PDA

View Full Version : வார்த்தை மறந்த கவிதை



noveltv
07-04-2005, 08:31 AM
விலங்கு என்றாய்
ஒப்புக்கொள்வேன்..
விலகு என்றால்?

பரிவு என்றால்
ஒட்டிக்கொள்வேன்..
பிரிவு என்றால்
விட்டுசெல்வேன்..

கோபம் என்றால்
கட்டிக்கொள்வேன்..
சாபம் என்றால்
ஏற்றுக்கொள்வேன்..

வெட்டிச்சென்றால்
என்ன செய்வேன்..?

இக்பால்
07-04-2005, 09:16 AM
என்னங்க நாவல்டி...புதிர் மாதிரி நிறுத்தி விட்டீர்கள்.

கவிதை நன்றாகவே வருகிறது. தொடருங்கள்.

கவலை ஒன்றும் மனதில் இல்லையே.-அன்புடன் இக்பால்.

பரஞ்சோதி
07-04-2005, 09:55 AM
வெட்டி சென்றவர்கள் மீண்டும் வந்தால் வசந்தம் தானே நாவல்டி.

அருமையாக இருக்கிறது.

அறிஞர்
08-04-2005, 04:15 PM
இது புதிர் பகுதி இல்லையே....

அருமையாக தொடருங்கள்.. அன்பரே...

karikaalan
09-04-2005, 11:10 AM
விலகு என்றால் விலக மாட்டீர்கள்

ஆனால் பிரிவு என்றால் சென்று விடுவீர்கள்;

அதுபோல், வெட்டிச் சென்றால், விடமாட்டீர்கள் எனலாமா??!!

===கரிகாலன்

pradeepkt
11-04-2005, 05:29 AM
தாங்க இயலாது உங்களுக்காக முடிக்கிறேன் நாவல்டிவி
வெட்டிச்சென்றால்
என்ன செய்வேன்..?

-- மீண்டும் மீண்டும் வளர்வதைத் தவிர!

அன்புடன்,
பிரதீப்

பென்ஸ்
18-02-2006, 06:45 PM
"கத்திகள் தூங்குவதால் தான்
இங்கு தாடிகள் அதிகமாகி விட்டதடி"

என்று ஒரு கவிஞன் சாடிய நியாபகம்...

உறவை வெட்டினால்.... நீங்களும் வெட்டிவிடுங்கள்....