PDA

View Full Version : விட்டில் பூச்சிகள்!!



poo
13-04-2004, 06:12 PM
சாறுபிழிந்த சக்கையாய்

சாதிச்சாக்கடையில்

சருகாய் மிதக்கும் அப்பா..



கிழிந்த சேலையில்

மானத்தை தைத்துவைத்த அம்மா...



மூணுவேளை சோறில்லை...

முகம்கோணவில்லை..இந்த விரதம்தான்

என் தாவணிக்கனவுகளை

தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறது....



இருண்ட வீட்டில் அடைந்திருந்தேன்

கண்கள் கூசின...



விளக்குகள் ஒளிர்கிறது...

விவரம்கேட்டு ஓடினேன்..

விடியலைத்தேடி..விட்டிலானேன்..



கோடிசெலவில் கோடித்துணி..

பாரதி
14-04-2004, 12:46 AM
விடியலைத் தரப்போவதாய்
கொக்கரிக்கும் கோழிகளை
இன்னும் நம்பும் சில
விட்டில் பூச்சிகள்.

kavitha
14-04-2004, 03:59 AM
25 பேர் பலிகடா ஆன கதையை அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.


கோடிசெலவில் கோடித்துணி!

பென்ஸ்
04-05-2006, 01:54 PM
இலவசம் என்று எதை கொடுத்தாலும் வாங்கி கொள்லும் நம்
கலாசாரத்தில்.. ஒரு "தாவணி கனவை" காட்டி நியாய படுத்த
வேண்டிய தேவை இல்லையோ என்று தோன்றுகிரது பூ....

கடைசி வரிகள் வரை அது தாவணி கனவுகளையும்...
அதுவே கடைசி வரியால் அது வேறும் தாவணிக்கான கனவு
ஆனதையும் புரிய முடிகிறது...
ஆனால்

தன் தவறுகளுக்காக அடுத்தவரை குறை கூறும் ஒரு சாதாரண
பெண் தான் இந்த கவிதையின் நாயகியா????

எத்தனையோ கொடுமையான குடும்ப சூழ்நிலையிலும் பீடி சுற்றுதல்
முதல் கல் உடைத்தல் வரையும்... பள்ளிகூடம் முதல் பல்நாட்டு
நிறுவனம் வரை இருக்கும் பெண்கள் இவற்றை எல்லாம்
வென்றவர்கள் தானே....

கவிதையின் ஆழம் புரிந்ததால்தான் என்னிடம் இருந்து இந்த சாடல்....

gans5001
10-05-2006, 03:07 PM
கிழிந்த சேலையில்
மானத்தை தைத்துவைத்த அம்மா...


ը¡ â

Tamilvasan
10-05-2006, 05:43 PM
பூ "பெண் சுதந்திரம்" பற்றிய உங்கள் கவிதை அருமை. ஆனால் பெஞ்சமின் கேட்டது போல் ,

"இருண்ட வீட்டில் அடைந்திருந்தேன்

கண்கள் கூசின..."

இந்த வரிகளை பார்த்தால்
இருட்டரையில் அவள் இருந்து கொண்டு மத்தவங்களை குறை கூறுவது போல் உள்ளது.

குறிப்பு:"gans5001" நீங்க unicode பயன்படுத்துங்கள்.இதனால் நீங்கள் எழுதியது ஏதும் மற்றவர்களுக்கு புரியவில்லை.

~வாசன்

jpush
25-05-2006, 08:17 PM
விடியல் தேடி விட்டில் பூச்கிகள்
என் குடிசை மக்கள் மட்டும் இரவில்