PDA

View Full Version : காதல் கொ[ண்]டேன்...ஜீவா
26-02-2005, 02:45 PM
========================

காதல் கொ(ண்)டேன்...

இது என் காதலுக்கு இன்று நான் சூடிய தலைப்பு..

=========================================

தீக்குச்சியாய் இருக்கவும் விரும்புவேன்..

நீ பற்ற வைக்கும் அந்த சில நொடிகள் வாழ்ந்தாலே போதுமென்று!!!

==================================

காதல் ஹார்மோன்களின் மாற்றம் என்கிறார்கள்..

நீ இல்லா விடில்.. ஹார்மோனா.. உயிரே வேண்டாம் என்கிறேனே..

===============================

கடவுள் உன் முன் திடிரென்று தோன்றினால் என்ன கேட்பாய்!!!என்னவள் என்னை விரும்பாமல் தவிர்த்தாலும்..

நான் வேறு யாரையும் விரும்பா

மன நிலை மட்டும் கொடு இறைவா என்பேன்..

ஏனென்றால், அப்போது கூட என் காதலை விட

உன்னையும் உன் உணர்வுகளையும் அதிகமாக மதிக்கிறேன்

======================================

இன்றோடு உலகம் அழிய போகிறது.. என்ன பண்ணுவாய்..கண்டிப்பாக என்னவள் கண்ணில் படாமல்

மறைந்திருந்து அவளை பார்த்துக்கொண்டே இருப்பேன்..

ஆம்.. எனக்கு வேண்டாமடி உன் பரிதாப காதல்..===========================================

ஒரு நாள் முழுவதும் உன்னவளோடு இருக்கும் வாய்ப்பு கிடைத்தால்

என்ன பண்ணுவாய்!!அன்று முழுவதும் மெனண விரதம் இருப்பேன்!!!

ஆம்!!! அவள் இதழ் அசைவுகளையும்

கண் நடனங்களையும்

இமைக்காமல் ரசித்து கொண்டே இருப்பேன்..================================================

நீ உன்னில் விரும்பாத ஒன்று எது!!!என் இருமல் தான் என்பேன்..

ஆம்!! நான் இருமும் போதொல்லாம்

என் இதயத்தினுள் என்னவள்

தூங்க முடியாமல் அசைகிறாளே..

அதை விட கொடுமை வேணுமா என்ன!!!==========================

ஜீவா
26-02-2005, 02:48 PM
ஏய் அலையே..
நீயும் என்னை போலவே,
தினமும் கரைக்கு வந்து போகிறாயே..
ஏன்!!! என்னை போலவே
உன்னவளும் இங்கு வருகிறேன்
என்று சொல்லிவிட்டு வரவில்லையோ!!!

ஜீவா
26-02-2005, 02:48 PM
வைரமுத்து சொன்னார்.
காதலித்து பார்..
காக்கை கூட உன்னை கவனிக்காது என்று.. ........................
ஆனால்.. ஏன் உன் காசி மாமா மட்டும் என்னை
எப்போதும் முறைத்து கொண்டே இருக்கிறார்..

ஜீவா
26-02-2005, 02:49 PM
இல்லை.. இல்லை ஒன்றே போதும் என்று நீ சொன்னாய்..
நானோ, உன்னை போல அழகான ஒரு குட்டி பாப்பாவும்.
என்னைப்போல, ஒரு அறிவான குட்டிப்பையனும் வேண்டும் என்றேன்..
உடனே, கோபப்பட்டு, "அப்போ.. எனக்கு அறிவில்லையா!" என்றாய்..
நானோ, அதிலென்ன சந்தேகம்.. என்றேன் நக்கலாய்..
உடனே.. நீயோ ஓங்கி.................
...
..
சுள்ளென்று மூஞ்சின் மேல் வெயில் அடிக்க..
அட நல்ல ஒரு கனவு முடிவு பெறாமலே..
என் காதலை போல...

ஜீவா
26-02-2005, 02:49 PM
கிழக்கு சீமையிலே படம் பார்க்கணும் என்றாய்..
நான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது..
"சரிதான் போடி.. " என்றேன் சத்தமாய்...
உடனே, கோபப்பட்டு, டி.வியை அணைத்தாய்..
நான் மட்டும் என்ன சும்மாவா..
வேகமாக எந்திருச்சி...
உன்னை அணைத்தேன்..... ஹி ஹி ஹி ஹி

ஜீவா
26-02-2005, 02:49 PM
என்னடா அப்படி மறைத்து மறைத்து இரண்டு நாளாக
படிக்கிறாய்.. என்று என்னிடமிருந்து நண்பர்கள் பிடுங்கி அந்த லெட்டரை படித்தார்கள்..
...
அரிசி - 10 கிலோ..
பருப்பு - 3 கிலோ..
...

அடச்சே.. இதுக்காடா இவ்வளவு பில்ட் அப் என்று லெட்டரை எறிந்து விட்டு சென்றார்கள்..
அவர்களுக்கு தெரியாது அல்லவா..
அது நீ கைப்பட எழுதிய உன் வீட்டு மளிகை லிஸ்ட் என்று...

ஜீவா
26-02-2005, 02:49 PM
அது என்ன!!!
உன் மீது மட்டும் பொடா சட்டம் பாயவில்லையே!!
நீ என்னை உன் காதல் தீவிரவாதியாக உருவாக்கியதற்கு...!!!!

ஜீவா
26-02-2005, 02:50 PM
வாத்தியார் என்னிடம்..
அழகுக்கு அர்த்தம் என்ன கேட்டார்...
நானோ உன்னையே பார்த்தேன்.. நீயோ வெட்கத்தில் தலை குனிந்தாய்.
இது கூட தெரியவில்லையே என்று என்னை அடித்து விட்டு..
சரி, ஆணவத்திற்காகவாது அர்த்த்ம் சொல் என்றார்..
நான் அவரையே பார்த்தேன்..
அதற்கும் என்னை அடித்தார் பதில் தெரியவில்லையென என்னை நினைத்து..
ஆனால் நீ மட்டும் தலை குனிந்து சிரித்து கொண்டிருந்தாய் எல்லாம் அறிந்து...

ஜீவா
26-02-2005, 02:50 PM
பார்த்து பழகியதற்கு அப்புறம்தான் ஒருத்தரை
விரும்ப முடியும் என்று சொன்னால்..
நான் விரும்பும் அப்துல் கலாமிடம் கூட நான் இதுவரை பேசியதில்லையெ..
அதையெல்லாம் தவறென்று சொல்லாத என் நண்பர்கள்
உன் விசயத்தில் மட்டும் அடம் புடிக்கிறார்களே.

இது என் தவறா! இல்லை அவர்களின் தவறா


யாரோ எழுதிய நடிகையின் கிசுகிசுவை படித்து விட்டு
இரவில் அலசும் நண்பர்களின் கூட்டத்தின் மத்தியில்
நான் மட்டும் தனித்திருந்து போர்வை மூடி உன்னை
நினைத்து கொண்டிருப்பதை கிண்டலடிப்பார்களே..

இது என் தவறா! இல்லை அவர்களின் தவறா

===
எப்படியோ வாழ்ந்து கொண்டிருந்த என்னை..
இப்படித்தான் வாழ வேண்டும் என்று உன் மூலம் அறிந்து
மாறியதை "எப்படி இருந்த இவன் இப்படி ஆயிட்டானே.. "
என்று சொல்கிறார்களெ..

இது என் தவறா! இல்லை அவர்களின் தவறா

இது எல்லாம் என் தவறென்றால், அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டுதான் இருப்பேன்.. உன்னிடத்திலிருந்து எதிர்ப்பு வரும் வரை..

ஜீவா
26-02-2005, 02:50 PM
நானும் தோல்வியில் துவண்டேன் தோழி.. ஒரு காலத்தில்..
அப்போதுதான் என் மனதில் தோன்றியது..
யுகம் யுகமாக சுற்றியும் தான் விரும்பும் சூரியனை அடைய முடியவில்லையென
என்றாவது பூமி நினைத்ததுண்டா..
நான் மட்டும் ஏன் அப்படி இருக்க கூடாது என்று..

எட்டு வருடங்களாக முயற்சி பண்ணி.. இப்போதுதான் கிடைத்தது..
மகிழ்ச்சிக்கடலில் பெப்ஸி உமா ரசிகன் தொலைபேசியில்..

நான் வெறும் எட்டு மாதங்களுக்குள்
துவண்டு விடலாமா?
இதோ புறப்பட்டு விட்டேன் பூமியாக..
சூரியனாகிய உன்னை சுற்ற...

ஜீவா
26-02-2005, 02:51 PM
இன்று உணர்ந்தேன் தோழி.

காத்திருப்பதிலும் இவ்வளவு சுகம் இருக்குமென!!!..உனக்கு தெரியாது.. இன்று நான் எத்தனை முறை உன்னை நினைத்தேன் என்று..

எனக்கும்தான்.. ஆம் கணக்கில் அடக்க முடியவில்லை..இதைத்தான், பிரிந்து இருப்பதிலும் உள்ள சுகம் என்கிறார்களோ..இன்று உனக்காகவே ஒதுக்கி வைத்த இந்த நாளை, உனக்காகவே செலவிட ஆசைப்பட்டு, நம் பழய நினைவுகளை படிக்க ஆரம்பித்தேன்.. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லையடி..இன்னும் நிறைய சொல்ல மனதில் இருக்கிறது..

வார்த்தைகளாக உருப்பெற தெரியவில்லை..

கருத்தறிக்க கூட பத்து மாதம் தேவைப்படும்போது..

என் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளுக்கு கண்டிப்பாக

கால அவகாசம் தேவைதான்.ஆனால், என் உணர்ச்சிகள் என்னோடு மட்டும் புதைந்து போக கூடாது என்று விரும்புகிறேன்..

அதை புரிந்து கொள் தோழி..ஆனால்.

புரிந்தும் என்னை கொல்லாதே...

ஜீவா
26-02-2005, 02:51 PM
அது என்ன கடிகாரத்திற்க்கு கூட என் மீது பொறாமை..

உன்னை பார்கக துடிக்கும் இந்நாள் என்று அறிந்தும்

வினாடி முள் கூட வேகமாக சுற்ற மறுக்கின்றதே!!!

ஜீவா
26-02-2005, 02:51 PM
உலகத்திலேயே மிக கொடிய விஷம் எது என்று கேட்டால்

உன் மௌனம் என்றுதான் கூறுவேன் தோழி..

ஆம் அதுதான் மெல்ல மெல்ல என்னை கொல்கிறது இல்லையா!!!காக்கை குஞ்சு கூட தனக்கு பசிக்கும்போதாவது

வாயைத் திறந்து தன் தாயிடம் காட்டுகிறது..

ஆனால், இவ்வளவு முறை கதறியும்,

எனக்காக உன் வாய் திறக்கவில்லையே தோழி. ஏன்..

ஜீவா
26-02-2005, 02:51 PM
என்னவளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!!

ஆம், உன்னை பற்றிய என் கனவுகள், கற்பனைகள்

இவை அனைத்தும் கவிதை மொழியில் உருப்பெற துடிக்கின்றன..

ஆனால் என் மனமோ, இதை நனவில் அனுபவித்த பின்பே

எழுத வேண்டும் என அடம் புடிக்கிறது..அதனால், ஏற்றுக்கொள்ளடி இந்த அடியேனை

என்னுடன் வாழும் உந்தன் கனவுகளை கவிதையாக மாற்றுவதற்கு...

ஜீவா
26-02-2005, 02:52 PM
"காதல்" என்னும் புராஜெக்ட் எடுத்து..

கவிதை என்னும் லாங்குவேஜ் மூலமாக

நான் உருவாக்கும் "காதல்" மென்பொருளில்.

உன்னிடமிருந்து பல முறை திட்டு வாங்கியும்,

விடாமுயற்சி கொண்டு,

இதோ இன்று முடித்து (சொல்லி) விட்டேன்

ஆம்!!!!!!!!

இன்று பெப்-14,

காத்திருக்கிறேன்..

எனக்கு "காதலன்" என்னும் புரமோசன்

உன்னிடத்தில்ருந்து கிடைக்குமென்று!!இல்லை என்று மட்டும் சொல்லாதே.. ஏனென்றால்.

என் காதல் புராஜெக்ட்

உனக்கு மட்டுமே எழுதியது..

ஜீவா
26-02-2005, 02:52 PM
உன்னிடம் மட்டும் பேசிக்கொண்டே இருப்பேனே..

அது என் பகல்!!!உன்னைப்பற்றி மட்டுமே கனவு கண்டு கொண்டிருப்பேனே..

அது என் இரவு!!!உன் முகத்தை முழுதாக பார்த்து கொண்டே இருப்பேனே

அது என் பெளர்ணமி!!!உன்னை காணமால் என் கண்கள் துடிக்கும் அல்லலவா

அது என் அமாவாசை!!!உன்னுடன் பேச முடியாமல் நான் மனதுக்குள் அழுவேன் இல்லையா!

அது என் மழை..உன் கூந்தல் வீசி செல்லும் காற்று இல்லையா

அது என் தென்றல்!!!நம் காதல் எதிரிகள் எல்லாம்..

என் சுனாமி..மொத்தத்தில், நீதான்

என் உலகம்.. (உன்னுள் நான் வாழ்கிறேன்..)

ஜீவா
26-02-2005, 02:53 PM
என் காதல்..அன்பு தாகத்தோடு இருந்த எனக்கு

என் எதிரில் தோன்றிய நீ வற்றாத அருவியாக தெரிந்தாய்..

உன்னிடத்தில் சரணடைந்து விடலாம் என்று

உன்னை நெருங்கி வந்த போதெல்லாம்

இன்னும் தொலைவில் சென்று கொண்டே இருந்தாய்..எப்படியும் உன்னை சேர்ந்து விடலாம்

என மனக்கோட்டை கட்டி..

உற்சாகத்துடன் உன்னை நெருங்கினால்

இன்னும் தொலைவில் சென்றாய்..என்னடா இது என்று சோர்ந்த போது

என் கண் முன்னே மறையாமல்

நின்று கொண்டே இருந்தாய்..மீண்டும் முயற்சி பண்ணி பார்ப்போம்

என்று நினைத்த போது..

மீண்டும் தொலைவில் சென்றாய்..அறியாமல் போய் விட்டேன் தோழி..

நான் கொண்ட காதல்

ஒரு கானல் நீரென்று..

ஆம் நீ ஒரு கானல் நீரென்று..இப்போது அறிந்து விட்டேன்..

அதனால் நீரையே வெறுக்கிறேன்..

kavitha
26-02-2005, 11:24 PM
"இப்போது அறிந்து விட்டேன்..

அதனால் நீரையே வெறுக்கிறேன்.. "அவளை வெறுக்கவில்லையேஉங்களின் மழைக்கவிதைகள் இன்னும் அவள் உள்ளத்தை நனைக்கலையோ!

பேதலித்திருக்கும் இந்த உள்ளத்தை அந்த பேதை அறியலையோ!

விருப்பமே இல்லாதபோது விரும்புவது தான் அழகோ!

gragavan
28-02-2005, 04:35 AM
அழகுராசா உமது கவிதைகள் அழகு ராசா! உணர்வுகளை மட்டும் வைத்தே இப்படி எழுதியிருக்கின்றீர்களே! நன்று நன்று.அன்புடன்,

கோ.இராகவன்

ஜீவா
01-03-2005, 12:27 PM
ஏமாந்த காதல்நானும் ஒரு குழந்தை மாதிரி அழுகிறேன்..

சாக்லெட் கிடைக்கவில்லை என்றல்ல.. அவளிடமிருந்து

ஷாக் கிடைத்ததை நினைத்து...நீ பழகியதற்கு காரணங்கள் ஆயிரம் சொல்லலாம்..

ஆனால் நான் பழகியதற்கு ஒரே காரணம்தான்..

உன்னை விரும்பியது மட்டும்தான்...என்னடா என் வாழ்வில் கடவுள்

சந்தோசத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறானே

என்று அப்போது புரியாமல் அனுபவித்தேன்..

இப்போதுதான் அதன் அர்த்தம் புரிகிறதடா?

கொல்லாமல் கொல்லும் மன வேதனையெல்லாம்

அனுபவிப்பாய் என்று..ஆக என் காதல் அம்மா, அப்பா இருந்தும்

ஒரு அனாதையாகத்தான் இருக்கிறது...

gragavan
01-03-2005, 02:22 PM
Originally posted by அழகுராசா@Mar 1 2005, 06:27 PM

ஏமாந்த காதல்
ஆக என் காதல் அம்மா, அப்பா இருந்தும்

ஒரு அனாதையாகத்தான் இருக்கிறது...இந்த ரெண்டு வரியிலேயே முழுக்கவிதையும் முடிந்து விட்டது. பிரமாதம். புதிய கோணம்.

அன்புடன்,

கோ.இராகவன்

பரஞ்சோதி
01-03-2005, 04:17 PM
ஆகா, கணினி வித்தகர், காதலிலும் வல்லவராக இருக்கிறாரே.பாராட்டுகள் அழகுராசா.

gankrish
11-03-2005, 05:39 AM
ராசா.. ராசா .. எங்கள் அழகுராசா

உன் கவிதையெல்லாம் ரொம்ப சூப்பர் ராசா..நன்றாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.

பிரியன்
11-03-2005, 01:24 PM
உள்ளத்தின் கவிதைகள் ஆழமானவை...

தொடருங்கள் நண்பரே....

பென்ஸ்
18-02-2006, 09:29 AM
ஜீவா... என்னப்பு இது ... உங்க இந்த கவிதைகளை இத்தனை நாள்
நான் கவனிக்காம விட்டுடேனே....

ஆமா... இப்ப என்ன கல்யானம் ஆகி போச்சா ... இல்ல விரக்க்தியில
சாமியாராகிட்டிங்களா????

மளிகை லிஸ்ட் இன்னும் இருக்கா???? :-)