PDA

View Full Version : இரக்கம் (பப்பி).



இளசு
04-05-2003, 08:46 PM
இரக்கம்

எழுதியவர் : பப்பி

----------------------------------------------------------

தபால்காரனுக்கு கூட என் மீது
இரக்கம் இருக்கிறது....
எவர் வீட்டு கடிதத்தையாவது
என் வீட்டில் போட்டு
தற்காலிக மகிழ்ச்சி தருகிறான்...
நீ தான் இரக்கமில்லாமல் இருக்கிறாய்
எனக்கு வரவேண்டிய கடிதத்தை
இன்னும் எழுத தொடங்காமல்!!!

------------------------------------------------------------

பப்பி

**********************************
சிந்தனை மட்டும் போதாது....செய் !!
**********************************

suma
05-05-2003, 02:03 AM
நாங்களும் தான் பப்பி கவிதை பப்பி மாமி எழுதியது என படிக்க வந்தால் இளசு அண்ணா பதித்து பப்பியின் பெயர் போட்டு எங்களை ஏமாற்றியதற்கு

gans5001
05-05-2003, 02:03 AM
மன்னிக்கவும், இது எங்கோ படித்த கவிதை போல் உள்ளது

அறிஞர்
05-05-2003, 06:30 AM
சுமா... ஏமாற்றுவது.. ஏமாறுவது... வாழ்க்கையில்... சகஜமப்பா......

ஆதவா
07-01-2007, 09:22 AM
இரக்கம்

எழுதியவர் : பப்பி

----------------------------------------------------------

தபால்காரனுக்கு கூட என் மீது
இரக்கம் இருக்கிறது....
எவர் வீட்டு கடிதத்தையாவது
என் வீட்டில் போட்டு
தற்காலிக மகிழ்ச்சி தருகிறான்...
நீ தான் இரக்கமில்லாமல் இருக்கிறாய்
எனக்கு வரவேண்டிய கடிதத்தை
இன்னும் எழுத தொடங்காமல்!!!


இது கண்டிப்பாக பெண் கவிதைதான். இப்பல்லாம் எந்த தபால் காரன் அவுங்கவுங்க தபாலையே கரெக்டா கொடுக்கிறான்?
கவிதை அருமையாக இருக்கிறது.

ஷீ-நிசி
07-01-2007, 01:10 PM
கவிதை நன்றாக உள்ளது

ஓவியா
07-01-2007, 10:06 PM
நீ தான் இரக்கமில்லாமல் இருக்கிறாய்
எனக்கு வரவேண்டிய கடிதத்தை
இன்னும் எழுத தொடங்காமல்!!!

எழுத மை இல்லையென்றால் பரவாயில்லை......
ஒரு பார்வையில் சொல்..............இரக்கமில்லையென்று

ரசித்தேன்

நன்றி

அமரன்
16-05-2007, 03:39 PM
காதல் தேர்வெழுதி காத்திருக்கும் ஒரு கதல்மனத்தின் மனக்குமுறலை நயத்துடன் கவியாக வடித்த பப்பியை மன்றத்தில் காணமுடியவில்லை. எங்கிருந்தாலும் அவருக்கு எனது வாழ்த்துகள்.

விகடன்
07-06-2007, 08:45 PM
உங்கள் கடிதம் வேறெங்காவது போடுகிறானோ தபால்க்காரன்.?

பூமகள்
19-07-2008, 06:24 PM
அட போட வைத்த கவிதை...!!

காதல் விடு தூதான
கடிதங்கள்..

கசங்கிய நிலையில்
பாதியழிந்த எழுத்துகளாக
அவனை அடைந்தது..

அவள் இல்லத்தில்
கனத்த மழை..!!

பாராட்டுகள் பப்பி அக்கா...
அக்காவின் கவிதை மன்றத்தில் ஏற்றிய பெரியண்ணாவுக்கு நன்றிகள் பலப் பல.. :)