PDA

View Full Version : சில கிறுக்கல்கள்...



இளைஞன்
01-06-2003, 02:05 AM
பூமிப் பந்து
_________

தத்துவ ஞானியே
உலகம் பந்து
போன்றது
என்றுதான்
சொன்னாய்!

உதைக்கச்
சொன்னாயா
களத்தில்
மோதல்!

திருமணம்
_________

நல்லன நடக்கினும்
தீயன அணுகினும்

நாமிருவரும்
சேர்ந்திருப்போம்!

வல்லது ஒருமை
வாழ்ந்திருப்போம்!


மின் தகடு
_________

சிரிக்காதே!

நான்
இருட்டில்
உறங்க
விரும்புகிறேன்!


சூரியன்
_________

திறக்காதே!

உன்
சுடர்
விழியை

என்னிடம்
கோடை கால
உடைகள்
இல்லை!

.....

poo
02-06-2003, 09:12 AM
கிறுக்கல்கள்...நிறைய கிறுக்குங்கள் இளைஞரே.....

Nanban
02-06-2003, 10:37 AM
உதைப்பதெல்லாம் இலக்கை நோக்கி என்னும் பொழுது, பூமி பந்தாகத் தான் இருக்க வேண்டும். இலக்கில்லாத உதைப்பு தான் இங்கே பிரச்னை.......