PDA

View Full Version : அருகிலே



kavidha
03-05-2003, 12:18 AM
கவலைகள் நிரம்பிய
கண்ணீர்க்குவளைகள் கண்கள்



கவிதா

இளசு
03-05-2003, 12:27 AM
வாருங்கள் கவிதா அவர்களே..
உங்களுக்கு நூறு ஆயுசு....
சில மணி நேரம் முன்புதான் உங்கள் பெயர் சொல்லி ஒரு கட்டுரையை
முடித்திருந்தேன்...

ஒரு முத்திரைக் கவிதையோடு
முதல் அடி வைத்து நுழைந்திருக்கிறீர்கள்....
கருத்தாளி கவிதா அவர்களின் கவிதை மழையில் நனைய கொடுத்து வைத்திருக்கிறது எம் மன்ற நண்பர்களுக்கு....

வாழ்த்துகள்.... பல படைப்புகள் தாருங்கள்!!

பாரதி
03-05-2003, 01:24 AM
வாருங்கள் கவிதா..

வாழ்த்துக்கள்.

கவலையை கொட்டி விடுங்கள்..கண்களும்
பன்னீர் புஷ்பங்களாகும்.

Mano.G.
03-05-2003, 02:10 AM
கடவுளின் படைப்பின் அதிசயங்கள்
கவிதா, சமயங்களில் யோசிப்பதுண்டு
இதை இப்ப படைத்திருந்தாள் எப்படி இருக்கும் ?


எல்லாவற்றுக்கும் அவனே பொருப்பாளி,

நீங்கள் வந்ததும் வந்தீர் அருமையான கவிதையோடு

வாருங்கள் உங்கள் தமிழ் மன்றத்தில் எங்களோடு அலவலாவ.


மனோ.ஜி

Narathar
03-05-2003, 04:11 AM
ஆஹா!

அருமையான கவிதையுடன்
தமிழ் மன்றில் பிரவேசித்துள்ள
கவிதாவை........... வரவேற்கின்றோம்

kavidha
03-05-2003, 06:25 AM
விமர்சனம் வீசிய தமிழ்த்தென்றல்களுக்கு நன்றிகள். முரசு முழங்கினால்தானே வேகங்கொண்டு வெற்றிநடை போட. ஆம் முரசு font பிரச்சனை கொடுத்தது அதனாற்றான் இந்த தாமதம்.

பல ஆக்கங்களை படித்தும் கருத்துச்சொல்ல முனைந்தால் முரசு வேலை செய்யாது. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் கலந்து கொள்வேன்.

கவிதா

karikaalan
03-05-2003, 06:35 AM
கவிதாஜி!

நல்லதோர் கவிதை! கண்ணும் உதடுகளும் சேர்ந்தே இயங்குகின்றன. சிலசமயம் உதடுகளுக்குப் பூட்டு போட்டாலும், கண்கள் காட்டிக்கொடுத்து விடுவதும் உண்டு.

===கரிகாலன்

poo
03-05-2003, 09:40 AM
இன்பமும் துன்பமும் இரு பக்கங்கள் என ஆண்டவன் உணர்த்தத்தான் அப்படியோ?!.......

- பாராட்டுக்கள் கவிதா... நெத்தியடி கவிதைகளை தர வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன்.......

rambal
03-05-2003, 03:26 PM
வாருங்கள் கவிதா அவர்களே..
வார்த்தை சடுகுடு..
இதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்..

வாழ்த்துக்கள்..

தொடருங்கள்.. தொடருங்கள்..

குமரன்
04-05-2003, 02:12 AM
வித்யாசமான பார்வை...கவிதாவிற்கு பாராட்டுகள்.

வெளிவேஷம்போடும்
உதட்டினை
காட்டிக்கொடுக்கும்
வில்லனாய்...
கண்கள்.

aren
04-05-2003, 09:35 AM
அருமையான கவிதை. தொடருங்கள்.

aren
18-07-2007, 04:50 AM
கவலைகளை
களைந்துவிட்டால்
கண்கள்
நீச்சல்குளமாகும்!!!

இணைய நண்பன்
18-07-2007, 10:31 AM
வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
18-07-2007, 12:07 PM
கடல் கொண்ட மீன்கள்
தண்ணீரில் குளிக்கிறது!

உன் விழிகொண்ட மீன்களோ,
கண்ணீரில் குளிக்கிறதே!

ரிஷிசேது
18-07-2007, 06:10 PM
கண்கள் பற்றி இன்னும் நிறைய கவிதைகள் கொடுங்கள் கவிதா....
வாழ்த்துக்களுடன்
ரிஷிசேது