PDA

View Full Version : வீட்டில் சில சிரிப்பலை.....

Pages : [1] 2

Mathu
01-06-2005, 10:13 PM
சில கேட்டுச் சிரித்தவற்றை இங்கே தர இருக்கிறேன், மற்றவர்களும் தொடரலாம்.

1. தந்தை : என்னடா ஸ்கூல்ல ஒழுங்க படிக்கிறியா?

மகன் : என்ன கேள்வி இது? ஆபீஸ்ல ஒழுங்கா வேலை செய்யிறியா என்று நான் கேட்கிறனா?

2. தந்தை : டேய்! நம்மளை விட வயசுல பெரியவங்க கிட்ட பவ்வியமா நடந்துகணும் புரியுதா?

மகன் : ஏம்ப்பா! அப்ப அம்மா உங்கள விட வயசுல பெரியவங்களா....! ?

சுவேதா
02-06-2005, 12:47 AM
:):) மிகவும் நன்றாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்!

முத்து
02-06-2005, 02:59 AM
சில கேட்டுச் சிரித்தவற்றை இங்கே தர இருக்கிறேன், மற்றவர்களும் தொடரலாம்.

1. தந்தை : என்னடா ஸ்கூல்ல ஒழுங்க படிக்கிறியா?

மகன் : என்ன கேள்வி இது? ஆபீஸ்ல ஒழுங்கா வேலை செய்யிறியா என்று நான் கேட்கிறனா?

2. தந்தை : டேய்! நம்மளை விட வயசுல பெரியவங்க கிட்ட பவ்வியமா நடந்துகணும் புரியுதா?

மகன் : ஏம்ப்பா! அப்ப அம்மா உங்கள விட வயசுல பெரியவங்களா....! ?
மது,
பசங்க பேச ஆரம்பித்தால் என்ன ஆகுமென்பதைக் காட்டும் இது நகைச்சுவையைவிட மேலானது ... :).

பரஞ்சோதி
02-06-2005, 04:16 AM
நல்ல நகைச்சுவை மது. மற்றவர்களும் தொடருவார்கள்.

மன்மதன்
02-06-2005, 04:43 AM
அருமையான நகைச்சுவை.. தொடர்ந்து கொடுங்க மது.
அன்புடன்
மன்மதன்

pradeepkt
02-06-2005, 04:52 AM
அருமை. இதை நைசா கொஞ்சம் மாத்துறேன்.
பரம்ஸ் அண்ணா : சக்தி! நம்மளை விட வயசுல பெரியவங்க கிட்ட பவ்வியமா நடந்துகணும் புரியுதா?
சக்தி: ஏம்ப்பா! அப்ப அம்மா உங்கள விட வயசுல பெரியவங்களா....! ?

thempavani
02-06-2005, 05:07 AM
நம்ம நறுமுகையையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள் பிரதீப்.....

mania
02-06-2005, 07:12 AM
:D அருமை மதன்...... கலக்கு இன்னும்...
அன்புடன்
மணியா...:D :D

karikaalan
02-06-2005, 07:53 AM
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்பாங்க.... இது ஒரு சிறு எடுத்துக்காட்டு போல!

மதுஜி நல்லாவே இருக்குது. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

gragavan
02-06-2005, 08:08 AM
எல்லாப் பிள்ளைங்களும் என்னயப் போலவே கேள்வி கேக்குறாங்க. பெரமாதமோ! பெரமாதம்!

Mathu
02-06-2005, 08:20 AM
அருமை. இதை நைசா கொஞ்சம் மாத்துறேன்.
பரம்ஸ் அண்ணா : சக்தி! நம்மளை விட வயசுல பெரியவங்க கிட்ட பவ்வியமா நடந்துகணும் புரியுதா?
சக்தி: ஏம்ப்பா! அப்ப அம்மா உங்கள விட வயசுல பெரியவங்களா....! ?

pradeepkt நான்கூட இப்படி தான் மன்ற நண்பர்களை கலாய்கலாம் என்று இருந்தேன் சரி தொடக்கத்தில் வேண்டாம் போக போக பார்க்கலாம் என்று பின்னர் விட்டு விட்டேன்.

நன்றி அனைவருக்கும். அப்பப்போ ஸ்டண்ட் மாறும் ஆனால் தொடரும்.

:p ;)

Mathu
04-06-2005, 07:45 AM
டேய் நீ படிச்சு கிளிச்சது போதும்! "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" தெரியுமா?

அப்போ இன்ஸ்பெக்டர் சுரைக்காய் கறிக்கு உதவுமாப்பா? :confused:

:mad: :D :mad:

அறிஞர்
04-06-2005, 07:47 AM
அது என்ன ஏட்டு சுரைக்காய்.....

அறிஞர்
04-06-2005, 07:49 AM
டேய் வீதியில் என்ன பண்ற.. பொண்ணுங்களை சைட் அடிக்கிறது ரொம்ப தப்பு......
அப்ப.... பக்கத்து வீட்டு ஆண்டியை நீங்க சைட் அடிக்கிறது.. தப்பில்லையா....

Mathu
04-06-2005, 07:52 AM
"டேய்! நம்ம நாட்டில பிறந்த அத்தனை பேரையும் சகோதர சகோதரிகளா பாவிக்கணும் என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க!"

"அப்போ எனக்கு வெளிநாட்டில பொண்ணு பார்க்க போறீங்களாப்பா?" :confused:

karikaalan
04-06-2005, 08:26 AM
அது என்ன ஏட்டு சுரைக்காய்.....

"ஏட்டில் எழுதி வைத்தேன், எழுதியதைச் சொல்லி வைத்தேன்"
அந்த ஏடுங்க அறிஞர்ஜி!

===கரிகாலன்

பரஞ்சோதி
04-06-2005, 09:01 AM
அருமை. இதை நைசா கொஞ்சம் மாத்துறேன்.
பரம்ஸ் அண்ணா : சக்தி! நம்மளை விட வயசுல பெரியவங்க கிட்ட பவ்வியமா நடந்துகணும் புரியுதா?
சக்தி: ஏம்ப்பா! அப்ப அம்மா உங்கள விட வயசுல பெரியவங்களா....! ?

ஏலே தம்பி! அதான் உன்னை வூட்டு உள்ளே உடக்கூடாது என்று சொன்னது. இப்போ என்னை இப்படி மாட்டிவிட்டியேலே.

பரஞ்சோதி
04-06-2005, 09:03 AM
டேய் வீதியில் என்ன பண்ற.. பொண்ணுங்களை சைட் அடிக்கிறது ரொம்ப தப்பு......
அப்ப.... பக்கத்து வீட்டு ஆண்டியை நீங்க சைட் அடிக்கிறது.. தப்பில்லையா....

நன்றி அறிஞரே!

நீங்களும், மெல்கியும் பேசியதை, உள்ளதை உள்ளப்படியே கொடுத்தமைக்கு.

பரஞ்சோதி
04-06-2005, 09:06 AM
அது என்ன ஏட்டு சுரைக்காய்.....

அறிஞர் அவர்களே!

தாளில் இனிப்பு என்று எழுதி, அதை நக்கினால் இனிப்பாகவா இருக்கும், அது மாதிரி தான் தாளில் சுரைக்காய் என்று எழுதி இருப்பதை வைத்து கறி சமைக்கவா முடியும்.

Mathu
04-06-2005, 09:35 AM
டேய் வீதியில் என்ன பண்ற.. பொண்ணுங்களை சைட் அடிக்கிறது ரொம்ப தப்பு......
அப்ப.... பக்கத்து வீட்டு ஆண்டியை நீங்க சைட் அடிக்கிறது.. தப்பில்லையா....

நன்றி அறிஞரே!

நீங்களும், மெல்கியும் பேசியதை, உள்ளதை உள்ளப்படியே கொடுத்தமைக்கு.

இது தானா விசையம் அறிஞர் ஆராட்சிகூடம் போகாம வீட்டில அடிக்கடி
தங்கிடுரார்....!
இது உங்களுக்கே சரியா படுதா சப்பை ஆண்ரியபோய் சைட் அடிக்கிறீங்களே.......

:p :D :confused:

அறிஞர்
05-06-2005, 10:54 AM
[/color][/i]
இது தானா விசையம் அறிஞர் ஆராட்சிகூடம் போகாம வீட்டில அடிக்கடி
தங்கிடுரார்....!
இது உங்களுக்கே சரியா படுதா சப்பை ஆண்ரியபோய் சைட் அடிக்கிறீங்களே.......

:p :D :confused:

நான் தைவானில்.. மெல்கி இந்தியாவில்...
பார்க்கிறது தப்பில்லையே... :cool: :rolleyes:

மன்மதன்
05-06-2005, 11:02 AM
நான் தைவானில்.. மெல்கி இந்தியாவில்...
பார்க்கிறது தப்பில்லையே... :cool: :rolleyes:

அட்ரா சக்கை.. அட்ரா சக்கை.. :D :D
அன்புடன்
மன்மதன்

Mathu
05-06-2005, 11:16 AM
நான் தைவானில்.. மெல்கி இந்தியாவில்...
பார்க்கிறது தப்பில்லையே... :cool: :rolleyes:

அப்போ இடைவெளி இருந்தால் சைட் சப்போட் தேவை என்கிறீங்க..... :p

யாரவது இதை மெல்கியின் மெயிலுக்கு போவோட் பண்ணுங்கப்பா, ;)

Mathu
05-06-2005, 11:40 AM
"என்னை பிடிக்கலை என்றால் இபோவே உன் பிறந்த வீட்டுக்கு கிளம்புடி...."

"இது நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்! அதனாலதான் நேத்தே வேலைக்காரியை
டிஸ்மிஸ் பண்ணிட்டேன்.!"

:mad: :confused: :mad:

Mathu
05-06-2005, 11:46 AM
ஏன் வேலைக்காரிக்கு லிப்ஸ்டிக் வாங்கித்தார..?

அப்பதானே என் புருஷனை கையும் களாவுமா பிடிக்க முடியும். :D

அறிஞர்
05-06-2005, 12:17 PM
அப்பதானே என் புருஷனை கையும் களாவுமா பிடிக்க முடியும். :D

உங்க வீட்ல.. பேசறதை அப்படியே தரீங்களே.. நண்பா....

thempavani
05-06-2005, 12:47 PM
நான் தைவானில்.. மெல்கி இந்தியாவில்...
பார்க்கிறது தப்பில்லையே... :cool: :rolleyes:

அறிஞரே.. வாங்க..வாங்க..மெல்கியிடம் போட்டு கொடுக்கிறேன்...

அண்ணி இங்க பாருங்க..இந்த அண்ணா பேசுவதை...

thempavani
05-06-2005, 12:49 PM
"என்னை பிடிக்கலை என்றால் இபோவே உன் பிறந்த வீட்டுக்கு கிளம்புடி...."

"இது நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்! அதனாலதான் நேத்தே வேலைக்காரியை
டிஸ்மிஸ் பண்ணிட்டேன்.!"

:mad: :confused: :mad:

மது அண்ணாவின் பதில்...

அடப்பாவி... ரெம்ப வெவரமான ஆளா இருக்கியே.....

Mathu
06-06-2005, 02:32 PM
உங்க வீட்ல.. பேசறதை அப்படியே தரீங்களே.. நண்பா....

:p :D :p அப்ப அங்கேயும் இதே தானா.....! :confused: கப்புனு கவுக்கிறீங்க.. :D

Mathu
06-06-2005, 02:54 PM
"என்னை பிடிக்கலை என்றால் இபோவே உன் பிறந்த வீட்டுக்கு கிளம்புடி...."
"இது நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்! அதனாலதான் நேத்தே வேலைக்காரியை
டிஸ்மிஸ் பண்ணிட்டேன்.!"

:mad: :confused: :mad:

மது அண்ணாவின் பதில்...

அடப்பாவி... ரெம்ப வெவரமான ஆளா இருக்கியே.....

அதெப்படி எல்லா பெண்களும் ஒரே மாதிரி சிந்திக்கிறாங்க......

:mad: :D :mad:

Mathu
06-06-2005, 03:20 PM
"ஹலோ! ஊரிலேருந்து உங்க மனைவி பேசறேன்..!"

அறிஞர் :- "ஸாரி ராங் நம்பர்! "

"ஃபோனை வச்சிடாதீங்க! நான் உங்க மச்சினி தான் பேசறேன்!"

அறிஞர் :- "சொல்லு டார்லிங்"

;) :D ;)

அறிஞர்
07-06-2005, 02:55 AM
"ஹலோ! ஊரிலேருந்து உங்க மனைவி பேசறேன்..!"
அறிஞர் :- "ஸாரி ராங் நம்பர்! "
"ஃபோனை வச்சிடாதீங்க! நான் உங்க மச்சினி தான் பேசறேன்!"
அறிஞர் :- "சொல்லு டார்லிங்"

;) :D ;)
:p :p :p

gragavan
07-06-2005, 05:09 AM
"ஹலோ! ஊரிலேருந்து உங்க மனைவி பேசறேன்..!"

அறிஞர் :- "ஸாரி ராங் நம்பர்! "

"ஃபோனை வச்சிடாதீங்க! நான் உங்க மச்சினி தான் பேசறேன்!"

அறிஞர் :- "சொல்லு டார்லிங்"

;) :D ;)

( அடுத்த நாள் வீட்டில் நடந்த மண்டகப்படியையும் விளக்கவும் )

தாய் தந்தையர் கொடுத்த வீடு!
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=105318#post105318

பரஞ்சோதி
07-06-2005, 05:18 AM
[/color]
[/color]
:mad: :confused: :mad:[/i]

அதெப்படி எல்லா பெண்களும் ஒரே மாதிரி சிந்திக்கிறாங்க......

:mad: :D :mad:

ஹா! ஹா! அதானே மது. நம்ம கஷ்டம் நமக்கு தான் தெரியும்.:p

பரஞ்சோதி
07-06-2005, 05:19 AM
( அடுத்த நாள் வீட்டில் நடந்த மண்டகப்படியையும் விளக்கவும் )

தாய் தந்தையர் கொடுத்த வீடு!
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=105318#post105318

அது என்ன மண்டகப்படி, மண்டை அடி தான் தெரியும் (சப்பாத்தி கட்டை).

gragavan
07-06-2005, 05:28 AM
அது என்ன மண்டகப்படி, மண்டை அடி தான் தெரியும் (சப்பாத்தி கட்டை). ஹி ஹி ரெண்டுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசமில்லை. நேரடியாத் திட்டாம கோயில்ல பாடுறாப்புல ராகம் போட்டுத் திட்டுறதுதான் மண்டகப்படி.

பிரியன்
07-06-2005, 06:41 AM
மகன்: அப்பா நீ எகிப்து போயிருக்கியா?
அப்பா: இல்லை ஏண்டா கேட்கிற.
மகன்: அப்புறம் வேற எங்க அம்மா கிடைச்சாங்க ( mummy ) :confused: :confused:

மன்மதன்
07-06-2005, 07:03 AM
"ஹலோ! ஊரிலேருந்து உங்க மனைவி பேசறேன்..!"

அறிஞர் :- "ஸாரி ராங் நம்பர்! "

"ஃபோனை வச்சிடாதீங்க! நான் உங்க மச்சினி தான் பேசறேன்!"

அறிஞர் :- "சொல்லு டார்லிங்"

;) :D ;)

ஒட்டுகேட்டுடிங்களா மது..... :D :D

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
07-06-2005, 07:04 AM
மகன்: அப்பா நீ எகிப்து போயிருக்கியா?
அப்பா: இல்லை ஏண்டா கேட்கிற.
மகன்: அப்புறம் வேற எங்க அம்மா கிடைச்சாங்க ( mummy ) :confused: :confused:

காக்கா தூக்கிட்டு வந்து போட்டுச்சுன்னு சொல்லி சமாளிக்க வேண்டியதுதான். :D
அன்புடன்
மன்மதன்

gragavan
07-06-2005, 11:29 AM
காக்கா தூக்கிட்டு வந்து போட்டுச்சுன்னு சொல்லி சமாளிக்க வேண்டியதுதான். :D
அன்புடன்
மன்மதன்அம்மா சிலிண்டர் மாதிரி இருந்தா பையன் நம்ப மாட்டான்.

mania
07-06-2005, 11:56 AM
இந்த சில சிரிப்பலைகளால் அறிஞர் வீட்டில் சுனாமி வருவதற்கு நிறைய சாத்தியகூறுகள் இருக்கின்றன.....
அன்புடன்
மணியா....:rolleyes: :D

gragavan
07-06-2005, 12:57 PM
இந்த சில சிரிப்பலைகளால் அறிஞர் வீட்டில் சுனாமி வருவதற்கு நிறைய சாத்தியகூறுகள் இருக்கின்றன.....
அன்புடன்
மணியா....:rolleyes: :D நம்ம இருக்குற எடத்துல பினாமி அல கூட அடிக்காதாம்......அவ்வளவு பயம்.....

அறிஞர்
08-06-2005, 01:58 AM
அம்மா சிலிண்டர் மாதிரி இருந்தா பையன் நம்ப மாட்டான்.
சரியா சொன்னிங்க..... மன்மதன் பையனிடம் இது மாதிரி சொன்னால் நம்ப மாட்டான்....

அறிஞர்
08-06-2005, 01:59 AM
சுனாமி, பினாமியாவது... எதுவாயிருந்தாலும் சமாளிச்சுருவோம்ல.....

அறிஞர்
08-06-2005, 06:05 AM
பரம்ஸ் வீட்டில்.
சக்தி : அப்பா என்ன சமையல்?
பரம்ஸ் : இன்னைக்கு அம்மா சமையல்... அம்மா கிட்ட கேளு..
சக்தி : அப்பாடியோவ்.... ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல சாப்பாடு சாப்பிட போறேன்..
பரம்ஸ் : !!!!!!!!!!!!!!!!!! :confused:

Mathu
12-06-2005, 07:40 AM

மெல்கியின் உபயம் அறிஞரின் படைப்பு மாட்டிக்கொண்டது பரம்ஸ்

:rolleyes: :p :rolleyes:

Mathu
12-06-2005, 07:48 AM
" ஏங்க நம்ம ரைஸ்குக்கரோட விசில் பளுதாகிட்டுதுங்க "

மணியா :- " அதுக்கு இப்பொ என்ன என்னடி பண்ண சொல்ற "

" சாதம் வெந்ததும் நீங்களே விசில் அடிச்சுடுங்க " :cool:

மணியா :- :confused: :confused: ................:mad:

பரஞ்சோதி
12-06-2005, 08:29 AM
தலை அடிக்கடி விசில் அடிக்கும் மர்மம் இது தானா?

பரஞ்சோதி
12-06-2005, 08:32 AM
பரம்ஸ் வீட்டில்.
சக்தி : அப்பா என்ன சமையல்?
பரம்ஸ் : இன்னைக்கு அம்மா சமையல்... அம்மா கிட்ட கேளு..
சக்தி : அப்பாடியோவ்.... ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல சாப்பாடு சாப்பிட போறேன்..
பரம்ஸ் : !!!!!!!!!!!!!!!!!! :confused:

பின்ன இருக்காதா? விஜி ஊருக்கு போய் இன்றைக்கு தானே திரும்பி வந்திருக்கிறார், ஹோட்டல் சாப்பாடு சக்திக்கு வெறுத்து போய் விட்டது.

அறிஞர்
13-06-2005, 04:33 AM
" சாதம் வெந்ததும் நீங்களே விசில் அடிச்சுடுங்க " :cool:

மணியா :- :confused: :confused: ................:mad:
விசில் அடிக்கிறது என்ன புதுசா...

அறிஞர்
13-06-2005, 04:34 AM
பின்ன இருக்காதா? விஜி ஊருக்கு போய் இன்றைக்கு தானே திரும்பி வந்திருக்கிறார், ஹோட்டல் சாப்பாடு சக்திக்கு வெறுத்து போய் விட்டது.
அருமையான சமாளிப்பு.. வாழ்த்துக்கள் நண்பா...

மன்மதன்
13-06-2005, 04:46 AM
அம்மா சிலிண்டர் மாதிரி இருந்தா பையன் நம்ப மாட்டான்.

:D :D :rolleyes: :rolleyes:

அன்புடன்
மன்மதன்

Mathu
22-06-2005, 09:51 AM
மனைவி:- காலைசாப்பாடு டைனிங்ரேபிளில் இருக்கு எடுத்துகோங்க,
லஞ் கிச்சினில் சமச்சு வச்சிருக்கன் போட்டு சாப்பிட்ருங்க,
fஃறிச்சில் தோசைமா வச்சிருக்கன் இரவுக்கு 2 தோசை ஊத்திக்கோங்க..

கணவன் :- என்னடி உங்க அம்மா வீட்ட போறியா நீ.....?

மனைவி:- இல்ல நான் கொஞ்சம் பொதீஸ் வரைக்கும் போய்ற்று வந்திர்ரன்.

அறிஞர்
22-06-2005, 09:57 AM
மனைவி:- இல்ல நான் கொஞ்சம் பொதீஸ் வரைக்கும் போய்ற்று வந்திர்ரன்.
கணவன் : அப்படின்னா... நாளைக்கு என்ன செய்து வைத்து இருக்கிறாய் என சொல்லி போ.....

pradeepkt
22-06-2005, 10:06 AM
கணவன் : அப்படின்னா... நாளைக்கு என்ன செய்து வைத்து இருக்கிறாய் என சொல்லி போ.....
அருமையான தொடர்ச்சி.
:) :)

சுவேதா
22-06-2005, 02:33 PM
கணவன் : அப்படின்னா... நாளைக்கு என்ன செய்து வைத்து இருக்கிறாய் என சொல்லி போ.....

:):):)

சுவேதா
06-07-2005, 05:32 PM
இராகவன் : ஏன்டா மன்மதன் ஏன் ஒரே சோகமா இருக்க?

மன்மதன் : ஒன்னும் இல்லடா நாளைக்கு என்னுடைய பிறந்தநாள்.

இராகவன் : அதுக்கு ஏன் சோகமா இருக்காய் சந்தோசமா இரு.

மன்மதன் : இல்ல எனக்கு அப்பா நியூட்ரெஸ் வாங்கித்தர மாட்டாராம் புது உடுப்புத்தான் வாங்கித் தருவாராம் அதுதான் கவலையாக இருக்கடா.

இராகவன் : :confused: :rolleyes: !!!!!!!!!!

thempavani
07-07-2005, 12:54 AM
உடுப்பு போடப்போகும் மன்மதா பிறந்த நாள் வாழ்த்துக்கள்......:p ;) :rolleyes::p ;) :rolleyes::p ;) :rolleyes::p ;) :rolleyes:

சுவேதா
07-07-2005, 02:38 AM
உடுப்பு போடப்போகும் மன்மதா பிறந்த நாள் வாழ்த்துக்கள்......:p ;) :rolleyes::p ;) :rolleyes::p ;) :rolleyes::p ;) :rolleyes:

:p:p:p:p:p:p:):):):):p:p:p:p:p:p:p

aren
07-07-2005, 03:12 AM
நகைச்சுவையும் அதற்கு வந்த விமர்சனங்களும் நன்றாக உள்ளன. தொடருங்கள்.

அறிஞர், பரம்ஸ் வீடுகளில் இதை படிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

சுவேதா
16-07-2005, 02:04 AM
பரம்ஸ் : ஒரே இடத்தில் கனக்க கோவில் இல்லாமல் எல்லா கோவிலையும் ஒண்டாக்கினது நல்லது தானே!!!

இராகவன் : கனக்க கோவில் இருக்கேக்க அள்ளி தந்தவங்கள் இப்ப கிள்ளி அல்ல தாரங்கள்.

பரம்ஸ் : என்ன! திரு நீற்றையோ?

இராகவன் : இல்லை! பிரசாதத்தை.

பரம்ஸ் : ???!!!... :confused: :rolleyes: :rolleyes:

சுவேதா
17-07-2005, 02:31 AM
பிரதீப் : கோயில் பக்கமே போகாத சுந்தரத்தான் இப்ப அடிக்கடி கோயிலுக்கு போய் பஐனை எல்லாம் பாடுறான். பக்திமானாகிட்டானோ !

இராகவன் : பக்தியுமில்லை, கித்தியுமில்லை இப்ப கோயில்வழிய பூசைமுடிய அன்னதானம் குடுக்கினமாம் அதுதான் அடிக்கடி கோயிலுக்கு போறான்.

பிரதீப் : !!!???...

sumathi
17-07-2005, 12:53 PM
எல்லா குடும்ப நகைச்சுவையும் நால்லா இருக்கு தொடருங்க அவங்க அவங்க வீட்டு நிகழ்ச்சியும் வெளிய வருது.

சுவேதா
17-07-2005, 01:27 PM
:):):)

aren
17-07-2005, 02:24 PM
பரம்ஸ், இராகவன் மற்றும் பிரதீப் ஆகியோர் சுவேதா அவர்களிடம் இப்படி மாட்டி முழிக்கும்படியாகிவிட்டதே. நல்லா வெளுத்து வாங்குகிறார்கள்.

pradeepkt
17-07-2005, 02:31 PM
பிரதீப் : கோயில் பக்கமே போகாத சுந்தரத்தான் இப்ப அடிக்கடி கோயிலுக்கு போய் பஐனை எல்லாம் பாடுறான். பக்திமானாகிட்டானோ !

இராகவன் : பக்தியுமில்லை, கித்தியுமில்லை இப்ப கோயில்வழிய பூசைமுடிய அன்னதானம் குடுக்கினமாம் அதுதான் அடிக்கடி கோயிலுக்கு போறான்.

பிரதீப் : !!!???...
இராகவன்: அது சரி சுந்தரத்தான் யாருன்னு தெரியுமா?
பிரதீப்: எனக்குத்தான் தெரியுமே? சுவேதாவுக்குச் செல்லப் பெயர்... சுவேதா தன்னைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் மற்றோருக்குத் தெரியாமலிருக்க ஆண்பிள்ளைப் பேரை உபயோகப் படுத்துவாளே...
இராகவன் : :) :)

aren
17-07-2005, 02:37 PM
இது சுவேதா அவர்களுக்கு ஒரு அடிதான். திரும்ப வருவார்கள், பிரதீப் கொஞ்சம் ஜாக்கிரதை.

pradeepkt
17-07-2005, 02:39 PM
இது சுவேதா அவர்களுக்கு ஒரு அடிதான். திரும்ப வருவார்கள், பிரதீப் கொஞ்சம் ஜாக்கிரதை.
தங்கை ஒவ்வொரு தடவையும் அடி வாங்கி அடி கொடுப்பது வழக்கம்தான். நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

சுவேதா
17-07-2005, 03:31 PM
இராகவன்: அது சரி சுந்தரத்தான் யாருன்னு தெரியுமா?
பிரதீப்: எனக்குத்தான் தெரியுமே? சுவேதாவுக்குச் செல்லப் பெயர்... சுவேதா தன்னைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் மற்றோருக்குத் தெரியாமலிருக்க ஆண்பிள்ளைப் பேரை உபயோகப் படுத்துவாளே...
இராகவன் : :) :)

ஹி..ஹி சுந்தரம் என்பது என் பெயர் அல்ல என் அண்ணன் பரம்ஸ் இன் செல்லப் பெயர்.:p

சுவேதா
17-07-2005, 03:33 PM
பரம்ஸ், இராகவன் மற்றும் பிரதீப் ஆகியோர் சுவேதா அவர்களிடம் இப்படி மாட்டி முழிக்கும்படியாகிவிட்டதே. நல்லா வெளுத்து வாங்குகிறார்கள்.

ஹி ஹி :) :) :)

சுவேதா
17-07-2005, 03:34 PM
தங்கை ஒவ்வொரு தடவையும் அடி வாங்கி அடி கொடுப்பது வழக்கம்தான். நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

அப்படியா!!!!

சுவேதா
17-07-2005, 11:27 PM
பிரதீப் : சட்டை புதுசா இருக்கே தீபாவளிக்கு எடுத்ததா மன்மதன்?

மன்மதன் : இல்லை எனக்கு எடுத்தது!

பிரதீப் : !!!!????

சுவேதா
17-07-2005, 11:37 PM
ஆசிரியர் : கலிங்கத்துராஜா கோட்டை கட்டினார், ஷாஜகான் தாஜ்மகால் கட்டினார், சோழ ராஜா என்ன கட்டினார்?

மாணவன் பிரதீப் : வேஷ்டி சார்!

ஆசிரியர் : !!!!???

சுவேதா
18-07-2005, 12:11 AM
பிரதீப்பின் மனைவி : என்னங்க பிச்சைக்காரனுக்கு $100 போடுறிங்க பணக் கொழுப்பு அதிகமாயிருச்சா?

பிரதீப் : சத்தம் போடாதடி, அன்னிக்கு பார்ல இவன்கிட்ட கைமாத்தா வாங்கினதை திருப்பி கொடுக்கறேன்.

மனைவி : !!!???

சுவேதா
18-07-2005, 12:30 AM
பிரதீப் : பிராந்தி பாட்டில வீட்டுக்கு எடுத்துட்டு போறியே மனைவிக்கு தெரியாம எங்க ஒளிச்சிவப்ப?

பரம்ஸ் : சமையல் ரூம்லதான், அந்தப் பக்கம் தலைவச்சுக் கூட படுக்க மாட்டால்ல அவ!

சுவேதா
18-07-2005, 01:08 PM
பிரதீப் அண்ணா இதை நோக்கலயோ? இந்த அடி எப்படி?? :D:D:D

pradeepkt
18-07-2005, 01:14 PM
பிரதீப் : பிராந்தி பாட்டில வீட்டுக்கு எடுத்துட்டு போறியே மனைவிக்கு தெரியாம எங்க ஒளிச்சிவப்ப?

பரம்ஸ் : சமையல் ரூம்லதான், அந்தப் பக்கம் தலைவச்சுக் கூட படுக்க மாட்டால்ல அவ!
பிரதீப்: ஏன்?
பரம்ஸ்: நானேதான் சமைக்கிறேன்.
பிரதீப்: அட ஏன் அண்ணா?
பரம்ஸ்: இல்லைன்னா தங்கை சுவேதாவைக் கூப்பிட்டு சமைக்கச் சொல்லுவேன்னு உங்க அண்ணி பயமுறுத்துகிறார்...

pradeepkt
18-07-2005, 01:14 PM
பிரதீப் அண்ணா இதை நோக்கலயோ? இந்த அடி எப்படி?? :D:D:D
பதிலடியைப் படிம்மா :D

சுவேதா
18-07-2005, 01:21 PM
ஹி..ஹி..

சுவேதா
18-07-2005, 01:25 PM
பிரதீப் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்படி மறக்காம டிபன் பாக்சை எடுத்துட்டு வந்தேன் பாரு.

மனைவி : மண்ணாங்கட்டி,இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே..

gragavan
18-07-2005, 01:43 PM
பிரதீப் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்படி மறக்காம டிபன் பாக்சை எடுத்துட்டு வந்தேன் பாரு.

மனைவி : மண்ணாங்கட்டி,இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே..இதெப்படி சுவேதா உனக்குத் தெரியும்?

சுவேதா
18-07-2005, 01:55 PM
இதெப்படி சுவேதா உனக்குத் தெரியும்?

அண்ணிதான் என்கிட்ட சொன்னாங்க.அவங்க என்கூட நல்ல மாதிரி தெரியுமா??

gragavan
18-07-2005, 01:58 PM
அண்ணிதான் என்கிட்ட சொன்னாங்க.அவங்க என்கூட நல்ல மாதிரி தெரியுமா??அப்படியா? ரொம்ப ஆச்சரியமா இருக்கும். பிரதீப்புக்குந்தான்னு நெனைக்கிறேன். :D

சுவேதா
18-07-2005, 02:02 PM
ஹி..ஹி..

பரஞ்சோதி
19-07-2005, 04:41 AM
பிரதீப் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்படி மறக்காம டிபன் பாக்சை எடுத்துட்டு வந்தேன் பாரு.

மனைவி : மண்ணாங்கட்டி,இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே..

அய்யோ சகோதரி, தம்பி டிபன்பாக்ஸை எடுத்துக் கொண்டு போனது பக்கத்து வீடு, அதை மொதல்ல சொல்லுங்க.

கலக்கு கலக்கு என்று கலக்குறீங்க சகோதரி.

நல்லவேளை விஜிக்கு பிராந்தி பாட்டில் மேட்டர் தெரியாது, தெரிந்தால் தெனமும் சப்பாத்தி தான்.

சுவேதா
19-07-2005, 12:04 PM

ஹி...ஹி.. ஹி

pradeepkt
19-07-2005, 01:35 PM
ஹ்ம்ம்... இல்லாத அண்ணிக்கு இப்பவே சோப்பு...

அது சரி...

karikaalan
20-07-2005, 03:28 AM
ஹ்ம்ம்... இல்லாத அண்ணிக்கு இப்பவே சோப்பு...

அது சரி...

!!அலுத்துக்காதீங்க ப்ரதீப்ஜி.... சீக்கிரமே ப்ராப்து ரஸ்து!!

பரஞ்சோதி
20-07-2005, 04:19 AM
!!அலுத்துக்காதீங்க ப்ரதீப்ஜி.... சீக்கிரமே ப்ராப்து ரஸ்து!!

எல்லாம் பெரியவங்க ஆசி,

தம்பி ஜமாயுங்க. சுவேதாவை மட்டும் வீட்டுக்குள்ள விடாதீங்க, அப்புறம் உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும்.

சுவேதா
20-07-2005, 11:05 AM
அது எப்படி விடாவிட்டாலும் நான் அண்ணியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வேன்.

சுவேதா
21-07-2005, 02:26 AM
பிரதீப் : டேய் உலகத்துலயே காசுதாண்டா முக்கியம், காசு இல்லைன்னா எதையுமே வாங்க முடியாதுடா.

மகன் : ஏன் கடன் வாங்கலாமே...

சுவேதா
21-07-2005, 02:32 AM
பிச்சைக்காரன் : அம்மா தாயே சோறு போடுங்க.

இராகவன் மனைவி : போ! போ! வீட்ல யாரும் இல்ல, அதனால சமைக்கல..

பிச்சைக்காரன் : பொய் சொல்லாதிங்க தாயி, அய்யாதான் பின்னாடி துணி துவைச்சுட்டு இருக்காரே.

சுவேதா
21-07-2005, 12:43 PM
இராகவன் அண்ணாவும் பிரதீப் அண்ணாவும் இதை நோக்கலயோ...

karikaalan
21-07-2005, 12:51 PM
சுவேதாஜி
நன்றாகவே "வெளுத்து" வாங்குகிறீர்கள்!
===கரிகாலன்

சுவேதா
21-07-2005, 12:53 PM
சுவேதாஜி
நன்றாகவே "வெளுத்து" வாங்குகிறீர்கள்!
===கரிகாலன்

ஹி..ஹி

pradeepkt
21-07-2005, 12:56 PM
நோக்கிட்டோம் தாயே...
பிற்காலத்துல உங்க வீட்டுல நடக்கப் போறதை எங்களை வச்சிச் சொல்லிக்கிற...
கலக்கல்தான் போ :)

சுவேதா
21-07-2005, 12:59 PM
தப்பு தப்பு எங்க வீட்ட சொல்லல உங்க வீட்டில் நடந்ததைத்தான் சொல்கின்றேன்!

அறிஞர்
23-07-2005, 07:06 AM
சுவேதா சிரிப்புகள் அருமை.. இன்னும் தொடரவில்லையா

சுவேதா
23-07-2005, 01:41 PM
நன்றி! தொடருகின்றேன்.....தொடருகின்றேன் :)

சுவேதா
26-07-2005, 12:48 AM
பரம்ஸ் : ஏன் இப்படி காதுகிட்ட வந்து கிசுகிசுறுங்ற. ஏதாயிறுந்தாலும் சத்தமா சொல்ல வேண்டியதுதானே!

சக்தி : (உறக்க) ஏதாவது சாப்பிடுங்கன்னு உங்க ப்ரெண்டுகிட்ட சொல்ல வேணாம், வீட்ல ஒரு மண்ணும் இல்லன்னு அம்மா உங்ககிட்ட ரகசியமா சொல்லச் சொன்னாங்க.

சுவேதா
26-07-2005, 01:44 AM
இராகவன் மனைவி : டெய்லி குடிச்சுட்டு வர வேண்டாம்னு நானும் ஜாடை மாடையா சொல்லி பாத்துட்டேன் கேக்கவே மாட்டேங்கறார்.

சுமா : ஏன் ஜாடை மாடையா சொல்றீங்க ? நல்லா அடிச்சு சொல்ல வேண்டியதுதானே.

இராகவன் மனைவி : அதத்தான் நான் ஜாடை மாடையா அப்படி சொன்னேன்.

பரஞ்சோதி
26-07-2005, 04:43 AM
அப்போ அப்போ குடித்து விட்டு வந்தால் ஜாடை மாடை கிடையாதா?

பரஞ்சோதி
26-07-2005, 04:48 AM
பரம்ஸ் : ஏன் இப்படி காதுகிட்ட வந்து கிசுகிசுறுங்ற. ஏதாயிறுந்தாலும் சத்தமா சொல்ல வேண்டியதுதானே!

சக்தி: (உறக்க) ஏதாவது சாப்பிடுங்கன்னு உங்க ப்ரெண்டுகிட்ட சொல்ல வேணாம், வீட்ல ஒரு மண்ணும் இல்லன்னு அம்மா உங்ககிட்ட ரகசியமா சொல்லச் சொன்னாங்க.

அய்யோ சகோதரி, எங்க வீட்டுக்கு வந்தது நீங்க தானே. :D

pradeepkt
26-07-2005, 05:16 AM
அய்யோ சகோதரி, எங்க வீட்டுக்கு வந்தது நீங்க தானே. :D
சிரிப்பு வருது சிரிப்பு வருது :D :D :D
சக்திக்குக் கூட சுவேதாவைப் பத்தித் தெரிஞ்சு போச்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

suma
26-07-2005, 11:00 AM
ÍÀ÷ ÀÃýŠ

gragavan
26-07-2005, 11:04 AM
இராகவன் மனைவி : டெய்லி குடிச்சுட்டு வர வேண்டாம்னு நானும் ஜாடை மாடையா சொல்லி பாத்துட்டேன் கேக்கவே மாட்டேங்கறார்.

சுமா : ஏன் ஜாடை மாடையா சொல்றீங்க ? நல்லா அடிச்சு சொல்ல வேண்டியதுதானே.

இராகவன் மனைவி : அதத்தான் நான் ஜாடை மாடையா அப்படி சொன்னேன்.
சுவேதா...................உன்னை......................

சுவேதா
26-07-2005, 12:42 PM
அய்யோ சகோதரி, எங்க வீட்டுக்கு வந்தது நீங்க தானே. :D

அடக்கடவுளே...

சுவேதா
26-07-2005, 12:43 PM
சிரிப்பு வருது சிரிப்பு வருது :D :D :D
சக்திக்குக் கூட சுவேதாவைப் பத்தித் தெரிஞ்சு போச்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

சக்தி அப்படி நினைக்கல அவர் சின்ன பிள்ளை அதுதான் உறக்க கொன்னார் மற்றும் படி எதுகும் இல்லையே....

சுவேதா
26-07-2005, 12:44 PM
சுவேதா...................உன்னை......................

அண்ணா அடிக்காதைங்க... நான் உங்க செல்ல தங்கைச்சி எல்லா???:cool: :cool: :cool:

சுவேதா
27-07-2005, 02:14 AM
பிரதீப் மனைவி : நம்ம வீட்டு சமையல் காரனுக்கு திமிர் ரொம்ப அதிகமாயிடுச்சு!

பிரதீப் : எதை வச்சு அப்படி சொல்ற?

பிரதீப் மனைவி: சாம்பார், ரசம், இதுக்கெல்லாம் ஏன் உப்பு போடறது இல்லைன்னு கேட்டா, இவ்வளவு வருஷமா உப்பு போட்டு மட்டும் என்ன பிரதீப் சாருக்கு ரோஷம் வந்துடுச்சான்னு கேக்கறான்....!

pradeepkt
27-07-2005, 05:42 AM

பிரதீப் : அப்ப சரி, போய் சமையல்காரன் தலைப்பாகையை எடுத்திட்டுப் பாரு, சுவேதாவாத்தான் இருக்கும் :D

thempavani
27-07-2005, 06:18 AM
எப்படியோ.... தனக்கு ரோசம் இல்லைன்னு பிரதீப்பு ஒத்துகிட்டாரு....

aren
27-07-2005, 06:52 AM
இராகவன் மனைவி : டெய்லி குடிச்சுட்டு வர வேண்டாம்னு நானும் ஜாடை மாடையா சொல்லி பாத்துட்டேன் கேக்கவே மாட்டேங்கறார்.

சுமா : ஏன் ஜாடை மாடையா சொல்றீங்க ? நல்லா அடிச்சு சொல்ல வேண்டியதுதானே.

இராகவன் மனைவி : அதத்தான் நான் ஜாடை மாடையா அப்படி சொன்னேன்.

ஜாடை மாடையா என்றால் ஜாட்டையால் (சாட்டையால்) அடிப்பது என்று அர்த்தம்போலிருக்கிறது. அப்படியும் கேட்கவேயில்லையா?

பரஞ்சோதி
27-07-2005, 07:26 AM
எப்படியோ.... தனக்கு ரோசம் இல்லைன்னு பிரதீப்பு ஒத்துகிட்டாரு....

அம்மா, தாயே! பொண்டாட்டிக்கிட ரோஷம் காட்டினால் என்ன ஆகும் என்று அறிஞர் கிட்ட கேளுங்க, அவர் தினமும் ஓட்டலில் போய் அல்லவா சாப்பிடுகிறார்.:D

pradeepkt
27-07-2005, 07:26 AM
எப்படியோ.... தனக்கு ரோசம் இல்லைன்னு பிரதீப்பு ஒத்துகிட்டாரு....
சுவேதாவையும் உங்களையும் மாதிரி சகோதரிகளோட ரோசத்தையுமா வச்சிக்க முடியும்? :D

gragavan
27-07-2005, 08:01 AM
ஜாடை மாடையா என்றால் ஜாட்டையால் (சாட்டையால்) அடிப்பது என்று அர்த்தம்போலிருக்கிறது. அப்படியும் கேட்கவேயில்லையா?ஆகா! ஒங்க நல்ல எண்ணம் இப்பத்தான புரியுது.

சுவேதா
27-07-2005, 02:24 PM
பிரதீப் : அப்ப சரி, போய் சமையல்காரன் தலைப்பாகையை எடுத்திட்டுப் பாரு, சுவேதாவாத்தான் இருக்கும் :D

:eek: அண்ணா,,,,,,,,,,,,,,,,,,,

சுவேதா
27-07-2005, 02:25 PM
ஜாடை மாடையா என்றால் ஜாட்டையால் (சாட்டையால்) அடிப்பது என்று அர்த்தம்போலிருக்கிறது. அப்படியும் கேட்கவேயில்லையா?

அப்படியும் கேட்காவிடில் பாவம் அண்ணி...

சுவேதா
28-07-2005, 12:56 AM
பிரதீப் மனைவி : என்னங்க நம்ம வீட்டு வேலைக்காரி புதுப்புடவை கட்டிக்கொண்டு மினுக்குறா. எந்த அயோக்கியன் வாங்கிக் கொடுத்ததோ?

பிரதீப் : அப்படி எல்லாம் திட்டாதே....

சுவேதா
29-07-2005, 02:05 AM
மனைவி : (கணவனிடம்) என்னங்க, நம்ம வேலைக்காரி இந்த மாதம் சம்பளத்திலே ஐம்பது ரூபாய் அதிகம் கேட்கிறாளே எதுக்காம்?

இராகவன் : போன மாசத்திலே அக்கம் பக்க வீட்டு நியூஸ் அதிகமாக சொல்லியிருக்கிறாளாம். அதுக்கு போனஸாம்.

pradeepkt
29-07-2005, 05:34 AM
பிரதீப் மனைவி : என்னங்க நம்ம வீட்டு வேலைக்காரி புதுப்புடவை கட்டிக்கொண்டு மினுக்குறா. எந்த அயோக்கியன் வாங்கிக் கொடுத்ததோ?

பிரதீப் : அப்படி எல்லாம் திட்டாதே....

:mad: :mad: :mad: :mad: சுவேதாத்தா.........................

gragavan
29-07-2005, 06:32 AM
மனைவி : (கணவனிடம்) என்னங்க, நம்ம வேலைக்காரி இந்த மாதம் சம்பளத்திலே ஐம்பது ரூபாய் அதிகம் கேட்கிறாளே எதுக்காம்?

இராகவன் : போன மாசத்திலே அக்கம் பக்க வீட்டு நியூஸ் அதிகமாக சொல்லியிருக்கிறாளாம். அதுக்கு போனஸாம்.
ஐம்பது ரூவாயா? வாய்ப்பே இல்லை.
கஞ்சர்,
கோ.இராகவர்

சுவேதா
29-07-2005, 11:54 AM
ஐம்பது ரூவாயா? வாய்ப்பே இல்லை.
கஞ்சர்,
கோ.இராகவர்

என்ன?????????

சுவேதா
29-07-2005, 11:57 AM
:mad: :mad: :mad: :mad: சுவேதாத்தா.........................

சரி சரி கோவப்படாததங்க உங்கள பத்தி உண்மை சொல்ல வேணாம் என்று கூறினிர்கள். ஆனால் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை முயற்சி செய்கின்றேன் அண்ணா சரியா??

பரஞ்சோதி
30-07-2005, 05:48 AM
பிரதீப் மனைவி : என்னங்க நம்ம வீட்டு வேலைக்காரி புதுப்புடவை கட்டிக்கொண்டு மினுக்குறா. எந்த அயோக்கியன் வாங்கிக் கொடுத்ததோ?

பிரதீப் : அப்படி எல்லாம் திட்டாதே....

தம்பி நீயுமா ? :confused: :confused: :eek:

ஜீவா
30-07-2005, 07:40 AM
தம்பி நீயுமா ? :confused: :confused: :eek:

:D :D :D

அது என்ன வேலைக்காரியா.. இல்ல சேலைக்காரியா?? :D :D

அறிஞர்
30-07-2005, 07:47 AM
தம்பி நீயுமா ? :confused: :confused: :eek:அப்படின்னா.. உங்கள் லிஸ்டில் சேர்ந்துவிட்டார் என்கிறீர்களா....

பரஞ்சோதி
30-07-2005, 08:09 AM
அப்படின்னா.. உங்கள் லிஸ்டில் சேர்ந்துவிட்டார் என்கிறீர்களா....

என் வீட்டு வேலைக்காரி, தம்பி பிரதீப் வீட்டு வேலைக்காரி மாதிரி அல்ல, அவர் நான் வாங்கி கொடுத்த சேலையை என் வீட்டுக்கு வரும் போது கட்டிக் கொண்டு வரமாட்டார். :D

pradeepkt
30-07-2005, 10:42 AM
என் வீட்டு வேலைக்காரி, தம்பி பிரதீப் வீட்டு வேலைக்காரி மாதிரி அல்ல, அவர் நான் வாங்கி கொடுத்த சேலையை என் வீட்டுக்கு வரும் போது கட்டிக் கொண்டு வரமாட்டார். :D
ஏண்ணா வீட்டு விஷயத்தை எல்லாம் சந்திக்குக் கொண்டு வருகிறீர்கள்???
:D

aren
30-07-2005, 12:39 PM
ஏண்ணா வீட்டு விஷயத்தை எல்லாம் சந்திக்குக் கொண்டு வருகிறீர்கள்???
:D

அதானே. இப்படி ஒருவரை ஒருவர் போட்டு கொடுத்துக்கொண்டால் உங்கள் விஷயம் அனைத்தும் சந்தைக்கு வந்துவிடுமே.

நான் இருவரும் நல்லவர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன். சங்கதி இப்படி போகிறதே.

சுவேதா
30-07-2005, 01:04 PM
தம்பி நீயுமா ? :confused: :confused: :eek:
அடடா அண்னா என்ன சொல்ல வேணாம் என்றுவிட்டு இப்ப நீங்களே கூறிவிட்டிர்களே!!!

சுவேதா
30-07-2005, 01:05 PM
அப்படின்னா.. உங்கள் லிஸ்டில் சேர்ந்துவிட்டார் என்கிறீர்களா....

அதில் என்ன சந்தேகம்!

சுவேதா
30-07-2005, 01:07 PM
என் வீட்டு வேலைக்காரி, தம்பி பிரதீப் வீட்டு வேலைக்காரி மாதிரி அல்ல, அவர் நான் வாங்கி கொடுத்த சேலையை என் வீட்டுக்கு வரும் போது கட்டிக் கொண்டு வரமாட்டார். :D

அடடடா.......... என்ன அண்ணா இது!!!!

சுவேதா
30-07-2005, 01:11 PM
அதானே. இப்படி ஒருவரை ஒருவர் போட்டு கொடுத்துக்கொண்டால் உங்கள் விஷயம் அனைத்தும் சந்தைக்கு வந்துவிடுமே.

நான் இருவரும் நல்லவர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன். சங்கதி இப்படி போகிறதே.

அதுதானே.. முதல்ல என் அண்ணன்மார்களை திருத்த வேணும் :D:D:D
ஆனா இதயாரும் அண்ணிமாரிடம் போட்டுக் கொடுக்காதிர்கள் பின்பு அண்ணன்மார்களின் வாழ்க்கை என்னாகும் என்வே யாரும் போட்டுக் கொடுக்காதிர்கள் சரியா?:)

அக்கரையுடன்
தங்கை

pradeepkt
30-07-2005, 02:38 PM
அதானே. இப்படி ஒருவரை ஒருவர் போட்டு கொடுத்துக்கொண்டால் உங்கள் விஷயம் அனைத்தும் சந்தைக்கு வந்துவிடுமே.

நான் இருவரும் நல்லவர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன். சங்கதி இப்படி போகிறதே.
எப்படி இருந்தாலும் நாங்கள் நல்லவர்கள்தானே அண்ணா?
அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. :D

pradeepkt
30-07-2005, 02:39 PM
அதுதானே.. முதல்ல என் அண்ணன்மார்களை திருத்த வேணும் :D:D:D
ஆனா இதயாரும் அண்ணிமாரிடம் போட்டுக் கொடுக்காதிர்கள் பின்பு அண்ணன்மார்களின் வாழ்க்கை என்னாகும் என்வே யாரும் போட்டுக் கொடுக்காதிர்கள் சரியா?:)

அக்கரையுடன்
தங்கை
என்னா அக்கறை, என்னா அக்கறை...
சுவேதாத்தா, அக்கரையில் நீ என்ன செய்கிறாய் என்று எங்களுக்குத் தெரியாதா தாயே!!!

சுவேதா
30-07-2005, 09:31 PM
என்ன அண்ணா என்ன இப்படி சொல்லிவிட்டிர்கள். சில வேளை சிலவற்றை போட்டு கொடுப்பேன் ஆனால் எல்லாத்தையும் போடமுடியுமா???

அப்படி போட்டால் உங்கள் வாழ்க்கை......
அய்யோ உங்கள் தங்கை நான் அப்படி செய்வேனா???

gragavan
31-07-2005, 06:29 AM
என்ன அண்ணா என்ன இப்படி சொல்லிவிட்டிர்கள். சில வேளை சிலவற்றை போட்டு கொடுப்பேன் ஆனால் எல்லாத்தையும் போடமுடியுமா???

அப்படி போட்டால் உங்கள் வாழ்க்கை......
அய்யோ உங்கள் தங்கை நான் அப்படி செய்வேனா???போட்டுக் குடுக்குறதுண்ணு முடிவெடுத்தாச்சு. அப்புறம் எல்லாத்தையும் போட்டுக் குடுக்க வேண்டியதுதானா..........ஏம்லா யோசிக்க.......போட்டுக் குடுத்து சங்க அறுத்துரு.......

பரஞ்சோதி
31-07-2005, 09:18 AM
சுவேதா: அக்கா, இருந்தாலும் நம்ம தெரு பிச்சைக்காரனுக்கு கொழுப்பு அதிகம்.

சுமா: ஏண்டி அப்படி சொல்லுற.

சுவேதா: பின்ன என்னக்கா, சமையல் செய்வது எப்படின்னு ஒரு புத்தகத்தை கொடுத்து, இனிமேலாவது ருசியா சமைங்கன்னு சொல்லிட்டு போறான்.

gragavan
31-07-2005, 11:35 AM
சுவேதா: அக்கா, இருந்தாலும் நம்ம தெரு பிச்சைக்காரனுக்கு கொழுப்பு அதிகம்.

சுமா: ஏண்டி அப்படி சொல்லுற.

சுவேதா: பின்ன என்னக்கா, சமையல் செய்வது எப்படின்னு ஒரு புத்தகத்தை கொடுத்து, இனிமேலாவது ருசியா சமைங்கன்னு சொல்லிட்டு போறான்.ஹா ஹா சுவேதாவின் சமையல் திறமை இவ்வளவா? சுவேதா, இனியாவது புக்கைப் பார்த்து சமைத்துப் பார். முன்னேற்றம் தெரியலாம்.

suma
31-07-2005, 11:43 AM
ஆசிரியர்: ஏன் தாமதமா வர?
சுவேதா: ஏன் என்றால் சுலோவா போன்னு போட்டு இருந்தது.
ஆசிரியர்: என்ன?
சுவேதா: பள்ளி கூட வருது மெது வா போ என போட்டு இருக்கு அது தான். ஆங்கிலத்தில் படித்தால் நல்லா இருக்கும் ("School Ahead, Go Slow")

aren
31-07-2005, 12:33 PM
ஆசிரியர்: ஏன் தாமதமா வர?
சுவேதா: ஏன் என்றால் சுலோவா போன்னு போட்டு இருந்தது.
ஆசிரியர்: என்ன?
சுவேதா: பள்ளி கூட வருது மெது வா போ என போட்டு இருக்கு அது தான். ஆங்கிலத்தில் படித்தால் நல்லா இருக்கும் ("School Ahead, Go Slow")

இது நிஜமாகவே செம்ம கடிங்க.

சுவேதா
31-07-2005, 03:16 PM
சுவேதா: அக்கா, இருந்தாலும் நம்ம தெரு பிச்சைக்காரனுக்கு கொழுப்பு அதிகம்.

சுமா: ஏண்டி அப்படி சொல்லுற.

சுவேதா: பின்ன என்னக்கா, சமையல் செய்வது எப்படின்னு ஒரு புத்தகத்தை கொடுத்து, இனிமேலாவது ருசியா சமைங்கன்னு சொல்லிட்டு போறான்.

எனக்கேவா???

பிச்சைக்காரன் : இந்தாங்க சமையல் புத்தகம்.

சுவேதா : எதுக்கு தாரிங்க??

பிச்சைக்காரன் : இல்ல உங்க அண்ணன் பரம்ஸ் அவங்க மனைவியோட சண்டை போட்டுவிட்டு வந்தார் அவருக்கு இனி அங்க சாப்பாடுகிடையாது. அப்ப அவர் சமைத்துச் சாப்பிட என்னிடம் சமையல் புத்தகம் கேட்டிருந்தார் நான் பிறகு கொடுக்கின்றேன் என்றேன். அதான் அவர கண்டால் கொடுத்திருங்க!

சுவேதா : அட என்ன அண்ணா இது போயும் போய் உங்க கிட்ட கேட்டிருக்கார்!

பிச்சைக்காரன் : அட இது என்ன பெரிய விஷயம் என்கிட்ட சாப்பாடும் வாங்கித்திண்பார், அவருக்கு போண்டா என்றால் கொள்ளை பிரியம் நான் வைத்திருந்தால் என்னிடம் தர சொல்லி கேட்பார்!
அது மட்டுமா என்னிடம் அவர் எவ்வளவு கடன் வாங்கி இருக்கார் இன்னும் திருப்பிகூட தரவில்லை தெரியுமா?

சுவேதா : (மனதுக்குள்)( கடவுளே.... என் அண்ணன் பரம்சுக்கு எங்க போச்சு மூளை ) சரி எவ்வளவு கடன் கொடுத்தாய்??

பிச்சைக்காரன் : 500ரூபாய்ங்க!

சுவேதா : சரி இந்தா இதில ரூ550 இருக்கு பிடி 50 த பிச்சையா வைத்திரு இந்தா புத்தகம் அண்ணாவுக்கு நான் கொடுக்கிறேன் சரியா அவர கண்டால் நான் தேடினேன் என்று கூறு சரியா?

பிச்சைக்காரன் : சரிங்க !

சுவேதா
31-07-2005, 03:24 PM
ஆசிரியர்: ஏன் தாமதமா வர?
சுவேதா: ஏன் என்றால் சுலோவா போன்னு போட்டு இருந்தது.
ஆசிரியர்: என்ன?
சுவேதா: பள்ளி கூட வருது மெது வா போ என போட்டு இருக்கு அது தான். ஆங்கிலத்தில் படித்தால் நல்லா இருக்கும் ("School Ahead, Go Slow")

ஆசிரியர் : ஏன் தாமதமா வர?

சுவேதா : இல்ல நான் வார வழியில் என் அக்கா ஒருவர் பெயர் சுமா அவங்க வந்து எனக்கு ரோட்டில் பாடம் சொல்லித்தந்தார் அதுதான் லேட் மன்னித்துக் கொள்ளுங்கள்!

ஆசிரியர் : என்ன பாடம் ?

சுவேதா : இல்ல நான் ரோட்டில வேகமா வந்து கொண்டிருந்தேன அப்போ சுமா அக்கா" "("School Ahead, Go Slow") என்ற இடத்தில இப்படியா வேகமா போறது மெதுவா போகனும் ஆமை எப்படி போகும்னு தெரியும் எல்லா அதுபடி போகனும் சரியா??"
என்று எனக்கு சொல்லி கொடுத்தார்கள். அவருக்கு பயந்து அப்படியே வந்தேன் அதுதான் நேரமாகிவிட்டது!

ஆசிரியர் ::angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

பரஞ்சோதி
01-08-2005, 05:12 AM
ஆகா, சகோதரி நல்லா கதை எழுதுகிறாங்களே!

கதைக்கு துணைக்கதையா?

ரசித்தேன் சகோதரி.

உங்களுக்கு தெரியுமா? அடுத்த பரமார்த்த குரு கதையில் நீங்க தான் முக்கியமான ஆள். தயாராக இருங்க.

pradeepkt
01-08-2005, 05:20 AM
அண்ணா பொறுத்தது போதும் பொங்கி எழுங்க... :)
சுவேதாவைப் பத்திக் கதையா? இத்தனை பேரு இருக்கோமில்ல ரசிக்க :D

gragavan
01-08-2005, 05:27 AM
அதான....அடுத்து சுவேதாதான். விடாதே....எழுது.....

mania
01-08-2005, 05:42 AM
ஹா ஹா சுவேதாவின் சமையல் திறமை இவ்வளவா? சுவேதா, இனியாவது புக்கைப் பார்த்து சமைத்துப் பார். முன்னேற்றம் தெரியலாம்.

:D :D அப்பறம் நடந்தது தெரியாதா ராகவா.....??:rolleyes: சுவேதா சீரியஸா அந்த புக்கை சட்டியிலே போட்டு :rolleyes: தண்ணி ஊத்தி கொதிக்க வைச்சு.....:rolleyes: .ஒரே களிதான் போ.....:D :D
அன்புடன்
மணியா...
(இது சுமாவிடமிருந்து வந்த தகவல்...)

mania
01-08-2005, 05:50 AM
ரோடை கிராஸ் செய்யமுடியாமல் தவித்துக்கொண்டிருந்த சுவேதாவை.."கையை பிடிச்சுக்கோ" என்று சொல்லி ....கிராஸ் செய்தவுடன்....
சுவேதா சுமாவை பார்த்து..."ஏன் அக்கா உங்களுக்கு பயமா இருந்ததா....":rolleyes:
சுமா....???????:rolleyes:

அன்புடன்
மணியா
(நன்றி ....சுமா ):D

karikaalan
01-08-2005, 06:26 AM
சமைத்துப்பார் எல்லாம் சரி, சாப்பிட்டுப் பார் என்று யாராவது எழுதியிருக்கிறார்களா!!

பரஞ்சோதி
01-08-2005, 07:05 AM
சமைத்துப்பார் எல்லாம் சரி, சாப்பிட்டுப் பார் என்று யாராவது எழுதியிருக்கிறார்களா!!

அண்ணா, சுவேதாவின் சமைத்த சாப்பாட்டை சாப்பிட வேண்டாம், வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் சாப்பிட்ட நீங்க தான் அதைப் பற்றி சொல்ல வேண்டும்.:D

suma
01-08-2005, 12:59 PM
சமைத்துப்பார் எல்லாம் சரி, சாப்பிட்டுப் பார் என்று யாராவது எழுதியிருக்கிறார்களா!!
அது பத்தி தான் அவர் ஐவர் அணி பக்கம் சொல்லி இருக்கார் இல்ல பார்க்கலையா அண்ணா?
ஒண்ணும் தெரியாத சுமா:p

சுவேதா
01-08-2005, 01:14 PM
ஆகா, சகோதரி நல்லா கதை எழுதுகிறாங்களே!

கதைக்கு துணைக்கதையா?

ரசித்தேன் சகோதரி.

உங்களுக்கு தெரியுமா? அடுத்த பரமார்த்த குரு கதையில் நீங்க தான் முக்கியமான ஆள். தயாராக இருங்க.

ஆமாம், துனைக் கதைதான்!

என்ன அடுத்த பரமார்த்த குரு கதையில நானா????????
என்ன போட்டு வாங்க போறிங்களா??

சுவேதா
01-08-2005, 01:19 PM
அண்ணா பொறுத்தது போதும் பொங்கி எழுங்க... :)
சுவேதாவைப் பத்திக் கதையா? இத்தனை பேரு இருக்கோமில்ல ரசிக்க :D

அட... என்ன பற்றி கதைபாக்க அவ்வளவு விருப்பமா???

பரம்ஸ் அண்ணா..... பிரதீப் அண்ணாவை போடுங்கள் நான் வாசித்து ரசிக்க வேண்டும் அதுவும் நல்லா போட்டு வாங்கி போடுங்கள் சரியா? :D:D:D:D

சுவேதா
01-08-2005, 01:21 PM
அதான....அடுத்து சுவேதாதான். விடாதே....எழுது.....

அட நீங்களுமா சரி அண்ணா பொங்கி எழுதுங்க... ஆனால் பிரதீப், இராகவன் அண்ணாவை விடாதீர்கள் நல்லா போடுங்க என்ன?:D:D:D

சுவேதா
01-08-2005, 01:24 PM
:D :D அப்பறம் நடந்தது தெரியாதா ராகவா.....??:rolleyes: சுவேதா சீரியஸா அந்த புக்கை சட்டியிலே போட்டு :rolleyes: தண்ணி ஊத்தி கொதிக்க வைச்சு.....:rolleyes: .ஒரே களிதான் போ.....:D :D
அன்புடன்
மணியா...
(இது சுமாவிடமிருந்து வந்த தகவல்...)

அப்படி நீங்கள் செய்தது உண்டா தாத்தா???

சுவேதா
01-08-2005, 01:25 PM
ரோடை கிராஸ் செய்யமுடியாமல் தவித்துக்கொண்டிருந்த சுவேதாவை.."கையை பிடிச்சுக்கோ" என்று சொல்லி ....கிராஸ் செய்தவுடன்....
சுவேதா சுமாவை பார்த்து..."ஏன் அக்கா உங்களுக்கு பயமா இருந்ததா....":rolleyes:
சுமா....???????:rolleyes:

அன்புடன்
மணியா
(நன்றி ....சுமா ):D

:D:D:D:D:D:D:D:D:D:D:D

சுவேதா
02-08-2005, 02:04 AM
கவிதா :- வர்ரியா கடை வீதிக்கு போகலாம்.

சுமா :- இல்லை கவிதா மாமியாரைவிட்டுட்டு வரமுடியாது

கவிதா :- ஏன் அவங்க உடம்பு முடியாதவங்களா??

சுமா :- சீ..சீ.. நான் சொல்றது மத்தியானம் 12. மணிக்கு டி.வில வர்ற மெகா சீரியல் மாமியார்....

கவிதா :- !!!!!

பரஞ்சோதி
02-08-2005, 06:02 AM
சுமா: சுவேதா, வா கடைக்கு போயிட்டு வரலாம்.

சுவேதா: இல்லை அக்கா, நான் கணவருக்காக காத்திருக்கிறேன்.

சுமா: அய்யோ, இன்னும் 10 வருடம் கழித்து வரும் கணவருக்காக இப்போவே காத்திருக்கிறாயா? அநியாயமா இல்லை (பெண்ணின் திருமண வயது 18).

சுவேதா: அய்யோ, அக்கா! நான் சொன்னது கணவருக்காக தொடரை..

mania
02-08-2005, 06:05 AM
ஹா......ஹா.....ஹா..... ஒரே அல்லி ராஜ்யமா இருக்கே.....????:rolleyes:
அன்புடன்
மணியா....:D

thempavani
02-08-2005, 06:19 AM
இது சிதம்பர ரகசியமாச்சே!!!!

mania
02-08-2005, 06:22 AM
அப்போ எப்படியும் அண்ணாமலை க்கு தெரிந்திருக்குமே....???:rolleyes:
அன்புடன்
மணியா...:D

thempavani
02-08-2005, 06:29 AM
எங்க அண்ணாமலை உங்க உண்ணாமலைக்குச் சொன்னாராமே
http://www.tamilmantram.com/vb/images/smilies/rolleyes.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/rolleyes.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/rolleyes.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif

சுவேதா
02-08-2005, 12:55 PM
சுமா: சுவேதா, வா கடைக்கு போயிட்டு வரலாம்.

சுவேதா: இல்லை அக்கா, நான் கணவருக்காக காத்திருக்கிறேன்.

சுமா: அய்யோ, இன்னும் 10 வருடம் கழித்து வரும் கணவருக்காக இப்போவே காத்திருக்கிறாயா? அநியாயமா இல்லை (பெண்ணின் திருமண வயது 18).

சுவேதா: அய்யோ, அக்கா! நான் சொன்னது கணவருக்காக தொடரை..

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ கதையையே மார்த்தீட்டிங்களே
ஆமா எனக்கு எத்தனை வயது என்று நினைக்கின்றிர்கள்?

pradeepkt
02-08-2005, 01:05 PM
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ கதையையே மார்த்தீட்டிங்களே
ஆமா எனக்கு எத்தன வயது என்று நினைக்கின்றிர்கள்?

கத்தாதம்மே.... சுவேதா,
எப்படி இருந்தாலும் பிற்காலத்தில நீ இதான் செய்யப் போறேன்னு சுமா அக்காவுக்குத் தெரியும்... அவங்க என்ன சும்மாவா? :D

சுவேதா
02-08-2005, 04:04 PM
கத்தாதம்மே.... சுவேதா,
எப்படி இருந்தாலும் பிற்காலத்தில நீ இதான் செய்யப் போறேன்னு சுமா அக்காவுக்குத் தெரியும்... அவங்க என்ன சும்மாவா? :D

சுமா அக்கா தெரியும் அது யார் சும்மாவா?

pradeepkt
03-08-2005, 03:33 AM
சுமா அக்கா தெரியும் அது யார் சும்மாவா?
கடி தாங்க முடியலை சாமி...

சுவேதா
03-08-2005, 03:46 AM
கடி தாங்க முடியலை சாமி...

ஹா..ஹா

பரஞ்சோதி
03-08-2005, 05:40 AM
ஹா..ஹா

அய்யோ பச்ச புள்ள சக்தி பயந்துட்டா, பார்த்து சிரியம்மா?

இப்படியா சிரிக்கிறது.

- பயத்தோடு பரம்ஸ், பம்மிய சக்தி.

சுவேதா
03-08-2005, 01:47 PM
அடடா மருமகள் பயந்து விட்டாரா சரி இனி பார்த்து சிரிக்கின்றேன்!

Mathu
04-08-2005, 09:20 AM
அடடா மருமகள் பயந்து விட்டாரா சரி இனி பார்த்து சிரிக்கின்றேன்!

மாமியாரை கண்டு பயப்பிடாதா மருமகள் உண்டா? :confused: :p ;)
அதுவும் சுவேதா மாமியை கண்டுமா.... :D :rolleyes:

சுவேதா
04-08-2005, 01:44 PM
:D:D:D:D:D:D இல்லை இல்லை இது புது மாமியார் புது மருமகள் மருமகள் பயப்பிட மாட்டார் அதே போல மாமியாரும் பயப்பிட மாட்டார் 2 பேரும் நல்ல ஒற்றுமை!

சுவேதா
12-08-2005, 02:09 AM
பிரதீப்: அடே மன்மதன் நான் வீட்ட வாருகின்றவர்களுக்கெல்லாம் ஏன் யூஸ்க்குள்ள ஐஸ் கட்டி போடுறனான் தெரியுமா??

மன்மதன்: ஏன்டா நல்லா கூலா குடிக்கவா???

பிரதீப் : அட நீ வேறடா ஐஸ் கட்டி போட்டால் நிறய ஊத்த தேவையில்ல கொஞ்சம் ஊத்தி ஐஸ் கட்டி போட்டால் நிறைந்திடும்

மன்மதன் : !!!!!!!!!

mukilan
12-08-2005, 03:58 AM
அப்போ அடுத்த முறை சுவேதா வீட்டிற்குச் சென்றால் நான் தேனீர் தான் கேட்பேன்.

pradeepkt
12-08-2005, 05:04 AM
அப்பவும் உங்களுக்கு ஐஸ் தேநீர்தான் கொடுப்பாள் பாருங்கள்.

சுவேதா
12-08-2005, 12:59 PM
அப்போ அடுத்த முறை சுவேதா வீட்டிற்குச் சென்றால் நான் தேனீர் தான் கேட்பேன்.

அடடா பிரதீப் அண்ணா என்ன செய்யப்போகிறிர்கள்.....:D :D :D :D

சுவேதா
12-08-2005, 01:03 PM
அப்பவும்
உங்களுக்கு ஐஸ் தேநீர்தான் கொடுப்பாள் பாருங்கள்.

என்ன நீங்கள் கொடுக்கிறதை நான் கொடுக்கிறதாக சொல்கிறிர்கள்:rolleyes: :rolleyes:

சுவேதா
14-08-2005, 01:30 AM
மன்மதன்: ''சின்ன வயசுல தெரு லைட்டுலதான் படிச்சேன்!''

பிரதீப் : ''அப்படியா?''

மன்மதன்: ''ஆமா... தெரு லைட்டை நைஸாகக் கழட்டி வீட்டில் போட்டுக்கிட்டுப் படிச்சேன்?''

பிரதீப் : !!!!!!

சுவேதா
14-08-2005, 01:37 AM
பிரதீப் : ''உலகின் எட்டாவது அதிசயம் 'நீதான்'னு என் மனைவியை புகழ்ந்து பேசினது தப்பாப் போச்சு!''

இராகவன் : ''ஏன்! என்னாச்சுடா?''

பிரதீப் : ''மத்த ஏழு அதிசயங்களை எந்தெந்த ஊர்களில் செட்டப் பண்ணி வெச்சிருக்கீங்கன்னு கேட்கறாப்பா!''

மன்மதன் : அப்ப ஒவ்வொன்டையும் சொல்ல வேண்டியது தானேடா

பிரதீப், இராகவன் : ???????!!!

thempavani
14-08-2005, 03:12 AM
மன்மதன்: ''சின்ன வயசுல தெரு லைட்டுலதான் படிச்சேன்!''

பிரதீப் : ''அப்படியா?''

மன்மதன்: ''ஆமா... தெரு லைட்டை நைஸாகக் கழட்டி வீட்டில் போட்டுக்கிட்டுப் படிச்சேன்?''

பிரதீப் : !!!!!!

மன்மதனைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கேம்மா சுவேதா..கலக்கல் நகைச்சுவை...

thempavani
14-08-2005, 03:13 AM
பிரதீப் : ''உலகின் எட்டாவது அதிசயம் 'நீதான்'னு என் மனைவியை புகழ்ந்து பேசினது தப்பாப் போச்சு!''

இராகவன் : ''ஏன்! என்னாச்சுடா?''

பிரதீப் : ''மத்த ஏழு அதிசயங்களை எந்தெந்த ஊர்களில் செட்டப் பண்ணி வெச்சிருக்கீங்கன்னு கேட்கறாப்பா!''

மன்மதன் : அப்ப ஒவ்வொன்டையும் சொல்ல வேண்டியது தானேடா

பிரதீப், இராகவன் : ???????!!!

பிரதீப்பு ஜாக்கிரதை...

சுவேதா
14-08-2005, 03:46 AM
மன்மதனைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கேம்மா சுவேதா..கலக்கல் நகைச்சுவை...

:D :D நன்றி அக்கா!!!

சுவேதா
14-08-2005, 03:48 AM
பிரதீப்பு ஜாக்கிரதை...

ஆமாம் பிரதீப் அண்ணா மிகவும் ஜாக்கிறதையாக இருக்கனும் சரியா

அக்கறையுடன்
தங்கை

pradeepkt
14-08-2005, 06:14 AM
என்னா அக்கறை...
உன்னை மாதிரி ஒரு தங்கச்சி ஒவ்வொருத்தனுக்கும் இருந்தாப் போதும்.
உலகமே உருப்படும்

சுவேதா
14-08-2005, 01:00 PM
அதுதான் நான் உங்களுக்கெல்லாம் இருக்கேனே... :D:D:D

சுவேதா
03-09-2005, 08:14 PM
பரம்ஸ் : ஏம்ப்பா காபி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கற?

சர்வர்: நீங்கதான சார் "கப் கிளீனா" இருக்கணும்னு சொன்னீங்க.

சுவேதா
03-09-2005, 08:21 PM
பிரதீப் அண்ணா காலேஜில் படிக்கும் போது!

காலேஜ் புரொபசர் : என் கிளாஸ் ரொம்ப அறுவையா இருக்குன்னு இந்த பிரதீப் பண்ற வேலை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை சார்!

பிரின்ஸிபால் : என்ன செய்யறான் அப்படி?

புரொபசர் : டைப்ரைட்டர் மிஷின வச்சு லொட லொடன்னு தட்டறான். ஏன்னு கேட்டா, நோட்ஸ் எடுக்கறேன்னு சொல்றான் சார்.

சுவேதா
03-09-2005, 08:31 PM
இராகவன் : டெய்லி பியூட்டி பார்லர்லேந்து வர்ற பொண்ண சைட் அடிச்சுட்டு இருந்தியே என்னாச்சு?

மன்மதன் : அத ஏன் கேக்கற ஒரு நாள் கிட்டப் போய் பாக்கறேன்... அது எங்க பாட்டி.

மன்மதன்
04-09-2005, 04:08 AM
;) ;) என்ன சுவேதா பாட்டி :rolleyes: :rolleyes: ... இதையெல்லாமா இங்கே சொல்றது..:D :D
பேராண்டி - மன்மதன்:cool:

பரஞ்சோதி
04-09-2005, 04:22 AM
;) ;) என்ன சுவேதா பாட்டி :rolleyes: :rolleyes: ... இதையெல்லாமா இங்கே சொல்றது..:D :D
பேராண்டி - மன்மதன்:cool:

நான் சொல்ல நினைத்தேன், நீ சொல்லிவிட்டாய், ஆமாம் சுவேதா பாட்டியை பார்த்து பயப்படாமல் இருக்கியே :confused: :eek: , அது எப்படி?

மன்மதன்
04-09-2005, 04:32 AM
பயமா எனக்கா?? நஹி..ஹிஹி.. :D :D மேக்கப் இல்லாமல் ஒருதடவை பார்த்துட்டு நடு ஜாமத்துல அடிக்கடி எழுந்து அலறியதுண்டு.. :D :D

சுவேதா
04-09-2005, 12:55 PM
;) ;) என்ன சுவேதா பாட்டி :rolleyes: :rolleyes: ... இதையெல்லாமா இங்கே சொல்றது..:D :D
பேராண்டி - மன்மதன்:cool:

:eek: :eek: :eek: :eek: :eek: பொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சுவேதா
04-09-2005, 12:56 PM
நான் சொல்ல நினைத்தேன், நீ சொல்லிவிட்டாய், ஆமாம் சுவேதா பாட்டியை பார்த்து பயப்படாமல் இருக்கியே :confused: :eek: , அது எப்படி?

:eek: :eek: அண்ணாஆஆஆஆஆஆ

சுவேதா
04-09-2005, 01:05 PM
பயமா எனக்கா?? நஹி..ஹிஹி.. :D :D மேக்கப் இல்லாமல் ஒருதடவை பார்த்துட்டு நடு ஜாமத்துல அடிக்கடி எழுந்து அலறியதுண்டு.. :D :D

ஆமா நான் கூட மன்மதன பார்த்துட்டு அய்யோ அலறி அடித்து பயங்கர காச்சல் வந்து பேந்து அம்மம்மா கோவிலுக்க்கு கூட்டிட்டுப் போய் திருநீறும் வேப்பிலையும் அடித்துவிட்டு நூல் கட்டினார் அதுக்கு பின்தான் எனக்கு குணமடைந்தது தெரியுமா?மன்மதன் சொல்ல கூடாது என்றிருந்தேன் இதை சொல்ல வைத்திட்டிங்களே!!!

மன்மதன்
04-09-2005, 01:26 PM

;) ;) கமல்ஹாசன் ஒரு படத்திலே 'அம்மம்மா சரணம்' பாடுவாரே :rolleyes: :rolleyes: ..அந்த கோவில்தானே நீ போனது.. :D :D
வாழ்வே மாயம்.. அந்த வாழ்வே மாயம்..:D :D :D

சுவேதா
04-09-2005, 01:34 PM
;) ;) கமல்ஹாசன் ஒரு படத்திலே 'அம்மம்மா சரணம்' பாடுவாரே :rolleyes: :rolleyes: ..அந்த கோவில்தானே நீ போனது.. :D :D
வாழ்வே மாயம்.. அந்த வாழ்வே மாயம்..:D :D :D
இல்லையே அந்த கோயில் இல்லையே!

மன்மதன்
04-09-2005, 01:55 PM
அப்ப ஏன் கோவில் புறா அம்மம்மா கோவில் என்று சொன்னே.. :D :D

சுவேதா
04-09-2005, 02:06 PM
கோவில் என்றுதான் சொன்னேன் கோவில் புறா என்று சொல்லவில்லையே....

pradeepkt
06-09-2005, 03:40 AM
தாங்க முடியலை சாமி.
கோயிலையும் அந்தக் கோயில் புறாவையும் விட்டிருங்க.

சுவேதா
06-09-2005, 10:46 AM
:D:D:D:D:D:D:D

சுவேதா
08-09-2005, 10:55 AM
மன்மதன் : ''கடவுள்கிட்ட சாப்பாடு கேட்டேன். ஒரு ஒட்டல்லே கொடுத்தார்.''

பிரதீப் : ''அப்புறம்?''

மன்மதன் : ''கடவுள்கிட்ட துணி கேட்டேன். ஒரு துணி கடையே கொடுத்தார்.''

பிரதீப் : ''அடடா?''

மன்மதன் : ''கடவுள்கிட்ட ரூபாய் பத்தாயிரம் கேட்டன். உங்க செல் நம்பர் கொடுத்தார். எப்ப வரட்டும்.''

பிரதீப் : !!!!!!!!!!

pradeepkt
08-09-2005, 11:33 AM
மன்மதன்: சரி விடு. சுவேதா செல் நம்பர் கொடு
பிரதீப்: செல் நம்பர் 111, செண்டிரல் ஜெயில், டொரண்டோ, கனடா.

--சுவேதா ஜாமீன் எடுக்க உங்க தலைவரை அனுப்பட்டா?

gragavan
08-09-2005, 11:38 AM
மன்மதன்: சரி விடு. சுவேதா செல் நம்பர் கொடு
பிரதீப்: செல் நம்பர் 111, செண்டிரல் ஜெயில், டொரண்டோ, கனடா.

--சுவேதா ஜாமீன் எடுக்க உங்க தலைவரை அனுப்பட்டா?அவருதான் தலைமறைவா இருக்காராமே!!!!!!!!!!!!!!!!!!!

சுவேதா
08-09-2005, 08:39 PM
மன்மதன்: சரி விடு. சுவேதா செல் நம்பர் கொடு
பிரதீப்: செல் நம்பர் 111, செண்டிரல் ஜெயில், டொரண்டோ, கனடா.

--சுவேதா ஜாமீன் எடுக்க உங்க தலைவரை அனுப்பட்டா?

அண்ணா நம்பர் தவறு 911 தான் போலீஸ் நம்பர் அடித்தால் உடன் வருவார்கள்! :)

அறிஞர்
09-09-2005, 12:06 AM
அண்ணா நம்பர் தவறு 911 தான் போலீஸ் நம்பர் அடித்தால் உடன் வருவார்கள்! :) என்னது நீ அமெரிக்கா, கனடா நம்பரை தர...

அவுங்களுக்கு பழக்கமானது சென்னை சென்டரல் தான்

அறிஞர்
09-09-2005, 12:07 AM
அவருதான் தலைமறைவா இருக்காராமே!!!!!!!!!!!!!!!!!!!யாரை பார்த்து என்ன சொல்லுறீங்க....

சுவேதா
09-09-2005, 12:37 AM
என்னது நீ அமெரிக்கா, கனடா நம்பரை தர...

அவுங்களுக்கு பழக்கமானது சென்னை சென்டரல் தான்

ஓ..ஒ அப்படியா??

சுவேதா
09-09-2005, 12:38 AM
யாரை பார்த்து என்ன சொல்லுறீங்க....

அதுதானே!!! சரியா கேட்டிங்கக அண்ணா!

pradeepkt
09-09-2005, 04:55 AM
அண்ணா நம்பர் தவறு 911 தான் போலீஸ் நம்பர் அடித்தால் உடன் வருவார்கள்! :)
உன்னைப் பிடிச்சிட்டுப் போகத்தானே...

சுவேதா
09-09-2005, 11:27 AM
ஓ.....ஓ....:)

சுவேதா
09-09-2005, 10:49 PM
பிரதீப் : ''சாப்பிட்ட உடனே ஓடவே முடியலை டாக்டர்...''

டாக்டர் : ''சாப்பிட்ட உடனே எதுக்கு ஓடறீங்க?''

பிரதீப் : ''ஓட்டல் முதலாளி துரத்திட்டு வர்றாரே...''

சுவேதா
09-09-2005, 10:51 PM
மன்மதன் : ''டாக்டர்! நான் எது பண்ணாலும் மறந்து போய் ரெண்டாவது தடவை பண்றேன்.''

டாக்டர் : ''இப்பத்தானே இந்த வியாதிக்கு மருந்து வாங்கிட்டுப் போனீங்க...''

சுவேதா
09-09-2005, 11:01 PM
சுப்பன்: ஆமா, உன் பொண்ணு அந்த நல்ல குணமான உத்தியோகஸ்தனைக் கல்யாணம் செய்ய மறுத்திட்டாளாமே...ஏனாம்..?

குப்பன் : தன்ர கூந்தலைவிட அவரின் கூந்தல் மிகவும் நீளமாம் அதுதான்!

சுப்பன் : ???!!!...

மன்மதன்
10-09-2005, 05:19 AM
என்னது என் தலை உருளுதே.. சுவேதாவுக்கு கெட்ட நேரம் ஆரம்பமாக போவுது..:D :D

சுவேதா
10-09-2005, 01:04 PM
என்னது என் தலை உருளுதே.. சுவேதாவுக்கு கெட்ட நேரம் ஆரம்பமாக போவுது..:D :D

தலை உருளுதா கவனம் மன்மதன் தலைய கவனமா பிடித்து வைத்திருங்கள். :D:D:D:D:D

Mathu
10-09-2005, 01:52 PM
ஆஹா சுவேதா அசத்துற...!

பிரதீபு ரொம்ப ஓடதப்பு இளச்சு போயிடுவ.

சுவேதா
10-09-2005, 04:35 PM
:D:D:D:D:D:D:D பிரதீப் அண்ணா மதன் அண்ணா சொன்ன மாதிரி ஒடுகிறிர்களா? ஒடாதைங்க விழுந்திடுவிங்க.:)

நன்றி மதன் அண்ணா!

suma
10-09-2005, 07:11 PM
:D:D:D:D:D:D:D சுவேதா அசத்துற!!!!!!!!!!!

சுவேதா
10-09-2005, 09:13 PM
நன்றி அக்கா!

பரஞ்சோதி
11-09-2005, 04:45 AM
சகோதரி அனைத்தும் அருமையான சிரிப்புகள்

அந்த குப்பன், சுப்பன், யார் இராகவன், பிரதீப்-ஆ..

சுவேதா
11-09-2005, 11:28 AM
நன்றி அண்ணா!

ஆமாம் குப்பன் : இராகவன்

சுப்பன் : பிரதீப்!

:D:D:D

pradeepkt
12-09-2005, 06:33 AM
சுவேதா, இரு வரேன்.
ராகவா இதெல்லாம் கவனிக்கிறதே இல்லையா
மன்மதன் என்னமோ ஜோசியக்காரன் மாதிரி சொல்லிட்டுப் போயிட்டான்.

thempavani
12-09-2005, 06:36 AM
மூட்டிவிடாதே தம்பி..சுவேதா உள்ளட்தைத் தானே சொல்கிறாள்

gragavan
12-09-2005, 06:55 AM
உள்ளதைச் சொல்வதா? உள்ளத்தைச் சொல்வதா?
உங்கள் உள்ளத்தில் உள்ளதைச் சொல்வதால் அது உள்ளதைச் சொல்வதாக ஆகுமா? நல்லதைச் சொல்வதாக ஆகுமா? சொல்லுங்கள் தேம்பா சொல்லுங்கள்.

pradeepkt
12-09-2005, 07:03 AM
உள்ளதைச் சொல்வதா? உள்ளத்தைச் சொல்வதா?
உங்கள் உள்ளத்தில் உள்ளதைச் சொல்வதால் அது உள்ளதைச் சொல்வதாக ஆகுமா? நல்லதைச் சொல்வதாக ஆகுமா? சொல்லுங்கள் தேம்பா சொல்லுங்கள்.
தேவையா தேம்பாக்கா தேவையா
இப்பத் தேம்பித் தேம்பி அழுங்க.

gragavan
12-09-2005, 07:38 AM
தேவையா தேம்பாக்கா தேவையா
இப்பத் தேம்பித் தேம்பி அழுங்க.அதுக்குதான அப்படி ஒரு கேள்வியப் போட்டேன். இப்ப சத்தத்தையே காணோம். பாத்தீங்களா?

சுவேதா
13-09-2005, 11:21 AM
சுவேதா, இரு வரேன்.
ராகவா இதெல்லாம் கவனிக்கிறதே இல்லையா
மன்மதன் என்னமோ ஜோசியக்காரன் மாதிரி சொல்லிட்டுப் போயிட்டான்.

ஓ வாங்க வாங்க :) :) :)

சுவேதா
17-09-2005, 05:56 PM
டாக்டர் : வாயை நன்றாகத் திறங்க.

பிரதீப் : ஆ!

டாக்டர்: இன்னும் பெரிசா!

பிரதீப் : ஆ! ஆ!

டாக்டர்: இன்னும் அகலமா...

பிரதீப் : நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் செய்ய முடியும்னா எனக்கு அது வேணாம், டாக்டர்.

suma
17-09-2005, 08:19 PM
டாக்டர் என்ன நம்ம சுவேதாவா?
சந்தேகத்துடன் சு!!!

மன்மதன்
18-09-2005, 04:16 AM
டாக்டர் யாரு சுவேதா ?? :D :D

pradeepkt
18-09-2005, 11:19 AM
டாக்டர்னு சொன்னாலே சுவேதாதானே..
இதுக்கு முந்தின பதிவுகள் கூட அப்படித்தானே இருக்கு.

thempavani
18-09-2005, 01:17 PM
பிரதீப்பின் வாயில் உலகத்தைப் பார்த்ததாகச் சுவேதா சொன்னாளே

pradeepkt
18-09-2005, 01:26 PM
பிரதீப்பின் வாயில் உலகத்தைப் பார்த்ததாகச் சுவேதா சொன்னாளே
அக்கா, கொஞ்சம் முந்தைய பதிவுகளை எல்லாம் போயிப் பாருங்க.
சுவேதா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆன்னு பலமுறை கத்தினதிலதான் உலகமே தெரிஞ்சிது

மன்மதன்
18-09-2005, 01:31 PM
அப்படியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ :D :D

சுவேதா
18-09-2005, 04:46 PM
அட நீங்களும் உங்கள் வாயில் உலகம் தெரியுதா என்று கத்திப் பார்க்கின்றிர்களா???

சுவேதா
18-09-2005, 11:59 PM
நோயாளி பிரதீப் : அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?

டாக்டர் மன்மதன் : கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன்.

அறிஞர்
19-09-2005, 01:27 AM
நோயாளி பிரதீப் : அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?

டாக்டர் மன்மதன் : கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன்.மன்மதனுக்கு அவ்வளவு பெரிய நகமா

மன்மதன்
19-09-2005, 04:17 AM
நகுமோ..இது தகுமோ :D :D

சுவேதா
19-09-2005, 11:19 AM
:D:D:D

சுவேதா
21-09-2005, 01:38 AM
சுப்பன் : ஏன் உங்க பையன் கிணற்றுக்குள்ளே போய் படிக்கிறான்

குப்பன் : நான்தான் அவனை ஆழமா படிக்கச் சொன்னேன்.

சுவேதா
21-09-2005, 01:42 AM
பிரதீப் : ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!

மன்மதன் : அதே வாட்சா?

பிரதீப் : இல்லே, காவேரி.

பரஞ்சோதி
21-09-2005, 04:43 AM
பிரதீப் : ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!

மன்மதன் : அதே வாட்சா?

பிரதீப் : இல்லே, காவேரி.

இதை படிச்சிட்டு, நாங்க எல்லாம் ஓடுகிறோம். :D

பரஞ்சோதி
21-09-2005, 04:49 AM
சுப்பன் : ஏன் உங்க பையன் கிணற்றுக்குள்ளே போய் படிக்கிறான்

குப்பன் : நான்தான் அவனை ஆழமா படிக்கச் சொன்னேன்.

மன்மதன் கூட இப்படி தான் ஆழமாக படித்திருக்கிறான்.

மன்மதன்
21-09-2005, 05:17 AM
மன்மதன் கூட இப்படி தான் ஆழமாக படித்திருக்கிறான்.

நான் படித்தது ஏரிக்கரையிலே..;) ;) (ஏரிக்கரை மீது போறவளே பொன் மயிலே :rolleyes: :rolleyes: :D :D :D )

mythili
21-09-2005, 08:43 AM
எல்லா நகைச்சுவைகளும் அருமை. :)

அன்புடன்,
மைத்து

mythili
21-09-2005, 08:48 AM
நான் படித்தது ஏரிக்கரையிலே..;) ;) (ஏரிக்கரை மீது போறவளே பொன் மயிலே :rolleyes: :rolleyes: :D :D :D )

அப்படி படிச்சதுனால தான் "எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்ட' :)

அன்புடன்,
மைத்து

சுவேதா
21-09-2005, 11:09 AM
இதை படிச்சிட்டு, நாங்க எல்லாம் ஓடுகிறோம். :D

:D:D:D

சுவேதா
21-09-2005, 11:11 AM
மன்மதன் கூட இப்படி தான் ஆழமாக படித்திருக்கிறான்.

ம்ம் இருக்கும் இருக்கும்!

சுவேதா
21-09-2005, 11:15 AM
அப்படி படிச்சதுனால தான் "எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்ட' :)

அன்புடன்,
மைத்து

:D:D:D:D

சுவேதா
13-10-2005, 12:50 AM
இராகவன் : ''டாக்டர்! உடம்புல வியர்வை நாற்றம் வீசுது''

டாக்டர் பிரதீப் : ''நீங்க தரமான சோப்பு போட்டு குளிச்சா நாற்றமே வீசாது.''

இராகவன் : ''தமாஷ் பண்ணாதீங்க டாக்டர்! உங்க உடம்புல இருந்து வீசுற நாற்றத்துக்கு நான் ஏன் தரமான சோப்பு போட்டு குளிக்கணும்?''