன் நாட்டிலிருந்து 1905 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி நோர்வே தனி நாடானது. இந்த நாட்டில் கிடைக்கும் பெட்ரோல் இதை உலகிலேயே வளமான நாடாக மாற்றியுள்ளது.

அண்டைநாடுகளான சுவீடன், Finland, டென்மார்க் போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துள்ள போதிலும், அந்த அமைப்பில் சேராமல் நோர்வே தனித்து நிற்கிறது.&; இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் நோர்வே நடுவராக இருந்து அமைதி காண முயற்சி மேற்கொண்டு வருகிறது.




மெக்சிகோவில் வெடித்துச் சிதறிய எரிமலை



மெக்சிகோ நாட்டில் சியுடாட் கஸ்மென் நகரில் உள்ள கொலிமா எரிமலை நேற்று வெடித்துச் சிதறி நெருப்புக்குழம்பைக் கக்கத் தொடங்கியுள்ளது. 5 கிலோமீட்டர் உயரத்திற்கு அது நெருப்புகுழம்பைக் கக்கியது. 12 ஆயிரத்து 540 அடி உயரம் உள்ள இந்த எரிமலை வெடித்ததில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கடந்த 15 ஆண்டுகளில் இத்தனை சீற்றத்துடன் இது வெடித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

உலகக்கோப்பை கால்பந்தாட்டப்போட்டி தகுதிச் சுற்று ஆட்டம்

2006 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றுப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தென்அமெரிக்க வட்டாரத்திலிருந்து அர்ஜென்டினா, பிரேசில் உட்பட 10 அணிகள் உள்ளன.

இதில் பிரேசில் அணி பராகுவேயை எதிர்த்து கடுமையாக விளையாடியது. இதில் பிரபல பிரேசில் நாட்டு வீரர் Ronaldo பங்கேற்காத சூழ்நிலையில் இளம் வீரர் Ronaltino பரபரப்பாக ஆடி 4&1 என்ற கோல் கணக்கில் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இன்று நடைபெறவுள்ள மோதலில் Brazil- லுடன் Argentina மோதுகிறது.

நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி