PDA

View Full Version : ஜூன் 3, வெள்ளிக்கிழமை மலேசிய செய்திகள்Mano.G.
03-06-2005, 09:44 AM
மலேசியாவுடன் உறவை மேம்படுத்த தாய்லாந்து விருப்பம்

தென்தாய்லாந்து தீவிரவாதிகளுக்கு மலேசியா ராணுவ பயிற்சிகள் அளித்து வருவதாக தாய்லாந்து பிரதமர் Thaksin Shinawatra குற்றஞ்சாட்டினார் என தகவல் தொடர்பு சாதனங்களில் வெளி வந்த தகவல் முற்றிலும் தவறானது என தாய்லாந்து தற்காப்பு அமைச்சர் Jen Thammarak Isarangura தெரிவித்தார்.

தாய்லாந்து பிரதமர் அவ்வாறு ஒரு போதும் கருத்துரைக்கவில்லை என அவர் தெளிவுபடுத்தினார். எனினும், சில தீவிரவாதிகள், தாய்லாந்து பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட பின்னர் மலேசிய எல்லைப் பகுதிக்குள் சென்று விடுவதாகவே பிரதமர் Thaksin Shinawatra தனது
செய்தியறிக்கையில் குறிப்பிட்டார் என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற 45-வது தாய்லாந்து மலேசியா எல்லை தொடர்பான கூட்டத்தில் Jen Thammarak தெரிவித்தார்.

இதனிடையே, மலேசியாவுடன் நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளவே தாய்லாந்து விரும்புகிறது எனவும், இரு நாடுகளின் கூட்டு ஒத்துழைப்புகளின் வழி கல்வி மற்றும் வணிகம் தொடர்பான துறைகளில் மேம்பாடு காணமுடியும் என நம்புவதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட துணைப்பிரதமர் Datuk Seri Mohd Najib Tun Razak கூறினார்.

சுகாதார அமைச்சின் புதிய திட்டம்

நாட்டில் பரவி வரும் HIV நோயை குறைக்கும் விதத்தில் போதைப்பித்தர்களுக்கு இலவச ஊசி மற்றும் ஆணுறைகள் வழங்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக, ஊசியின் மூலம் போதை மருந்தைப் பயன்படுத்தும் சுமார் 1,200 போதைப் பித்தர்களுக்கு, இலவச ஊசிகள், ஆணுறைகள் வழங்கப்படுவது மட்டுமின்றி மாற்று முயற்சியாக குறிப்பிட்ட போதை மருந்துகளைக் கொடுத்து சில ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் Datuk Dr Chua Soi Lek தெரிவித்தார்.

இதனிடையே, இத்திட்டம் குறித்து அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் போதுமான பயிற்சி அளித்த பின்னர், நாடு முழுவதிலும் பத்து அரசாங்க மற்றும் தனியார் Clinic-களிலும், அமலுக்கு கொண்டுவர உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் நாட்டில் சுமார் 61,486 பேர் HIV கிருமிகளால் பாதிக்கப்பட்டனர் என ஆய்வறிக்கையின் வழி தெரிய வந்துள்ளது.
இரயில் பாதை மறுசீரமைப்புக்கு நிதி கோரிக்கைஒன்பதாவது மலேசிய திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து இரயில் தண்டவாளங்களையும் மறு சீரமைப்பு செய்வதற்கு Keretapi Tanah Melayu Berhad, அரசாங்கத்திடம் 350 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு கோரி உள்ளது.

இப்புதிய திட்டத்தின் வழி, நாட்டிலுள்ள அனைத்து இரயில் தண்டவாளங்களையும் மறுசீரமைப்பு செய்வதன் மூலம் இரயில் சேவைத் தரத்தை மேலும் அதிகரிக்க முடியும் என நம்புவதாக போக்குவரத்து அமைச்சர் Datuk Seri Chan Kong Choy தெரிவித்தார்.


இதனிடையே, இப்புதியத் திட்டத்தை குறித்து அரசாங்கம் விரைவில் பரிசீலனை செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கருத்துரைத்தார்.

பிரதமரின் ஜொகூர் பயணம்

பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi ஜொகூர் மாநிலத்தில் உள்ள 2000 அரசாங்கப்பணியாளர்களிடையே சிறப்புரையாற்றவுள்ளார்.

எதிர்வரும் 6ஆம் திகதி ஜொகூருக்கு ஒருநாள் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் இச்சிறப்பு பொதுச் சேவை ஒன்று கூடல் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுவார் என அம்மாநில அரசாங்க செயலாளர் Datuk Mohd Razali Mahusin தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு பிறகு பிரதமர் அம்மாநிலத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சி நிகழ்ச்சியில்
கலந்து கொள்ளவுள்ளார். அதன் பின் Skudai -யிலுள்ள UTM எனப்படும் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலுள்ள இரசாயனப் பொறியியல் துறையின் Guide Plant- திறந்து வைக்கவுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
______________________________________________________________________

ஐரோப்பிய பொது அரசியல் சட்டம் மீண்டும் தோல்வி

ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பொதுவான அரசியல் சட்டம் பற்றிய கருத்துக் கணிப்பிற்கு எதிராக நெதர்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர். 61.6% பேர் பொது அரசியல் சட்டம் தேவையில்லை என வாக்களித்துள்ளனர்.

மக்களின் இந்த முடிவு தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாக நெதர்லாந்து பிரதமர் Jan Peter Balkenende தெரிவித்துள்ளார்.

இது வரை பொது அரசியல் சட்டத்திற்கு ஆதரவாக 9 நாடுகள் வாக்களித்துள்ளன. ஆனால் இந்த பொது அரசியல் சட்டம் நிறைவேற 25 நாடுகளின் உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே France மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்ட பொதுச்சட்டத் திட்டம், தற்போது நெதர்லாந்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாத சூழ்நிலையில், எதிர்கால ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கு பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் Jack Straw தெரிவித்துள்ளார்.
__________________________________________________________________

பாகிஸ்தானில் காஷ்மீர் தலைவர்கள்

இந்தியாவின் காஷ்மீர் மாநில Hurriyat மாநாடு கட்சியின் தலைவர்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று புறப்பட்டுள்ளனர். 8 உறுப்பினர்களைக் கொண்ட அக்குழு நாளை பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரின் சட்டமன்றத்தில் உரையாற்றவுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து பாகிஸ்தானின் தலைநகர் Islamabad செல்லும் அக்குழுவினர் அதிபர் Parves Musharaff, பிரதமர் Shauqat Aziz உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இருநாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க தங்களின் பயணம் உதவுமென Hurriyat மாநாடு கட்சியின் தலைவர்கள் தெரிவித்தனர்.
__________________________________________________________________

ஈராக்கில் மீண்டும் பயங்கர குண்டு வெடிப்பு

ஈராக்கின் வடக்குப் பகுதியில் நேற்று ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில் 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் ஈராக் நகராட்சி ஆணையர் உட்பட உயரதிகாரிகளும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் மூன்று பச்சிளங்குழந்தைகளும் பரிதாபமாக பலியாகினர்.

கடந்த ஏப்ரல் 28 தேதியிலிருந்து இது வரை 780 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இன்று நேர்ந்த குண்டுவெடிப்பு ஒரு உணவகத்தைக் குறி வைத்து நடத்தப்பட்டது. மிகவும் பரபரப்பான
உணவு இடைவேளையில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடுமென கூறப்படுகிறது.

இச்சம்பவம் நடந்த போது ஈராக்கின் Kurdish இன துணைப்பிரதமர் உணவருந்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்-சர்காவிக்கு உதவுகிறவர்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

ஈராக் Al-Qaeda இயக்கத் தலைவர் Al-Zarqawi-க்கு எந்த அண்டை நாடும் மருத்துவ சிகிச்சை அளிக்கக் கூடாது என அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் Donald Rumsfeld எச்சரித்துள்ளார்.

அவ்வாறு உதவி செய்யும் ஈராக்கின் அண்டை நாடு எதுவானாலும், அந்நாடு Al-Qaeda இயக்கத்துடன் தொடர்புடைய நாடு என்றே கருத வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தார். பெயர் குறிப்பிடாவிட்டாலும் சிரியா நாட்டினைக் குறிப்பிட்டே அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் அவ்வாறு தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.

ஈராக்கில் வன்முறையில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகள் சிரியாவில் இருந்து அனைத்து உதவிகளையும் பெற்று வருவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் அமெரிக்கா, தற்போது Al-Zarqawi ஈராக்-சிரியா எல்லைப்பகுதியில் இருப்பதாகவும் சந்தேகிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் இந்தோனிசிய தூதரகம் மூடப்பட்டது

ஆஸ்திரேலியாவின் தலைநகர் Canberra-வில் உள்ள இந்தோனேசிய தூதரகத்திற்கு மர்மப் பொட்டலம் ஒன்று அனுப்பப்பட்டதை அடுத்து அத்தூதரகம் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது.

உயிரியல் ஆயுதம் எதுவும் அப்பொட்டலத்தில் அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் போலீசாரும், தீயணைப்புப்படையினரும் தூதரகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தீயணைப்பு வண்டிகளும், Ambulance வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன் போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காக Corby என்ற ஆஸ்திரேலிய பிரஜைக்கு, 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இந்தோனேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் எதிரொலியாக இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

கடும் கண்காணிப்பில் Jakarta

தீவிரவாத தாக்குதல் நடக்கக்கூடும் என்ற தகவல் காரணமாக அதிகபட்ச விழிப்புணர்வு நிலையிலும் உஷார் நிலையிலும் Jakarta வைக்கப்பட்டுள்ளதாக Jakarta தலைமைப் போலீஸ் அதிகாரி Insp Gen Firman Gani தெரிவித்தார்.


அப்பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் பற்றிய அச்சம் நீங்கும் வரை இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார். தாய்நாட்டை தீவிரவாத தாக்குதலிருந்து காப்பாற்ற பொது மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அந்நாட்டிலுள்ள முக்கிய அலுவலகங்கள் , ராஜ தந்திர நடவடிக்கை மையங்கள் ,தொழிற்சாலைகள் , வியாபார மையங்கள் போன்ற முக்கிய பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
______________________________________________________________________

மாணவர்களுக்கான பூப்பந்தாட்டம்

பூப்பந்து ஆட்டத்தில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்கள், 11 மற்றும் 12-ம் திகதிகளில் சிலாங்கூர் பூச்சோங் Bandar Puteri, Michael பூப்பந்து அரங்கத்தில் நடைபெறவுள்ள இரட்டையர்ப் பிரிவு பூப்பந்துப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெவ்வேறு இனப் போட்டியாளர்களாக இருக்க வேண்டும் எனவும், இதன்வழி சிறந்த விளையாட்டாளர்களைத் தேர்வு செய்ய முடியும் எனவும் Sportsunite உயர் அதிகாரியின் இயக்குனர் Datuk Dina Rizal தெரிவித்தார்.

விளையாட்டாளர்களுக்கிடையே ஒற்றுமை உணர்வை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே ஏற்பாட்டு குழுவின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மேல் உள்ள செய்திகளை www.vanakkammalaysia.com (http://www.vanakkammalaysia.com) அகபக்கத்திலும் காணலாம்.


மனோ.ஜி

பரஞ்சோதி
04-06-2005, 04:35 AM
மலேசியா செய்திகளுக்கு நன்றி அண்ணா.

அறிஞர்
04-06-2005, 07:40 AM
நன்றி மனோஜி..... தொடர்ந்து அளியுங்கள்....