PDA

View Full Version : அறையின் மூலையில்....



முத்து
21-06-2003, 02:59 AM
என் அறையின் மூலையில் ....

எழுதித் தீர்ந்த

பேனாக்கள்...


உழைத்துத் தேய்ந்த

செருப்புகள்....


பலர் படித்துக் கிழிந்த

புத்தகங்கள்...



காய்ந்து உலர்ந்த

மலர்கள்...



அனைத்தும் கடமை முடித்த

பெருமிதத்தில்...



அறையின் நடுவே புத்தம் புதிதாய்..

நான் மட்டும்....

Narathar
21-06-2003, 04:21 AM
ஒரு மனிதனுக்குத்தேவை அந்த உணர்வுதான்

அது இல்லை என்றுதான் பலர் புலம்பித்தள்ளுகிறார்கள்

அந்த உணர்வு உங்களுக்கிருப்பது மகிழ்ச்சியே..............

ஒவ்வொரு நாளும் புதியவனாய் ஒவ்வொரு கவிதை

இப்படி புத்துணர்ச்சியாய் எழுதிக்கொண்டே இருங்கள்

karikaalan
22-06-2003, 09:26 AM
அவன் தான் மனிதன். நித்தம் நித்தம் புதியதாய் அவனால் மட்டுமே வாழக் கூடும்.



வாழ்த்துக்கள், முத்துஜி!



===கரிகாலன்

முத்து
22-06-2003, 12:05 PM
நன்றிகள் நண்பர் நாரதருக்கும் ... அண்ணன் கரிகாலன் அவர்களுக்கும்...

poo
22-06-2003, 01:51 PM
யோசிக்கவைக்கும் முத்துக்கள் முத்து...



பாராட்டுக்கள்!!!

பாரதி
22-06-2003, 02:30 PM
மூளையில் இருப்பதை முளைக்க வைத்திருக்கும் முத்துவுக்கு பாராட்டுக்கள்.

நிலா
24-06-2003, 09:40 PM
அருமையான கவிதை!வாழ்த்துகள் நண்பரே!

இளசு
25-06-2003, 09:29 PM
சிந்தனைச் சிற்பி

என் தம்பி முத்து....

அவர் சிந்தனைச் சிப்பியில்

உதித்திட்ட முத்து ...



மிக இரசித்தேன்...



தம்பியைப் பாராட்டி மகிழ்கிறேன்...

noveltv
26-06-2003, 04:41 AM
நல்ல சிந்தனை நண்பரே!

வளரட்டும் உங்கள் கவிதைப்பணி!

puppy
09-01-2004, 07:57 PM
நல்ல கவிதை முத்து.........

Nanban
10-01-2004, 06:03 AM
புதியவனாகத் தினம் தினம் பிறப்பதற்கே தினமும் தூங்கி எழுகிறோம்.... அந்த தூக்கத்தையும் தொலைத்து விட்டு, கசங்கிப் போய் கிடக்கும் பலர் உண்டு...... நீங்கள் புத்தம் புதியவனாய் என்றதும் உங்களைப் பார்க்கும் பொழுது, நிம்மதியான ஆள் என்று தெரிகிறது.........



வாழ்த்துகள்.......

நிலா
10-01-2004, 06:25 AM
அறையின் நடுவே புத்தம் புதிதாய்..

நான் மட்டும்....





இப்ப நிலை என்ன?நீங்க மட்டுமா உக்கார்ந்திருக்கீங்க?கூடத்தென்றலும் தானே?