PDA

View Full Version : நீ வருவாய் என!



kavitha
08-04-2004, 10:06 AM
நீ வருவாய் என!

எனக்கு
ராமனையும் தெரியாது!
சீதையையும் தெரியாது!

உனக்காக காத்திருக்கிறேன்
நான் நானாகவே!

என்றாவது வா!
நீ நீயாகவே!

இக்பால்
08-04-2004, 10:30 AM
தங்கை...மிகப் பெரும் பொருள் பதிந்த

ஆனால் ஒரு யதார்த்தனமான கவிதை தங்கை.

அருமை.-அன்புடன் அண்ணா.

kavitha
08-04-2004, 10:49 AM
நன்றி அண்ணா! கவிதையின் பொருளை உணர வைத்துவிட்டாலே அது வெற்றி தான்!
சந்தோசமாக இருக்கிறது... மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கிறேன்.

samuthira
09-04-2004, 11:04 AM
அகல்கை கண்ட ராமனை அறிவேன்
ராவணன் கண்ட சீதையை அறிவேன்

இதயங்களின் இன்ப பயணத்திற்கு
இமைக்கும் கண்கள் தடையில்லை

காத்திருக்கும் நெஞ்சம்
காத்திட வைப்பதில்லை

மின் அஞ்சல் யுகத்தில்
ப்ரபஞ்சம் நம் கையில்

வருவேன் நான் நானாக
நாம் நம்மை காண . . .

samuthira
09-04-2004, 11:06 AM
ஆழமா எழுதிய கவி...
அருமையாக இருந்தது...

kavitha
10-04-2004, 03:23 AM
சமுத்திராவின் கவிதை அருமை.இறுதி வரிகள் 'பச்சக்'.
நன்றியுடன் வாழ்த்துக்களும் நண்பரே!

Nanban
10-04-2004, 04:24 PM
வாழ்த்துகள், கவிதா...

எப்படியாவது, ஒரு ராஜகுமாரனை மணந்து விட வேண்டும் என்று தான் அனைத்து பெண்களின் கனவாகவும் இருக்கிறது.... ராஜகுமாரியாக ஆன்கள் கனவு காண்கிறார்கள்...

சிலர் மட்டுமே, தங்கள் தேவைகள், எதிர்பார்ப்புகள், இவற்றை கணக்கில் கொண்டு, அந்தத் தககுதிகளை உள்ளடக்கிய இணைகளைத் தேடுகிறார்கள்...

ஆனால், அதற்கு, முதிர்ச்சியும், அனுபவமும் தேவைப்படும்...

உங்கள் கவிதையில் முதிர்ச்சி இருக்கிறது...

வாழ்த்துகள்.....

kavitha
14-04-2004, 03:45 AM
நண்பன் அவர்களுக்கு நன்றி! உங்கள் ஊக்கம் என்னை தொடர்ந்து எழுதச்செய்யும் தூண்டுகோல்!

அறிஞர்
15-06-2005, 07:32 AM
கவிதா... சமுத்திரா.... இருவரின் எழுத்திலும் முதிர்ச்சி......

அருமையாக உள்ளது இன்னம் தொடருங்கள்....

சுவேதா
17-06-2005, 02:13 AM
மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் அக்கா!

மன்மதன்
17-06-2005, 11:23 AM
எப்பவும்
நான் நானாகவே
இருக்கிறேன்..

என்னில்
நீ
அஜீத்தையோ
விஜய்யையோ
தேடினால்..

எங்கு
செல்வேன்
நான்...
-
மன்மதன்

சுவேதா
17-06-2005, 11:29 PM
எப்பவும்
நான் நானாகவே
இருக்கிறேன்..

என்னில்
நீ
அஜீத்தையோ
விஜய்யையோ
தேடினால்..

எங்கு
செல்வேன்
நான்...
-
மன்மதன்

:) மிகவும் நன்றாக இருக்கிறது மன்மதன் தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்!

kavitha
20-06-2005, 06:10 AM
எப்போதோ எழுதிய கவிதை... இங்கே மீண்டும் பதித்தவர்களுக்கு எனது நன்றிகள்.
சுவேதாவிற்கும், பதில் கவிதை தந்த மன்மதனுக்கும் நன்றிகள் பல.