PDA

View Full Version : சும்மா எட்டிப்பாருங்க

satheesh
01-06-2005, 07:25 PM
ஏ கடலே ! ஏ கடலே !!

கட்டுமரங்கள் காணோம்
நட்டமரங்களும் கானோம்
குழவிகளும் கானோம்
கிழவிகளும் கானோம்

தேசப்படத்தில் சில கிராமங்கள் கானோம்
பிணத்தை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே கானோம்

பறவைகள்
மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தாள் அழகு
மொத்தமாய்வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

அழுதது போதும் எழுவோம்
அந்த மொத்தப் பிணக்குழியில்
நம் கண்ணீரையும் புதைத்துவிடுவோம்

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு
இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்
நாம் மனிதர்கள்
எதிர்கொள்வோம்
மீண்டும் கடலே
மீன்பிடிக்க வருவோம்

ஆனால்!!!

உனக்குள் அஷ்திகரைக்க
ஒருபோதும் வரமாட்டோம்!!!!!
நட்புடன்
உங்கள்
சதீஷ்

Nanban
02-06-2005, 02:27 PM
ஐயா நண்பர் சதீஷ் அவர்களே,

இந்தப்பக்கத்தில், மன்றத்து உறுப்பினர்கள் எழுதும் கவிதைகள் மட்டும் இடப்பட வேண்டும் என்ற நியதி இருக்கிறது. இதை நீங்கள் இலக்கியப்பகுதிக்கு மாற்றிவிடுங்கள். இரண்டாவது கொஞ்சம் பொறுமை - மக்கள் வந்து படிப்பதற்கு கொஞ்சம் கால தாமதம் ஆகத்தான் செய்யும் - அதற்காக மீண்டும் மீண்டும் ஒரே பதிப்பை பதிக்க வேண்டாம்.

இந்தக்கவிதையை பல பத்திரிக்கைகளிலும் ஏற்கனவே படித்து விட்டோம்.....

satheesh
04-06-2005, 05:40 PM

ஐயா பெரியவரே!!முதல்ல நான் இந்த இணையத்துக்கு புதியவன்.
அடுத்தது எனக்கு ஆக்க மட்டும்தான் தெரியும் அழிக்கத்தெரியாது! உங்கள் நியதிகளை நான் எதிலும் காணவில்லை.
உங்களுக்கு தெரிந்தால் அழிக்கவும்! நன்பர் கவிதயை படிதிருப்பார் எண்று நான் எப்படி கண்டறிந்திருக்கமுடியும்??

பிரியன்
04-06-2005, 06:46 PM

நன்றி நண்பரே...நமது மன்றத்தில் பெரியவர் சிறியவர் என்பது கிடையாது. அனைவரும் சமமே.

இளம் உதவியாளர்கள் இப்பதிப்பை இலக்கியங்கள் பகுதிக்கு மாற்றிவிடலாமே...

அறிஞர்
07-06-2005, 03:31 AM
நண்பர்களின் விருப்பத்துக்கு இணங்க.. மாற்றப்பட்டது
----------
சதீஷ்... எந்த பத்திரிக்கையிலிருந்து எடுத்தீரோ... அவர்களுக்கு இங்கு நன்றி தெரிவித்துவிடுங்கள்...

பிரியன்
07-06-2005, 03:38 AM
நண்பர்களின் விருப்பத்துக்கு இணங்க.. மாற்றப்பட்டது
----------
சதீஷ்... எந்த பத்திரிக்கையிலிருந்து எடுத்தீரோ... அவர்களுக்கு இங்கு நன்றி தெரிவித்துவிடுங்கள்...

சுனாமி நல நிதிக்காக திரு.வைரமுத்து எழுதிய இந்தப் பாடல் சதிஷ் அவர்களின் குழுவினரால் பதிவு செய்யப்பட்டது என்று முன்பொருமுறை சொல்லியிருந்தார்.ஆகையால் நன்றியும் சதிஷ் அவர்களுக்கே....

அறிஞர்
07-06-2005, 04:45 AM
அப்படியா.. எனக்கு படித்த நியாபகம் இருந்தது...

யார் எழுதினார்கள் என மறந்துவிட்டது...

நன்றி பிரியன்...

satheesh
07-06-2005, 04:33 PM
நன்றி நன்பர்களே!

இக்கவிதையானது கவிப்பேரரசு வைரமுத்துவினால் உருவாக்கம் செய்யப்பட்டது,இதோடு எட்டு பாடல்களும் அடங்கும்.அதைவிட அவர் சுவிஸ் நாட்டிற்கு வந்து நேரடி நிகழ்வையும் தந்துதவியிருந்தார். பெருமைக்குரியவிடயம் என்னவென்றால் இப்பாடல்களைப்பாடியவர்கள் தமிழகத்தை சேர்ந்த முன்னணிப்பின்னணிப்பாடகர்கள் எந்த வித எதிர்பார்ப்புமின்றி இலவசமாகவே பாடிக்கொடுத்திருந்தனர்.
இவற்றினால் பெறப்படும் நிதியானது இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மானாணவர்களுக்கும்,வறுமைக்கோட்டின் கீழேநின்றுகொண்டு எவ்வளவோ கல்வித்திறமைகள் இருந்தும் மேலே கல்வியைத்தொடர முடியாமல் தங்களது கனவுகளை லட்சியங்களை மண்ணோடு மண்ணாக புதைத்துக்கொன்டிருக்கும் இளம் மாணவர்களினது கல்விவளர்ச்சிக்காக,அவர்களது துயர்துடைப்பு சேவைக்காக எமது சுவிஸ் அன்னை இல்லம் மகளிர் அமைப்பினரால் தயாரித்து வழங்கப்பட்டது.இதன் பாடல்கள் கொண்ட இசைத்தட்டு உலகம் பூராகவும் விற்பனையாகிக்கொண்டிருக்கிண்றது.நீங்களும் கேட்டு மகிழுங்கள்!
நன்றி!

அறிஞர்
08-06-2005, 02:10 AM
கூடுதலான தகவல்களை தந்த சதீஸுக்கு நன்றி....
பாடின முன்னனி பாடகர்களுக்கும், கவிஞருக்கும் வாழ்த்துக்கள்
எல்லாம் நிதிகளும் சரியான முறையில் செலவிடப்பட வாழ்த்துக்கள்....