PDA

View Full Version : ரோசக்காரன் தமிழன்

satheesh
01-06-2005, 10:30 PM
ஏ கடலே ! ஏ கடலே !!

கட்டுமரங்கள் காணோம்
நட்டமரங்களும் கானோம்
குழவிகளும் கானோம்
கிழவிகளும் கானோம்

தேசப்படத்தில் சில கிராமங்கள் கானோம்
பிணத்தை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே கானோம்

பறவைகள்
மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தாள் அழகு
மொத்தமாய்வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

அழுதது போதும் எழுவோம்
அந்த மொத்தப் பிணக்குழியில்
நம் கண்ணீரையும் புதைத்துவிடுவோம்

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு
இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்
நாம் மனிதர்கள்
எதிர்கொள்வோம்
மீண்டும் கடலே
மீன்பிடிக்க வருவோம்

ஆனால்!!!

உனக்குள் அஷ்திகரைக்க
ஒருபோதும் வரமாட்டோம்!!!!!

நட்புடன்
உங்கள்
சதீஷ்

பிரியன்
02-06-2005, 03:49 AM
அன்பு நண்பர் சதிஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
ஆனால் ஒரு சிறு விண்ணப்பம். கவிதைகள் பாடல்கள் பகுதி மன்றத்தினற்கு மட்டுமே. அங்கே மன்ற உறுப்பினர்களின் கவிதைகள் மட்டுமே இடம் பெறவேண்டும் .தாங்கள் பதித்த இந்தக் கவிதை திரு.வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டது. தாங்கள் இதை இலக்கியங்கள் பகுதியில் புதுத்திரி தொடங்கி பதிவு செய்யலாமே........

satheesh
02-06-2005, 06:01 AM

நண்றி பிரியன்
இக்கவிதை எனக்கு மிகமிக பிடித்திருந்தது இந்த கவியாக்கதை பாடலாக்கி தயாரிது வழங்கியது வேறு யாருமில்லை நாங்கள்தான்,அதைவிட 8 பாடல்கள்.
யாரும் செய்திராத அரும்பெரும் செயல் கவிப்பேரரசு வைரமுத்துவின் ஈழ சுனாமிப் பாடல்கள்.என்னைக்கேட்டால் வைரமுத்து இதுதான் முதல் தடவையாக தமிழீழ மக்களுக்காக எந்த எதிர்பார்ப்புமின்றி செய்த சேவையாகும்.....மேலும் எழுதலம் !

அன்புடன்
சதீஷ்

பிரியன்
02-06-2005, 06:32 AM

வாழ்த்துக்கள் சதீஷ்