PDA

View Full Version : மேகம் (பப்பி)



இளசு
02-05-2003, 12:19 PM
எழுதியவர் : பப்பி
--------------------------------------------------------------

ஏன் அழுகிறாய்
நீ தூது விட்ட
மேகங்கள்
பாதி வழியிலே
மழையாய்
கரைந்ததற்கா????????????

பப்பி
********************************
சிந்தனை மட்டும் போதாது... செய்!
********************************

poo
02-05-2003, 12:51 PM
வானதேவதையின் கண்ணீர் கடிதங்களா??!!

-படைத்திட்ட பப்பிக்கும் பரிமாறிய அண்ணனுக்கும் பாராட்டுக்கள்!!!

mathi
02-05-2003, 02:03 PM
மேகம்

மழையாய் பொழிந்தது......
என்னவள் வருகையை
எதிர் பார்த்து......

மின்னல்

அவள் சீறி வரும் பார்வை...

இடி

அவள் என்னை காதலித்து

வேறு ஒம் செய்தது

aren
02-05-2003, 02:21 PM
பப்பி மற்றும் மதி அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

rambal
02-05-2003, 03:58 PM
அழகான குறும்பா.. உருவகப்படுத்திய விதமும் அழகு.. பாராட்டுக்கள்.. சந்தடி சாக்கில் மதியும் கவிதை வெளியிட்டுள்ளார்.. அவருக்கும் என் பாராட்டுக்கள்..

பாரதி
02-05-2003, 04:58 PM
நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

விழுந்த மழையால்
விளைந்த பயிரும் சேதி சொல்லும்.
கவலை வேண்டாம்.

Hayath
03-05-2003, 05:17 AM
பப்பி,மதி,பாரதி மூவரும் அழகாக கவிதை படைத்துள்ளனர்.காதலை உவமையாகவும்,உருவகப்படுத்தியும் அழகாக வர்ணித்துள்ளனர்.பாராட்டுகள்.

sujataa37
03-05-2003, 05:38 AM
மதி, புத்திசாலித்தனமான வரிகள். பாராட்டுக்கள். (கவிதையா என்பது எனக்கு சரியாகத்தெரியவில்லை).

பாரதி, நல்ல கருத்து. கவிதைக்கு மிகவும் அவசியமான ஒரு ச்பொன்டனெஇட்ய் தெரிகிறது.

நிறைய எதிர்ப்பார்க்கின்றோம்

karikaalan
03-05-2003, 06:02 AM
அருமையான கவிதை; மகிழ்ந்தவர்கள் கொடுத்துள்ள தொடர்ச்சிகளும் நன்றே!

பப்பிஜிக்கும், இளவல்ஜிக்கும் நன்றிகள்.

===கரிகாலன்

இளசு
03-05-2003, 07:16 AM
மதி, புத்திசாலித்தனமான வரிகள். பாராட்டுக்கள். (கவிதையா என்பது எனக்கு சரியாகத்தெரியவில்லை). பாரதி, நல்ல கருத்து. கவிதைக்கு மிகவும் அவசியமான ஒரு spontaneity தெரிகிறது. நிறைய எதிர்ப்பார்க்கின்றோம்


இப்படி ஒரு ரசனையோட விமர்சிக்கிற உங்களை நாங்களும்
எதிர்பார்த்துக்கிட்டிருந்தோம்... நன்றி...சுஜாதா அவர்களே
அந்த இருவரின் படைப்பு வேகம் உங்கள் பாராட்டால்
இனி வாயுவேகம் மனோவேகம்தான்...!!!!!

முத்து
03-05-2003, 01:44 PM
அருமையான கவிதைகள் !

chezhian
03-05-2003, 01:53 PM
காதல் சேதி சொல்ல வந்த மேகம்.... வழியில் காவேரி டெல்டாவே வெடிச்சிருந்ததைப் பார்த்து துடிச்சு கரைந்ததம்மா...

காதல் காத்திருந்தாலும்... காய்ஞ்சு போன எம் உழவர் கஞ்சிக் கலயம் நெறயட்டுமே....

aren
18-07-2007, 04:38 AM
எழுதியவர் : பப்பி
--------------------------------------------------------------

ஏன் அழுகிறாய்
நீ தூது விட்ட
மேகங்கள்
பாதி வழியிலே
மழையாய்
கரைந்ததற்கா????????????

பப்பி
********************************
சிந்தனை மட்டும் போதாது... செய்!
********************************

தூதுவிட்ட மேகங்கள்
பாதிவழியிலேயே
தடம்மாறி முட்டிமோதி
மழையாய்
கரைந்துவிட்டன.

அருமையான கவிதை பப்பி அவர்களே.

நீங்கள் எப்பொழுது திரும்பி வருவீர்கள். காத்திருக்கிறோம்.

நன்றி வணக்கம்
ஆரென்