PDA

View Full Version : இன்று வரை காணவில்லை.



puppy
09-01-2004, 05:01 PM
கடலில் இருந்து முத்து

எடுத்து வருகிறேன் என்றான்

தேவையில்லை என்றேன்



வானத்தில் இருந்து நிலவை

பிடித்து தருகிறேன் என்றான்

தேவையில்லை என்றேன்



என் புடவைக்கு நூல்

ஆவேன் என்றான்

தேவையில்லை என்றேன்



தாலிகட்டு என்றேன்

இன்று வரை காணவில்லை

poo
09-01-2004, 05:38 PM
காதலென சொல்லி ஏதோவொன்றை நடத்துகிறார்களே... அதன் இன்றைய நிலை இதுதான் பப்பி அவர்களே...



அருமையாக சொன்னீர்கள்....

நிலா
09-01-2004, 05:45 PM
அடடாஆஆ நல்லாச்சொன்னீங்க பப்பி!

பாராட்டுகள்!

Nanban
09-01-2004, 06:23 PM
எல்லாம் தருவான் - ஆனால் தாலி மட்டும் தரமாட்டான்...... இதுதான் பலரின் காதல் நிலைமை.......



நல்ல கவிதை தான்...... எளிமையாக, ஆண்களை மெல்லச் சாடும் சுவை..........

இளசு
09-01-2004, 09:16 PM
வேறு மதக்காரனோ

மோதிரம் கேட்டிருக்கலாமோ..



ஹிஹி.. சப்பைமூக்கானபின் ஆ. அணியின் சப்பைக்கட்டு இது..



Cold Feet வருவது

இரு பாலருக்கும்தானே பப்பி அவர்களே?

puppy
09-01-2004, 09:19 PM
ஆண்கள் மட்டும் ஏன் இப்படி என்று கேட்டனா நான் ?

ஏன் இந்த டிபன்ஸ்

பென்ஸ்
04-08-2006, 06:36 PM
நல்ல கவிதை...

ஆனால் இன்றய நிலவரபடி கவிதையில் குறிப்பிட்ட பால் மாற வேண்டும் போல்... பின்ன என்னாங்கோ... இன்றய நிலமை அப்படி ஆயிடுச்சு....

வாழ்த்துகள் பப்பி....

mgandhi
08-08-2006, 11:29 AM
தாலிகட்டு என்றால் அத்துடன் மனிபர்ஸ்சும் சேர்ந்து அல்லவா போய்விடும்

vckannan
08-08-2006, 11:30 AM
நல்ல கவிதை...

ஆனால் இன்றய நிலவரபடி கவிதையில் குறிப்பிட்ட பால் மாற வேண்டும் போல்... பின்ன என்னாங்கோ... இன்றய நிலமை அப்படி ஆயிடுச்சு....
வாழ்த்துகள் பப்பி....

:D :D

vckannan
08-08-2006, 11:32 AM
வர வர வெவகாரமாத்தான் போகுது

:D :D

vckannan
08-08-2006, 11:33 AM
தப்புதான் அந்த பையான் செஞது தப்புத்தான்

ஆனா கட்டினா பின்னாலும் தப்பு பண்ணதாதான் பல பேரு நினைக்கறாங்க:D :D

தாமரை
08-08-2006, 02:35 PM
நல்ல கவிதை...

ஆனால் இன்றய நிலவரபடி கவிதையில் குறிப்பிட்ட பால் மாற வேண்டும் போல்... பின்ன என்னாங்கோ... இன்றய நிலமை அப்படி ஆயிடுச்சு....

வாழ்த்துகள் பப்பி....
நம்ம பென்ஸூ பிரப்போஸ் பண்ணி ஒரு பொண்ணு மாட்டேன்னு சொல்லிட்டாளா? மக்களே கேளுங்க என்னன்னு...

பென்ஸ்
08-08-2006, 02:50 PM
நம்ம பென்ஸூ பிரப்போஸ் பண்ணி ஒரு பொண்ணு மாட்டேன்னு சொல்லிட்டாளா? மக்களே கேளுங்க என்னன்னு...

யோவ்... அப்படி ஒன்னும் இப்போ இல்ல (இதுக்கு முன்னால பலதும் அப்படி நடந்திருக்கு)...

நல்லா பழகுறங்க...
சுத்துறாங்க...
கூத்தடிக்கிறாங்க...
கல்யாணம்ன்னு சொன்னா (கல்யாணம் என்ன .. காதலிக்கிறென் என்று சொன்னா கூட) ...
அவ்வளவுதான் ...
எஸ்கேப் ஆயிடுறாங்க....


இதுல டயலாக்கு வேற....
இவங்க அப்பா, அம்மா பாக்குற பையனதான் கட்டிக்குவாங்களாம்...
இதுதான் இன்றைய பெங்களுர் நிலை....

ஓவியா
08-08-2006, 02:52 PM
தாலிகட்டு என்றால் அத்துடன் மனிபர்ஸ்சும் சேர்ந்து அல்லவா போய்விடும்


மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ........
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதுடா

பெண் வருவது தெரியவில்லையா......
இம்மாதுண்டு மனிபர்ஸ்சுதான் தெரியுதா?

தாமரை
08-08-2006, 02:58 PM
யோவ்... அப்படி ஒன்னும் இப்போ இல்ல (இதுக்கு முன்னால பலதும் அப்படி நடந்திருக்கு)...

நல்லா பழகுறங்க...
சுத்துறாங்க...
கூத்தடிக்கிறாங்க...
கல்யாணம்ன்னு சொன்னா (கல்யாணம் என்ன .. காதலிக்கிறென் என்று சொன்னா கூட) ...
அவ்வளவுதான் ...
எஸ்கேப் ஆயிடுறாங்க....


இதுல டயலாக்கு வேற....
இவங்க அப்பா, அம்மா பாக்குற பையனதான் கட்டிக்குவாங்களாம்...
இதுதான் இன்றைய பெங்களுர் நிலை....

ஆகாகா அந்தப் பொண்ணு பெங்களூரா? அப்புறம் ??
:rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
08-08-2006, 03:02 PM
ஆகாகா அந்தப் பொண்ணு பெங்களூரா? அப்புறம் ??
:rolleyes: :rolleyes: :rolleyes:

இதுதான் அமெரிக்கா பயணதின் முக்கிய காரணாமா....


பாவம் பென்ஸூ,.....;)

vckannan
09-08-2006, 07:19 AM
யோவ்... அப்படி ஒன்னும் இப்போ இல்ல (இதுக்கு முன்னால பலதும் அப்படி நடந்திருக்கு)...

நல்லா பழகுறங்க...
சுத்துறாங்க...
கூத்தடிக்கிறாங்க...
கல்யாணம்ன்னு சொன்னா (கல்யாணம் என்ன .. காதலிக்கிறென் என்று சொன்னா கூட) ...
அவ்வளவுதான் ...
எஸ்கேப் ஆயிடுறாங்க....


இதுல டயலாக்கு வேற....
இவங்க அப்பா, அம்மா பாக்குற பையனதான் கட்டிக்குவாங்களாம்...
இதுதான் இன்றைய பெங்களுர் நிலை....

ஊரப்பத்தி இப்படி போட்டு தாக்கிடேங்களே.
என்ன பண்ணறது எல்லாம் நேரந்தான்:confused:

ஒன்னு இரண்டு நல்லது கூடவா தேரல அடப்பாவமே.:mad:

மதி
09-08-2006, 07:45 AM
கண்ணன்...
பாவம் பென்ஸ்...ஒன்னு ரெண்டு கூட தேறல..(அவரு மட்டுமா..?)
ஆமா நீங்க எப்படி.?பென்ஸ் மாதிரியா..இல்ல சரவணன் மாதிரியா..?

sarcharan
09-08-2006, 07:55 AM
ஆகாகா அந்தப் பொண்ணு பெங்களூரா? அப்புறம் ??
:rolleyes: :rolleyes: :rolleyes:


விடுங்க செல்வன், நீங்க வேற சின்னபுள்ளை(களை பார்க்கும்) பென்ஸை ஓட்டிக்கிட்டு.....

அவரு தான் அடிக்கடி ட்ரெக்கிங் போறவராச்சே அப்புறமும் என்ன இந்த கேள்வி...

பென்ஸூ--> பெண்-(இ)ச்-சு--> பெண்-ச்சூ

செல்வன், இதன் விரிவாக்கத்தை விளக்கவும்....

sarcharan
09-08-2006, 07:57 AM
இதுதான் அமெரிக்கா பயணதின் முக்கிய காரணாமா....


பாவம் பென்ஸூ,.....;)


சின்ன ட்ரெக்கிங் பெரிய ட்ரெக்கிங் என்று சொல்ல வருகிறீர்களா ஓவியா?

மதி
09-08-2006, 07:58 AM
இதுக்கும் மேல விரிவாக்கமா..? வேண்டாம்..பண்பட்டவர் பதிப்பாயிட போகுது..

அமரன்
18-05-2007, 05:04 PM
பப்பியின் கவிதையில் நடைமுறை நிஜம் பளிச்சிடுகின்றது.

சூரியன்
20-05-2007, 10:57 AM
இன்றைய காதலின் நிலை இப்படிதான் இருக்கு என்று என்னி விடாதீர்கள்.
பெண்களும் ஆண்களை ஏமாற்றுகிரார்கள்!

சக்தி
20-05-2007, 11:09 AM
அவன் சொன்னதியெல்லாம் விட்டுவிட்டு சொல்லததைக் கேட்டால் அவன் என்ன செய்வான். இப்படியே ஆண்கள் மேல் பழிய போட்டுவிடுங்கள். பாவம் அவன் என்ன நெனச்சானோ

ஓவியா
21-05-2007, 02:47 AM
சட்ட மன்றத்திலும் 50/50 வேண்டும்.
ஏமாறுவதில் 80/20. - குறைந்தது எமாற்றுவதிலாவது
50/50 சமப்பங்கீடு கொடுங்கப்பா.

ரொம்பத்தான் கஞ்சமாக இருகின்றீர்கள் தோழர்களே.

சக்தி
21-05-2007, 04:43 AM
தோழி ஓவியா

ஆள விடுதாயி இந்த விளையாட்டுக்கு நாங்க வரவில்லை

மயூ
21-05-2007, 06:32 AM
ஹா.. ஹா..
நல்ல கற்பனை.. எல்லாக் காதலர்களும் அப்படியிலலை என்பதையும இங்கே கூறுகின்றேன்...

ஒருத்தன் அப்படி என்பதனால்
உலகமே அவ்வாறாகிடுமோ?
காதலி காலடியில்
உலன்று திரியும் காதலர்கள்
ஆயிரமாயிரம் உண்டு நம்பூமியியில்

அன்புரசிகன்
22-05-2007, 07:51 AM
அது தான் ஆண்மக்களுக்கு சமமாக நாமும் நிற்கிறோம் என பெண்மக்கள் கூறுகின்றார்களே. அதன் உள்ளர்த்தம் விளங்கலியா? எல்லாத்திலும் சமத்துவம் தானே...

சூரியன்
23-05-2007, 11:38 AM
புரிந்தது நண்பரே புரிந்தது