PDA

View Full Version : தண்ணீரின் தாகம் !!!



முத்து
03-05-2003, 02:17 PM
தண்ணீரின் தாகம் !


நான் ஒரு சிரஞ்சீவி !

காலச்சக்கரத்தால் அழிக்கப்படா

சிற்சில பேர்களிலே

நான் முதல்வன்.


நானே பெரும்பகுதி !

இவ்வுலகில் மட்டுமல்ல,

உங்கள் உடலிலும்தான்.


நான் சமத்துவத்திற்கோர் முன்னுதாரணம் !

கர்ப்பக்கிரகக் கடவுளையும்,

காரிருள் நெஞ்சம் கொண்ட கடையோனையும்

சமமாகப் பாவித்து நீராட்டுவதால்.


நான் தவிர்க்கமுடியாதவன் !

மண்ணை,பொன்னை,பெண்ணை வெறுத்தோரும்

என்னை வேண்டாமென்று சொல்லமுடியாததால்.


நான் பொதுநலவாதி !

பிறரை சுத்தமாக்கி

நான் அழுக்காவதால்.


நான் இவ்வுலகத் தேரின் அச்சாணி !

அதுமட்டுமல்ல,

அத்தேரின் சக்கரங்களும் நானேதான்.


தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என

என்னைப் பாராட்டும் மக்களே !

ஒரு சிறு விண்ணப்பம்,

கேவலமான, மக்களைக் கெடுக்கும் மதுவுக்கு

என் பெயரைச் சூட்டாதீர் !!!!

rambal
03-05-2003, 03:39 PM
அருமை முத்து அவர்களே...

தண்ணீரைப் பற்றி ஒரு வித்யாசமான கண்ணோட்டம்..

நீங்கள் ஒரு முத்தாய் திகழப்போகின்றீர்கள்...

பாராட்டுக்கள்..

இராசகுமாரன்
03-05-2003, 05:25 PM
அருமையான கவிதை நண்பரே..

கடைசியில் ஒரு விண்ணப்பத்தோடு அழகாக முடிந்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

முத்து
03-05-2003, 05:52 PM
அருமையான கவிதை நண்பரே..

கடைசியில் ஒரு விண்ணப்பத்தோடு அழகாக முடிந்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

நன்றிகள் பல !மோதிரக் கையால் குட்டு வாங்கியமைக்கு மகிழ்கிறேன்.!

இளசு
03-05-2003, 05:55 PM
முத்து .. தலைவர் குட்டு வைக்கவில்லை.. உங்கள் விரலுக்கு

மோதிரம் வழங்கி இருக்கிறார்!

குமரன்
04-05-2003, 01:34 AM
முத்து...நீர்(தந்த ) க்கவிதை அருமை...



அனைவரையும் உற்சாகம் கொள்ள வைக்கும்

உங்கள் கையெழுத்தும்தான்...



பாராட்டுக்கள் பல.

poo
04-05-2003, 01:32 PM
அருமை முத்து... அசத்தலாய் படைத்திட்டமைக்கு பாராட்டுக்கள்!!!!

Narathar
06-05-2003, 04:36 AM
அடடா!

அழகான, அருமையான ஒரு கவிதை..............

உங்கள் பெயர் முத்து என்றிருப்பது சாலப்பொருந்தும்!

suma
06-05-2003, 02:25 PM
தண்ணீர் அருமை அது தேவையின் போது கிடைக்காமல் தவிக்கும் போது தான் தெரியும்.அருமை.முத்து

prabhaa
06-05-2003, 11:42 PM
கேவலமான, மக்களைக் கெடுக்கும் மதுவுக்கு

என் பெயரைச் சூட்டாதீர் !!!!





"கேவலமான" சொல்லிற்கு பிறகுள்ள ","வையும் நீக்கிவிடுங்கள்.

கேவலமான மக்கள் தான் அதைக் குடிப்பவர்கள்.



அருமையான் எண்ண ஓட்டம், பாராட்டுக்கள் முத்து.

madhuraikumaran
07-05-2003, 05:09 AM
கேவலமான மக்கள் தான் அதைக் குடிப்பவர்கள்.



போச்சு... பிரபாவுக்கு இன்னைக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்....



முத்து.... தண்ணீர்க் கவிதை அருமை !! பாராட்டுக்கள் !!!

kaathalan
07-05-2003, 02:56 PM
முத்தானதும் அருமையான கவிதை தந்த கவிஞருக்கு நன்றிகள். உங்கள் கோரிக்கை பரிசிலிக்கப்படும். ஆமாம் நாங்கள் வைக்கும் பெயர் தண்ணி அல்லவா அது தண்ணீர் அல்லவே

அறிஞர்
08-05-2003, 07:41 AM
முத்தான கவிதைக்கு வாழ்த்துக்கள் ..

prabhaa
08-05-2003, 10:55 PM
போச்சு... பிரபாவுக்கு இன்னைக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்....



அதெப்படி அன்பரே, தமிழ் வளர்க்கும் நண்பர்கள் யாரும்

குடிக்கமாட்டார்கள் அயிற்றே. அதனால் தான் தைரியமாக

எழுதினேன்

inian
31-05-2003, 04:40 PM
"கேவலமான" சொல்லிற்கு பிறகுள்ள ","வையும் நீக்கிவிடுங்கள்.கேவலமான மக்கள் தான் அதைக் குடிப்பவர்கள்.

அருமையான் எண்ண ஓட்டம், பாராட்டுக்கள் முத்து.



அட ..அமெரிக்காவில் இப்படியும் ஒரு மனிதரா ?...வியப்புடன் பாராட்டுக்கள் பிரபா...

chezhian
31-05-2003, 09:07 PM
முத்து உங்கள் கவிதை மிக அருமை

பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்...

முத்து
22-06-2003, 12:08 PM
பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..நன்றி...நன்றி...

முத்து
08-01-2004, 11:04 PM
நல்ல வேளையாக மன்ற விழாவுக்கு வந்த யாரும்

இதைப் படிக்கவில்லை ...

நண்பர் பிரபா தப்பித்தார் ... :) :D

kavitha
09-01-2004, 10:59 AM
சரியாகச்சொன்னீர்கள் பிரபா!

அப்படியும் அருந்துபவர்களை,

மட்டுமா பழிக்கிறார்கள்?

அவர்களை வளர்த்த தாயையும் தானே!

தன் தாயை நேசிப்பவன் எவனும்

தவறு செய்ய மாட்டான்.



கவிதை அருமை முத்து அவர்களே!

நிலா
09-01-2004, 07:55 PM
அசத்தலான கவிதை வரிகளில் கலக்கிய முத்துவிற்கு பாராட்டுகள்,வாழ்த்துகள்

பார்வையாளர்,படைப்பாளரானப்போ பதித்ததை கண்காணிப்பளாரானப்பிறகு வாழ்த்துகிறேன்.தாமதத்திற்கு மன்னிக்கவும்!

முத்து
09-01-2004, 09:09 PM
ரொம்ப நன்றிங்க நிலா ...

நன்றி கவிதா அவர்களே ...

நிலா
09-01-2004, 10:10 PM
ரொம்ப நன்றிங்க நிலா





என்ன முத்து திடீரென மரியாதை பலமா இருக்கு!ஒன்னுமேஏஏஏஏ புரியல உலகத்துலஆஆஆஆஆஆஅ

முத்து
09-01-2004, 10:25 PM
ரொம்ப நன்றிங்க நிலா





என்ன முத்து திடீரென மரியாதை பலமா இருக்கு!ஒன்னுமேஏஏஏஏ புரியல உலகத்துலஆஆஆஆஆஆஅ



திடீன்னா.. ?

அப்படியெல்லாம் இல்லை ..

நிலா மேல எப்பவுமே மரியாதை உண்டு ... :wink:

நிலா
09-01-2004, 10:26 PM
ஹலோஓஒ எப்பவும் நன்றி நிலான்னு சொல்லிட்டு இப்ப நன்றிங்க நிலான்னா?

கடைசிவரியப்பார்த்துட்டு பயந்துபோயிட்டேன் முத்து! :wink:

முத்து
09-01-2004, 10:33 PM
கடைசிவரியப்பார்த்துட்டு பயந்துபோயிட்டேன் முத்து!

நீங்க பயந்தால் பரவாயில்லை ..

ஆனால் உஷாராயிடாதீங்க ...

இளசு
08-01-2009, 05:16 AM
முத்து...

மன்றம் ஈந்த முத்தான இளவல்!

நீரின்றி அமையாது உலகு என்னும் பெருமை கொண்ட நீரின்
தாபத்தை கடைசி வரியில் வைத்துத் தந்த கவிதை!

நினைவுக்கடலில் மூழ்கிக் கண்டெடுத்த ''முத்து''!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-01-2009, 04:34 PM
அட! அசத்தல்ங்க.

நேசம்
13-01-2009, 06:12 AM
உங்கள் பெயரை போல் முத்தான கவிதை.வாழ்த்துகள்.