PDA

View Full Version : கையெழுத்து நீக்கம் / மாற்றம்



இராசகுமாரன்
07-06-2005, 05:57 AM
நண்பர்களே..

உங்கள் பதிப்புகளுக்கு கீழே தோன்றும் கையெழுத்து இன்னும் பலர் பழைய திஸ்கி எழுத்துருவிலேயே வைத்துள்ளார்கள். நமது இளம் உதவியாளர்கள் குழு பழைய பதிப்புகளை யூனிகோட் மாற்றம் செய்யும் போது இது பிரச்சனையாக உள்ளது.

அதனால், நாளை அனைத்து கையெழுத்துக்களையும் அழிக்க உள்ளோம். இதன் மூலம் அனைத்து திஸ்கி கையெழுத்துக்களும் அழிந்து விடும். பிறகு அதற்கு அடுத்த நாள் நீங்கள் முன்பு போல் உங்கள் கெயெழுத்து புதிய எழுத்துருவில் மீண்டும் போட்டுக் கொள்ளலாம்.

கையெழுத்து எப்படி வைத்திருந்தோம் என நகல் எடுத்து வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்காக முன்னெச்சரியாக இந்த அறிவிப்பு வெளியிடப் படுகிறது.

இந்த ஒரு நாள் அவகாசம் போதுமென நினைக்கிறேன். போதாவிடில் கூறவும், இன்னொரு நாள் வேண்டுமென்றால் நீட்டித்துக் கொள்ளலாம்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி..

இராசகுமாரன்

அறிஞர்
07-06-2005, 06:19 AM
நல்ல முடிவு...... அமல்படுத்துங்கள்....

மன்மதன்
07-06-2005, 06:32 AM
ஒரு நாள் அவகாசம் போதும். அழிக்கப்படும் திஸ்கி கையெழுத்துகளை கோர்வையாக பேக் அப் எங்கேயாவது வைக்க முடியுமா??
அன்புடன்
மன்மதன்

இராசகுமாரன்
07-06-2005, 06:34 AM
மன்மதன்,
அழிக்கப் படும் என்றால் நிரந்தரமாக நீக்கப் படும் என்று தானே அர்த்தம்!!!
அவரவர் கையெழுத்தை அவரவரே "பேக்-அப்" செய்து கொள்ளத் தான் இந்த அறிவிப்பு.


ஒரு நாள் அவகாசம் போதும். அழிக்கப்படும் திஸ்கி கையெழுத்துகளை கோர்வையாக பேக் அப் எங்கேயாவது வைக்க முடியுமா??
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
09-06-2005, 11:55 AM
அனைவரின் கையெழுத்துக்களும் அழிக்கப்பட்டுவிட்டது என எண்ணுகிறேன்...

இனி புதிய கையெழுத்துக்களை உருவாக்கிக்கொள்ளுங்கள்...