PDA

View Full Version : 1000MB அளவுள்ள கோப்புகளை அனுப்ப வழி!



பாரதி
02-06-2005, 11:02 AM
அன்பு நண்பர்களே,

இன்று வலைப்பூவில் கண்ட ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வழக்கமாக நம்மால் அதிகபட்சமாக மின்னஞ்சலில் 10 மெகா பைட் கொள்ளளவு கொண்ட கோப்புகளை அனுப்ப முடியும்.

http://www.yousendit.com/

இந்தத் தளத்தின் மூலம் 1000 மெகா பைட் அளவுள்ள கோப்புகள் வரை நம்மால் அனுப்ப முடியும்.

1. இதில் புகைப்படங்கள், இசைக்கோப்புகள் உட்பட எல்லாவற்றையும் அனுப்ப முடியும்.

2. ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களுக்கு அனுப்ப முடியும்.

3. நீங்கள் அனுப்பும் கோப்பு " யூசென்ட்இட் " வலைத்தளத்தில் சேமிக்கப்படும்.

4. நீங்கள் அனுப்ப விரும்பிய நபர்களுக்கு, அந்த வலைத்தளமே கோப்பை பதிவிறக்குவதற்கான சுட்டியை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும்.

5. நீங்கள் அனுப்பிய கோப்பு 7 தினங்களுக்குப் பின் வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும்.

pradeepkt
02-06-2005, 11:03 AM
அடடா.. .பாரதி,
இது போன்ற ஒரு சேவைக்காகத்தான் நான் வெகுநாட்கள் காத்திருந்தேன்.
நன்றிகள் பல.

மன்மதன்
02-06-2005, 11:14 AM
செய்திக்கு நன்றி பாரதி. அலுவலக பறிமாற்றத்திற்கு கூட இதைத்தான் உபயோகப்படுத்துகிறோம்.. நன்றாக இருக்கிறது..
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
02-06-2005, 03:51 PM
சூப்பர் சேவையா இருக்கு.......
இனி நம் மக்கள்.. சினிமா படங்களை ஒவ்வொருத்தருக்கும் அனுப்ப போகிறார்கள்.......

பரஞ்சோதி
02-06-2005, 08:31 PM
நன்றி அண்ணா.

முன்பு நண்பர்களிடமிருந்து கோப்புகள் பெற்றிருக்கிறேன்.

ஒரு முறை மன்மதனுக்கு குருசேடர் கேம்ஸ் ஏத்தலாம் என்று ஏற்றினால் மண்டை காய்ந்து விட்டது, இணையத்தளம் மெதுவாக இருப்பதால் பெரிய கோப்புகள் 5 மணி, 6 மணி நேரம் ஆகிறது.

இது போல் ராபிட் சேர் சேவையும் பயன்படுகிறது.

பரஞ்சோதி
02-06-2005, 08:32 PM
சூப்பர் சேவையா இருக்கு.......
இனி நம் மக்கள்.. சினிமா படங்களை ஒவ்வொருத்தருக்கும் அனுப்ப போகிறார்கள்.......

மக்களே!

நம்ம அறிஞருக்கு புதிய தமிழ் படங்கள் ஏற்றி அனுப்புங்கள், பாவம் அங்கே தமிழ் படங்கள் கிடைக்கிறதோ என்னவோ.

Iniyan
02-06-2005, 09:03 PM
இந்த தளத்தினை நானும் முன்பு பயன்படுத்திப் பார்த்துள்ளேன். ரொம்பவே மந்தம். மேலும் இத்தளத்தினை பயனப்டுத்தி கோப்புகள் அனுப்பும் போது வேறு பக்கம் இணையத்தை சுற்றச் செல்லவும் முடியாது.

சுவேதா
11-06-2005, 09:07 PM
மிகவும் நன்றி அண்ணா!

பாரதி
11-06-2005, 10:46 PM
நன்றி பிரதீப், அறிஞர்,பரஞ்சோதி, இனியன், சுவேதா.

Aren789
19-06-2005, 01:19 PM
செய்திக்கு நன்றி. அலுவலக உபயோகத்திற்கு நிச்சயம் பயன்படும் செய்தி இது. நிச்சயம் உபயோகப்படுத்திக்கொள்வேன்.

நன்றி பாரதி அவர்களே.

இளந்தமிழ்ச்செல்வன்
28-06-2005, 07:35 PM
பயனுள்ள தகவல் பாரதி அவர்களே. நன்றி

gunasekaravarma
02-10-2005, 11:34 AM


츢ȣ. download upload ɡ 츢 âŢ.