PDA

View Full Version : வார்த்தைகள் எனும் நீர்..



rambal
30-05-2003, 06:44 PM
வார்த்தைகள் எனும் நீர்..

அணைக்கட்டு
நீராய் தேங்கிக் கிடக்கின்றன
வார்த்தைகள்..


அன்னம் வந்து குடிக்க
காத்துக்கிடக்கிறது
பாலோடு கலந்த நீர்..


எல்லார் வீட்டுக்
கழிவும் கலந்தாலும்
சாக்கடையும் நீரே..


சில சமயங்களில்
தெப்பக்குளத்து
நீராக..

பல சமயங்களில்
யாருக்கும் பயனில்லாத
தேங்கிய குட்டையாக..


எப்போதாவது
கொட்டுகின்ற அருவியாக...
கோபம்கொண்ட காட்டாறாக..


இப்போது கடலில் கலக்க
தருணம் பார்க்கும்
சோகையான ஆறாக..

Nanban
31-05-2003, 04:57 AM
நீரின் பல தன்மைகளையும், நிலைபாடுகளையும் அருமையாக சொல்லிவிட்டீர்கள். அந்த நீரைப் போலத் தான் மனித வாழ்க்கையும். சமயத்தில் பாலோடு கலந்து பலரும் குடிக்க, பல நேரங்களில் சாக்கடையாக, உபயோகமற்ற குட்டையாக, அனைவரையும் உள்ளம் குளிராச் செய்யும் அருவியாக, விளைநிலத்திற்குப் பயன் தரும் ஆறாக - இவ்வாறு மனிதனின் வாழ்வு பல நிலைகளை எய்துகிறது. எந்த நிலையை எய்தும் என்பது அணைக்கட்டில் நீராகத் தேங்கியிருக்கும் வார்த்தைகளை எப்படி பயன் படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே - கவிஞனுக்கும் சரி, சாமான்யனுக்கும் சரி - வார்த்தகள் பொதுவானதே.

நல்ல கவிதையைத் தந்தமைக்கு பாராட்டுகள்..........

பாரதி
31-05-2003, 06:42 AM
கவிதைகளை மழைநீர் போல தந்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் ராம்பாலுக்கு நன்றி.

karikaalan
31-05-2003, 08:03 AM
சொற்கள் -- அகராதியில் நிறையக் கிடைக்கும்.

அதே சொற்கள், ராம்பால்ஜியின் கைவண்ணத்தில் கவிதைவண்ணம் பெற்று ஒளிருமானால், படிப்பவரின் மனம் மகிழும், துயருரும், சிந்திக்கும், சினங்கொள்ளும். சிலசமயம் எல்லாமே ஒருங்கே நடக்கும்.

===கரிகாலன்

prabha_friend
31-05-2003, 09:09 AM
நல்ல ஒப்பீடு . பாராட்டுக்கள் நண்பரே .

முத்து
31-05-2003, 09:12 AM
அருமையான கவிதை.. பாராட்டுக்கள்....

aren
31-05-2003, 09:13 AM
தண்ணீரின் பலவித வேடங்கள். கவிதை வரிகளாக தந்தமைக்கு பிடியுங்கள் எங்கள் பாராட்டை., தொடருங்கள் உங்கள் வார்த்தை விளையாட்டை.

பென்ஸ்
18-02-2006, 08:47 AM
வார்த்தைகள் எனும் நீர்..
..............
கோபம்கொண்ட காட்டாறாக..

இப்போது கடலில் கலக்க
தருணம் பார்க்கும்
சோகையான ஆறாக..

அருமை ராம்பால்.... வார்த்தைகள் நீராய்...

நீர் தாகம் தீர்க்கதானே...

அன்பான வார்த்தைகள், எத்துனை சோகமெனும் தாகத்தையும் தீர்த்துவிடும்....

கடலில் கலந்தாலும், மீண்டும் மழையாக பொழிந்து எல்லோரையும் குளிரவைக்கும்... :) :)

இளசு
14-09-2007, 09:56 PM
சொற்கள் -- அகராதியில் நிறையக் கிடைக்கும்.

அதே சொற்கள், ராம்பால்ஜியின் கைவண்ணத்தில் கவிதைவண்ணம் பெற்று ஒளிருமானால், படிப்பவரின் மனம் மகிழும், துயருரும், சிந்திக்கும், சினங்கொள்ளும். சிலசமயம் எல்லாமே ஒருங்கே நடக்கும்.

===கரிகாலன்

அண்ணலின் வரிகளுக்கு மேல் ராமின் கவிதை வன்மையைச் சொல்ல
என்னிடம் சொற்கள் ஏது?

aren
15-09-2007, 12:46 AM
அருமையான கவிதைவரிகளை இன்னொருமுறை படிக்க உதவி செய்த இளசு அவர்களுக்கு என் நன்றிகள்.

நன்றி வணக்கம்
ஆரென்

பிச்சி
15-09-2007, 11:49 AM
நீருக்கும் வார்த்தைக்கும் அருமை ஒப்பீடு

அமரன்
23-09-2007, 06:46 PM
நல்ல சிந்தனைக் கவிதை. பலர் பார்வை பட்டு துலக்கமாக...
நன்றி அனைவருக்கும்...

அனுராகவன்
09-05-2008, 01:02 AM
அருமையான கவி..
நன்றி ராம்பால் அவர்களுக்கு..

யவனிகா
10-05-2008, 07:46 PM
அழகான கவிதை ராம்பால் அவர்களே...
வாழ்த்துக்கள்.

மழைநீர்ச் சொட்டு
உன் வார்த்தைகள்...

கைகளாய் உள்ளம்
குவித்து...ஏந்திப் பிடித்து
கவிதை இடுக்கில்
கசியவிடுகிறேன்...

கசிய மறுத்து
பனிக்கட்டியாய்
இறுகி..எனை இறுக்கும்
வார்த்தைகள்....

சில்லிட்டு சிலிர்த்து
நிற்கும் நொடி...
சொட்டாய் உருகிக்
கசிகிறது காதல்!

உருமாறினாலும்
என்றுமே
உயிர்ப்புடன்...