PDA

View Full Version : வாரீர்! வாரீர்!



நிலா
15-04-2003, 09:18 PM
கற்பனைகளில் தொலைந்துவிடாமல்
தோல்விகளில் துவண்டுவிடாமல்
புகழுரைகளில் மயங்கிவிடாமல்
வாழ்கைதனை உயிரூட்ட
மனங்களை இணைத்திடுவோம்!

காலத்தை கடத்த அல்ல..
வாய்ப்புகளை வரமாக்கிக் கொள்ள
வெற்றிகளை நமதாக்கிக் கொள்ள
சிறுதுளிகளாய் ஒன்று சேர்ந்து
பெருவெள்ளமாகிடுவோம்

இயன்றவற்றை பகிர்ந்தளித்து
இல்லாதவற்றை எடுத்துக்கொண்டு
மனதினில் மகிழ்ச்சி பொங்க
மானுடம் காப்போம்!

வழிகாட்டிதேடி வாழ்வினை விரயமாக்காமல்
நாமே நமக்கு வழிகாட்டிடுவோம்!

வாருங்கள்!
வாழ்வின் உச்சிதனை எட்டத் துணிவுள்ள யாவரும்
வந்திங்கு சேருங்கள்!!!

இப்படிக்கு
நிலா

இளசு
15-04-2003, 10:30 PM
நல்ல அறைகூவல்....

உங்கள் ஆர்வமும் பற்றும் சிலிர்க்கவைக்கிறது நிலா அவர்களே

மன்றத்தில் ஒரு சிறப்பிடம் உங்களுக்கு உறுதியாகிவிட்டது....

வாழ்த்துகிறேன்... உங்கள் உழைப்பும் சொற்திறமையும் உயர்வு தரும்....

நிலா
15-04-2003, 10:36 PM
வணக்கம்!இளசு அவர்களே!

உடனுக்குடன் பாராட்டும் உங்கள் குணம் அருமை!

அதே போல் உங்கள் படைப்புகளும் அருமை!

தொடரட்டும் உங்கள் பணி!

இப்படிக்கு

நிலா

poo
16-04-2003, 05:51 PM
நிலாவின் குழுவில் இணைந்தால் வாழ்க்கையில் வசந்தம் நிச்சயம்...

-வாழ்த்துக்கள் நிலா...

Nanban
02-06-2003, 11:17 AM
சிறந்த உறுதி மொழிகள்..... பள்ளியில் பாடமாக இணைக்கலாம்.....

வாழ்த்துகள்........

இனியவள்
23-07-2007, 01:34 PM
வாழ்க்கையின் தத்துவம்
கவி வடிவில் நிலா
அவர்களால் உருப்பெற்று
மிளிருகின்றது மன்றத்திலே

வாழ்த்துக்கள்

இளசு
23-07-2007, 09:59 PM
எனக்கு மன்றத்தில் உற்ற துணையாய்
கூடிக் களித்த தோழியாய்

இடித்துரைத்த நண்பியாய்
இனிது உலவிய அன்புத்தங்கை... நிலா!

என்று மீண்டும் காண்போம் என ஏங்கி
கண்கள் பனிக்கின்றன..

அமரன்
30-07-2007, 08:36 PM
எளிய நடையில் அழகு ஆழக்ககவிதை.
*******************************************************
அண்ணலின் பதிவு சொல்கிறது
மன்றத்தில் நிலாவலத்தின் பெருமை.

aren
30-07-2007, 10:22 PM
நிலா அவர்களே
எங்கே போனீர்கள்
உங்களை இங்கே
மறுபடியும் காண ஆசை
வருவீர்களா
வரவேண்டும் என்பதே
அனைவருடைய விருப்பமும்
தயவுசெய்து வாருங்கள்
இங்கே வந்துவிடுங்கள்

நன்றி வணக்கம்
ஆரென்

lolluvathiyar
31-07-2007, 06:43 AM
நாங்கள் வந்து உங்களுடன் நிறிகிறோம்