PDA

View Full Version : கல்யாணம்!



நிலா
21-04-2003, 06:59 PM
அருகருகேயிருந்தும்

நீயும் நானும் தண்டவாளமாய்!

..

இளசு
21-04-2003, 08:53 PM
அருமை நிலாவே!
லாவண்யா தந்த நவீனக்கணக்கில் இதைப்பற்றி வருகிறது.....!


குழந்தை, குடும்பம், பணி... என்ற
வாழ்க்கை வண்டி
தட தட வென ஓடும் சப்தம்........

விலகி இருந்தாலும்
ஒரு பொறுப்பு இருப்பதால்
பொறுத்துக்கொள்ளும் பல உள்ளம்..

கூ....கூ....!!!!

lingam
21-04-2003, 10:37 PM
இருவரிகளில் ஆழமான கருத்து.

lavanya
21-04-2003, 11:59 PM
நல்ல அர்த்தம் பொதிந்த பெருஞ்சிறு கவிதை.பாராட்டுகள்

gans5001
22-04-2003, 02:24 AM
பல காதல்கதைகளின் முடிவு இப்படித்தான். அதனால்தான் "அழகி" நம்மைக் கவர்ந்தாள்

gankrish
22-04-2003, 06:34 AM
நிலா அருமை.

rambal
22-04-2003, 08:14 AM
உங்கள் பெயரைப் போலவே உங்கள் கவிதைகளும் சுருக்...

தாசன்
22-04-2003, 11:00 AM
உங்கள் பெயரைப் போலவே உங்கள் கவிதைகளும் சுருக்."சுருக்" கென்றாலும்
"நருக்: கென உள்ளதே....

நன்றி

poo
22-04-2003, 02:12 PM
அருகருகேயிருந்தும்

தண்டவாளமாய் -

வாழ்க்கை ரயில்

தடம்புரளாமல் இருக்க..

நம்மில் பயணிக்கும்

பிள்ளைகள் இலக்கை அடைவதற்காக!!..

நிலா
23-04-2003, 12:45 AM
தண்டவாளமாகி விட்ட உறவுகளை இணைக்கின்ற பாலங்களாக

பிள்ளைகள்!வாழ்க்கை வண்டி ஓடுது அதனால், சில குடும்பங்களில்!

Narathar
23-04-2003, 07:05 AM
மூவரிக்கே பாராட்டென்றால்!!!
இங்கு இரண்டுவரியில் எழுதும் இவரை
என்னென்பது?????

மனிதன்
23-04-2003, 08:53 AM
பொருள் பொதிந்த வரிகள் நிலா..

poo
23-04-2003, 05:19 PM
நாரதரே உம்ம மூன்றடியை எடுத்துவிடும்!!

தாசன்
24-04-2003, 10:19 AM
நாரதரே உம்ம மூன்றடியை எடுத்துவிடும்!!
முற்றும் துறந்தவரப்பா
நம் நாரதர்,,,,,

Nanban
02-06-2003, 11:55 AM
பல காதல்கதைகளின் முடிவு இப்படித்தான். அதனால்தான் "அழகி" நம்மைக் கவர்ந்தாள்

இணை கோடுகளாய்
இணை பிரியாதிருக்க
பயணம் இனிமையாகும்.....

உன்மீது நானும்
என்மீது நீயும்
ஆதிக்கம் செலுத்தாத
இணை கோடுகள் தான்
வாழ்வின் வசந்தம்.....

என்றாலும்
இணைகோடாய்
என் கோட்டிற்கு
துணைகோடாய்
நீ இருக்க வேண்டும்...

நீ எந்தக் கோட்டிற்கோ
இணைகோடாய் போய்விட்டால்
ஒற்றைக் கோடாய்
கட்டித்தூக்குவர் -
மணி அடித்து
காலம் உணர்த்தும்
ஒரு துண்டாய்.......