PDA

View Full Version : மனைவி........poo
24-05-2003, 10:26 AM
அதிகாலை குளிரில்

விழித்திருந்தும் எழாமல்

நிமிடமொருமுறை தலைநீட்டி

வேகமாய் வைத்த நேரம் மிச்சமிருப்பதாய்

மனதுக்குள் பேசிக்கொண்டு

காபிபோடவும் மனசில்லாமல்

கால்களை மார்புமேல் போட்டு..

காட்சிகளை கனவுகளாக்கிவிட்டு

கனவுகளை காட்சிகளாய்

கற்பனை செய்து

விடியலில் தேடலை தேடிக்கொண்டிருக்கையில்

ஆலைச்சங்கு அலறியது...

பதறியெழுந்து

போர்வையொடு என்னையும்

உதறிவிட்டு..

குக்கரில் அரிசியிட்டு

மூன்றாம் விசிலில் நிறுத்தும்படி

என்னால் முடியாதென்றாலும்

அரைத்தூக்கத்தில் கட்டளையிட்டு

அவசர வேகத்தில்

குளியலறை நுழைந்தாள்..

அரைக்கண்ணால் கவனித்தேன்..

எடுக்க மறந்த மாற்றுத்துணி..

எரிச்சலடையாமல்(?!)

எழுந்து சென்று

எட்டிப்பார்த்தேன்...

செல்லமாய் ஒரு குட்டுவைத்து

"ஏனிந்த கஷ்டம் சார்"..

கண்களை பொத்தி

கதவை மூடினாள்..காக்கா குளியல்..

குளித்துமுடித்த குயில்..

குளியலறைவிட்டு

கண்ணாடிமுன் சிறகடித்தது..

கண்களை கசக்கிக்கொண்டே

கட்டிலில் அமர்ந்து

காட்சிகளை கண்டிருக்கையில்..

துலக்க மறந்த பல்..

கழற்றிவிட்ட கூந்தல்..

அவள் கரங்களில் பிரஷ்..

என்னுடையதில் சீப்பு..

தேங்ஸ்டா செல்லம்

குங்குமத்தை வகிடில்..கொஞ்சமாய் சாதம்

இரவே வைத்த புளிக்குழம்பு..

தயாரானவுடன்

கைப்பையை தோளில்

மாட்டி..

கண்ணங்களை பற்றி

சற்றே நிமிர்த்தி

உதடுகளில் சத்தமாய்

முத்தமிட்டு..

ஆபிஸ் போனதும்

போன் பண்றேன்..

பத்திரமாய் இருங்கள்..

படியிறங்கிப்போவதை

ஜன்னலில் கண்வைத்து

கண்கள் பனிக்க

பார்த்துக்கொண்டிருந்தேன்..

விபத்தொன்றில்

இருகால்களை இழந்தபின்

தந்தையாய்..தாயாய்.. மகனாய்..

துளியும் முகம்கோணாமல்

எனை நடத்தும்

என் மனைவியை

கண்கள் பனிக்க பார்த்துக்கொண்டிருந்தேன்..

lavanya
24-05-2003, 11:23 AM
நல்ல கவிதை தம்பி.... அந்த இறுதி வரியின் அதிர்ச்சியை சத்தியமாய்

எதிர்பார்க்கவேயில்லை...பாராட்டுக்கள்

முத்து
24-05-2003, 03:03 PM
அருமையான, நெஞ்சைத் தொட்ட கவிதை...பாராட்டுக்கள் பூ..

rambal
24-05-2003, 03:29 PM
அருமையான சிறுகதையை கவிதையாக வடித்தமைக்கு

பாராட்டுக்கள்..

prabha_friend
24-05-2003, 03:36 PM
அருமையான கவிதை .

Nanban
24-05-2003, 05:14 PM
கால் இழந்தவருக்கும்,

காலால் உதைப்பவருக்கும்

பணி செய்து கிடப்பதே கடமையாய்

காலம் முழுவதற்கும்

உழலும் பெண்கள் ஆயிரமுண்டு.........பாராட்டும் மனம் கொண்டவர் மட்டும்

பூவின் இதழ்களைப் போன்று

ரொம்பக் கொஞ்சம்.......

poo
25-05-2003, 12:50 PM
பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!!!

suma
25-05-2003, 07:23 PM
குடுத்து வைத்த மனைவி
வாழ்த்துக்கள் பூ.

poo
25-05-2003, 07:34 PM
குடுத்து வைத்த மனைவி

வாழ்த்துக்கள் பூ.கொடுத்து வைத்த கணவன்............. என்ன சுமா சரியாக புரியவில்லையா எனக்கு?!!

suma
25-05-2003, 07:38 PM
நான் தான் பிழையாக அடித்துவிட்டேன் .

கொடுத்துவைத்தவன் மனைவி.

gankrish
26-05-2003, 05:08 AM
பூ அருமயாய் எழுதியிருக்கிறீர்கள். கடைசி வரி தாக்குதல்.... எதிர்பார்க்கவில்லை

karikaalan
26-05-2003, 02:01 PM
பூ ஜி!

இன்றுதான் படித்தேன். மறக்கமுடியாத வரிகள். அவர்களுக்கு அறிவுரை சொல்லவும் -- ஜெய்ப்பூரில் செயற்கைக் கால்கள் பொருத்துகிறார்கள் -- கிட்டத்தட்ட இலவசமாக.

===கரிகாலன்

poo
26-05-2003, 03:30 PM
பூ ஜி!


இன்றுதான் படித்தேன். மறக்கமுடியாத வரிகள். அவர்களுக்கு அறிவுரை சொல்லவும் -- ஜெய்ப்பூரில் செயற்கைக் கால்கள் பொருத்துகிறார்கள் -- கிட்டத்தட்ட இலவசமாக.


===கரிகாலன்

உபயோகமான தகவலுக்கு நன்றி அண்ணா... ஆனால் இது முழுக்க கற்பனை..

puppy
08-01-2004, 08:58 PM
அருமையான கனமான வரிகளுடன்...ஏன் இந்த கஷ்டம் சார்-ன்னு சொல்லும்போதே பொறி தட்டியது....பின்னால் ஏதோ இருக்கும் என்று....

puppy
08-01-2004, 09:00 PM
இதை படிச்சவுடன் தான் ஞாபகம் வருது...லண்டனுக்கு பக்கத்தில் தன் திருமணத்துக்கு தன் கட்டிக்க போறவனுடன் பைக்கில் செல்ல ஆசைபட்டு அவளுடைய அந்த திருமண உடை சக்கரத்தில் மாட்டி அவளையும் உள்ளே இழுத்து செல்ல அவளை காப்பாற்ற கால்களை வெட்டியே ஆக வேண்டும் என்று வெட்டி உயிரை காப்பாற்ற அவள் கணவனாக ஆக போறவனோ இனி உனக்கும் எனக்கும் ரெண்டு கால்கள்

என்று சொன்னது........மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்....

kavitha
09-01-2004, 10:58 AM
நல்ல கற்பனைக்கவிதை! உமக்கும் அவள்போலே வாய்க்கட்டும்!

poo
09-01-2004, 02:14 PM
பப்பி அவர்களுக்கு தோண்டியெடுத்து என்னை மீண்டும் நெகிழ வைத்துவிட்டீர்கள்..உங்கள் நினைவுகள் உண்மையிலேயே மனதை பிசைகிறது.. நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்!!

poo
09-01-2004, 02:31 PM
உமக்கும் அவள்போலே வாய்க்கட்டும்!

நான் பெரும்பாக்கியசாலி கவிதா அவர்களே.... அப்படிப்பட்டவளே வாய்த்திருக்கிறாள்!!!

(வீட்டுக்கு விழாவுக்கு வாங்க... தெரியும்!!)

poo
09-01-2004, 02:35 PM
அட... என்னவொரு ஆச்சர்யம்...என் அன்பு அண்ணன் இன்னமும் இதற்கு கருத்து எழுதவில்லை!!!

Nanban
09-01-2004, 05:35 PM
பூவின் கவிதை அருமை.......பப்பியின் தகவலும் அருமை...இங்கேயும் அந்த மாதிரி ஆதர்ச தம்பதிகள் கதைகள் உண்டு. சென்ற வாரத்தில் வார இதழ்களில் வந்த செய்திக் கதை இது.......பார்வையிழந்த கணவன் - சக்கர நாற்காலியில் மனைவி - சென்ற வாரத்தில் வார இதழ்களில் வந்த செய்தி...... கணவர் ஓவியர் கூட. பவர்புல் லென்ஸ் வைத்த கண்ணாடி மாட்டிக் கொண்டு, அதன் மேல் தெலெஸ்கோப் வைத்து தான் பார்க்க முடியும் - ஓவியங்கள் வரைய முடியும் -அவர்கள் தங்கள் கதையை ஆங்கிலத்தில் ஒரு நாவலாக எழுதியிருக்கிறார்கள்.மனைவி முடமானது ஒரு விபத்தில். இன்று வரையிலும் இருவரும் சந்தோஷமாகத் தான் இருக்கின்றனர். சந்தோஷம் என்பது மனதில் என்பதை புரிந்து கொண்டவர்கள் அவர்கள்..........

நிலா
09-01-2004, 07:48 PM
எதிர்பாராத்திருப்பம் கொண்ட கவிதை!இந்த மனைவி கண்டிப்பாய் அவனுக்கு இறைவன் இறைவன் கொடுத்த வரம்தான்!

பப்பி,நண்பனின் தகவல்கள் நெகிழ்சி!

பாராட்டுகள் பூ!

இளசு
09-01-2004, 08:00 PM
அட... என்னவொரு ஆச்சர்யம்...என் அன்பு அண்ணன் இன்னமும் இதற்கு கருத்து எழுதவில்லை!!!சிலகாலம் கவிதைப்பக்கம் கண்ணெடுத்தும் பாராமல் இருந்ததன்

காரணமே உன்னைத் தூசென்று பழித்ததால் வந்த ஆதங்கக்கரிசனத்தால்..அந்த கருப்பு மாதத்தின் நினைவாய்

இன்னும் இது என் விமர்சனம் இல்லாமலே இருக்கட்டும்..

kavitha
10-01-2004, 04:39 AM
அழைப்பிற்கு நன்றி தோழரே!

பென்ஸ்
18-02-2006, 09:03 AM
நல்ல கவிதை பூ....

இவர்கள் வாழ்க்கையின் உன்னதம் புரிந்தவர்கள்... அடுத்தவர்கள் புரியும்
போது பாராட்டுவோம், ஆனால் நாமக்கு இதே போல ஒரு நிலமை
வந்தால் வேறும் சுயநலவாதிகளக....

என் நண்பன் ஒருவன் திருமனநிச்சயமாகி, திருமனத்திற்க்கு 2
வாரத்திற்க்கு முன் மணபெண் விபத்தில் காலை இழக்க, அவன் வீட்டர்
திருமனத்தை நிறுத்த அவனைடம் கேட்டபோது, அவன் "
திருமனத்திற்க்கு பிறகு நடந்த்திருந்தால் விவாக ரத்து பண்ன
சொல்லுவீர்களா என்ன??"" என்று கேட்டு அந்த பெண்ணையே
திருமணமும் செய்தது நினைவுக்க்கு வருகிறது....

நல்ல கவிதை தந்த பூவுக்கு நன்றிகள்....

இளந்தமிழ்ச்செல்வன்
18-02-2006, 04:36 PM
பூ இன்றுதான் படித்தேன். அதிர்ச்சி கொடுத்த வரிகளும், அதைத்தொடர்ந்த நண்பர்களின் தகவல்களும் (கரிகாலன்ஜி அவர்களின் உதவும் மனப்பாங்குக்கு அவரின் தகவல் ஒன்றே உதாரணம் (பூ இதற்கு உங்கள் பதிலைப் பார்த்ததும்தான் நிம்மதி வந்தது)) மனிதம் இறக்கவில்லை என்பதை காட்டுகிறது. நன்றி பூ.