PDA

View Full Version : அந்தக்கால ஆருடங்கள் இன்றைய நகைச்சுவைகள்முத்து
03-06-2005, 12:36 AM
அந்தக்கால ஆருடங்கள் இன்றைய நகைச்சுவைகள்

" ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானியா ? விஞ்ஞானிக்கு எதிர்ப்பதமாக இவரைவிட ஒருவரைக் கற்பனை செய்வது மிகக் கடினமானது. ஐன்ஸ்டீன் கொஞ்சம் நன்றாய் வயலின் வாசிக்கக்கூடியவர், வரும் 1940 ஆம் ஆண்டுகளுக்குள் ரிலேடிவிடி தத்துவம் ஒரு நகைச்சுவையாகக் கருதப்படும். கதைகளில் வரும் ஆண்டர்சன், கிரிம் மற்றும் மட் ஹட்டர் இவர்களுடன் ஐன்ஸ்டீன் ஏற்கனவே இறந்து அவர்களுக்குப் பக்கத்திலேயே புதைக்கப்பட்டுவிட்டார்..."
- George Francis Gillette, creator of the "backscrewing theory of gravity,"1929.

கதையைப் பாருங்கள். ஐன்ஸ்டீன் காலத்தில் வாழ்ந்த சகவிஞ்ஞானியின் கருத்துத்தான் இது :-).

அந்தக் கால எண்ணங்கள், கருத்துக்கள் பல இன்றைய மக்களுக்கு வியப்பையும், சிரிப்பையும் தரும் என்பதற்கு இன்னும் சில உதாரணங்கள்.

"உலகில் மொத்தம் ஐந்து கம்ப்யூட்டர்களை விற்கச் சாத்தியமும், சந்தையும் உள்ளது" - தாமஸ் வாட்ஸன், IBM நிறுவன சேர்மன், 1943.

"யாரின் வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் என்ற அவசியத்துக்கான காரணமே இல்லை" - கென் ஒல்சன், president, chairman and founder of Digital Equipment Corp., 1977.

"... ஆனால்... இது எதற்குத்தான் பயன்படும்.. ?`" - IBM நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் மைக்ரோசிப்புகள் குறித்து, 1968.

*********************
இன்றைய நகைச்சுவை

"கடவுளால்கூட இந்தக் கப்பலைக் கவிழ்க்க முடியாது."
- டைட்டானிக் கப்பலின் டெகன்ட், ஏப்ரல் 10, 1912.
****************************

அறிஞர்
03-06-2005, 04:02 AM
அருமையான ஆருடங்கள்... அன்று ....
நகைச்சுவை இன்று......
இன்னும் தொகுத்து தாருங்கள்.. முத்து

gragavan
03-06-2005, 06:58 AM
அடேங்கப்பா! ஒவ்வொரு கண்டுபிடிப்பும் எவ்வளவு ஏளனிக்கப்பட்டுள்ளது. முன்பு விகடனில் ஒரு நகைச்சுவை. ஒரு சிற்பி ஒரு சிலை வடித்திருப்பார். தன்னுடைய சிலை போல இனிமேல் ஏதாவது கண்டுபிடிக்கப் படும் என்று ஆணித்தரமாக கூறுவார். அரசர் உட்பட எல்லாரும் அவருடைய கற்பனையைக் கிண்டல் செய்து சிரிப்பார்கள். காரணம் அந்தச் சிலை தொலைபேசி போல இருக்கும்.

அறிஞர்
03-06-2005, 08:08 AM
இந்த பதிப்பை.. பார்த்தவுடன்....... எனக்கு ஒன்று தோன்றுகிறது....

நாமும் இது மாதிரி ஏதாவது சிந்தித்து.. சொல்லக்கூடாது......

பரஞ்சோதி
03-06-2005, 09:09 AM
அந்த காலத்தில் லியார்னடோ டாவின்ஸி இன்றைய ஹெலிகாப்டர், பீரங்கி மற்றும் நிறையவற்றை கற்பனையில் வரைந்தாராம்.

இறவாக்கவி பாரதி கண்ட கனவுகள் நனவாகி வருகிறதே.

முத்து
03-06-2005, 09:54 PM
அந்த காலத்தில் லியார்னடோ டாவின்ஸி இன்றைய ஹெலிகாப்டர், பீரங்கி மற்றும் நிறையவற்றை கற்பனையில் வரைந்தாராம்.இறவாக்கவி பாரதி கண்ட கனவுகள் நனவாகி வருகிறதே.

பரஞ்சோதி,
நீங்கள் சொல்வது சரிதான். டாவின்ஸின் ஓவியங்கள் நமது ஆயிரமாண்டு பழமையான புட்பக விமானம், மயிற்பொறி போன்றதுதான்.

பாரதியின் கனவுகள் வெறும் கருவிகளைஒத் தாண்டி ஒரு பெரும் தேசத்தின் எதிர்காலத்தையே புட்டுப்புட்டு வைப்பதாய் இருக்கிறது. காவிரி , கங்கை இணைப்பிலிருந்து, இந்திய , இலங்கைப் பாலம் வழியாய் , சில ஆண்டுகளில் இந்தியா ஏவவிருக்கும் நிலவுக்கான செயற்கைக் கோள்வரை அன்றைக்கே சிந்தித்தே பாரதி நிஜமாகவே தீர்க்கதரிசிதான்.

கங்கையின் நீரின் மிகுதியால் காவிரியில் பயிர் செய்வோம்.
சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்பாம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
ஆயுதம் செய்வோம் .. நல்ல காகிதம் செய்வோம்

முத்து
05-06-2005, 01:50 AM
கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. ஒவ்வொன்றையும் தனியாகக் கொடுக்காமல் ஒரே இடத்தில் கொடுத்தால் எளிதாய் இருக்குமென்பதால் புதியதொன்றை கீழே சேர்த்துள்ளேன். இனியும் அவ்வாறே செய்ய உள்ளேன்.