PDA

View Full Version : அங்கே எவரும் இல்லை



kavitha
25-02-2005, 01:41 PM
அங்கே எவரும் இல்லை
------------------------

நீலக்கடல்...
அங்கே,
ஆரவாரமாய் அலைகள்
அமைதியாய் சில படகுகள்
அடியில் பல ஜீவன்கள்..
தூங்கிக்கொண்டு சில
தூங்காமல் சில
கண்ணுக்குத்தெரிபவை
அலைகள் மட்டுமே!
விளக்கடித்து பார்த்தால் மட்டும்
சில விஸ்வ ரூபங்கள் தெரியும்
இன்னும் இன்னும்
ஆழத்தில் இருப்பவை
கடலும் அறியாதது..
ஆனால்
அங்கே எவரும் இல்லை..
இருளைத்தவிர.

இளசு
01-02-2006, 12:08 AM
கடல்...

கரையோர அலைகள்..
கலங்கரை விளக்கம் காட்டும் கப்பல்கள்..

இவை தாண்டி...

கடலடிப் பிரளயம்.. இருள்மடி...

கண்டவர் விண்டிலர்?


தெரியாத எதுவுமே பிரமிப்பையும் பயமான ஆர்வத்தையும் ஒருங்கே எழுப்புமில்லையா?

கடலுக்கு மட்டுமல்ல..
மனதுக்கும் குறிப்பாய் பெண்மனம்..
உறவுக்கும் பொருந்தும் இது...


ஆழமான கவிதை கவீ...

நானும் கடலோர நண்டுபோல் என்னால் முடிந்த அளவு
இக்கடலில் நனைகிறேன்...



(என்ன கொஞ்ச நாளாய் ஆளைக்காணோம் கவீ...?)

sarcharan
01-02-2006, 04:08 AM
கவி(தை)தா அருமை..

கவிதா இன்னும் கவி தா




அங்கே எவரும் இல்லை
------------------------

நீலக்கடல்...
அங்கே,
ஆரவாரமாய் அலைகள்
அமைதியாய் சில படகுகள்
அடியில் பல ஜீவன்கள்..
தூங்கிக்கொண்டு சில
தூங்காமல் சில
கண்ணுக்குத்தெரிபவை
அலைகள் மட்டுமே!
விளக்கடித்து பார்த்தால் மட்டும்
சில விஸ்வ ரூபங்கள் தெரியும்
இன்னும் இன்னும்
ஆழத்தில் இருப்பவை
கடலும் அறியாதது..
ஆனால்
அங்கே எவரும் இல்லை..
இருளைத்தவிர.

gragavan
01-02-2006, 05:23 AM
அங்கேயும் உயிர்கள் உண்டு
அங்கேயும் அமைதி உண்டு
அங்கேயும் சண்டை உண்டு
அங்கேயும் எரிமலைகள் உண்டு
அங்கேயும் நிலம் நடுங்குவது உண்டு
ஆனால் அங்கிருக்கும் இருள்தான் நம் கண்களுக்கு உண்டு

பென்ஸ்
01-02-2006, 06:27 AM
எனக்கு உங்கள் கவிதைகளை மட்டும் ஒரு முறைக்கு இரு முறை படித்து என்ன சொல்ல வருகிறிங்கள் என்ன்று தெரிய வேண்டி இருக்குயா....:rolleyes: :rolleyes:

(கொஞ்சம் டியூப் லைட்டுதான் ...):D :D :D

இங்கு கடல் பெண்மைதானே....????


ஆரவாரமாய் அலைகள்
அமைதியாய் சில படகுகள்
அடியில் பல ஜீவன்கள்..
தூங்கிக்கொண்டு சில
தூங்காமல் சில
கண்ணுக்குத்தெரிபவை
அலைகள் மட்டுமே!
விளக்கடித்து பார்த்தால் மட்டும்
சில விஸ்வ ரூபங்கள் தெரியும்


மனம், அதிலுள்ல எண்ணங்கள், குடிகொண்டிருப்பவர்கள், அவர்களின் நிலை... தோன்ட தோன்ட நம் மனதில் புதைந்து கொண்டிருக்கும் சில மறந்த, மறக்க முயர்ச்சிக்கும் உறவுகள்....

இன்னும் இன்னும்
ஆழத்தில் இருப்பவை
கடலும் அறியாதது..
ஆனால்
அங்கே எவரும் இல்லை..
இருளைத்தவிர.

உண்மை கவிதா... எங்கோ அடிமனதில் புதைந்து கிடக்கும் சில முகங்கள் நமக்கு தெரிவதில்லை,
ஆனால் யவரும் இல்லை என்பதை என்னால் ஏற்று கொள்ள முடிய வில்லை...
நீங்கள் கனவுகளை நம்புகிறீர்களா???
"உங்களால் கான முடியாத விடைகளை, பல சமயங்களில் உங்கள் கனவுகள் உங்களுக்கு காட்டி தரும்"

அப்படியே, அந்த குறிஞ்சி பூவை தொடரலாமே....:D :D :D

kavitha
09-02-2006, 04:00 AM
இறுக்கமான கவிதைகளைப் பிரித்துப்பார்க்கும்போது மனம் தளர்ந்து விரிவுகொள்ளும். அந்தத் தளர்ச்சி ஒரு இதமான ஆறுதல்! அப்படிப்பட்ட கவிதைகளை எப்போதும் எழுதமுடியாது.
எப்போதாவதே எத்தனிக்கும். அந்தவகைக்கவிதையில் இதுவும் ஒன்று. நான் எழுதிய(சொற்ப) கவிதைகளில்
எனக்கு மிகவும் பிடித்த இரண்டாவது கவிதை இது.

படிமானங்கள் புதைந்துகிடக்கும்வரை அழகு! பிரித்துப்பார்க்கும்போது தெளிவு!
தெளியும்போது உண்மை உடைந்து விடும். பெண்மை ரகசியக்காப்பகம்!
அதனாலே தான் இக்கவிதைக்கு மட்டும் பதில் எழுதாமல் தவிர்த்தேன்.

இக்கவிதை பழைய மன்றத்தில் நான் எழுதியிருந்தது. மீண்டும் இங்கே எடுத்தியம்பிய சுடருக்கு எனது சம்பிரதாய நன்றிகள்.



"ஆழமான கவிதை கவீ...

நானும் கடலோர நண்டுபோல் என்னால் முடிந்த அளவு
இக்கடலில் நனைகிறேன்...

(என்ன கொஞ்ச நாளாய் ஆளைக்காணோம் கவீ...?)

- இளசு "

மனதை வாசிக்கும் மொழி தெரிந்தவர் இளசு அண்ணா.
கவிதைக்கான பதிலுக்கு நன்றிகள் அண்ணா.

கையில் ஊற்றிய நீர் போல நேரம் ஒழுகுகிறது.
என்ன எழுதுவது என்று தெரியாமல் அனைவரையும் பார்க்கவேண்டும் என்ற உந்துதலால் எட்டிப்பார்த்துவிட்டு
சென்றுவிட்டேன் அண்ணா. வறட்சியாக கிடந்தாலும் உளியால் உழவேண்டும் என்கிறது மனது. நேரமும் சூழலும் இல்லை என்கிறது அறிவு. செயல்பாடுகளை வகைப்படுத்திக்கொண்டு மீண்டும் எழுத விழைகிறேன் அண்ணா. உங்களது வினா எனக்கு உந்துதல். நன்றி


---------------------------------






கவி(தை)தா அருமை..

கவிதா இன்னும் கவி தா
__________________
அன்புடன்
சரவணன்
நன்றி சரவணன்.

--------------------------------------------------------------------------------

அங்கேயும் உயிர்கள் உண்டு
அங்கேயும் அமைதி உண்டு
அங்கேயும் சண்டை உண்டு
அங்கேயும் எரிமலைகள் உண்டு
அங்கேயும் நிலம் நடுங்குவது உண்டு
ஆனால் அங்கிருக்கும் இருள்தான் நம் கண்களுக்கு உண்டு

gragavan
ராகவன் அண்ணா, பழைய மன்றத்தில் உங்களது "பெரிய தத்துவம் போல இருக்கிறதே கவீ" என்ற பதிலைப்பார்த்துவிட்டு எஸ்கேப் ஆனேன். இப்போது மீண்டும் இப்படி ஒரு பதில்.
இருள் என்பதே பூசிக்கொள்ளும் சாயம் தானே!
--------------------------------------------------------------------------------

எனக்கு உங்கள் கவிதைகளை மட்டும் ஒரு முறைக்கு இரு முறை படித்து என்ன சொல்ல வருகிறிங்கள் என்ன்று தெரிய வேண்டி இருக்குயா....

(கொஞ்சம் டியூப் லைட்டுதான் ...)

இங்கு கடல் பெண்மைதானே....????
....
.....
மனம், அதிலுள்ல எண்ணங்கள், குடிகொண்டிருப்பவர்கள், அவர்களின் நிலை... தோன்ட தோன்ட நம் மனதில் புதைந்து கொண்டிருக்கும் சில மறந்த, மறக்க முயர்ச்சிக்கும் உறவுகள்....

...
...
உண்மை கவிதா... எங்கோ அடிமனதில் புதைந்து கிடக்கும் சில முகங்கள் நமக்கு தெரிவதில்லை,
ஆனால் யவரும் இல்லை என்பதை என்னால் ஏற்று கொள்ள முடிய வில்லை...
நீங்கள் கனவுகளை நம்புகிறீர்களா???
"உங்களால் கான முடியாத விடைகளை, பல சமயங்களில் உங்கள் கனவுகள் உங்களுக்கு காட்டி தரும்"

அப்படியே, அந்த குறிஞ்சி பூவை தொடரலாமே....
__________________
பெஞ்ஜமின் வி. வின்ஸ்


"நீங்கள் கனவுகளை நம்புகிறீர்களா?" என்றால் ஆம்!
உங்கள் கருத்தோடு எனக்கும் ஒத்திசைவு உண்டு பென்ஸ்.
சம்பந்தமில்லாமல் வரும் கனவுகள், நினைவுச்சிதறல்களை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டேன். நம் அடிமனதில் பதிந்திருப்பவையே கனவுகள் என்பதாக நான் நம்புகிறேன்.

"ஆனால் யவரும் இல்லை என்பதை என்னால் ஏற்று கொள்ள முடிய வில்லை..."
எனக்கு கூடதான் நீங்கள் டியூப்லைட் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. :D
உரைப்பது தான் என் பொறுப்பு; உறைப்பதல்லவே!

"குறிஞ்சிப்பூ" - பல இதழ் அடுக்கு முகத்தினைக்காட்டுகிறது. ஒவ்வொன்றையும் கிரகித்துவருகிறேன். முடிக்கத்தான் சிரமமாய் இருக்கும்போலத்தெரிகிறது. (முடிவு தெரியாததால் அல்ல) மெல்லிய வெள்ளோடை போல என்னால் எடுத்தாள இயலும்போது புயற்காற்றடிக்காத ஒரு தருணத்தில் பூக்கச்செய்கிறேன். நன்றி!

அறிஞர்
09-02-2006, 02:07 PM
கலக்கல் கவி...

ஆழத்தில் தான் எத்தனை விசயங்கள் புதைந்து இருக்கிறது.....

ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் பிரித்துபார்க்கும்பொழுது எத்தனை தெளிவு....

நன்றி மக்கா...
---
புதுக்கவிகள்.......இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம் கவி

kavitha
10-02-2006, 09:35 AM
சேகரித்து வைத்திருக்கிறேன் அறிஞர். எழுதுவதற்கான மனநிலையில் இப்பொழுது இல்லை. எழுதினால் இங்கே பதிக்காமலா இருப்பேன்? நன்றி.

ஓவியா
04-04-2007, 11:50 PM
விமர்சனமில்லாமல் கவிதையை நான் படித்திருந்தால் பொருள்/அர்த்தம் சரியாக எனக்கு புலப்ட்டிருக்காது..ஹி ஹி ஹி நானும் கொஞ்சம் குழல் விளக்குதான்.

அனைவரின் விமர்சனமும் கவிதையின் பொருளை கச்சிதமாக வெவ்வேரு கோணத்தில் காட்டுகின்றது. பலே.


பெண் மனதோடு ஒப்பிடும் பொழுது...ஆஹ அஹ்ஹ ரொம்பவே பொருத்தமாக இருக்கின்றது.

கவிதாயினி கவிதாவுக்கு பாராட்டுக்கள்.

ஆதவா
05-04-2007, 02:13 AM
நீலக்கடல்...
அங்கே,
ஆரவாரமாய் அலைகள்
அமைதியாய் சில படகுகள்
அடியில் பல ஜீவன்கள்..
தூங்கிக்கொண்டு சில
தூங்காமல் சில
கண்ணுக்குத்தெரிபவை
அலைகள் மட்டுமே!
விளக்கடித்து பார்த்தால் மட்டும்
சில விஸ்வ ரூபங்கள் தெரியும்
இன்னும் இன்னும்
ஆழத்தில் இருப்பவை
கடலும் அறியாதது..
ஆனால்
அங்கே எவரும் இல்லை..
இருளைத்தவிர.


நல்ல கவிதை. மிக அழகானதும்கூட,.. ஏன் பெண்களின் மனதோடே பார்க்கவேண்டும்? பல இடங்களில் இது பொருந்துகிறது. உதாரணமாக உலக நடப்பு, சமுதாயம்.
இன்னொன்று கவனித்தேன்.. அங்கே இருப்பவைகள் நிறைய. படகு, அதனடி அலைகள், மீன்கள், இவ்வளவு ஏன் இருள் கூட... ஆனால் உபயோகிக்கத்தான் எவருமில்லை.

நம் உலகத்தில் இப்படி பல உண்டு... அதை சரிவர உபயோகிப்பதில்லை.. ஒருவகையில் இது பெண்ணின் மனதைச் சொன்னாலும் கவிதை சமூகத்தை ஏளனம் செய்வதாக கண்ணுக்குத் தெரிகிறது..

விளக்கடித்துப் பார்த்தால் விஸ்வரூபம் தெரியும்...

நம் மனக்கண்கள் திறந்தாலே போதும் தானாக விளக்கு அடிக்கப்பட்டு விடும்.. விஸ்வரூபம் என்பது நமக்குத் தெரியப்போகும் அல்லது நாம் முடிக்கும் செயல்..

உன் கண்களைத் திறந்து அந்த செயலைச் செய்... அது விஸ்வரூபம் எடுத்து உன் கண் முன்னாடியே நிற்கும்..

இன்னும் இன்னும்
ஆழத்தில் இருப்பவை
கடலும் அறியாதது..

இந்த செயல்களெல்லாம் ஆழத்தில் இருப்பவை... சாதாரணமாக விஸ்வரூபம் எடுக்க முடியுமா என்ன?
இந்த உலகே அறியாத செயல்கள்... முடித்துக்காட்டு...

நன்றிங்க கவிதா.. பல விஷயங்கள் உள்ளடக்கிக் காட்டப்பட்டுள்ளது. இன்னும் நிறைய கவிதைகள் எழுத வேண்டுகிறேன்...

வாழ்த்துக்கள்

அறிஞர்
05-04-2007, 02:17 AM
பழைய கவிதை... ஓவியா... ஆதவனால்... மீண்டும் உயிர் பெறுகிறது.

kavitha
10-04-2007, 11:29 AM
மேலெழுப்பிய அறிஞர், ஓவியா, ஆதவன் -க்கு நன்றிகள் பல.

அன்புரசிகன்
10-04-2007, 11:33 AM
விளக்கடித்து பார்த்தால் மட்டும்
சில விஸ்வ ரூபங்கள் தெரியும்
இன்னும் இன்னும்
ஆழத்தில் இருப்பவை
கடலும் அறியாதது..
ஆனால்
அங்கே எவரும் இல்லை..
இருளைத்தவிர.

ஒரு பெண்ணின் மனதும் இவ்வாறு என சில அனுபவசாலிக்கவிகள் கூறுவர்.
கவி நன்று.

அரசன்
10-04-2007, 04:18 PM
ஏதோ ஒண்ணு இருப்பதாகவே தெரிகிறது. அது எதுவெனறுதான் புரியவில்லை.