PDA

View Full Version : அன்புடன் இளையவன்



இளையவன்
03-06-2005, 06:52 AM
வணக்கம் நண்பர்களே,
நானும் இந்தக் குடும்பத்தில் இணையலாம் என்று நினைக்கிறேன். அதற்கு உங்கள் அனைவரதும் ஆதரவிருக்கும் என்று நம்புகிறேன். நான் ஈழத்திலிருந்து இளையவன்(புனை பெயர் தான்) .

pradeepkt
03-06-2005, 06:54 AM
அடடே வாருங்கள் இளையவன்.
இத்தமிழ் மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும் படைப்புகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,
பிரதீப்

பரஞ்சோதி
03-06-2005, 06:59 AM
இனியவர் இளையவரை வருக வருக என்று வரவேற்கிறேன்.

இளையவன்
03-06-2005, 07:00 AM
உங்களுடைய ஆதரவுக்கு நன்றி பிரதீப் மற்றும் பரஞ்சோதி.

அறிஞர்
03-06-2005, 07:03 AM
வாருங்கள் இளையவனே.........
தங்கள் படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ஈழத்தின் செய்திகளை தாருங்கள்....

சுவேதா
03-06-2005, 11:57 AM
வாருங்கள் இளையண்ணா!
எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு. உங்கள் படைப்புக்களையும், கருத்துக்களையும் காண ஆவலுடன் உள்ளோம். உங்களின் வரவு நல்வரவாகட்டும்.

பிரியன்
03-06-2005, 12:17 PM
வாருங்கள் இளையவன். வற்றாத படைப்புகளை கொடுங்கள். ஈழத் தமிழர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.....

இளையவன்
03-06-2005, 01:07 PM
எல்லோருடைய ஆதரவிற்கும் நன்றி. மற்றும் சுவேதா நான் பெயருக்கேற்றவாறு இளையவன் தான் அதனால் பெயர் சொல்லி அழைப்பதில் தப்பில்லையே.

pradeepkt
03-06-2005, 01:09 PM
வாருங்கள் இளையண்ணா!
எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு. உங்கள் படைப்புக்களையும், கருத்துக்களையும் காண ஆவலுடன் உள்ளோம். உங்களின் வரவு நல்வரவாகட்டும்.

அட, ஏற்கனவே சகோதரி உங்கள் பெயரைச் சுருக்கி இளை என்று அழைக்க ஆரம்பித்து விட்டார். நீங்கள் வேறு இளையவன் என்றால் கலாய்க்க ஆரம்பித்து விடுவாரே? :)

thempavani
03-06-2005, 01:42 PM
வாருங்கள் இளையவன்.
வருக.... வருக ....

சுவேதா
03-06-2005, 01:59 PM
எல்லோருடைய ஆதரவிற்கும் நன்றி. மற்றும் சுவேதா நான் பெயருக்கேற்றவாறு இளையவன் தான் அதனால் பெயர் சொல்லி அழைப்பதில் தப்பில்லையே.

உங்களை விட நான் இளயவள் என்று நினைக்கின்றேன். அதனால்தான் அப்படி கூப்பிட்டேன். உங்களுக்கு விருப்பம் என்றால் அப்படியே கூப்பிடுகின்றேன் சரியா.

சுவேதா
03-06-2005, 08:05 PM
பிரதீப் அண்ணா நான் இளை என்று கூறவில்லையே இளைய என்றுதானே கூறினேன்:)

முத்து
03-06-2005, 08:45 PM
வாருங்கள் இளையவன்,
தங்கள் வரவு நல்வரவாகுக.

Mathu
04-06-2005, 09:54 AM
இளையவனை வரவேற்பதில் மகிழ்ச்சி,
உங்கள் படைப்புகளால் மன்றத்தை மகிழ்வியுங்கள்.

satheesh
04-06-2005, 02:05 PM
வாருங்கள் இளையவன், வருக! வருக!!வருக!!!
அன்புடன்
சதீஷ்

rethinavelu
05-06-2005, 12:19 AM
நான் மன்றத்துக்குப் புதியவன் என்து ஆக்கங்களை வெளியிடுவீர்களா

பிரியன்
05-06-2005, 03:15 AM
நான் மன்றத்துக்குப் புதியவன் என்து ஆக்கங்களை வெளியிடுவீர்களா

முதலில் உங்களுக்கு எங்கள் மனம் கனிந்த வரவேற்புகள் உரித்தாகுக.
உங்களைப் பற்றி அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே..

தங்கள் படைப்புகளை எந்த வித தயக்கமின்றி வெளியிடுங்கள்.

அறிஞர்
05-06-2005, 10:46 AM
நான் மன்றத்துக்குப் புதியவன் என்து ஆக்கங்களை வெளியிடுவீர்களா

அவசியம் தங்கள் ஆக்கங்களை வெளியிடலாம்.....

தங்களை பற்றி அறிமுகப்பகுதியில் அறிமுகம் செய்தால்... அனைவரும் தங்களை அறிந்துக்கொள்ள வசதியாயிருக்கும்...