PDA

View Full Version : காணாமல் போனவைகள்



முத்து
02-06-2005, 11:42 PM
காணாமல் போனவைகள்

பயமூட்டும் ஜந்துக்கள்
மிளகாய், இஞ்சி, மிளகு
ஒரு காலத்தில்.

அப்போதெல்லாம்
தண்ணீர்
பல சொம்புகள்
தேவைப்படும்,
சிறு வெங்காயத்துக்கே.

இளம் நாவின்
சுவை மொட்டுக்கள்
புத்தம் புதியனவாய் இருந்தபோது
எனைக் கண்கலக்கி
உடல் பதற வைத்திருக்கிறது
எண்ணெயில் பொறித்தெடுத்த
பிஞ்சு மிளகாயின் சிறுநுனிகூட .

வியந்திருக்கிறேன்
பச்சை மிளகாயை
இயல்பாய்க் கடித்துத் தின்போரை,
அவர்கள் எதையோ
அடிவேர்வரை இழந்து விட்டிருக்கிறார்கள்
என்பதை அறியாமலே.

கால ஓட்டத்தில்
எரிச்சல் தரும் பச்சை மிளகாய்
வெள்ளரிப் பிஞ்சாகியிருப்பது
எனக்கு
வசதியாய்த்தான் இருக்கிறது.

என்றாலும்
எனக்குப் புரியவே இல்லை.

சீரகத்தின் காரத்துக்குக்
குடம்குடமாய்க்
கண்ணீர் விடுவோரைப் பார்த்தால்
புன்னகை வராமல்
ஏன் எனக்கு
அவர்கள்மேல்
இப்போதெல்லாம்
பொறாமை ?.

பாரதி
05-06-2005, 02:06 PM
முத்து... உங்களுக்கு வயதாகிறதுன்னு சொல்லாம சொல்றீங்களா..? தொடர்ந்து கவிதை வழங்கவும்.

அறிஞர்
07-06-2005, 03:34 AM
காணாமல் போனவைகள்

சீரகத்தின் காரத்துக்குக்
குடம்குடமாய்க்
கண்ணீர் விடுவோரைப் பார்த்தால்
புன்னகை வராமல்
ஏன் எனக்கு
அவர்கள்மேல்
இப்போதெல்லாம்
பொறாமை ?.
சீரகத்தின்
காரத்துக்கேவா......
கண்ணீர்........
வரும்

இளசு
22-04-2007, 08:24 AM
மிளகாய்க்குக் கலங்குவது மட்டுமல்ல-
ஐஸ்க்ரீமுக்கு அடிமையாக்குவதும்
இளவயதின் அதிகப்படி சுவைநரம்பு மொட்டுகள்தான்..

ஒரு உடலியல் உண்மையை
சுவையான கவிதையாக்கிய
அன்புத்தம்பி முத்து
இப்போது எங்கே? நலமா முத்து?

leomohan
22-04-2007, 09:09 AM
வித்தியாசமான கவிதை. எடுத்துக் கொண்டு கரு என்னை மிகவும் வியக்க வைக்கிறது. வாழ்த்துகள் முத்து. தொடருங்கள் உங்கள் வித்தியாச பார்வையை

ஓவியா
22-04-2007, 08:12 PM
நல்ல கரு, கவிஞ்சனுக்கு காண்பதெல்லாம் கவிதையின் கருவாம்.
இன்று படித்து காண்கிறேன்.

மிக்க நன்றி முத்து அண்ணா

poo
23-04-2007, 05:32 AM
பால்ய காலத்தை திரும்பிப் பார்ப்பதில் இது சுவை நிறைந்த புது வகை..

முத்து மீண்டும் வரவேண்டும்...

ஓவியன்
23-04-2007, 05:38 AM
முத்து மீண்டும் வரவேண்டும்...

உண்மைதான் அண்ணா!

காணாமல் போனவை என்று அருமையான கவியைத் தந்துவிட்டு அவரும் காணாமல் போய் விட்டாரே அண்ணா!!

மீண்டும் வாருங்கள் முத்து,
வந்து உங்கள் முத்தான கவிகளை மீண்டும் தாருங்கள்.