PDA

View Full Version : இனிமை தனிமைkavitha
09-04-2005, 11:13 AM
இனிமை தனிமை
----------------------

வெறும் தனிமை, ஆனால்
வெறுமையில்லா தனிமை
சுதந்திரமான இனிமை
வானுக்கு அடிமையில்லாத மேகம்போல்
கரையைக்கண்டு ஒதுங்காத மீனைப்போல்
தட்டுகளுக்கு செவிசாய்க்காத தராசுபோல்
பூட்டுகளுக்கு பயந்துவிடாத காற்றைப்போல்
உன்னோடு நீ
சுயத்துடன் இருக்கும்
இந்தத் தனிமை
மிக மிக இனிமை
ஆலாபனை இல்லை
ஆட்சேபணை இல்லை
ஆரவாரம் இல்லை
ஆனந்தமே எல்லை!
இந்தத் தனிமை
மிக மிக இனிமை
இனி யாரும் வெறுக்கவேண்டாம்
இந்த வெறுமையில்லாத தனிமை
மிக மிக இனிமை

karikaalan
09-04-2005, 11:21 AM
கவிதாஜி

இதென்ன, ஆசிரியப்பா எனலாமா...

தட்டுகளுக்கு செவி சாய்க்காத தராசும் உண்டோ!

===கரிகாலன்

kavitha
10-04-2005, 01:29 PM
"
கவிதாஜி


இதென்ன, ஆசிரியப்பா எனலாமா..."இன்ன பாவில் எழுதவேண்டும் என்றெல்லாம் எழுதவில்லை அண்ணா. ஆசிரியப்பாவிலா அமைந்துள்ளது!? விருத்தப்பா என்று ஏற்றுக்கொள்ளலாமா?. நன்கு தெரிந்தவர்கள்

சொன்னால் நன்றாக இருக்கும்.
தட்டுகளுக்கு செவி சாய்க்காத தராசும் உண்டோ! தராசின் பயனே அதற்குத்தானே அண்ணா....!நன்றி அண்ணா

ஜீவா
10-04-2005, 01:46 PM
கவிதா.. ரொம்ப நல்லா இருந்தது... நான் எதிர்பார்த்த ஒரு கவிதை என்று கூட சொல்லலாம்..
எனக்கு தனிமை ரொம்ப புடிக்கும்..

மன்மதன்
27-08-2005, 06:33 AM
தனிமை கொல்லும் என்பார்கள்.. கவி தனிமை இனிமை என்கிறார்..

Nanban
28-08-2005, 06:54 PM
ஒராயிரம் மனிதர்கள் மத்தியிலும்
என்னைத் தனித்தவனாக
வேறாருடனும் ஒட்டச் செய்யாமல்
தான் மட்டும் ஒட்டியிருக்கும் உறவு.
ஆளரவமற்ற பெருஞ்சாலைப் பயணத்தில்
ஆயிரமாயிரம் மனிதர்களை
சுற்றிலும் நிற்கவைத்துப் போகும்
புன்னகையுடன்.
எந்தப் பேரங்களுக்குமிடமில்லாது
தன் போக்குக்கு வந்து போகுமதை
இப்பொழுதெல்லாம்
கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டேன்.
அருகில் அது வீற்றிருப்பதைக் காணதவர்கள்
சட்டென்று விரைந்து விலகி
தூரப்போய்த் திரும்பி கலவரப்படும் பொழுது
வீற்றிருக்குமோ அருகே இந்தத் தனிமை?

இக்பால்
29-08-2005, 04:40 AM
நினைவுகள் இருக்கும் வரை...இல்லை தனிமை.

நினைவுகளாக நாங்கள். -அன்புடன் அண்ணா.

kavitha
31-08-2005, 06:12 AM
தன் போக்குக்கு வந்து போகுமதை
இப்பொழுதெல்லாம்
கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டேன்.

நல்ல வரிகள் நண்பன்.


ஜீவா, மன்மதன், இக்பால் அண்ணா அனைவருக்கும் நன்றிகள்.

பிரசன்னா
09-09-2005, 05:45 PM
கவிதா.. ரொம்ப நல்லா இருந்தது...

Anjaly
04-11-2005, 12:54 PM
Hi kavitha It is SIMPLY SUPERB! I'm a new comer...

இளசு
06-11-2005, 10:46 PM
ஏகாந்தத்தின் இனிமையை
கவீ அழகாய்ச் சொல்ல -
நண்பனின் வித்தியாச பதில்கவிதை மெருகூட்ட

இரட்டை பாராட்டுகள் - இருவருக்கும்.

பென்ஸ்
07-11-2005, 06:17 AM
கவிதா அருமையான கவிதை....
ஏன் தனிமை என்று எண்ணிதான் பார்க்கிறேன்... அந்த எண்ணதின் வேளிப்பாடு இதோ....:D :D :D


எனக்கு உன்னைவிட
என்னை அதிகம்
பிடிக்குமா??
என்னும் விடை தேடல்....

தேடலின் வலியை
குறைக்க நானே
உருவாக்கி கொண்ட
நீர்குமிழி நிஜங்கள்....

திரும்பி வருகையில்
நீ காத்திருப்பாயா
என்று தெரியாது....
இருப்பினும்...

இன்றைய வலி
நாளைய சோகங்களை விட
அதிகமாக இருப்பதால்
இன்னும் அந்த தேடல்.....
உன்னைவிட என்னை
அதிகம் பிடிக்குமா???

ஆதவா
09-08-2007, 12:00 PM
தனிமையின் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருப்பவன்... நான்..

சிந்தை ஓரிடத்தில் நிலைக்காது, செந்தமிழும் அவ்வப்போது உதவாது... தனிமையின் கொடுமை..

ஒருவனைவிட்டு பிரிந்த தனிமை எப்படி இருக்கும்?விவாகரத்துக்களுக்குப் பிறகு ஏற்படும் தனிமை இனிமையானதாக இருக்கக் கூடுமா?

நிச்சயம் இருக்காது... என்றேனும் புழுங்கக் கூடும்... அதிலும் பெண்கள் மிக மென்மையானவர்கள். சன்னமான இதயம் படைத்தவர்கள்.. தனிமையின் புழுங்கல்கள் அதன் தவிப்புகளைத் தாங்க இயலாதவர்கள்..

சொல்லமுடியாது.. இருக்கலாம்.. எல்லா மனிதர்களும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை..

நல்ல கவிதை கவிதா அவர்களே..

இலக்கியன்
09-08-2007, 12:38 PM
தனிமையும் ஒருவித இனிமைதான் கவிதை நன்றாக உள்ளது

kalaianpan
09-08-2007, 07:21 PM
தனிமை....
என் வ்ருப்பமாவைகளில் ஒன்று.

இனிமை .தனிமை.


"ஒருவரல்லாத ஓருவர்....
ஒருவருக்கே தெரிந்த ஓருவர்.....
மூச்சு மட்டும் கேட்கும் ஒருவர்.......
ஓருமை............

ஒரருமை..........

சுயநலமான இனிமை.....

ஆதவா
09-08-2007, 08:06 PM
தனிமை சிலருக்கு விருப்பமாகத்தான் இருக்கிறது..

யாருமற்ற அநாதையாக இருப்பதைக் காட்டிலும் வீச்சதிகம் தனிமையாக இருப்பது. ஈரல் உலர்ந்த நெஞ்சங்கள் அஞ்சியோ துஞ்சியோ வேண்டியோ வேண்டாமலோ தூக்கியெறியப்பட்டவைகள் தனிமை அடையும் நிலையை சற்றூ யோசித்துப் பாருங்கள். ஒருக்கால் பெற்றோர்களுடன் தொடர்பு அந்து போய் அவர்களுக்கருகே தனிமையில் இருப்பதை நினைவில் நினைத்துப் பாருங்கள்.. உங்கள் நினைவின் ஈரம் மிகுந்து போகும். வீம்புக்கு தனிமையிலிருப்பவர்களைப் பற்றி நான் பேசவிரும்பவில்லை. காலைக் கதிரவனின் வருகையை தண்ணீர் தெளித்துச் சொல்லும் அன்னையின் குரல் கேட்க முடியாமல், குளியலுக்கு சச்சரவிட்டு கோபித்து ஓடும் தங்கையின் கண்களைக் காணமுடியாமல், ஆடியை சரிசெய்துகொண்டு தினசரி படிக்கும் தந்தையிடம் வீம்புக்கு தினசரியைப் பிடுங்கி படிக்கும்போது அவர் இடும் சத்தம் கேட்கமுடியாமல் தவிக்கும் பலர் இவ்வுலகில் உண்டு.


நாமாக உருவாக்கியதுதான் இந்த பூமியே. துரும்பிலிருந்து தூண் வரை மண்ணிலிருந்து மலைவரை நம் கண்களின் கலை படாமல் இருந்ததில்லை. பொருள்களாக பார்த்து பழகிவிட்ட நமக்கு உணர்வுகளை புரிந்துகொள்ளுவதில் சிரமம் ஏற்படுவதென்னவோ உண்மைதான். உணர்வுகள் ஒருங்கே செல்லாமல் தனித்துச் சென்றால் தனிமை உண்டாகும்.

மன உணர்வுகளின் பிணைப்பின்மை, ஒழுக்ககேட்டின் கேட்டின் நாகரீகம் ஆகியன நிலைத்து ஓங்கும் போது தனிமை என்ற பிள்ளை பிறக்கிறது..


ஒருவரல்லாத ஓருவர்
ஒருவருக்கே தெரிந்த ஓருவர்
மூச்சு மட்டும் கேட்கும் ஒருவர்
ஒருமை

ஒரருமை..........


நிசம் தான்.. ஒருவருமல்லாத ஒருவர் அதாவது ஒருமையில் இருக்கும் ஒருவரின் இனிமை எத்தனை நாளைக்கு நீடிக்கும்? சிறு எறும்புகள் கூட தனிமை விரும்பாது..

எனக்கென்னவோ தனிமை பிடிப்பதில்லை... ஆனால் தனிமைக்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது..

க.கமலக்கண்ணன்
20-08-2007, 04:24 PM
கவிதா இன்னும் என்

கவிதை தா மயக்குகிறது உனது

கவிதை வரிகள் இனிக்கிறது உனது

கவி கற்பனைகள்...

ஷீ-நிசி
21-08-2007, 03:29 AM
தனிமைக்காக ஒரு இனிமையான கவிதை...

உவமைக்காக சேர்க்கப்பட்ட வரிகள் ஒவ்வொன்றும் அழகு...


தட்டுகளுக்கு செவிசாய்க்காத தராசுபோல்

வார்த்தைகளின் கோர்வை அருமை...

வாழ்த்துக்கள்!

பாலன்
23-07-2010, 03:37 PM
ஏதோ ஒரு திரிக்குள் திரிந்தபோது இந்த திரிக்கு வழிக்கிட்டியது. வழிகாட்டியவருக்கு என் நன்றி.

இந்த அகத்தனிமையை பற்றி எப்பவோ ஒருமுறை நான் இப்படி கிறுக்கினேன்.

"தனிமை....
எனக்கு மிகவும் பிடிக்கும்
தனி இனிமை அதில் பொதிந்திருப்பதால்"

இதைப்பற்றி எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் இப்படி சொல்லியிருக்கிறார்:
"அகத்தனிமை விலக்கப்பட* வேண்டிய*தில்லை. மாறாக* அது ஒரு ஏகாந்தம். அது ஒரு த*னிச்சுவை. பலராலும் அறிந்துகொள்ளப்படாத நெருக்கம். விளக்கின் ஒளியிலிருந்தே நிழலும் தோன்றுவ*து போல* நமக்குள்ளிருந்தே அது உருவாகிறது".