PDA

View Full Version : அன்பானவளுக்காக.....



Nanban
01-06-2005, 06:19 PM
என்
மிகச்சிறந்த
கவிதைகளை
நான் என்றுமே
வெளியிடப் போவதில்லை...



அவை
உனக்காக எழுதப்பட்ட
காதல் கடிதங்கள்....

Nanban
01-06-2005, 08:23 PM
பல ஆண்டுகளாக
எனக்காக
கவிதையே எழுதவில்லையே
என்று அங்கலாய்க்கிறாய் நீ...

உன்னோடு
நான்
பேசிய பேச்சுக்களையெல்லாம்
என்னவாக நினைத்தாய்?

Nanban
01-06-2005, 08:25 PM
உனக்கு
கொலுசு அணிந்து
அழகு பார்க்க
மனம் துடிக்கிறது.

பின்னர்
நீ பேசுவதில்
கவனம் கொள்ள
இயலாதென்பதால்
வாங்கிய கொலுசுகள்
இன்றும் சிணுங்குகின்றன
என் மனதினுள்...

பரஞ்சோதி
01-06-2005, 08:50 PM
நண்பன் அவர்களே!

நீண்ட நாட்களுக்குப் பின்பு உங்களிடம் இருந்து காதல் கவிதைகள். நன்றி.

Nanban
02-06-2005, 01:33 PM
எதிரெதிரே அமர்ந்து
ஒருவர் கண்ணுக்குள்
மற்றவர்
உற்று நோக்குவதல்ல........






அருகருகே அமர்ந்து
தொலைதூரத்திலுள்ள
இலக்கை
இணைந்து நோக்குவதே







காதல்........

karikaalan
02-06-2005, 01:42 PM
நண்பன்ஜி

காதலுக்குப் புது வடிவம். இனிய கவிதைகள். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

Nanban
02-06-2005, 02:02 PM
நன்றி, பரஞ்சோதி, கரிகாலன்ஜி....

மன்றத்தில் காதல் கவிதைகளே அலாதி பிரியத்துடன் வாசிக்கப்படுகின்றன என்பதால் இந்தக் கவிதைகள்.

பின்னர் இவற்றையெல்லாம் திரட்டி, என் அன்பானவளுக்கு அனுப்பி வைக்கும் திட்டமும் இருக்கிறது....

நன்றி....

Nanban
02-06-2005, 03:43 PM
சொற்களில்
புதைந்த காதலை
தேடச் சொல்லி
கவிதை தருவேன்......

நீ
காதலைக் காட்டி
சொற்களை
தேடச் சொல்வாய்......

வழக்கம்போல
இன்றும்
எனக்கு
தோல்வி தான்.....

rambal
02-06-2005, 03:58 PM
கடைசிக் கவிதை அருமை...

சொற்கள் கட்டுவது மாய பிம்பம்.. காதலி காட்டுவது அன்பின் சொரூபம்.. பாராட்டுக்கள்..

rambal
02-06-2005, 03:59 PM
இல்லோன் இன்பம் காமுற்றாங்கு
அரிது வேட்டனையால் நெஞ்சே - காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே..
-பரணர், குறுந்தொகை

தலைவனுக்கு இடம் குறித்து நேரம் குறித்து வரச்சொல்லிவிட்டு தலைவி
வரவில்லை. அப்போது தலைவன் புலம்புவதாக அமைந்த சங்கப்பாடல்..

சங்கப்பாடல் தொட்டு.. காதல் மாபெரும் சக்திதான்...

அருமை.. தொடருங்கள் நண்பன்...

அறிஞர்
02-06-2005, 04:02 PM
வழக்கம்போல
இன்றும்
எனக்கு
தோல்வி தான்.....

அந்த தோல்வியில்
கிடைக்கும் இன்பம்
தோல்வியை
மறக்கச்செய்யுமே........

வாழ்த்துக்கள் நண்பன்

Nanban
02-06-2005, 04:10 PM
மிக்க நன்றி....

நீண்ட நாளைக்குப்பின் வந்து சங்கக் கவிதையுடன் கலந்து கருத்து சொன்ன ராம்பாலுக்கும்,

கவிதையை சற்றே நீட்டி இன்புறச் செய்த அறிஞருக்கும்

மிக்க நன்றி....

தோன்றும் பொழுதெல்லாம் எழுதிக் கொண்டிருப்பேன்....

அன்புடன்

சுவேதா
02-06-2005, 05:36 PM
நண்பன் அண்ணா உங்கள் கவிதைகள் அனைத்தும் படித்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்! மேலும் தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா!

Nanban
02-06-2005, 10:44 PM
நன்றி, சுவேதா......

Nanban
09-06-2005, 05:39 PM
உன்
காதலுக்கான
காத்திருப்பிற்கு
காலக்கெடுவுகள்
எல்லைகள்
விதிக்க முடியாது...

மரணம் கூட
உன் காதல்முன்
வெறும் அரைப்புள்ளி தான்...

அறிஞர்
10-06-2005, 05:41 AM
மரணம் கூட
உன் காதல்முன்
வெறும் அரைப்புள்ளி தான்...
காதலில்
வெற்றி பெறுதலே
முற்று புள்ளி....

என்ற காத்திருத்தல்...
கண்டிப்பாக வெற்றியை கொண்டுவரும்.....

gragavan
10-06-2005, 06:34 AM
நண்பரே இன்றுதான் இந்தத் திரிக்கு வர முடிந்தது. இத்தனை நாள் பார்க்காமல் போனேனே! காதலித்துப் பார்த்தால்தான் அதன் அருமை தெரியுமென்பார்கள். நான் காதலித்ததில்லை. ஆனாலும் உங்கள் கவிதைகளைச் சுவைக்க முடிகிறது.

மன்மதன்
10-06-2005, 07:31 AM
நன்றி, பரஞ்சோதி, கரிகாலன்ஜி....

மன்றத்தில் காதல் கவிதைகளே அலாதி பிரியத்துடன் வாசிக்கப்படுகின்றன என்பதால் இந்தக் கவிதைகள்.

பின்னர் இவற்றையெல்லாம் திரட்டி, என் அன்பானவளுக்கு அனுப்பி வைக்கும் திட்டமும் இருக்கிறது....

நன்றி....

இதைவிட விலையுயர்ந்த பரிசு வேறில்லை.. புத்தகமாக தொகுக்கும் எண்ணம் உண்டா??

ரொம்பவே பிடித்திருக்கின்றன அனைத்து கவிதைகளும்..

அன்புடன்
மன்மதன்

Nanban
21-06-2005, 05:36 PM
வியப்பாக இருக்கிறது
முக்கடல் கூடும்
சங்கமம்
எத்தனை சிறியதென!!!

நீயும் நானும்
இணைந்து நின்று
கடல் பார்த்தபொழுது

Sridhar
22-06-2005, 07:58 AM
naNpanee...

siRumuL kavithai ezhuthi
un kaathaliyin niiLam kaaNaa ithaiyaththai
kiLLi vittaay..

Sridhar
22-06-2005, 07:59 AM
நண்பனே...

சிறுமுள் கவிதை எழுதி
உன் காதலியின் நீளம் காணா இதையத்தை
கிள்ளி விட்டாய்..

Nanban
22-06-2005, 06:14 PM
காதலியின் நீளம்......

புதுமையான சொற்றோடர் சிறிதர் அவர்களே....

நன்றி.....

Nanban
22-06-2005, 06:47 PM
எத்தனை எத்தனை
பெணகளை நேசித்திருக்கிறேன் -
நீ அருகிலிருந்து
என் தலையில்
கொட்ட கொட்ட...

ஸ்டெஃபி கிராபிலிருந்து
சானியா மிர்சா வரை...

அருந்ததி ராய் தொடங்கி
சில்வியா பிளாத் வரை...

ரேகா முதல்
சிம்ரனின் இடை வரை...

அருகே இருந்த வரைக்கும்
அனைவரையும்
காதலிக்க அனுமதித்தாய்...

விலகி நிற்கையிலே
யாரையும் காணவியலாது
கண் மறைக்கிறது
உன் வடிவின் பிரம்மாண்டம்...

காதலியே
நீ எப்போதும்
என்னருகிலேயே
இருந்து விடேன் -
உலகின்
அழகுப் பெண்களெல்லாம்
பாவமில்லையா?

அறிஞர்
23-06-2005, 08:25 AM
எத்தனை எத்தனை
பெணகளை நேசித்திருக்கிறேன் -
நீ அருகிலிருந்து
என் தலையில்
கொட்ட கொட்ட...

ஸ்டெஃபி கிராபிலிருந்து
சானியா மிர்சா வரை...

அருந்ததி ராய் தொடங்கி
சில்வியா பிளாத் வரை...

ரேகா முதல்
சிம்ரனின் இடை வரை...

அருகே இருந்த வரைக்கும்
அனைவரையும்
காதலிக்க அனுமதித்தாய்...

விலகி நிற்கையிலே
யாரையும் காணவியலாது
கண் மறைக்கிறது
உன் வடிவின் பிரம்மாண்டம்...

காதலியே
நீ எப்போதும்
என்னருகிலேயே
இருந்து விடேன் -
உலகின்
அழகுப் பெண்களெல்லாம்
பாவமில்லையா?
அன்று......
அழகே அருகில்
இருக்கும்போது...
அதன் அருமையை
விட்டு விட்டு
அடுத்ததை.. நோக்கி
அலை பாய்ந்தது
நெஞ்சம்.....

இன்று......
அழகு சென்றவுடன்
அதை எண்ணி
பரிதபிக்கிறது...
நெஞ்சம்.....

இதைதான்..
இக்கரைக்கு..
அக்கரை..
பச்சை
என்பார்களோ.......

Nanban
23-06-2005, 02:39 PM
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று எடுத்துக் கொள்ளாதீர்கள் - இது ஒரு வகையான உரிமை... ஒருவர் அண்மையில் மற்றவர் எடுத்துக் கொள்ளும் உரிமை. அந்த உரிமை கொடுத்தவள் அருகே இல்லாத பொழுது, அந்த உரிமையும் இல்லை என்றாகி விடுகிறது....

Nanban
23-06-2005, 03:13 PM
உனக்கான
என் காத்திருத்தலில்
காலம் வீணாகியது...


எனக்கான
உன் காத்திருத்தலிலும்
காலம் வீணாகியது...


இன்று

காலம் காத்திருக்கிறது -
நமக்கான காதலை
கையில் வைத்துக் கொண்டு ....

rambal
23-06-2005, 04:37 PM
அது என்னவோ காதல் பற்றி
எழுதும் போது மட்டும் மனம்
உள்ளக் கிளர்ச்சியில் தவிக்கிறது..
காலம் அகாலம் சூன்யம் முடிவிலி
கடந்து சிந்திக்கிறது...

வாழ்த்துக்கள் நண்பன்..

rambal
23-06-2005, 04:39 PM
அகாலம் கடந்த காலத்தில்
பயணிக்கும் பொழுது
ஒரு துகளாய்
எதிர்ப்படுகிறாய்.

காலம் கடந்த எனது
பயணத்தில்
குறுக்கிடும் நீ
ஒரு முடிவிலி..


உங்கள் கவிதைக்கு பதில் பற்றி யோசித்து எழுதிக் கொண்டிருக்கும் போதே தோன்றிய கவிதை இது..

அறிஞர்
24-06-2005, 04:00 AM
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று எடுத்துக் கொள்ளாதீர்கள் - இது ஒரு வகையான உரிமை... ஒருவர் அண்மையில் மற்றவர் எடுத்துக் கொள்ளும் உரிமை. அந்த உரிமை கொடுத்தவள் அருகே இல்லாத பொழுது, அந்த உரிமையும் இல்லை என்றாகி விடுகிறது.... அருமையான விளக்கம் நண்பரே..... நான் இரண்டு விதமாக எண்ணினேன்.... அதில் ஒன்றை வெளிப்படுத்தினேன்...

அறிஞர்
24-06-2005, 04:04 AM
உன் காத்திருத்தலிலும்
காலம் வீணாகியது...

இன்று

காலம் காத்திருக்கிறது -
நமக்கான காதலை
கையில் வைத்துக் கொண்டு ....
காலம்
வீணானாலும்
காதல்
பத்திரமாய்
இருப்பது
மகிழ்ச்சியே.....

வாழ்த்துக்கள்.. நண்பரே... இன்னும் தொடருங்கள்....

அறிஞர்
24-06-2005, 04:06 AM
காலம் கடந்த எனது
பயணத்தில்
குறுக்கிடும் நீ
ஒரு முடிவிலி... அழகான வரிகள்.. தொடருங்கள்.. ராம்பல்... தங்களின் தனி பக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

மன்மதன்
25-06-2005, 04:50 AM
அறிஞரை கொஞ்சம் கொஞ்சமாக கவிதை எழுத தூண்டும் இந்த பதிவு மிக அருமை.. காதலை பற்றி சொல்லும் கவிதைகள் திகட்டுவதில்லை..
தொடர்ந்து கொடுங்க குருவே..
அன்புடன்
மன்மதன்

Nanban
31-08-2005, 09:59 PM
என்றோ எழுதியதை
எடுத்துப் படிக்கும்
இந்தக் கணத்தில் -

இந்த
சிறுபிள்ளைத்தனத்தை தாண்டி
எத்தனை தூரம்
வந்து விட்டோமென்றெண்ணி
வியர்க்கையில்

மீண்டும்
அந்த சிறுபிள்ளைகளின்
காலத்திற்குள் பயணப்பட
புகைப்படத் தொகுப்புக்குள்ளே
முகம் புதைத்து கிட ---

அன்பானவளே.
தலையில்
நரைத்திருக்கும் அந்த
ஒற்றை முடியைப்
பிடுங்கி ஏறிந்த பின்.

gragavan
01-09-2005, 04:50 AM
எத்தனை எத்தனை
பெணகளை நேசித்திருக்கிறேன் -
நீ அருகிலிருந்து
என் தலையில்
கொட்ட கொட்ட...

ஸ்டெஃபி கிராபிலிருந்து
சானியா மிர்சா வரை...

அருந்ததி ராய் தொடங்கி
சில்வியா பிளாத் வரை...

ரேகா முதல்
சிம்ரனின் இடை வரை...

அருகே இருந்த வரைக்கும்
அனைவரையும்
காதலிக்க அனுமதித்தாய்...

விலகி நிற்கையிலே
யாரையும் காணவியலாது
கண் மறைக்கிறது
உன் வடிவின் பிரம்மாண்டம்...

காதலியே
நீ எப்போதும்
என்னருகிலேயே
இருந்து விடேன் -
உலகின்
அழகுப் பெண்களெல்லாம்
பாவமில்லையா?அருமையான கவிதை நண்பன். அருகில் இருக்கையில் அருமை எங்கே தெரிகிறது? தொலைவில்தான் தெரிகிறது. அருமையாகச் சொன்னீர்கள். மிகவும் ரசித்தேன்.

kavitha
01-09-2005, 06:09 AM
என்
மிகச்சிறந்த
கவிதைகளை
நான் என்றுமே
வெளியிடப் போவதில்லை...

இதைப்படித்துவிட்டு போனவள் தான் அதன்பிறகு இந்தப்பக்கமே எட்டிப்பார்க்க தோன்றவில்லை. இது வரை எழுதியதை முழுவதும் படித்த பிறகு சொல்கிறேன் நண்பன். :)

kavitha
01-09-2005, 06:12 AM
அருகருகே அமர்ந்து
தொலைதூரத்திலுள்ள
இலக்கை
இணைந்து நோக்குவதே







காதல்........
__________________
-----------------------------------------------

அன்புடன்

நண்பன்

அருமையான வரிகள்

Nanban
17-09-2005, 07:06 PM
நன்றி - கவிதா, ராகவன், அறிஞர் மன்மதன் ஸ்ரிதர், ராம்பால் மற்றும் வாசித்த அனைவருக்கும் நன்றி.

இந்தக் கவிதைகள் எழுதப்படுவதெல்லாம் - என் காதலியின் மீது நான் வைத்திருக்கும் அன்பை அவருக்குத் தெரியப்படுத்த. நேற்று கூட தொலைபேசியில் நன்றி சொன்னார்- நான் சொல்லும் இந்த அன்பிற்காக. மனம் நெகிழ்ந்து என் காதலி கூறிய அந்தப் பாராட்டுகளே இங்கு வந்த அனைத்துப் பதிவுகளிலும் சிறந்தவை.

மீண்டும் சில பதிவுகள் அவருக்காக - அந்த அன்பானவளுக்காக :-

Nanban
17-09-2005, 07:13 PM
உன் மௌனம் காண்பதற்கு
விலைமதிப்பற்றது தான்
என்னருகே நீயிருக்கையிலேயென்று
என்றோ ஒரு நாள் உன்னிடம்
சொன்னேனென்பதற்காக
இன்று கண்டங்கள் இடைவெளியில்
மீண்டொருமுறை தொலைபேசியில்
மௌனம் காட்டும் உன் முயற்சியை
விலைமதிப்பற்றதென்று
சொல்லவியலவில்லை அன்பே!

மின்னல் வேகத்தில்
கம்பிகளுக்கிடையே நகர்ந்திடும்
துடிப்புகளில்
விலை நிர்ணயிக்கப்படுகிறது
உன் மௌனத்திற்கு.

ஆதலால்
அன்பானவளே
மௌனம் துற
கண்டங்கள் இணையட்டும்.

Nanban
28-09-2005, 07:51 PM
இருளில் விழிக்கும்
பகலில் தொலைகிறது
வெளிச்சங்கள்.
கனவுகளில் தானே வருகிறாய்
வாழ்வதற்கு.

அறிஞர்
29-09-2005, 12:27 AM
இருளில் விழிக்கும்
பகலில் தொலைகிறது
வெளிச்சங்கள்.
கனவுகளில் தானே வருகிறாய்
வாழ்வதற்கு.
கனவில் வரும் அன்பானவளுக்கான வரிகள் அருமை...

மீண்டும் இந்த பகுதியை தொடரப்போகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. தொடருங்கள்....

Nanban
29-09-2005, 02:45 PM
நன்றி அறிஞரே---

அனைவரும் தொடர்ந்து வாசித்து, விமர்சித்து எழுதினால் எழுதுவதற்கு உற்சாகமாக இருக்கும்.

பார்ப்போம்.

ஆதவா
09-08-2007, 11:05 AM
கவிதைகள் அனைத்தும் அருமை... அறிஞர் கவிதை எழுதியிருக்கிறார் என்றால் ஆச்சரியம்... அறிஞரே! இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்...

காதல் கவிதைகளில் பின்னியெடுக்கும் நண்பன் இருந்த காலத்தில் நான் மன்றத்தில் இல்லாமைக்கு மனம் வருந்துகிறது....

சிவா.ஜி
09-08-2007, 11:16 AM
இதுதான் காதல் கவிதை என்று எழுந்து நின்று கரகோஷம் எழுப்பத் தோண்றியது. நன்பனின் காதல் கவிதைகளை படித்துப்பார்த்தல் 5 சதவீதமேனும் நல்ல காதல் கவிதைகளை எழுத உபயோகப்படும்.வாழ்த்து சொல்ல இன்று மன்றத்தில் நானுண்டு,ஆனால் அவரைத்தான் மன்றத்தில் காண முடிவதில்லை

தளபதி
09-08-2007, 11:24 AM
காதல் இல்லாதவருக்கும் காதல் வரும்
உங்கள் எழுத்துக்களினால்.
நண்பரே !!
எழுதுங்கள். காதல் மலருட்டும்.
எங்கும்!! எப்பொழுதும்.!!