PDA

View Full Version : பூத்துக்குலுங்கும் மரம்kavitha
24-03-2005, 09:54 AM
பூத்துக்குலுங்கும் மரம்
----------------------------

அடுத்தவீட்டின் நெடுதுயர்ந்த மரம்
அதன் கிளைமட்டும் எனது தோட்டத்தில்
அதோ ஜன்னலில் தெரிகிறது
தினமும் பூத்துக்குலுங்கும் மரம்
கண்ணுக்குக் குளிர்ச்சி
அப்பூக்கள் என் வீட்டுக்குள்
எனக்காகவே உதிர்கின்றன
உதிர்ந்த பூக்களை
எடுக்கவும் இல்லை
தொடுக்கவும் இல்லை
பூக்களுக்கோ வாசனை அதிகம்
தூரத்திலேயே அதன் வாசனை தெரிகிறது
உதிர்ந்த பூக்கள் காய்ந்தது
உதிராத பூக்கள் காய்த்தது
காய்த்தது கனிந்தது
கனியும் ஒரு நாள் உதிரலாம்
உதிர்வது அதன் கடைசிப்பரிணாமம்
உதிர்வதால் மரத்திற்கு இழப்பில்லை
அந்தக் கனிமீதும் எனக்கு
எந்த அக்கறையும் இல்லை
ஏனெனில்
ஏவாளின் சாபம் உலகம் அறியும்.

பென்ஸ்
24-02-2006, 08:02 AM
வீடும் வீட்டை சுற்றி வேலியும் அமைத்தாலும், சில கிளைகள் படர்கின்றன...
முறிக்கபடவேண்டியவை....

தயக்கம்... நல்ல உறவுகள் பாதிக்கபடும் பயம்... இது தான் நம்முடைய பயம்... நாம் செய்யும் தவறுகள்....
பூக்கள் மணம் கொடுக்கும்.. சில தலைவலியும் கொடுக்கும்

உதிராத பூக்கள் காய்க்கும்
உதிராத காய்கள் கனியும்...
எனினும் இவை சாப கனிகள்...

ஏவாளின் சாபம் கொடுத்த பயம்..
இன்னொரு வேலி...

வேலியும்... வேலிக்கு காவலும் தேவை கவிதா....

இல்லையேன்றால் "Broken Window Theory" போல் ஆகிவிடும்

அழகாக சொல்லப்பட்ட மனத்தோட்டம்... பாராட்டுக்கள் கவிதா

கவிதையில் நீங்கள் சொல்ல வந்ததை விட வேறு மாதிரி நான் எடுத்திருந்தால்
நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்று சொல்லலாமா???:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D :D

இளசு
26-02-2006, 06:55 AM
கவீ, பென்ஸ்..

பலமுறை வாசித்தும் ஏதோ ஒன்று இன்னும் எனக்குள் சிக்கவில்லை.

பென்ஸின் விமர்சனம் படித்தும்....

பொறி தட்டினால் மீண்டும் பதிக்கிறேன்..

இல்லையெனில் ----


கவீ எங்கேப்பா????!!!!!

பென்ஸ்
26-02-2006, 07:06 AM
கவிதா.. பதில் சொல்லட்டும்...

இளசு.. ஒரு டிப்ஸ்.. ஒரு பெண்ணாக இருந்து இந்த கவிதையை வாசியுங்கள்....


ஹி ஹீ... இல்லை எல்லாருக்கும் பொருந்தும் இல்லையா கவிதா???

kavitha
08-03-2006, 09:57 AM
மீண்டும் எனது கவிதையை மேலெழுப்பிய சுடருக்கு நன்றிகள்.


வேலியும்... வேலிக்கு காவலும் தேவை கவிதா....

இல்லையேன்றால் "Broken Window Theory" போல் ஆகிவிடும்

அழகாக சொல்லப்பட்ட மனத்தோட்டம்... பாராட்டுக்கள் கவிதா

கவிதையில் நீங்கள் சொல்ல வந்ததை விட வேறு மாதிரி நான் எடுத்திருந்தால்
நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்று சொல்லலாமா???
மனவேலியை விடச் சிறந்த வேலியை நானறியேன் பென்ஸ்.
அது என்ன புரோக்கன் தியரி?

நான் என்ன சொல்லவந்தேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதைச் சொல்வது உங்களது விருப்பம்.

விரிவான அலசல்கள் யாரையும் புண்படுத்தாமல் இருந்தால் சரி.கவீ எங்கேப்பா????!!!!!
__________________
சிந்தும் தேன்துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
- இளசு
வந்துட்டேன் அண்ணா... நீங்கள் எங்கே?

பென்ஸ்
08-03-2006, 05:12 PM
மனவேலியை விடச் சிறந்த வேலியை நானறியேன் பென்ஸ்.
அது என்ன புரோக்கன் தியரி?

நான் என்ன சொல்லவந்தேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதைச் சொல்வது உங்களது விருப்பம்.
விரிவான அலசல்கள் யாரையும் புண்படுத்தாமல் இருந்தால் சரி.

கவிதா... நான் இந்த கவிதைக்கு பதில் எழுதும் போது, ஒவ்வொரு
வார்த்தைகளையும் கவனமாகதான் பதித்தேன்... அதனால் தாம்
என்னவாக புரிந்து கொண்டேன் என்று எழுதவில்லை..... எழுத
மனமும் வரவில்லை.... உன்மையை பகிரங்கமாக ஒத்துகொள்ளும்
முதிர்ச்சியும் இன்னும் வரவில்லை..:D :D :D

நீங்கள் கவிதையை என்னவென்று எழுதினீர்கள் என்று எனக்கு
தெரியாது, ஆனால் என்னால் ஒரு நான் என்னை கவிதையின் பாகமாக
பாவித்து வாசிக்க நேர்ந்ததால்.... என் மனம் எதோ ஒன்றை பொருத்தி
பார்த்தது... அது நீங்கள் நினைத்ததாக இருந்தால் "பலே" என்
தோள்களை நானே தட்டி கொள்கிறேன்... இல்லையென்றால் "நீ
இன்னும் டியூப் லைட் தாண்டா" என்று சொல்லி கொள்வேன்....:rolleyes: :rolleyes:

உங்கள் கவிதைகளின் சிறப்பும் அதுதானே... கவிதையை புரிந்து கொள்ள கவிதையின் ஒர பாகமாக ஆகவேண்டி இருக்கிறது..
அதற்க்கு பாராட்டுகள்.....:)
இப்போ எனக்கும் ஒரு "பலே" சொல்லி கொள்கிறேன் :D :D

மனதில் இருந்து பேசும் கவிதைகளை நானும் எழுத
கற்றுகொள்ளவேண்டும்....

இப்போது கவிதை எதை பற்றியது என்பதை வாசிப்பவர்களுக்கு
விட்டுவிடலாமே...

"Broken Window Theory" பற்றி இங்கு பேசி பக்கத்தை நிறைக்க
வேண்டாம்... கூகுளில் தேடினால் கிடைக்கும்...

வந்துட்டேன் அண்ணா... நீங்கள் எங்கே?
அதுதானே???!!!!

இளசு, ஒரு நாள் வீட்டு வாசலை திறக்கும் போது, ஒருவன்
வீச்சரிவாளோடு நின்று கொண்டு "ஒழுங்கா மன்றம் வர தெரியாதா??"
என்று கேப்பான்... அது வேறு யாரும் இல்லை நாந்தான்... (சும்மா
லுலுவாயிக்கு..:D :D )

உங்கள் வேலை வெற்றிகரமாக (சீக்கிரமாகவே) முடிய என்
வேண்டுதல்கள்...

இளந்தமிழ்ச்செல்வன்
09-03-2006, 09:06 AM
எல்லாம் கலக்குறீங்க. கவி சித்த ஒரு நடை வந்து சொல்லிவிட்டு போங்களேன். நானும் புரிந்துகொள்ள முயல்கிறேன்.

இளசு
09-03-2006, 10:45 PM
இனிய பென்ஸ், அருமை கவீ...

தினமும் வர ஆசைதான்.. பணிச்சுமை என்னாலேயே தாங்கமுடியா அளவுக்கு..

எல்லாருக்கும் சொல்வதுதான் எனக்கும்- பணி, குடும்பம், நேரிடை வாழ்வு - இதைத்தாண்டிதான் இணைய உலா..

இப்போது அற்றற்று ஓடும் ஆற்றுநீர் போல் என் வரவுகள்..

வீச்சரிவாளைப் பார்த்தால் வீச்சு மாறலாம் பென்ஸ்..


இதசெ சொல்வதுபோல் - இன்னும் இக்கவிதையை முழுதாய் விளங்கினபாடில்லை... கவியே மனது வைத்தால்தான் உண்டு..


பென்ஸ், ஏனோ இந்த கவிதையை பெண்ணாய் பால்மாறி வாசிக்க இயலவில்லை.. ஏன்? விளங்கவில்லை..

தாமரை
10-03-2006, 04:28 AM
இனிய பென்ஸ், பென்ஸ், ஏனோ இந்த கவிதையை பெண்ணாய் பால்மாறி வாசிக்க இயலவில்லை.. ஏன்? விளங்கவில்லை..
இது என்ன வஞ்சப் புகழ்ச்சியா???:confused: :confused:

kavitha
10-03-2006, 10:05 AM
உங்கள் கவிதைகளின் சிறப்பும் அதுதானே... கவிதையை புரிந்து கொள்ள கவிதையின் ஒர பாகமாக ஆகவேண்டி இருக்கிறது..
அதற்க்கு பாராட்டுகள்.....
இப்போ எனக்கும் ஒரு "பலே" சொல்லி கொள்கிறேன்

மனதில் இருந்து பேசும் கவிதைகளை நானும் எழுத
கற்றுகொள்ளவேண்டும்....

இப்போது கவிதை எதை பற்றியது என்பதை வாசிப்பவர்களுக்கு
விட்டுவிடலாமே...

"Broken Window Theory" பற்றி இங்கு பேசி பக்கத்தை நிறைக்க
வேண்டாம்... கூகுளில் தேடினால் கிடைக்கும்...
நீங்களும் எஸ்கேப்பிசம் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் பலே!
அதற்கும்சேர்த்து ஒரு 'பலே' சொல்லிக்கொள்ளுங்கள்.


இதசெ சொல்வதுபோல் - இன்னும் இக்கவிதையை முழுதாய் விளங்கினபாடில்லை... கவியே மனது வைத்தால்தான் உண்டு
அண்ணா என்னை மன்னியுங்கள். வெளிப்படையாக சொல்ல இயலாத விசயங்கள்தான் படிமங்களாக உருவெடுக்கின்றன. ஆகவே நானும் ஜீட்!
எல்லாம் கலக்குறீங்க. கவி சித்த ஒரு நடை வந்து சொல்லிவிட்டு போங்களேன். நானும் புரிந்துகொள்ள முயல்கிறேன்.
__________________
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் நம் தலைமுறை
----------------------------------
அன்புடன்
இ.த.செ

ஒரு குறிப்பு சொல்லட்டுமா?

"அலையும் மேகம்
கலையாத நிலவு
அலையும் நிலவு
கரையாத இரவு"

விளக்கம்: மேகம் எத்தனைமுறை கலைக்கப்பார்த்தாலும் அழியாதது நிலவு. எத்தனை முறை நிலவு உதித்தாலும் இரவு பகல் ஆகிவிடுவதில்லை. அது கரையாத இரவாகத்தான் இருக்கிறது.

என்ன இ.த.செ புரிந்ததா? இல்லை ரொம்ப குழப்பிட்டேனா?

பென்ஸ்
10-03-2006, 10:10 AM
இதில் நிலவு என்ன கவி???? :rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D

ஒன்னுமே புரியாமல்...அப்பாவியாக:p

kavitha
10-03-2006, 10:12 AM
அது யாரோ பென்ஸ்! நீங்க குழப்பிக்காதீங்க..

gragavan
10-03-2006, 10:16 AM
ஒரு பெண்ணாக இருந்து இந்தக் கவிதையை வாசிக்க வேண்டும் என்று பென்சு சொல்கிறார். எனக்கு அது புதிது அல்ல. ஒவ்வொரு கதை எழுதும் பொழுதும் பெண்ணாகக் குழந்தையாகத் தாயாகத் தந்தையாக....நல்லவனாகக் கெட்டவனாக யோசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு சமயம் கடவுளாகவும் நாயாகவும் கூட.

அந்தபடி இந்தக் கவிதையைப் படித்தால் புரிவது ஒன்று. பெண்மை மட்டுமே இப்படி நினைக்க வேண்டும் என்பது தவறு. ஆணும் இப்படி நினைத்தால் மட்டுமே உலகம் உருப்படும். பெண்கள் மட்டும் கற்புடைய பொற்புடையவர்கள். ஆண்கள் வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாம். அவன் ரெண்டு கெட்டினாலும் அவன் குழந்தைகள் அடையாளம் காணப்படும் என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவது ஒவ்வாது. எனக்கு ஒன்றா..உனக்கும் ஒன்று. அதற்கு ஒத்துக்கொள். என்னை உயர்வு படுத்துவது என்பது உன்னை உன் விருப்பத்திற்கு விட்டுக் கொள்ளத்தான் என்றால் ஆகாது வேலை. குத்துவதற்கு எடுக்க வேண்டும் வேலை.

மொழியை உயர்வு செய்து அதன் வளர்ச்சியைத் தடுக்கிறார் என்பர் சிலர். அது பெண்மைக்கும் பொருந்தும். பெண்ணைத் தெய்வமாக்கி...அதன் மூலம் அடக்கி வைத்து தான் மட்டும் பல தட்டு நக்கும் பொய்யர் உலகத்தில் இந்தக் கவிதைகள் போற்றப்படும். புகழப்படும்.

இது தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் அது ஒருபக்கத்திற்கு மட்டும் என்பது ஆகாது. உறவு என்பது கோழிப்பண்ணையா? பத்து கோழிக்கு ஒரு சேவல் என்று கணக்குக் கூற!

என்னவோ சொல்ல வந்தேன். என்னென்னவோ சொல்லி விட்டேன். புரிந்ததோ புரியலையோ...இதுதான் என்னோட கருத்து. இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

பென்ஸ்
10-03-2006, 10:25 AM
இல்லை ராகவன் சரியாகதான் சொன்னீர்கள்... அதனால் தான் நான் பதிததை மீண்டும் திருத்தினேன் கீழ் வருமாரு..

இளசு.. ஒரு டிப்ஸ்.. ஒரு பெண்ணாக இருந்து இந்த கவிதையை வாசியுங்கள்....
ஹி ஹீ... இல்லை எல்லாருக்கும் பொருந்தும் இல்லையா கவிதா???

மேலும்...

கவிதையை புரிந்து கொள்ள கவிதையின் ஒர பாகமாக ஆகவேண்டி இருக்கிறது..
இதில் நான் எந்த பக்கம் என்று சொல்லவில்லையே....
அதையும் வாசிப்பவர்கள் விருப்பத்துக்கு விட்டுவிடுவது முறை...

அப்படியே அந்த நிலவு என்னான்னு பேசலாமே... சும்மா இதை பேசிக்கிட்டு..:D :D :D :D

தாமரை
10-03-2006, 12:19 PM
அப்படியே அந்த நிலவு என்னான்னு பேசலாமே... சும்மா இதை பேசிக்கிட்டு..:D :D :D :D
கவிநிலவு தானே.. என்னுடைய முதல் (+2 படிச்சப்ப) கையெழுத்து பத்திரிக்கை அது.. எல்லா லைப்ரரிக்கும் ஒரு காபி எழுதிக் கொண்டு போய் கொடுத்து வருவோம்.. அது ஒரு கனாக் காலம்

ஓவியா
08-06-2006, 05:38 PM
பூத்துக்குலுங்கும் மரம்
----------------------------
அடுத்தவீட்டின் நெடுதுயர்ந்த மரம்
அதன் கிளைமட்டும் எனது தோட்டத்தில்
அதோ ஜன்னலில் தெரிகிறது
தினமும் பூத்துக்குலுங்கும் மரம்
கண்ணுக்குக் குளிர்ச்சி
அப்பூக்கள் என் வீட்டுக்குள்
எனக்காகவே உதிர்கின்றன
உதிர்ந்த பூக்களை
எடுக்கவும் இல்லை
தொடுக்கவும் இல்லை
பூக்களுக்கோ வாசனை அதிகம்
தூரத்திலேயே அதன் வாசனை தெரிகிறது

உதிர்ந்த பூக்கள் காய்ந்தது
உதிராத பூக்கள் காய்த்தது...........காய்த்தது கனிந்தது
கனியும் ஒரு நாள் உதிரலாம்

உதிர்வது அதன் கடைசிப்பரிணாமம்
உதிர்வதால் மரத்திற்கு இழப்பில்லை
அந்தக் கனிமீதும் எனக்கு
எந்த அக்கறையும் இல்லை
ஏனெனில்
ஏவாளின் சாபம் உலகம் அறியும்.


பாராட்டுக்கள் கவி
அழகான வரிகள்...யோசித்தல் ஆழமான விளக்கம் ....

கனிந்தாலும் சரி கனியாவிட்டாலும் சரி.........முடிவோ.....
நிரந்தரமற்றதே......

ஆதவா
09-08-2007, 11:54 AM
மனப்போராட்டம். அருகே வாசனை வீசும் பூக்களின் மீது நடக்கக் கூடாத எண்ணம்...

உதிர்ந்த பூக்கள் இடும் ஓரவஞ்சனைகளிலிருந்து தொலைவில் செல்லத் துடிக்கும் நாயகி..

நான் புரிந்தது தவறா? சரியா?