PDA

View Full Version : புலிகளின் முப்படை: வியூகம் வகுக்கின்றனவாஇளையவன்
03-06-2005, 02:38 PM
தமிழீழத் தாயகத்தில் அரசு நிர்வாகத்தை நடத்தி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு அரசுக்குரிய முப்படைகளையும் தன்னகத்தே கொண்டு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அரணை உருவாக்கி உள்ளது.


தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த முப்படை பலத்தை எதிர்கொள்ள இந்தியா மற்றும் சிறிலங்கா அரசுகள் தற்போது டில்லியில் வியூகங்கள் வகுத்துக் கொண்டிருப்பதாக புதுடில்லி அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை இந்திய ஊடகங்களில் நாளாந்தம் வெளியாகும் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.

இந்தியா சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் இடையேயான நேற்றைய புதுடில்லி சந்திப்பில் இது தொடர்பானவையும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்திய ஊடகமான 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், வான்படை தொடர்பானவற்றில் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறிலங்கா முன்வைக்கும் இராணுவம் தொடர்பான அனைத்து கோரிக்கைகளயும் பரிசீலிக்க புதுடில்லி தயாராக இருக்கிறது என்று அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

இது குறித்து அடுத்த கட்ட ஆலோசனை நடத்த மூத்த இராணுவ அதிகாரிகள் கொண்ட குழுவை புதுடில்லிக்கு விரைவில் சிறிலங்கா அரசு அனுப்ப உள்ளதாகவும் தெரிகிறது.

அதேபோல் கிடப்பில் கிடக்கும் இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்தை கையெழுத்தாக்கும் முயற்சியிலும் சிறிலங்கா அரசு தீவிரம் காட்டி வருகிறது.

சிறிலங்கா மீதான இந்திய கரிசனை அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? என்று வினா எழுப்பிய போது புதுடில்லி அவதானிகள் சில கருத்துகளைத் தெரிவித்தனர்.

அதாவது, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளான வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை இந்தியக் கூட்டணி அரசில் பங்கேற்று இருக்கின்றன.

இவை இலங்கை இனப்பிரச்சனையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பக்கமே நிற்கின்றனர்.

இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்திற்கு வைகோ வெளிப்படையாக இந்தியப் பிரதமரிடமே நேரிடையாக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் இருக்கிறார்.

இதனால் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியக் கூட்டணி அரசு தயக்கம் காட்டி வருகிறது.

அத்துடன் சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வலுப்படுத்தும் நோக்கில் சிறிலங்காவில் சீனா வலுவாக நிற்பதை இந்திய அரசு விரும்பவில்லை என்பதை சேது சமுத்திரம் தொடர்பான சிறிலங்காவின் அதிருப்திக்கு பதிலளிக்கும் போது இந்திய அரசு கொள்கை வகுப்பாளர்கள் சிறிலங்காவிடம் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறிலங்காவிற்கும் சீனா, பாகிஸ்தானிற்கும் இடையேயான நெருக்கமான உறவினால் சிறிலங்கா மீது அதிருப்தி கொண்டிருக்கும் இந்திய அரசியல் தலைவர்களின் மனநிலையை மாற்றும் வகையில் அதாவது இந்த அதிருப்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது திருப்பி விடும் வகையில் இந்திய உளவுத்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் புதுடில்லி அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இந்த உளவுத்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் திட்டமிட்ட ஒருநடவடிக்கையாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை குறித்த மிகைப்படுத்தல் பிரச்;சாரம், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள், தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவைக் கொல்ல சதி என்ற பரப்புரைகளை அண்மையில் மிக வேகமாக கட்டவிழ்த்துவிடப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவுக்கும் சிறீலங்காவிற்கும் இடையேயான உறவை நெருக்கப்படுத்தவும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் குழுத் தீவிரம் காட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வான்படையும் இருப்பதாக வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்திருக்கும் சிறிலங்காவிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடற்படை நடவடிக்கைகளை விட வான்படை ஒத்துழைப்பையே தற்போது புதுடில்லி முதன்மைப்படுத்தி வருவதாகவும், சிறிலங்காவிற்கு உதவி அளிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ராடர் சாதனங்களை இந்தியா அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சிறிலங்காவிடம் உள்ள ராடார் வசதிகள் அனைத்தும் விமானப் போக்குவரத்திற்குரியதாகவும் சிறுரக விமானங்களை இயக்குவதற்கான குறைந்த தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாகவுமே இருப்பதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் இராமேஸ்வர கடலோரத்தில் உச்சிப்புளி என்ற இடத்தில் இந்திய கடற்படையினருக்கான நவீன விமானத் தளம் ஒன்று பெருந்தொகை செலவிடப்பட்டு கட்டப்பட்டு வருகின்றது.

2 ஆம் உலகப் போரில் பாவனைக்கு இருந்த உச்சிப்புளி கடற்படை விமான தளம் 1987 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு நிறுவப்பட்டது. விமான தளத்தின் ஓடுபாதையை 1,100 மீட்டரில் இருந்து 2000-2500 மீட்டராக விரிவாக்கும் திட்டம் ஒன்றையும் இந்தியக் கடற்படை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய ஓடுதளத்தின் தெற்கு பகுதியில்தான் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த உச்சிப்புளி விமான தள விரிவாக்கத்திற்காக 10 ஆயிரத்துக்கும் அதிகமான பனை, தென்னை மரங்கள் தறிக்கப்பட்டு வருவது தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா,

"உச்சிப்புளி கடற்படை விமான தளம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழக கடற்கரைப் பகுதிக்கும் இலங்கை கடற்பகுதிக்கும் இடையே உள்ள பகுதியில் இந்த தளம் தீவிர கண்காணிப்பு நடத்தி வருகிறது. விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது தொடர்பாகவும் இந்த தளம் முக்கியத்துவம் பெறுகிறது. விடுதலைப் புலிகளின் விமானப்படை பிரிவின் பலம் அதிகரிப்பது இருப்பது பற்றியும் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் உள்துறை அமைச்சருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறேன். எனவே உச்சிப்புளி விமான தளத்தின் தரம் உயர்த்த்தப்பட வேண்டும்" என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தகவல்கள் குறித்து கருத்துத் தெரிவித்த கொழும்பு கொள்கை வகுப்பாளர் ஒருவர், இலங்கையில் போரை விரும்புகிறவர்கள் மனநோயாளிகள் என்று சிறிலங்கா அமைச்சர்கள் கூறுவது யாரைப்பார்த்து? போருக்கு வியூகம் வகுக்கும் ஜனாதிபதி சந்திரிகாவைப் பார்த்தா? என்று நகைப்புடன் வினா எழுப்புகின்றனர்.

நன்றி: புதினம்

அறிஞர்
04-06-2005, 07:45 AM
செய்திக்கு நன்றி.. நண்பரே....

விடுதலைப்புலிகளை கண்டு ஸ்ரீலங்கா.. அதிபதி மிகவும் பயப்படுகிறார்...

ரேடார் கருவிகளை இந்தியா வழங்குகிறது...

இந்தியாவில்.. உச்சிப்புளி விமானதளத்தை இந்தியா... பாதுகாப்பு பயன்படுமே தவிர..... விடுதலைப்புலிகளை தாக்க பயன்படுத்தாது..... அதை தமிழகத்தில் உள்ளவர்கள்.... அனுமதிக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்...

முத்து
04-06-2005, 02:43 PM
உச்சிப்புளி விமானதளம் இந்தியப் பாதுகாப்பின் தொலைநோக்குப் பார்வையில் கட்டப்பட்டதே. கடந்த ஆயிரம் ஆண்டுகளாய் இந்தியா எந்த நாட்டின் நிலப்பகுதியையும் ஆக்கிரமித்ததில்லை. ஆனால் நிறையப் பகுதிகளை விட்டுக்கொடுத்திருக்கிறது. இனிமேலும் அடுத்த நாட்டை ஆக்கிரமிக்காது, ஆனால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வல்லமை மிக்க நாடுகளில் இந்தியா முண்ணனி வகிக்கிறது.

விட்டுக் கொடுத்த/இழந்த சமீப காலத்திய உதாரணங்கள், இலங்கைக்கு விட்டுக் கொடுத்த கட்ச் தீவு ஆகியவை. இலங்கை அரசு இந்தியாவுக்குச் சாதகமாய் இருந்த வரலாறே இல்லை. சமீபத்திய 1971 போரின் போதுகூட நடுநிலை வகிப்பதாய்க் கூறிக்கொண்டே பாகிஸ்தானிய போர்விமானங்கள் இலங்கையில் எரிபொருள் நிரப்ப வசதி செய்தது. இப்போது இலங்கையில் அமெரிக்க ராணுவ தளமொன்றை நிறுவ ரகசிய முயற்சி நடப்பதாய் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கவலை தெரிரிவிக்கிறார்கள்.

satheesh
04-06-2005, 09:09 PM
நன்பன் இளையவனுக்கு மிக்க நண்றி!
தரமான தகவலை தந்துதவியதற்கு!மேலும் உங்களது பார்வை ஈழத்தின்மேல் படரவேண்டுமெண்று கேட்டுக்கொள்ளுகிண்றேன்!
அன்புடன்
சதீஷ்

இளையவன்
04-06-2005, 10:56 PM
இந்தியா தமிழருக்கு உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தாலாவது போதும் என்பது எனது கருத்து.

அறிஞர்
05-06-2005, 10:50 AM
இந்தியா தமிழருக்கு உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தாலாவது போதும் என்பது எனது கருத்து.

கண்டிப்பாக அது மாதிரி நடக்காது என்று நம்புகிறோம்..

இது சம்பந்தமாக.. இன்று வைகோ..... பிரதமரை சந்தித்துள்ளார்.

பரஞ்சோதி
05-06-2005, 11:30 AM
இந்தியா தமிழருக்கு உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தாலாவது போதும் என்பது எனது கருத்து.

இந்தியாவும் சரி, இந்தியரும் சரி, யாருக்கும், எந்த நாட்டிற்கும் உபத்திரமாக இருந்தது கிடையாது என்பது என் கருத்து.

இளையவன்
05-06-2005, 12:25 PM
இந்தியாவும் சரி, இந்தியரும் சரி, யாருக்கும், எந்த நாட்டிற்கும் உபத்திரமாக இருந்தது கிடையாது என்பது என் கருத்து.

எதிர்காலத்தில் செய்யாது என் நம்புவோம்.(இறந்த காலங்களை ஞாபகப்படுத்துவது நல்லதில்லையென எண்ணுகிறேன்)

இளையவன்
05-06-2005, 12:28 PM
கண்டிப்பாக அது மாதிரி நடக்காது என்று நம்புகிறோம்..

இது சம்பந்தமாக.. இன்று வைகோ..... பிரதமரை சந்தித்துள்ளார்.


ஆமாம் அறிஞர் நான் வைகோவின் செவ்வியை BBC தமிழோசையில் கேட்டேன்.

பிரியன்
05-06-2005, 07:18 PM
ஆட்சியின் மூக்கணாங் கயிறு தமிழகத்திடம் இருப்பதால் விபரீதமாய் எதுவும் நடக்காது என்று நம்புவோம். இலங்கை பிரச்சனை தீராமல் இருப்பதற்கு இந்தியாவின் பாராமுகம் அல்லது நடுநிலமையும் ஒரு காரணமே.....

பரஞ்சோதி
05-06-2005, 08:37 PM
ஆட்சியின் மூக்கணாங் கயிறு தமிழகத்திடம் இருப்பதால் விபரீதமாய் எதுவும் நடக்காது என்று நம்புவோம். இலங்கை பிரச்சனை தீராமல் இருப்பதற்கு இந்தியாவின் பாராமுகம் அல்லது நடுநிலமையும் ஒரு காரணமே.....

பிரியன்,

நம்ம வீட்டிலேயே நிறைய பிரச்சனைகள் இருக்கும் போது அண்டை வீட்டு பிரச்சனையில் ஏன் தலையிட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைமை.

ஒரு தமிழன் பாரத பிரதமராக வந்தாலும் சரி, இலங்கை பிரச்சனையில் தலையிட மாட்டார்கள். தமிழக அரசியல்வாதிகளுக்கு இலங்கை பிரச்சனையை வைத்து ஓட்டு வாங்க முடியாது என்ற நிலையை அறிந்ததால் பாராமுகமாக இருக்கிறார்கள்.

தமிழர்களும், தமிழ் இனம், மொழி மீது பற்று கொண்டவர்களும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

இலங்கையிலும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து நிலைமையை சீர் செய்ய வேண்டும். தமிழன் தமிழனையே காட்டிக் கொடுப்பதை எல்லாம் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம்.

பிரியன்
06-06-2005, 03:37 AM
[QUOTE=பரஞ்சோதி]பிரியன்,

நம்ம வீட்டிலேயே நிறைய பிரச்சனைகள் இருக்கும் போது அண்டை வீட்டு பிரச்சனையில் ஏன் தலையிட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைமை.

QUOTE]


கிழக்கு பாகிஸ்தானை வங்காள தேசமாக்கியது யார் பரஞ்சோதி.....
இலங்கை பிரச்சனை தொடர்ந்து இருப்பது ஒருவகையில் இந்தியாவிற்கு தேவையாய் இருந்தது அப்போது. வளர்த்தார்கள்.
இப்போது நடுநிலமை வகிப்பதாய் சொல்லி அதை நீட்டித்து கொண்டு இருக்கிறார்கள்.