PDA

View Full Version : பூ



suma
13-05-2003, 07:30 PM
பூ..........பூ



பூ...

எந்த நேரத்தில் மொட்டானாய்...

எப்போது வளர்ந்து

மலரும் பருவம் எய்தினாய்,....

என்று மலர்ந்தாய்

உன்னை

கண் கொட்டாமல் கவனித்தும்

நீ மலரும் நேரம் இன்னும்

புலப்படவில்லையே......


இது ஒரு பூ மலரும் நேரம் எப்போது என தெரியாததால் எழுந்த கவிதை..
இது எழுதி முடித்து படித்து பார்த்த பின் நம் பூ விற்கும் பொருந்துவது போல் உள்ளது..

இளசு
13-05-2003, 08:00 PM
வாழ்த்துகள் சுமா...



இதை அண்ணன் இருவிதமாய் விமர்சனம் செய்கிறேன்....





வைரமுத்து ரசிகனாய்.....

ஒரு மொட்டு அவிழுவதன்

சத்தமற்ற மொழியையும்

கேட்கத் தவறி ஏங்கும்

என் தங்கைக்குப் பாராட்டு!



விவரணப் பட ரசிகனாய்.......

மணிக்கணக்கில்

மில்லியன் பிரேம் எடுத்து

அதை அரை நிமிஷத்தில்

ஓட்டிக் காட்டும்

விசேஷ காமிரா வேண்டும் சுமா

உங்கள் சின்ன சின்ன ஆசை...

பெரிய பெரிய பட்ஜெட்!!!!!



கடைசியாய் சொன்ன கமெண்ட்...

நோ கமெண்ட்ஸ் !!!!!!

gans5001
13-05-2003, 09:50 PM
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற கண்ணதாசனின் வரிகளை படித்ததிலையா? மலரும் தேதி தெரியாததன் மலரின் மீது காதல் வரக்காரணமே

poo
14-05-2003, 06:55 AM
எனக்கு பொருந்துகிறதா???!!...(புரியவில்லை.. ஒன்றும் புலப்படவில்லை..)



நல்லதொரு (காதல்)கவிதை சுமா..

வாழ்த்துக்கள்!!!

suma
14-05-2003, 10:01 PM
Posting 1099 பூ

karikaalan
15-05-2003, 09:05 AM
மலர், தான் மலர்வதைத்தான் பறைசாற்றி அறிவிக்கிறதே -- தனது நறுமணம் வீசி!



நல்ல கவிதை சுமாஜி, வாழ்த்துக்கள்.



===கரிகாலன்

பைத்தியகாரன்
15-05-2003, 05:15 PM
நல்ல முயற்சி நண்பி

Nanban
16-05-2003, 09:03 AM
எனக்கு பொருந்துகிறதா???!!...(புரியவில்லை.. ஒன்றும் புலப்படவில்லை..)


நல்லதொரு (காதல்)கவிதை சுமா..

வாழ்த்துக்கள்!!!



எப்பொழுது வருவீர்கள், கவிதை படைப்பீர்கள், போவீர்கள் என்று தெரியவில்லை என்ற கருத்துப் படச்சொல்லியிருக்கிறார்........



இந்தக் கருத்து இந்தக் கவிதை மன்றத்திற்குக் கூடப் பொருந்தும் போலிருக்கிறதே?

Narathar
17-05-2003, 04:11 AM
நன்றாகவே பொருந்துகிறது!

வாழ்த்துக்கள்!!!

இருவருக்கும்!!!! ;)

puppy
08-01-2004, 08:48 PM
நம்ம சுமாவா.....நல்ல கவிதை

சேரன்கயல்
09-01-2004, 08:37 AM
இயற்கையின் விந்தைகளில் இந்த பூ மலர்வதும் அதிசயமே...

இனிய இளசு சொன்னது போல...மொட்டவிழும் விந்தையை படமாக்க முயன்று பார்க்கவேண்டும்...

தயாரிப்பாளர் இக்பால் அண்ணன்...எங்கிருந்தாலும் வரவும்...

சேரன்கயல்
09-01-2004, 08:39 AM
பூவின் அதிசயத்தை இங்கே பூக்கச் செய்த தோழி சுமாவுக்கு பாராட்டுக்கள்....

இ.இசாக்
09-01-2004, 12:19 PM
சுமா அவர்களே!

ஒரு தாய்

உறங்கி எழுகிற சூத்திரம்

அறிந்தவர்கள் அறிவார்கள்.



தாய்மை ததும்பும் உள்ளம்

அறியும்

அதன் வலியையும்

அமரன்
02-11-2007, 07:44 PM
நியம பிரேம்களை மீறி
படம்பிடிக்கா கண்களையும்
நியம டெசிபல்
ஒலியை வாங்கும் காதுகளையும்
எனக்குத் தந்த இறைவா.....!

பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை...!
பூவிரியும் காட்சி
அதைப் பார்க்க வேண்டுமுன் ஆசி...!

பாடவைத்த சுமாவை
தேடவைத்தது பா...!

மனோஜ்
02-11-2007, 07:51 PM
அட நம்ம பூவிக்கே பூவா
இப்பவும் இங்கு மன்றத்தில் பூக்கள் அதிகம் அனைவருக்கும் பொருந்தும் கவிதை அருமை

பூமகள்
03-11-2007, 05:26 AM
"பூ புன்னகை செய்து இதழ் விரியும்
காட்சி பார்க்க ஆசை
கொண்டதோ கவியுள்ளம்??
பூ அந்த ரகசிய தகவலை
வண்டுகளோடு மற்றும்
பரிமாறிக்கொண்டதாம்..!!

வண்டினத்திடம் பூச்
செண்டு பற்றி விசாரியுங்கள்..!!"

ஒரு வேளை விவரம் அறிய
இயலலாம்..!!

நல்லதொரு கவி..!!
வாழ்த்துகள் சுமா..!!

ஓவியன்
03-11-2007, 06:51 PM
"பூ" என்பதே ஒரு சொற்கவிதை
அந்த பூவுக்கே ஒரு கவிதையா...??

"பூ" கவி வடித்த நங்கையை
தேடுகிறது இன்னும் பல கவி
தேடும் மனது.....!!

அந்த தேடலில் எங்கள் மன்ற
"பூ" வும்
மீள மன்றம் வந்து மலரட்டும்....!!