PDA

View Full Version : பழைய பதிப்புக்கள்



அறிஞர்
02-06-2005, 02:51 PM
மன்றத்தின் நண்பர்களே...

புதிய உதவியாளர்கள் (இனியன், பரணி, மன்மதன், தேம்பா, அறிஞர் ) அனைவரும் பழைய திஸ்கி பதிப்புக்களள ஒவ்வொரு பகுதியாக யுனிகோடிற்கு மாற்றி வருகிறோம்.....

எந்த பழைய பதிப்புக்களும் அழிக்கப்படுவதில்லை......

விரைவில் அனைத்தும் மன்ற பகுதியில்.. படைப்பாளர்கள் பெயரிலேயே, நல்ல கருத்துக்களுடன் வலம் வரும்.

இது ஒரு நாள் பணியல்ல... சில மாதங்கள் தொடரும்..

தங்களின் ஆலோசனைகளை எங்களுக்கு தெரியபடுத்துங்கள்.........

பரஞ்சோதி
02-06-2005, 09:10 PM
நன்றி அறிஞர் அவர்களே!

படைப்பாளிகள் தங்களின் முக்கியமான படைப்புகளை பட்டியலிட்டு கொடுத்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பீங்களா?

மேலும் ஒருவர் சிரிப்புகளை வேற வேற தலைப்புகளில் கொடுத்திருந்தால் அதை அவரின் பெயரிலேயே (எ.கா. முத்துவின் சிரிப்புகள் - தொகுப்பு ) அனைத்தயும் ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வரலாமே, அதனால் அதிகபடியான தலைப்புகளை தவிர்க்கலாம் தானே.

ஒரு பதிவிற்கு மற்றவர்கள் சும்மா "அருமை", "நன்றி", "தொடருங்கள்" என்று மட்டும் கொடுத்த பதிவுகளை தவிர்க்கலாமே.

- விரும்பினால் ஆலோசனைகள் தொடரும்.

அறிஞர்
03-06-2005, 02:52 AM
நல்ல ஆலோசனை பரம்ஸ்... அனைவரும் கலந்தாலோசித்து முடிவு நல்ல முடிவு எடுப்போம்.......

முதலில் கவிதை பகுதியை மாற்றி வருகிறோம்... அங்கிருந்த பழைய பதிப்புக்களை கருத்துக்களுடன் அப்படியே மாற்றுகிறோம்......

Iniyan
03-06-2005, 09:57 AM
பரம்ஸ்!

உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கு நன்றி. அவசியம் பின் பற்றுகிறோம். தொடருங்கள்.