PDA

View Full Version : மாறுதல் (புதிய அகநானூறு 3)



gans5001
13-05-2003, 10:17 PM
உன்னை சந்திக்கும் வரை

எழுவதும் விழுவதும் மட்டுமே

என் நிலவுக்கு வாடிக்கையாய் இருந்தது..

சந்தித்த பின்னரோ

என் நீண்டு போயின என் இரவுகள்..

poo
14-05-2003, 07:32 AM
கலக்குகிறது கவிதை வரிகள்...

rambal
14-05-2003, 01:12 PM
அனுபவித்து எழுதியது

எழுத்துக்களில் தெரிகிறது..

பாராட்டுக்கள் கன்ஸ் அவர்களே...

karikaalan
14-05-2003, 01:28 PM
ஏன்? ஒப்பிட்டு நோக்குவதற்கு நேரம் போதவில்லையோ?!

வாழ்த்துக்கள் கன்ஸ்ஜி!

===கரிகாலன்

e_roy123
14-05-2003, 01:29 PM
அருமை+அருமை ..............

அடுத்த அகநானூறு எப்போது ? .........

அன்புடன்,

e_roy123

Nanban
17-05-2003, 05:21 PM
இரவுகள் இன்னமும் நீளட்டும்....

நிறைய கவிதைகள் வந்து விழட்டும்.....

மனம் நிறைந்த பாராட்டுகள்.....

puppy
08-01-2004, 08:43 PM
பாராட்டுக்கள் கண்ஸ்.....அருமையான இரவுகள் தானே அவை.....

இளசு
10-01-2004, 07:20 AM
நீண்ட இரவுகள் மட்டுமல்ல

நிரம்பிய இரவுகள்..

இதங்களால், சுகங்களால்

ஏக்கங்களால்

தீர்க்கும் தீர்த்தங்களால்..



கண்ணதாசன் சொல்வான்:

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

நினைவு தராமல் நீ இருந்தால்

கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்..



இன்னொன்றும் சொல்வான்



நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்

நீ...ண்ட இரவுகள் நான் பெற வேண்டும்



அன்று அந்தக் கண்ஸ்

இன்று மன்ற கண்ஸ்...

gans5001
10-01-2004, 11:14 AM
'இரவும் நிலவும் வளரட்டுமே

நம் இனிமை சுகங்கள் பெருகட்டுமே"

என்ற கர்ணன் பட கண்ணதாசன் வரிகளையும் சேர்த்துக் கொள்வோமா இளசு?

பென்ஸ்
04-08-2006, 05:39 PM
அடடே.... அருமையா இருக்கு

இளசு
04-08-2006, 10:32 PM
நான் அதிகம் எதிர்பார்ர்க்கும் மன்ற சொந்தங்களில் கண்ஸும்..

அதெப்படி காணாத நெஞ்சங்கள் ஒரே அலைவரிசையில்..!!!!

விரைவில் காணுவேன் என்று பட்சி சொல்கிறது...