PDA

View Full Version : வானவில்லே



puppy
20-09-2003, 04:47 PM
வானவில்லே
உன் வண்ணங்களை
கண் இமை கொட்டாமல் ரசிக்கிறேன்
உன்னை பக்கத்தில் வைத்து பார்க்க
வேண்டும் என ஆசை
வருகிறது....
ஆனால் வந்து விடாதே
இங்கே சிலர் உன்
வண்ணங்களை பிரிக்க
காத்துக் கொண்டு இருக்கிறார்கள்...
நீ அங்கேயே இரு.....
நீ அங்கேயே இரு....

இ.இசாக்
20-09-2003, 04:51 PM
அடடே பப்பி அவர்களின் மாறுபட்ட பார்வை
சிறப்பாக உள்ளது.
வானவில் பிரிந்துவிட துடித்தாலும் பப்பி விடமாட்டார் போலுள்ளது.
ஒற்றுமை ஓங்கட்டும்
கவிஞர் இன்னும் கவிதைகள் தரட்டும்

இளசு
20-09-2003, 06:13 PM
வந்து வந்து போகும் வானவில்லே

பிரிக்க நினைப்பவர்களிடம் இருந்து உன்னைப்

பிரிக்கும் என் பிரியத்தை

மறந்திடாமல்

வந்து போய்க்கொண்டு இரு...





பப்பி அவர்களின் கவிதை படித்தால்...

படித்தவர் படைப்பார்...

பாராட்டின், பாதிப்பின் வடிவம் இது!

இக்பால்
21-09-2003, 04:24 AM
பப்பித் தங்கையே!



வானவில்லை வரவழைத்து...

வைத்துக் கொள்ளுங்கள்...

உங்களுடன் பாதுகாப்பாக!

அங்கே இருந்தால்...

மறைந்து மறைந்து போகிறது.



கவிதைக்கு பாராட்டுக்கள்.



-அன்புடன் அண்ணா.

puppy
22-09-2003, 02:15 PM
கவிதையை வாசித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

poo
22-09-2003, 02:26 PM
வேதனை நிகழ்வை வானவில்லின் அழகில் அழகாய் சொல்லியிருக்கும் பப்பிக்கு பாராட்டுக்கள்!

Nanban
26-09-2003, 03:44 PM
வானவில் = மனிதம்.

அதனால் தான், மனிதம் இன்னும் நம்மை விட்டு வெகுதொலைவில், வானத்தில், பாடுபொருளாகவே இருக்கிறது போலும்.

வித்தியாசமான சிந்தனைகள் தான், பொருள் பொதிந்த கவிதைகளைத் தருகிறது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவிதமாகப் புரிகிறது........

இராசகுமாரன்
29-09-2003, 04:35 AM
ஆம், இன்றைக்கு உள்ள நிலையில் வானவில் இங்கே வந்தால், சில மனிதர்கள் அதன் கலர்களை பிரித்து விற்றும் விடுவார்கள், அல்லது அதையே plot போட்டு விற்றும் விடுவார்கள்.

வானவில் பற்றி நம் மன்றத்து வண்ணத்துப் பூச்சியின் கவிதை அருமை. நீண்டநாளைக்கு பிறகு கவிதை எழுத ஆரம்பித்து இருக்கிறீர்கள், தொடருங்கள் உங்கள் பணியை.

puppy
29-09-2003, 04:37 AM
வானவில் போல நீங்க இங்க வந்துட்டு பேசறதை பாரு....அடிக்கடி வாருங்க

ஐயா......

இராசகுமாரன்
29-09-2003, 09:57 AM
அடிக்கடி ஏன் வரவேண்டும்... நான் குடியிருப்பதே இங்கு தானே.

அசைவில்லாமல் தூங்கினால், இறந்து விட்டான் என்று புதைத்து விடுவீர்கள் போல் இருக்குதே!

விடுமுறையில் சென்று வந்துள்ளேன்,

வேலை ஒருபுறம் இழுக்கிறது,

நமது தளங்கள் ஒரு புறம் இழுக்கிறது,

பாலன்ஸ் செய்ய கொஞ்சம் நாள் ஆகலாம்.

சேரன்கயல்
29-09-2003, 03:58 PM
வானவில்லின் மீதான உங்கள் கவி கரிசனை வாழ்க பப்பி அவர்களே...

மீனலோஷனி
01-10-2003, 07:48 AM
பப்பி அவர்களே,

கவிதை அருமையாய் உள்ளது

Hayath
07-10-2003, 05:29 AM
சின்ன கவிதையாக இருந்தாலும் சிந்தனையை தட்டி எழுப்பும் கவிதை......பாராட்டுகள் பப்பி அவர்களே.

தொடருங்கள் இதுப் போல.

அமரன்
03-11-2007, 09:07 AM
வானவில்லைப் பி(ரி)டித்து
விளையாட விரும்பாது
உள்ளதோ(ர்) உளம்.....


வானவில்லுக்கு ஒப்பீடாக
பலவற்றைப் பொருத்திப்பார்க்க முடிகிறது
முடிவில் ஏனோ மனம் கனக்கிறது....!

கஜினி
03-11-2007, 09:24 AM
பினோக்கிய பார்வை கவிதை அருமை. மன்றத்தில் விசித்திர சிந்தனையாளர்களை திரும்பி பார்த்து அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. தெரிவித்தமைக்கு நன்றி அமரன் அவர்களே.