PDA

View Full Version : எது வெட்கம்?!!



poo
25-05-2003, 05:05 PM
உன் கட்டைவிரல்

மாக்கோலம் மேலிட்ட

பூக்கோலம்......



உன் சிவந்த நாக்கு

சில நொடிகள்

பளீர் பற்களுடன் நடத்திய

சல்லாப விளையாட்டு..



உன் கருவிழிகள்

கணமான பார்வை

மின்னலொன்றை இறக்கி

ஒளி வெள்ளத்தில்

வெள்ளி மெட்டியை

ஜொலிக்கவைத்த வித்(ந்)தை...



உன் வெண்டை விரல்கள்

வீசிய புதிரில்

தலைசுற்றிய தாவணி முடிச்சு..



இதில் எது வெட்கம்?!!......

rambal
25-05-2003, 06:44 PM
காதல் கவியே...

அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்துவிட்டீரா?

எல்லாமே வெட்கம்தான்..

வெட்கபடவே பிறந்தவள் பற்றி அண்ணன் காலம் வரை காலம் நமக்கிருந்தால்

என்றுதான் கூறியுள்ளார்..

வெட்கப்படும் பெண்ணிற்கு அதீதப் பொறுமை வேண்டும்..

ஆகவே,

வெட்கம் விலக்கிவிடச் சொல்லுங்கள்...



பாராட்டுக்கள் பூ.. அழகாய் வெட்கத்தை வெளிப்படுத்தியமைக்கு..

முத்து
25-05-2003, 10:34 PM
நல்ல அருமையான கவிதை .. பாராட்டுக்கள்.. பூ..

Nanban
26-05-2003, 03:45 AM
வெட்கத்தின் விளக்கங்கள்

வெகு நன்றாகத் தான் இருக்கிறது.

இன்னும் இருக்கலாம்.

மிக அருகில் இருந்து பார்த்தவர்கள்

அனுபவித்தவர்கள்

சொல்லலாமே...

prabha_friend
26-05-2003, 07:45 AM
எனக்கு ஒன்னும் புரியல . ஒரு வேலை சின்னப்பசங்களுக்கு புரியாதோ என்னவோ?

karikaalan
26-05-2003, 01:54 PM
"வெட்கப்படும் பெண்ணிற்கு அதீதப் பொறுமை வேண்டும்" -- ராம்பால்ஜி.



அதனை சகித்துக்கொண்டு, உறவாடும் சமயத்தை நோக்கி இருக்கும் ஆணுக்கும்தான்!!



பூ ஜி! அருமையான வரிகள். வாழ்த்துக்கள். ரசித்தேன்!



===கரிகாலன்

puppy
08-01-2004, 08:46 PM
பூ அருமையான வரிகள்.........

poo
09-01-2004, 02:11 PM
பூ அருமையான வரிகள்.........மிகவும் நன்றி பப்பி அவர்களே...

நிலா
09-01-2004, 07:30 PM
பூ காதலின் ஆரம்பகாலக்கவிதையோ?

அருமை!பாராட்டுகள்!